22 October 2016

தொடுப்பு எல்லையைத் தாண்ட முடியாதுதானே :)

 நாற்றத்தைக் கூட  நாசூக்கா  சொல்லணும் :)
              ''என்னோட டூத் பிரஷ்  எப்பவுமே புதுசா இருக்கும்னு எப்படி கண்டுபிடிச்சே ?''
            ''நீ பக்கத்திலே வந்தாலே, அதை நீ பயன்படுத்துறது இல்லைன்னு தெரியுதே !''

கத்திக்கும்  உண்டுதானே ஆயுத பூஜை :)              
               ''நேற்று  ,போலீஸ் ஸ்டேஷன்லே ஆயுத பூஜை தடபுடலா இருந்ததே ,எப்படி ?''
               ''பூஜைக்கு கபாலிதான்  ஸ்பான்சராம் ,துப்பாக்கி ,லத்திக்கு நடுவிலே கத்தியை வைத்து பூஜை செய்தானாம் !''

பிறப்பு மட்டுமா அப்நார்மல் :)       
          '' செரியன் சார் ,சிசேரியன்லே  பிறந்த உங்க  பையனுக்கு என்ன பெயர் வைக்கப் போறீங்க ?''
          '' சிசேரியன்னுதான் !''

'கணக்கு 'பண்ணும் வாத்தியார் :)
           ''படியிலே தாவி தாவி,மாடிக்கு ஏறி வந்த பையனை மொத்துமொத்துன்னு  மொத்துறார் ...கணக்கு வாத்தியாரை ஏண்டா கட்டிக்கிட்டோம்னு இருக்குடி !''
            ''ஏனாம் ?''
           ''எதையுமே 'ஸ்டப் பை ஸ்டப் 'பா  செய்யணுமாம் !

தொடுப்பு எல்லையைத் தாண்ட முடியாதுதானே :)
         ''தலைமறைவா  இருந்த தலைவரை ,அவரோட  'சின்னவீட்டு'ல வைச்சு கைது பண்ணிட்டாங்களாமே!
         ''பாவம் !அவராலே 'தொடுப்பு' எல்லைக்கு வெளியே போக முடியலே போலிருக்கு!''

நாம் எதில் மயங்குகிறோம் :)
நமக்கு தேவை இல்லாததைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்கிறோம் ...
நடிகை நடிகர்கள் ,அவர்கள் வம்சாவளி ...
அரசியல்வாதிகள் ,அவர்கள் அறிக்கைகள் ...
சமூக விரோதிகள் ,அவர்களின் தீய நடத்தைகள் ...
தேச விரோதிகள் ,அவர்களின் குண்டு வெடிப்புகள் ...
தீவிரவாதிகள் ,அவர்களின் கொடூர முகங்கள் ...
இப்படி எல்லாம் தெரியும் !
கொடூர வலியில் இருந்து விடுபட ...
வலி  இல்லாமல் ஆப்பரேஷன்  செய்த பின் ...
மீண்டும் நம்மை உயிர்த்தெழச்  செய்யும் ...
மாயா ஜால வித்தையை முதலில் செய்து காட்டிய ...
வில்லியம் தாமஸ் கிரீன் மார்டன் என்கிற டாக்டர்  பெயர் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?

18 comments:

  1. Replies
    1. 'கணக்கு 'பண்ணும் வாத்தியார் என்றதால் உங்களுக்கு ஒன்றும் கோபமில்லையே:)

      Delete
  2. ‘பொன்மலர்’ நாற்றம் உடைத்து...!

    பூஜைக்கு வந்த மலர்... ஆயுதக் கத்தி... கபாலி கத்தி... “ஆர்டர்... கத்தி ஜார்ஜ்...!”

    ‘கத்திரியன்...’ அவுங்க அம்மா பேரு கேத்திரிதானே...!

    ‘கணக்கு பாத்து காதல் வந்தது... கச்சிதமா ஜோடி சேர்ந்தது’ன்னு பாடிக்கு அலைஞ்சீங்க...! நீ படிதாண்டா பத்தினின்னு சொல்லி வைக்கலையா...?

    “ஒழியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் ஒழிஞ்ச கதைதான்...!”

