வட இந்திய டூர் - பாகம் 3
இப்ப நாம பார்க்கப் போவது ..ஹிந்துக்களுக்கு காசி எப்படி புனிதமான இடமோ ,புத்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு புனிதமான இடமாக கருதப்படும் சாரநாத் மடத்தைதான் !இந்த இடம் புத்த பெருமானின் காலடி பட்ட இடம் என்கிறார்கள் !
தர்மசக்கரம் அழகாக பொருத்தப் பட்டிருக்கும் வாசலைத் தாண்டி உள்ளே போனால் ,இடது புறம் கம்பீரமாக தெரிவது இந்த ஸ்தூபி ...
28 அடி அகலமும் 33 அடி உயரமும் கொண்ட இந்த ஸ்தூபி மன்னர் அசோகர் கட்டியதாம் ,பாதி உயரம் வரை உடைகல்லாலும்,அதற்குமேல் சுட்ட செங்கற்களால் கட்டப் பட்டு பல நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கிறது .இதன் உள்ளே ஹால் போன்று அமைப்பு எதுவும் இல்லை ,இவ்வளவு 'சாலிட்'டாகஇருக்கும் இதன் உள்ளே என்னதான் இருக்கும் என்று ,தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் மேலிருந்து நூறு அடி ஆழம் வரை ஆராய்ந்ததில் சில எலும்புகளும் ,பூஜைக்குரிய பொருட்களும் இருந்ததாம் !
இதைப் பார்த்துவிட்டு பின்னால் திரும்பினால் ,அழகாய் காட்சி தருகிறது புத்தர் ஆலயம் ....
இதன் உள்ளே நுழைகிறோம் ..அன்பே உருவாய் காட்சி தருகிறார் புத்தபிரான் !புத்தர் முகத்தில் சிறிய புன்னகை எனக்கு தெரிந்தது ...விக்கிரக ஆராதனை கூடாது என்று சொன்ன என்னையும் விக்கிரக வடிவாக்கி விட்டீர்களே என்று அவர் சொல்வதைப் போலிருந்தது !
இதற்கு பின்னால் புத்த பிட்சுகளுக்கான மடாலயம் ,டிரைனிங் சென்டர் சிங்கள பிட்சுக்களால் நடத்தப் படுவதாக வழிகாட்டி கூறினார் !
பசுமையாக காட்சி தரும் இந்த வளாகத்தின் வலது புறம் ..நீண்டு உயர்ந்தொரு அரச மரம் .இந்த அரச மரத்தின் சிறப்பு ,புத்தர் ஞானம் அடைந்த கயாவில் இருக்கும் போதி மரத்தின் கிளை இது ,இதுவல்லவோ உண்மையான 'கிளை '?
அந்த போதி மரத்தின் இலையைப் பறித்து, என் இல்லாள் கண்ணில் ஒற்றிக்கொண்ட போது,அங்கிருக்கும் பணியாளர் வேகமாய் ஓடி வந்து ,இதை பறிக்ககூடாது என்று சத்தமிட்டார்.ஒரு இலையைகூட பறிக்க விடக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கும் ...இந்த வளாகத்தை நிர்வகிக்கும் சிங்கள புத்த பிட்சுக்கள்தான் ....இலங்கையில் சிங்கள அரசால் தமிழ் மக்கள் கொத்து கொத்து வேட்டை ஆடப்பட்ட போது வாய் மூடி மௌனம் காத்தார்கள் என்பதை நினைத்தால் வேதனையாகத்தான் இருந்தது ,இன்னும் இருக்கிறது !
பயணம் தொடரும் ....
*********************************************************************************
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்!
இந்தியா ...மூணு பக்கம் கடல் ,நாலு பக்கம் கடன் !.
|
|
Tweet |
உண்மைதான் பகவான்ஜீ இலையைகூட பறிக்கவிடாதவர்கள் மனிதர்களை கொலையை செய்வது எந்த வகையில் தர்மம்.
ReplyDeleteஇதற்க்கு தகுந்தாற்போல் சிரிகவிதையும் அருமை.
மதங்கள் யாவும் அன்பையே போதிக்கின்றன ,ஆனால் ஒரு இனப்படுகொலை நடக்கும் போது அதை தடுப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது வருந்த விஷயம்தானே?
Deleteநன்றி
உண்மைதான் பகவான்ஜீ ஒரு இலையைகூட பறிக்க விடாதவர்கள்... மனிதர்களை கொலை செய்வது எந்த வகையில் தர்மம்
ReplyDeleteஇதற்க்கு தகுந்தாற்போல் சிரிகவிதை அருமை.
