6 July 2014

காதலிக்கு ஆப்பிள் போன்ற கன்னங்களா ?+வட இந்திய டூர் - பாகம் 4

வட இந்திய டூர் - பாகம் 4
டெல்லியில் இருந்து கிளம்பி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலஹாபாத் போகலாம் என்றார்கள் .அங்கே சென்று நாங்கள் தங்கிய இடம் இதுதான் ...
  
சத்திரம் என்று பெயரே தவிர நவீன வசதிகளுடன் அறைகள் இருந்தன ,நம்ம ஊர் இட்லி ,வடை ,பொங்கல் ,சாப்பாட்டையும் செய்து தந்து அசத்தினார்கள் ...போர்டை உற்று பாருங்கள் ,இது ஆரம்பித்த ஆண்டு 1891,நூறாண்டைக்கடந்தும் அங்கே நல்ல சேவை செய்துவரும் நகரத்தார் வாழ்க இன்னும் பல நூறாண்டு !

அலஹாபாத்தில் ,மூன்று நதிகள் சங்கமமாகும் திரிவேணி சங்கமம் ,அவசியம் பார்க்க வேண்டிய இடம் என்றார்கள் !புறப் பட்டோம் ...
இதோ தூரத்தில் தீவு போல் தெரிகிறதே,அதுக்கு பக்கத்தில் தான் ஆறுகள் வந்து சேர்ந்து  திரிவேணி சங்கமம்  ஆகிறது ...

 படகில் ஏறித்தான் அங்கே செல்ல வேண்டியுள்ளது .அங்கே ..
இரண்டு பக்கம் இருந்து இரு நதிகள்ஓடிவந்து கலப்பது தெரிந்தது ,இன்னொரு நதியைக் காணலியே என்றேன் ...கங்கா ,யமுனா ஆகிய இரு நதிகள் கலப்பதுதான் கண்ணுக்கு தெரியும் ,அடியில் இருந்து சரஸ்வதி நதி  வந்து கலப்பதாக ஐதீகம் என்றார்கள் .இம்மூன்று நதிகள் கலக்கும் புனிதமான இடத்தில் நீராடினால் ...செய்த பாவம் எல்லாம் நதி நீரில் கலந்து ஓடிவிடும் என்றும் சொன்னார்கள் ...
நான் நீராட முடியாது என்றேன் .ஏன் என்று ஒருமித்த குரலில் கேட்டார்கள் .நான்தான் இதுவரையிலும் ஒரு பாவமும் செய்யவில்லையே என்றேன்!பரவாயில்லை ,நீராடி உடல் அழுக்கையாவது போக்கிக் கொள்ளுங்கள் என்றார்கள் .இது எனக்கு நியாயமாகப் பட்டது !
இந்த இடத்தில் ஒன்றை சொல்லித்தான் ஆகவேண்டும் !நாங்கள் அங்கே சென்ற நேரம் உச்சபட்ச வெயில் காலம் ,காலை எட்டு மணிக்கே ஆற்றோர மணலில் கால் வைக்க  முடிய வில்லை  ,அவ்வளவு கொதித்தது !
வைரமுத்து ஒரு பாடலில்,தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது என்று எழுதி இருப்பார்(அவர் எழுதி இருப்பது வேறொரு உணர்ச்சியை உணர்த்த )..அந்த வரிகளின் நேரடி அர்த்தத்தை அங்கேதான் உணர்ந்தேன் ...வெயில் கொடுமையை தாங்க முடியாமல் கசகசவென்று வியர்த்திருந்ததால் ஆசை தீர நீராடி ...கண்ணுக்கு தெரியாத  நதி கலக்கும் இடத்தில் ,கண்ணுக்கு தெரியாத பாவங்களையும் கரைத்துவிட்டு.. கரையேறி வந்திருக்கிறேன்  ..இப்போ.. நான் ஒரு பாவமும் அறியாதவன் என்பதை  நீங்க தெரிஞ்சிக்கிட்டா சரி !
      அடுத்து ,அந்த ஊரில் நாங்கள் சென்ற இடம் இதோ இதுதான் ....




இதுதான் ஆனந்த பவன் , இது வசந்த பவன்போல் ஹோட்டல் கிடையாது  ...நமது முன்னாள் பிரதமர்கள் நேரு ,இந்திராகாந்தி பிறந்து வளர்ந்த வீடுதான் இது !தற்போது அருங்காட்சியகம் ஆக்கப் பட்டு,பச்சைப் பசேல் புல்வெளியுடன் அருமையாக பராமரிக்கப் பட்டு வருகிறது ,இந்த வளாகத்தில்ஒரு பிளானடோரியமும் உள்ளது !
அரண்மனைப் போன்ற வீட்டில் பிறந்த நம்ம நேரு மாமா ,நாட்டுச் சுதந்திரத்திற்காக  பாடுபட்டு ஒன்பதாண்டு காலம் சிறையில் இருந்தார் ,பரம்பரை சொத்தை மக்களுக்காக அர்ப்பணித்தார் ,,இன்றைய அரசியல்வாதிகளும் சிறைக்கு செல்கிறார்கள் ..வருவாய்க்கும் அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தீர்ப்பு கூறப் பட்டு !
                                                                                         பயணம் தொடரும் ...

