வட இந்திய டூர் - பாகம் 5
டெல்லியில் இருந்து தாஜ்மகால் பார்க்க ,ஆக்ராவுக்கு ரயிலில் போகலாமா என ஆலோசனை செய்ததில் எல்லோருமே வேண்டவே வேண்டாம் என்றார்கள் .அதற்கு காரணம் ,அங்கு ஓடும் ரயிலில் எல்லாம் முன்பதிவு செய்யப் பட்ட பெட்டியில் கூட மக்கள் கணக்கு வழக்கு (?)இல்லாமல் ஏறி விடுகிறார்கள் .இரவில் பயணம் என்றால் அதை விடக் கொடுமை ...நடை பாதையில் கூட படுத்து விடுகிறார்கள் !
கொளுத்துகிற வெயில் பயமுறுத்தியதால் ,ஏசி வேன் பிடித்து பயணமானோம் ... நான்கு மணிநேர பயணத்திற்கு பின் ,ஓரிடத்தில் ஓட்டுனர் இறங்கிக் கொள்ளுங்கள் என்றார் .சுற்றி சுற்றிப் பார்த்தாலும் தாஜ் மகால் கண்ணுக்கு தென்படவில்லை .காரணம் ,நாம்
இறங்குகிற இடம் தாஜ் மகாலில் இருந்து முன் முக்கால் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது .அங்கேஇருந்து தாஜ்மகால் வளாகத்தின் வாசலுக்கு செல்ல பேட்டரி கார் ,ஒட்டகம் பூட்டிய சாரட்வண்டிகள் அணிவகுத்து நின்றன .அதில் ஏறி ...இதோ நீங்கள் பார்க்கிறீர்களே ...
இந்த கோட்டை வாசலின் முன்புறம் இறங்கி ,தலைக்கு இருபது ரூபாய் கொடுத்து நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு கோட்டைவாசல் படியேறினால் ...முன்புறம் பச்சை பசேலென்று தோட்டம் விரிந்து கிடக்க ,தூரத்தில் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இதோ ,,தாஜ் மகால் !
நாம் இங்கிருந்து நடுவில் உள்ள நீருற்று ,சுற்றியுள்ள செடிகொடிகளை ரசித்துக் கொண்டே ...தாஜ் மகால் முன்னால் மேடைபோல் தெரிகிறதே ,அங்கே சென்றதும் அதிர்ச்சி !
தாஜ்மகால் அமைந்து இருக்கும் கோட்டை கொத்தளத்தின் மீது வெறும் செருப்போ ,சூவோ அணிந்து செல்ல அனுமதி இல்லையாம் ...
செருப்பின் மேல் ஒரு பையைக் கட்டிக்கொள்ள வேண்டுமாம் ,அந்த பை எங்கே கிடைக்கும் என்று கேட்டால் ,நுழைவுச் சீட்டு வாங்கிய இடத்தில் மட்டும்தான் கிடைக்குமாம் ...முதலிலேயே இதையும் நுழைவுச் சீட்டுடன் கொடுத்தால் என்ன ?
எங்களைப் போன்றே பலரும் கொதிக்கின்ற வெயிலில் அவதி அவதியாய் ஐந்நூறு மீட்டர் தூரத்தில் இருக்கும் ,முன் வாசலுக்கு வந்து செருப்'பையை' வாங்க வேண்டியதாகி விட்டது !
முக்கியச் செய்தி ...தாஜ்மகால் மாடிக்கோ ,மும்தாஜ் சமாதி இருக்கும் கீழ் தளத்துக்கோ செல்ல அனுமதி இல்லை !அங்கே எல்லோரும் நடுத்'தள 'வர்க்கம்தான் !
பயணம் தொடரும் ...
|
|
Tweet |
காதல் என்று வந்து விட்டால் - கொதிக்கின்ற வெயிலாவது!.. குளிர்கின்ற நீராவது!..
ReplyDeleteகாதல் நடுத்தர(ள)ம் தான் - ன்னு இப்போதாவது ஞானம் வந்ததே!..
(அது யாரது ஞானம்?.. பூரிக்கட்டை பறந்து வருது!.. உஷார்!..)