    “மயக்கமென்ன இந்த மௌனமென்ன...? தயக்கமென்ன இந்த சலனமென்ன...?” வில்லிக்கு பதில் சொல்ல வேண்டியதுதானே...!

    த.ம. 1




    ReplyDelete
    Replies
    1. இந்த பொன்மலரை ,எந்த பெண்மலரும் விரும்பாதே :)

      ஆயுதமும் மலராகுமோ:)

      கேத்தரின்தான்:)

      படிதாண்டா பத்தினி என்பதை சொல்லியா புரிய வைக்கணும் :)

      அதானே கழுதை தப்பினா குட்டிச்சுவர் தானே :)

      'வில்லி'யம்சுக்கு நன்றிதான் சொல்லணும் :)

      Delete
  3. துர் நாற்றத்திலிருந்து வந்த சிந்தனை!

    ப்ளேடு வைக்கலியா?

    பேரனும் சிசேரியனில் பிறந்தால் என்ன பெயர் வைப்பார்?!!

    கணக்குப் பண்ண ஒரு வாத்தியார்!

    சின்ன வீடுங்கறதால ஒளிய இடமில்லை போல!

    ReplyDelete
    Replies
    1. பூக்களின் மணத்திலும் கவிதை பிறக்கும் ,மூத்திரத்தின் நாற்றத்திலும் என் கவிதைப் பிறக்கும் என்று பாப்லோ நெருடோ சொன்னதை மறக்கக் கூடாது அல்லவா :)

      அதெல்லாம் ஆரம்ப காலத்திலே செய்த தொழில் ,இப்போ பெரிய லெவலிலே செய்கிறார் :)

      என்ன பெயர் வைக்கலாம் எப்படி அழைக்கலாம்னு அவரே யோசிக்கட்டும் :)

      இந்தக் கணக்கில் தப்பேதும் இல்லையே :)

      பெரிய வீட்டுக்கு இப்போதான் 'அஸ்தி'வாரம் போட்டிருக்கிறார் :)

      Delete
  4. 01. இப்படியும் கண்டு பிடிக்கலாமோ ?
    02. இனம் இனத்தோடு...
    03. நல்ல பொருத்தம்
    04. சரிதானே....
    05. அவரோட கஷ்டம்
    06. நல்ல தகவல் ஜி இன்றே அறிந்தேன்

    ReplyDelete
    Replies
    1. பார்க்காமலே கண்டுபிடிக்கலாமே:)
      இரத்த பந்தம் இருக்குமோ :)
      யாருக்கு அமையும் :)
      கணக்காத்தான் இருக்கார் :)
      யாருக்குமே வரக் கூடாது :)
      மயக்கமா வருதா :)

      Delete
  5. ரசித்தேன் நண்பரே!
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. பல் எப்படி போனாலென்ன .பிரஷ் புதுசா இருக்கணும் என்பதையும்தானே :)

      Delete
  6. "நாம் எதில் மயங்குகிறோம்" என்ற
    பதிவை வரவேற்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அந்த பதிவிலே, நீங்களும் மயங்கி விட்டீர்களா :)

      Delete
  7. இப்பவும்சரி. அப்பவும் சரி தொடுப்பு தானே எப்பவும் உசத்தி...

    ReplyDelete
    Replies
    1. இதைச் சொன்னா ,மூத்தவளுக்கு ஏன் கடுப்பு வருது :)

      Delete
  8. செரியன் என்னும் போதே இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறதே என ஊகித்தேன். :)

    “வில்லியம் தாமஸ் கிரீன் மார்டன் ” என்பாரைத் தெரிந்தவன் ஒருவன் உள்ளேன் ஐயா.

    நன்றி.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மருத்துவ உலகில் பிரபலமான பெயர் டாக்டர் செரியன் என்பது ,அவர் ,மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதையும் என்னால் மறக்க முடியவில்லை !

      அவரைப் பற்றியும் ,நம் முன்னோர்களின் மயக்க மருந்துகளைப் பற்றியும் எழுதுங்களேன் ,அறியக் காத்திருக்கிறேன் :)

      Delete
  9. நாற்றமும் நாசூக்காய் சொல்லணும்! :))

    மற்றவையும் ரசித்தேன்.

    ReplyDelete