=================================================================================

=================================================================================

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!

யுஸ்டு சப்பல் ஷோ ரூம் வச்சிருப்பாரோ ?

''உள்ளூர்லே இருந்தும் என் கல்யாணத்திற்கு நீ ஏன் வரலே ?''
''செருப்புக்கு டோக்கன் குடுக்கிற  கல்யாண மகால்லே நுழையக்கூடாதுங்கிறதை என் பாலிசியா வச்சிருக்கேனே !''




'சிரி'கவிதை!


பழைய வர்ணனைகள் இப்போது பொருந்தாது !



ஆப்பிள் போன்ற கன்னங்கள் என்று வர்ணிக்க முடியவில்லை ...
ஆப்பிள் மேலும் செயற்கையாய் மெழுகுப் பூச்சு !










30 comments:

  1. //சிரி கவிதை!..//
    உண்மையைத் தெரிஞ்சுகிட்டா சரி!..
    (ஆமா தூங்கறதே இல்லையா!?.. பேய் பிசாசு சுத்தற வேளையில எல்லாம் பதிவு போட்டுக்கிட்டு!...)

    ReplyDelete
    Replies
    1. ரெண்டு கன்னம் சந்தனக் கின்னம்தானா நான் ஆராய்ச்சி செய்யும் வேளை ,உங்களுக்கு பேய் பிசாசு சுத்தற வேளையா தெரியுதா ?

      உண்மை என்னானா ...தேதி பிறக்கும் வேளையில் என் பதிவும் வெளியாக வேண்டுமென்று நான் முன் கூட்டியே செட்யூல் செய்தது தான் ,அர்த்த ராத்திரியில் வெளியாகிறது !
      நன்றி

      Delete
  2. அலஹாபாத் - சங்கமம் - அந்த இடத்தில் குளிப்பதில் இருக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாதது - பாவம் போக்கும் என்ற காரணத்தினை விட தண்ணீரில் - மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் குளித்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும் - அதுவும் இந்த வெயில் நேரத்தில்...

    ஆப்பிள் கன்னங்கள் - :)

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் .பளிங்கு போல் தரை தெரியும் சுத்தமான தண்ணீரில்நீராடுவது சுகமாகத்தான் இருந்தது !

      நீங்கள் டெல்லியில் இருப்பதால் ,வீட்டிற்கு வரும் உறவினர்களுக்காக இந்த மாதிரி இடங்களுக்கு அடிக்கடி சென்று இருப்பீர்கள் என நினைக்கிறேன் !
      நன்றி !

      Delete
  3. வணக்கம்
    தலைவா.

    தங்கள் சென்றுவந்த இடத்தைப்பற்றி சொல்லுகையில் சென்றுவந்த ஒரு உணர்வுவந்தது. படங்கள் எல்லாம் மிக அழகு பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அப்படி உங்களுக்கு தோன்றினால் ,அது என் எழுத்திற்கு கிடைத்த வெற்றி என்றே நினைக்கிறேன் !
      நன்றி

      Delete
  4. திரிவேணி சங்கமம் என்றால்உண்மையிலேயே மூன்று நதிகள் கலக்கும் இடம் என்றுதர்ன் இதுவரையில் நினைத்துக் கொண்டிருந்தேன்
    தம2

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஈரோடு அருகிலும்(கூடு துறை ?) திரிவேணி சங்கமம் இருப்பதை அறிந்து இருப்பீர்கள் என நம்புகிறேன் !
      நன்றி

      Delete
  5. பயணப் பதிவு சிறப்பு

    மூளைக்கு வேலை தரும் வலைப்பூ என்று ஒன்று இருக்காம். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படியுங்க...
    http://yppubs.blogspot.com/2014/07/blog-post_6.html

    ReplyDelete
    Replies
    1. என் ஜோக்காளி தளத்தைத் தான் இப்படி அறிமுகப் படுத்தி உள்ளதைப் படித்து மகிழ்ந்தேன் ..
      சில வாரங்களுக்கு முன் திரு ,ரமணி அய்யா என்னுடன் கற்பனைப் பேட்டி கண்டு எழுதி இருந்தார் .இப்போது நீங்கள்என் தளத்தைப் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதி இருக்கிறீர்கள் !இதற்கெல்லாம் நான் வொர்த்..இல்லை இல்லை ..தகுதி உள்ளவனாகி விட்டேனா ?நம்பவே முடியலே !
      நீங்கள் தந்து இருக்கும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி !

      Delete
    2. உங்கள் தளத்தில் வெளியான நகைச்சுவைகளைப் பொறுக்கி எழுதினேன். நான் ஒன்றும் மிகைப்பட எழுதவில்லையே. உங்களிடம் இன்னும் சிறந்த பதிவுகளைப் பலரும் எதிர்பார்க்கலாம். உங்களால் முடியும். வெற்றி பெற வாழ்த்துகள்.

      Delete
    3. உங்கள் வாழ்த்திற்கு நன்றி !