இந்த ஞானம் ஷா ஜகானுக்கு வந்திருந்தால் தாஜ் மகாலைக் கட்டி இருப்பாரா என்பது சந்தேகம்தான் ..வராதது நம்ம யோகம் தான் ,ஒரு உலக அதிசயம் நமக்கு கிடைத்ததே !
Delete(பூரிக்கட்டைஎல்லாம் ஜுஜுபி ,அடி வாங்கி அடி வாங்கி உடம்பில் வைரம் பாய்ந்து விட்டதால் )
நன்றி
//காதல் சின்னத்தைப் பார்க்கப் போய் நான் பட்ட அவதி!..//
ReplyDeleteஇதுக்கே - இப்படி மூச்சு வாங்கினா - காதல்ல சிக்கிக் கொண்ட ஷாஜஹான் கதி எப்படி இருந்திருக்கும்!?..
அவரோட பிள்ளையே, ஷாஜகானை வட்டியும் முதலுமா ஜெயிலில் அடைத்து தாஜ் மகாலைப் பார்த்துக் கிட்டே இருன்னு கதி கலங்க வச்சிட்டாரே !
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteதலைவா....
தங்களின் அனுபவத்தை மற்றவர்களுக்கு பகிர்ந்துள்ளீர்கள் செல்வோருக்கு ஒரு விதிமுறையாக இருக்கும் அல்லவா. வாழ்த்துக்கள்
த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அதுக்கு தானே இந்த முன் எச்சரிக்கை !
Deleteநன்றி
எப்படியோ.... கஷ்டப்பட்டு காதல் சின்னத்தைப் பார்த்து விட்டீர்கள்.
ReplyDeleteகஷ்டப்படாமல் வீட்டிலேயே பிள்ளைகளைப் பார்க்கலாம்...
பிள்ளைங்க நம்மை கஷ்டப் படுத்தாமல் இருந்தாலே போதும் !
Deleteநன்றி
அருமை
ReplyDeleteதம2
தாஜ் மகாலை எப்படி படம் எடுத்தாலும் அருமையாகத்தான் இருக்கிறது !
Deleteநன்றி
நம்ம ஊர் தேவலாம் போல... காசு அதிகம் வாங்கினாலும் இதெல்லாம் முன்னாலேயே சொல்லிடுவாங்க... அப்போ தாஜ் மகாலை முழுமையா பார்க்க முடியாதுன்னு சொல்லுங்க!
ReplyDeleteஇருபது ஆண்டுகளுக்கு முன் நான் சென்றபோது கூட கீழ்த்தளத்திற்கு செல்ல அனுமதித்தார்கள் ,சம்த்தியில் இருக்கும் மும் தாசை தொந்தரவு செய்யக் கூடாது என்பதாலோ என்னவோ இப்போது அனுமதிக்கவில்லை !
Deleteநன்றி
இன்றைய உங்கள் பயணப் பதிவைப் படித்ததும் 2011 சித்திரையில் நானும் தாஜ்மகால் சென்று பார்த்த நினைவுகளை மீட்டுப்பார்த்தேன்.
ReplyDeleteசுகமான நினைவுகளாய் இருந்து இருக்குமே ?
Deleteநன்றி
இந்தச் சுட்டெரிக்கும் வெயிலிலும் பார்க்க வேண்டிய ஒன்றாக காதல் சின்னம் இருந்ததா ஜி?!! நாங்கள் பல வருடங்களு முன்பு சென்றிருந்த போதும் கூட பல தடைகள்.....யமுனை ஆறு வற்றிக் கிடக்க.....சின்னமும் கொஞ்சம் கறுப்பு படிந்தது போல் காணப்பட்டது! இப்போது எப்படியோ?!!!!! எப்படி இருந்தாலும் காதல் சின்னம் என்றால் உலகமே வீழ்ந்து விடும்தானே!
ReplyDeleteஇப்போதும் யமுனை நதி வறண்டுதான்உள்ளது ,தாஜ் மகால் என்றுமே அழகு காதலைப் போலவே !
Deleteநன்றி
தங்களது பதிவு மற்றவர்களுக்கு நல்ல உபயோகமானது பகவான்ஜி நன்றி.