பொருத்தமாய் சிரிகவிதையும் அமைந்து இருப்பது தற்செயலான இனிய நிகழ்வுதான் !
Deleteநன்றி
சாரநாத் மடத்தை நிர்வகிப்பது சிங்கள புத்த பிட்சுக்களா?
ReplyDeleteபழம்பெருமை வாய்ந்தவைகளை இந்திய அரசின் தொல்பொருள் துறையும் ,உள்ளே இருக்கும் புத்த மடாலயத்தை ,டிரைனிங் சென்டரை நிர்வகிப்பது சிங்கள பிட்சுக்கள் என்று வழிகாட்டி கூறினார் !
Deleteநன்றி
அறியாத தகவல்கள் ஜி... நன்றி...
ReplyDeleteஅங்கு சென்றதால் நான் அறிந்த தகவல்கள் இது தனபாலன் ஜி !
Deleteநன்றி
விக்கிரக ஆராதனை கூடாது என்று சொன்ன என்னையும் விக்கிரக வடிவாக்கி விட்டீர்களே என்று அவர் சொல்வதைப் போலிருந்தது !// அருமை ஜி! இந்த வரிகள்! உண்மை!
ReplyDeleteஇன்னும் ஒரு பஞ்ச் வைத்திருக்கின்றீர்கள் பாருங்கள் இறுதியில்....ஒரு இலையைக் கூடப் பறிக்க.........இலங்கையில் சிங்கள அரசால் தமிழ் மக்கள் கொத்து கொத்து வேட்டை ஆடப்பட்ட போது வாய் மூடி மௌனம் காத்தார்கள் என்பதை நினைத்தால் வேதனையாகத்தான் இருந்தது ,இன்னும் இருக்கிறது !.....// சரியான பஞ்ச்!!!!!
ஜோக்...இந்தியன் ந்னாலே கடனாளிகள் ன்னு ஒரு முத்திரை விழுந்து போச்சு பாருங்க ஜி!..., சிரி கவிதை மிகவும் அருமை ஜி!
த.ம.
முற்போக்கான சிந்தனைகள் கொண்ட புத்த மதம் இந்தியாவில் வளர்ச்சி அடைந்து இருந்தால் ,பல வழிகளிலும் இந்தியா முன்னேற்றம் அடைந்து இருக்கும் என்ற சிந்தனை எனக்குள் இருக்கிறது !
Deleteபுத்தரின் போதனைகள் மக்கள் நல்வாழ்வுக்கு மிகவும் ஏற்றவை ,அதை ஏற்றதாக கூறிக்கொள்ளும் சிலரின் நடத்தைகள் அருவருப்பை தருகின்றன !
நம் ஒவ்வொருத்தர் தலைக்கு மேலும் இந்தியா வாங்கியுள்ள கடன் அழுத்திக் கொண்டுதானே இருக்கிறது ?
நன்றி
அரசமரத்து இலையை வைத்து ஒரு பஞ்ச்! :)
ReplyDelete'பஞ்ச்'க்காக நான் இட்டுகட்டி எழுதவில்லை ,இது நடந்த உண்மை !
Deleteநன்றி
சிறந்த பயணப் பகிர்வு
ReplyDeleteஉங்கள் நாட்டில் இதைப் போன்ற புத்த மடாலயங்களுக்கு பஞ்சமிருக்காதே !
Deleteநன்றி
மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கு. ஊருக்கு ஒரு நியாயம், அவுங்களுக்கு ஒரு நியாயம். இது தான் இன்றைய உலகம்.
ReplyDeleteஇதை விடக் கொடுமை ...இன்று வேண்டுமானால் மனித மீறல் எனச் சொல்லும் ஐ நா சபையும் ,கொடுமை நடக்கும்போது வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தது !
Deleteநன்றி
த.ம.5
ReplyDeleteபயணம் - தொடர்கிறேன்.....
ReplyDeleteஉங்கள் பயணத்தை நான் தொடர்வதைப் போலத்தானே ?
Deleteநன்றி
அன்பே ! உருவான புத்தருக்கு முன்னால் காட்சியளித்து விட்டீர்கள்.
ReplyDeleteபுத்தர் முன்னாள் மட்டுமல்ல ,பிற மத விக்கிரகங்கள் முன்பும் காட்சி கொடுத்து விட்டேன் !
Deleteநன்றி