25 July 2014

ஹீ><ரோ முத்தக் காட்சியில் நிறைய டேக் வாங்குவாரோ ?

           ''சூட்டிங்கில் கலந்துக்க மாட்டேன்னு ஹீரோ  கோவிச்சுக்கிட்டு போறாரே ,ஏன் ?''
           ''நேற்று அவரோட டூப்பை போட்டு முத்தக்காட்சி எடுத்த விஷயம் அவருக்கு தெரிஞ்சுப் போச்சாம் !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

பாரி வள்ளல் பரம்பரைன்னு நெனைப்பு !

''ஏன்யா பிளேடு பக்கிரி ,உன்
பையனுக்கு போலீஸ் வேலை கிடைச்சும்
 ஏன்  அனுப்பலே ?''
''கொடுக்கிற இடத்திலே இருக்கிற நாம ...வாங்கிற இடத்துக்கு எப்படி போறது ,அது நம்ம பரம்பரைக்கே அவமானமாச்சே !''




'சிரி'கவிதை!

கனவுக்கன்னிகள் நினைவுபடுத்தும் திருக்குறள் எது ? 

இருந்தாலும் மறைந்தாலும் கனவுக் கன்னிகள்
நினைவிலும் கனவிலும் வாழ்ந்துக் கொண்டுதான்  இருக்கிறார்கள் !

27 comments:

  1. இன்றைய வேலை டென்சன் சட்டென போயே போச்சு !!!

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : ரெளத்திரம் பழகு !

    http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post_22.html

    ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

    ReplyDelete
    Replies
    1. உங்கள் டென்சனை போக்கியத்தில் எனக்கு மகிழ்ச்சி !

      உங்கள் பதிவை படித்து ரசித்தேன் !
      நன்றி

      Delete
  2. மறவாத கனவுக் கன்னிகள்
    பாரி வள்ளல் பரம்பரைன்னு
    முத்தக் காட்சியில் நிறைய
    எல்லாம்
    சிந்திக்க வைக்கின்றன!

    ReplyDelete
    Replies
    1. அப்ப சிரிக்க வைக்கலையா ?
      நன்றி !

      Delete
  3. வணக்கம்
    தலைவா.

    காலைப்பொழுதில் மனதுக்கு இதமான நகைச்சுவை கண்டு மகிழ்தேன் பகிர்வுக்கு நன்றி
    த.ம 1வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இந்த அதிகாலை நேரத்தில் இங்கே உலாவும் நீங்கள் கொடுத்து வைத்தவர்தான் !
      நன்றி

      Delete
  4. ஐயையோ!! முத்தக்காட்சிக்கு டூப்பா??? அந்த நடிகர் கோவிச்சுக்கிட்டு போனது சரி தான்.

    அது சரி, வாங்குற இடத்துக்கு அனுப்புனா அவமானம் தான். - மாமூல் போலீசாருக்கு சரியான சாட்டையடி.

    உண்மை தான், கனவுக்கன்னிகள் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் (உதாரணம் - சில்க் ஸ்மிதா. அவர் இறந்த பிறகும் அவரை வைத்து படம் எடுத்துக்கொண்டு தான் இருக்கிறாராகளே)

    ReplyDelete
    Replies
    1. போனா போயிட்டு போறார் ,முத்தக் காட்சியை எடுக்க தெரிஞ்சவங்களுக்கு துப்பை வைத்து மொத்தக் காட்சியையும் எடுக்கத் தெரியாதா ?

      பொண்ணு கேட்டுவந்தா என்ன சொல்லுவாங்களோ தெரியலே !

      சில்லறைக் (கோடி கோடியா)கிடைக்கிறதே !
      நன்றி !

      Delete
  5. //''நேற்று அவரோட டூப்பை போட்டு முத்தக்காட்சி எடுத்த விஷயம் அவருக்கு தெரிஞ்சுப் போச்சாம் !''//.....எப்படியெல்லாம் கற்பனை பண்றீங்க பகவான்ஜி. பத்திரிகைக்கு அனுப்பினா நிச்சயம் வெளியாகும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ,அதுவும் குமுதம்தான் இதற்கு லாயக்கு !
      நன்றி

      Delete
  6. அப்ப அவருக்கு வில்லன் அவரோட டூப்பே தான்னு சொல்லுங்க. எல்லாமே அருமை.

    தம.3.

    ReplyDelete
    Replies
    1. படத்தில் மட்டுமல்ல ,நிஜத்திலும் !
      நன்றி

      Delete
  7. வெவெரமான வெவெகாரமான நடிகர்...!