ReplyDeleteதற்போதைய எனது ''ஹிந்தமிழ்'' படிக்க...
கையோடு ஒரு பிளாஸ்டிக் கேரி பையை கொண்டு செல்ல வேண்டியதுதான் !
Deleteநன்றி
அழகிய படங்களுடன் நாங்களும் நேரில் பார்த்த அனுபவத்தை "ஊட்டி"யமைக்கு மிக்க நன்றி ஜி!
ReplyDeleteஊட்டியின் குளுமையை இங்கேயே அனுபவித்ததற்கு நன்றி !
Deleteதம.7.
ReplyDeleteஎட்டு அதிசயத்தில் இது ஏழாவதா?
Deleteநன்றி
காதல் சின்னத்தை மிதிச்சிரக் கூடாதுன்னு இந்த நடவடிக்கையோ?!
ReplyDeleteவெறும் காலால் மிதிக்கக் கூடாதாம் )))))
Deleteநன்றி
வயசான காலத்துல இந்த கொதிக்கிற வெயில்ல நடக்கிற அனுபவம் எல்லாம் தேவையா ஜீ???
ReplyDeleteநான் வெறும் காலில் நடக்கத் தொடங்கினேன் ,அங்கிருந்தவர்கள் தடுத்து விட்டார்கள் ...காரணம் கேட்டால் ,உங்கள் பொன்னான கால்கள் இங்கே படக்கூடாது என்றார்களே !
Deleteநன்றி
ஆத்தாடி!! காதல் சின்னத்தை பார்ப்பதற்கே இவ்வளவு சிரமம் என்றால்..காதலித்தால் எவ்வளவு சிரமம் இருக்கும.
ReplyDeleteகாதலித்து பாருங்கள் .இருக்குமா இருக்காதா என்று புரிந்து விடும் !
Deleteநன்றி
என்ன ஜி உங்களுக்கே இவ்வளவு சிரமமா...?
ReplyDeleteஎனக்கென்ன சிரமம் ?தாஜ் மகால் டூமின் மேலேறி ..'பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் 'பாடலைப் பாடலாம் என்றால் மாடியிலேயே ஏற விடலையே !
Deleteநன்றி
தாஜ்மஹால் - நானும் சில வருடங்கள் முன்னர் காலில் பிளாஸ்டிக் பை கட்டிக் கொண்டு பார்த்து வந்தேன்...
ReplyDeleteதாஜ் மகால் மறந்து விட்டது ,பிளாஸ்டிக் பையை மறக்க முடியாது போலிருக்கே ,குமார் ஜி ?
Deleteநன்றி
புதிதாகச் செல்பவர்களுக்கு உதவும் தகவல்
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
செருப்'பையை ' எழுதும் போது ''காலடித் தாமரை நாலடி நடந்தால்
Deleteகாதலன் உள்ளம் புண்ணாகும்''என்ற பாடலிலும் தாஜ் மகாலை பார்த்த ஞாபகம் வருகிறதே !
நன்றி
மாலை நேரங்களில் அங்கே செல்வது நல்லது. ஆனால் பெரும்பாலும் தில்லியில் இருந்து செல்லும் அத்தனை பேரும் நல்ல மதிய நேரத்தில் தான் செல்வார்கள்! காலணிகளை பாதுகாக்க உள்ளேயே ஒரு அறை இருக்கிறதே......
ReplyDeleteமுன்பெல்லாம் சமாதி இருக்கும் கீழ்த்தளத்திற்கும் அனுமதிப்பார்கள். இப்போது வரும் மக்கள் செய்யும் தொந்தரவுகளால் அங்கே அனுமதிப்பதில்லை...
வெயில் அதிகம் என்பதாலோ என்னவோ,உறை அணிந்த காலணியுடன் செல்ல அனுமதிக்கிறார்கள் !
Deleteமாலையிலும் கூட்டம் இருக்கத்தானே செய்கிறது ,பகல் என்றால் படம் எடுத்துக் கொள்ள வசதியாச்சே !
கீழ்தளத்தில் அப்படியென்ன தொந்தரவு ,சொல்லலாமே ஜி ?
நன்றி