      Delete
  6. அட! பயணக்கட்டுரை எப்போதிருந்து ஆரம்பிச்சீங்க! இருங்க முதல் பாகத்துல இருந்து படிச்சிட்டு வர்றேன். கவலை வேண்டாம், ஓட்டைப் போட்டுடறேன்.

    ReplyDelete
    Replies
    1. கலிங்க மன்னன் கட்டிய சாரநாத் ஸ்தூபியைப் பற்றிக்கூட சென்ற பயணப் பதிவில் எழுதி உள்ளேன் ,கலிங்க நகர் கவிப்ரியன் அவர்களே படிச்சிட்டு கருத்தைச் சொல்லுங்க .அப்படியே என் கவலை நீங்க அருமருந்தான வோட்டையும் போட்டுவிடுங்க !
      நன்றி

      Delete
  7. // இதுவரையிலும் ஒரு பாவமும் செய்யவில்லையே... // ஓஹோ... ஜி...!

    ReplyDelete
    Replies
    1. நீங்களுமா என்னை நம்பலே ?
      நன்றி

      Delete
  8. எல்லாம் சரி பகவான்ஜி யாரு ? சொத்து வழக்குல ஜெயிலுக்கு போனா ? வழக்குதான் வழுக்கிகொண்டே.... போகுதே,
    சிரி கவிதை அருமை பகவான்ஜி.

    ReplyDelete
    Replies
    1. சுக்ராம் என்கிற முன்னாள் மந்திரி கூட ஜெயிலில் இருக்காரே ,இன்னும் போக வேண்டியவங்க நிறைய பேர் இருக்காங்க என்பது உண்மைதான் !
      நன்றி

      Delete
  9. போட்டோவில் திரிவேணி சங்கமம் இடத்தைப் பார்த்தால் 20% பாவமாவது போவுமா? இல்லை, நீங்கள் குளித்ததைப் படித்ததினால் ஒரு 10%? சரி, விடுங்க... தொடர்ந்து படிக்கலாம்.

    தினசிரி ஜோக்கையும் விடாமல் இதில் சேர்த்து விட்டீர்களே...

    ReplyDelete
    Replies
    1. நான் குளிச்சதை நேரில் பார்த்து இருந்தால் உங்கள் பாவமெல்லாம் கரைந்து போயிருக்கும் ,மற்றவங்களையும் பார்த்து இருந்தால் என்ன ஆகியிருக்கும்னு நீங்களே யோசிச்சுக்குங்க !

      தினசிரி ஜோக் ?இருக்கு அள்ளி முடியுறேன் !

      நன்றி

      Delete
  10. சுற்றுலா அனுபவங்கள் சிறப்பு! ஜோக் கலகல! கவிதை உண்மையை சொன்னது!

    ReplyDelete
    Replies
    1. எதில்தான் இல்லை கலப்படம் ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  11. என் கண்ணுக்கு அந்த திரிவேணி சங்கமம் தெரியவில்லையே பகவாஞ்ஜீ!!!
    நான் நினைக்கிறேன், நீங்கள் ஒழுங்காக படம் எடுக்கலைன்னு. சரி தானே!!!

    ReplyDelete
    Replies
    1. நேரிலே பார்த்த எனக்கே threeவேணி சங்கமம் தெரியவில்லை ,twoவேணி தான் தெரிந்தது ,உங்களுக்கு தெரியணும்னா செலவு பார்க்காமல் ஒரு முறை வந்து பார்த்துட்டு போயிடுங்க !
      நன்றி

      Delete
  12. படங்களுடன் பயணக்கட்டுரை அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நான் சென்று வந்த பயணத்தைப் பற்றியெல்லாம் பதிவாக போடணுமா என்று நினைத்ததுண்டு ,பதிவுலக உறவுகள் எதிர்பார்த்ததால் எழுத ஆரம்பித்தேன் ,உங்களைப் போன்றோர் தரும் ஊக்கத்தைப் பார்த்தால் இன்னும் நிறைய எழுத உற்சாகம் பிறக்கிறது !
      நன்றி

      Delete
  13. Replies
    1. வாராது வந்த மாமணி போல் வந்து, ஏழாவது வோட்டைப் போட்டிருக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி !

      Delete
  14. திரிவேணி சங்கமம் மிகவும் ஒரு அருமையான இடம்....நீராட...அந்த தண்ணீரை அனுபவித்து.....சரஸ்வதி நதி அடி வழியாகத்தான் கலக்கின்றதாம்...முன்பு ஒரு காலத்தில் நேரடியாக எல்லோரும் பார்க்கும்படி கலந்துகொண்டுதான் இருந்ததாம்...காலப் போக்கில், வளர்ச்சியில், இயற்கை செய்யும் மாற்றங்களில் அதன் ஓடும் பாதை மாறி, அதன் சுவடு தெரியாமல் பூமிக்கடியில் ஆகிவிட்டதாகவும் சொல்லப் படுகின்றது. http://en.wikipedia.org/wiki/Sarasvati_River

    ஜோக்குகள் அருமை ஜி!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் சரித்திர ஆராய்ச்சிக்கு நன்றி !

      Delete