    ReplyDelete
    Replies
    1. விவரம் டூப்பு ,விவகாரம் ஹீரோவா ?
      நன்றி

      Delete
  8. ‘கூப்பிடு தூரத்தில் ஒரு ‘நிர்வாண’ ஆசிரமம்’ [http://muudarulakam.blogspot.com/2014/07/blog-post_24.html] என்னும் என் புதிய பதிவுக்கு நீங்கள் கருத்திட்டதால்தான், ராணி இதழின் தேதியைக் குறிப்பிட்டதில் நேர்ந்த தவற்றை, [27.07.2004 என்பது தவறு. 27.07.2014 என்பதே சரி] என்னால் அறிய முடிந்தது. திருத்தமும் செய்தேன்.

    உங்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். மனம் நிறைந்த நன்றி பகவான்ஜி.

    ReplyDelete
    Replies
    1. அதுசரி ,சேலத்தில் எங்கே இருக்கிறது அந்த ஆசிரமம் ?சிரமம் பார்க்காமல் ஒரு தரம் எட்டிப் பார்த்துட்டு வந்துடலாம் !
      நன்றி

      Delete
  9. அந்த நடிகர் கோவிச்சுக்கிட்டு போனது அதுனாலதானே ஜி! பின்ன சான்ஸ் போச்சுல்ல....

    ப்ளேடு பக்கிரிக்கு பயமும் இருக்கலாம் பையன் போலீசானா தன்னை எங்கியாவது தூக்கி உள்ளப் போட்டுருவானோனு....இப்படி ஒரு டயலாகு?

    அதனால்தானே கனவுக் கன்னினி பேரு.....

    ReplyDelete
    Replies
    1. சண்டைக்கு டூப்பு போட்டா சரின்னு சொல்றவர் ,இதுக்கு எப்படி ஒத்துக்குவார் ?

      ஓ...இப்படியும் நடக்க கூடுமா ?

      பேரன் பேத்தி எடுத்தாலும் என்றும் கனவுக் கன்னிகள்தான் ,இல்லையா ?
      நன்றி

      Delete
  10. நல்லவேளை முத்தக்காட்சிதான் ஒருவேளை முதலிரவு காட்சியாயிருந்தா ?
    பாரம்பரியத்தை காத்த பக்கிரி வாழ்க...
    பகவான்ஜி கவிதை வீட்டுக்காரங்களுக்கு தெரியுமா ?

    அனைத்தும் நன்று.... நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அதுவும் நடந்து விடக் கூடாதுன்னுதான் கோவிச்சிக்கிட்டு போறாரோ ?
      பக்கிர புகழ் பாரெங்கும் பரவட்டும் !
      இப்படியாவது ஒரு குறளை மறக்காம இருக்கீங்களேன்னு அவங்க சந்தோசப் படுறாங்களே !
      நன்றி
      நன்றி

      Delete
  11. அருமை ,பக்கிரியின் பதில்தானே ?
    நன்றி

    ReplyDelete
  12. ஒழிஜினலை விட டூப்பக்குத்தான் மவுசு ஜாஸ்தி......

    ReplyDelete
    Replies
    1. மரவெட்டி அன்றாடங்காச்சி ,மரவெட்டியா வேஷம் போடுகிற ஹீரோ சம்பளம் கோடிக்கணக்கில் ,டூப்புக்கு மவுசு ஜாஸ்திதான் !
      நன்றி

      Delete
  13. பக்கிரி, ஹீரோ ரெண்டு பேர் சொல்றதும் நியாயமாத்தான் இருக்கு! சூப்பர் ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா அவங்களுக்கு பாராட்டு விழா நடத்திட வேண்டியதுதான் !
      நன்றி

      Delete
  14. ha!...ha!....''.டூப்பை போட்டு முத்தக்காட்சி எடுத்த விஷயம் அவருக்கு தெரிஞ்சுப் போச்சாம் !''
    ha!..ha!...(padu muddaal...).''..வாங்கிற இடத்துக்கு எப்படி போறது ,அது நம்ம பரம்பரைக்கே அவமானமாச்சே !''
    உங்கள் பக்கம் வந்தாலே சிரிப்பு தான்..
    .எந்தக் கடையில வாங்குறீங்கு....
    இனிய வாழ்த்து
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. ஹீரோ படு முட்டாள் ஆகித்தான் போனார் ?சான்ஸ் கிடச்சதுன்னு இதுக்கு முன்னாலே நூறு டேக் எடுக்கவிட்டா...இப்படித்தான் ஆகும் !
      கடையில் வாங்குவது கிடையாது ,என் மண்டே மார்க்கெட்டில்தான் வாங்குறது வழக்கம் !
      நன்றி

      Delete