11 January 2015

மக்கு பயபுள்ளே கூட மார்க் வாங்கும் தந்திரம் :)

--------------------------------------------------------------------------------------------------------------------------
           ''பரவாயில்லையே , அந்த ஸ்கூல்லே இதுவரை யாருமே ஜீரோ மார்க் வாங்கியதில்லையாமே !''
         ''அட நீங்க வேற ,வினாத் தாளில் உள்ள கேள்விகளை அப்படியே அழகா எழுதியிருந்தாலே...குட் ஹாண்ட்ரைட்டிங்னு  போனஸ் மார்க்கை போட்டுடுவாங்களாம் !''

சென்ற வருடம் ,இதே நாளில் ஜோக்காளியில்...

ஆத்தீ...ஆத்திச் சூடியை இப்படியா புரிஞ்சுக்கிறது ?

            ''என்னடா சொல்றே .ஔவையார்  ரெண்டு பேருக்கு ரெண்டு விதமா அட்வைஸ்  சொல்லி இருக்காங்களா ?''
            ''ஏற்பது இகழ்ச்சின்னு பிச்சைக்காரனுக்கும் ,ஐயமிட்டு உண்னு  பணக்காரனுக்கும் சொல்லி இருக்காரே  !''

வள்ளுவர் கூட இப்படி விதிக்கும்
முயற்சிக்கும் சொல்லி இருக்கார்னு நினைக்கிறேன்
ReplyDelete

Replies


  1. இதைதான் தோசையை தின்னும்போது ஓட்டையை எண்ணக்கூடாது என்கிறார்களோ ?
    நன்றி



                    ''ஆம் ஆத்மின்னா  அர்விந்த் கேஜ்ரிவால் ஞாபகம் வர்றார் ,ஆமாம் ஆத்மின்னா ?''
                ''நம்ம பிரதமர்தான் !''
(இந்த பதிவு வெளியான சென்ற ஆண்டில் , பிரதமராய்  இருந்தவர் உங்கள் நினைவுக்கு வருகிறாரா ?)

அந்த காலத்துக்கு தஞ்சாவூர் தலையாட்டும் பொம்மை
இந்த காலத்துக்கு பஞ்சாப் தலையாட்டும் பொம்மை!
ReplyDelete


  1. கழுத்தை ஆட்டி ஆட்டி வலி வந்ததாலோ என்னவோ ,வேற ஆளைப் பார்த்துக்குங்க என்று சொல்ல ஆரம்பித்து விட்டார் !
    நன்றி
  2. 2013  இதே நாளில் ,ஜோக்காளியில்....
  3.  ''தலைவரோட அடியாட்கள் ரொம்ப வேகமா இருக்காங்க !''
  4. ''எப்படி ?''
  5. ''தலைவர் 'கொல் 'னு  சிரிச்சாக் கூட அரிவாளை தூக்கிடுறாங்களே !''    
                    

  6. 100க்கு பக்கம்தான் 108ம் !

    100 கிலோமீட்டர் வேகத்தில்
     வாகனத்தில் சென்றவனின் கதி ...
    108 வாகனத்தில் சோகத்தில் !

22 comments:

  1. 01. வெவரமான வாத்தியார்களோ ?

    02. அவரே குழப்பத்துலதான் எழுதுனாரோ.... ?

    03. பிரதமரோட பூர்வீகம் தஞ்சாவூராமுள்ள.....

    04. ஆச் சுனு தும்மினால் ? என்ன ? செய்வாங்க...

    05. கரணம் தப்பினால் சரணம்.

    த.ம.இ.வா.ஒ.ஜி.

    ReplyDelete
    Replies
    1. 1.நாலு பக்கத்துக்கு மேல் எழுதி இருந்தால் அதுக்கும் எக்ஸ்ட்ரா மார்க் போடுவார்களோ :)
      2.அதுக்கு நம்ம அம்பாலடியாள் அவர்கள் கீழே சரியான அர்த்தம் சொல்லி இருக்காங்களே :)
      3.நம்ம சைதை அஜீஸ் ஜிகூட அதை சொல்லி இருக்காரே :)
      4.HUTCH செல்லைக் கொடுப்பார்களோ :)
      5.ஆனால் 108 வண்டி மட்டும் வேகமாய் போனால் நல்லதுதானே :)

      Delete
  2. ''என்னடா சொல்றே .ஔவையார் ரெண்டு பேருக்கு ரெண்டு விதமா அட்வைஸ் சொல்லி இருக்காங்களா ?''
    ''ஏற்பது இகழ்ச்சின்னு பிச்சைக்காரனுக்கும் ,ஐயமிட்டு உண்னு பணக்காரனுக்கும் சொல்லி இருக்காரே !'

    என்ன ஜீ இன்னுமா புரியல ?..நாங்க பிச்ச என்று கேக்கக் கூடாது அப்படிக் கேட்பதற்கு
    முன்பே "உங்கள மாதிரிப் பணக் காரர்கள் "(அவதானியுங்கள் ) சட்டென அள்ளிக்
    கொடுக்கணும் அவ்வளவு தான் விசயம் சரிதானே ?..:))))))))))) கல்ல எடுக்கும் முன்பே ஓடீரு அம்பாளடியாள் :))

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாதப்படியே பார்த்தாலும் ,வாங்கிக்கிறவன் ஏற்பது இகழ்ச்சி என்று மறுக்க வேண்டாமா :)
      அவதானித்ததில் தெரிந்தது ...பதிவர்கள் யாரும் பணக்காரர்களாய் இருக்க முடியாது ,பொன்னான நேரத்தை சம்பாதிப்பதில் கவனம் செலுத்தாமல் கைக் காசையும் நெட்டுக்கு கட்டி உள்ளதையும் இழப்பவர்கள் தானே :)நான் மட்டும் விதிவிலக்கா ?

      Delete
  3. இப்படி எல்லாம் போனஸ் மார்க் உண்டா ஜி... ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. நானே வாங்கி இருக்கேனே ..ஹிஹி:)

      Delete
  4. எங்க ஜி இருக்கு அந்த மாதிரியான ஸ்கூல்?!!! இல்ல பாவம் பசங்கள எல்லாம் அங்க சேர்க்கலாமேனுதான்...

    கொல்" நாங்களும் கொல் என்று சிரித்தோம்

    100.....108 ...அருமை!

    ReplyDelete
    Replies
    1. அப்படி மார்க் போட்டதெல்லாம் அந்த காலமாகிப் போச்சு :)

      நாம கொல்னு சிரிச்சா கொசுவைக் கூட எவனும் கொல்லமாட்டான் :)

      Delete
  5. Replies
    1. நல்ல நோக்கம்தான் ,அதற்காக இப்படியா மார்க்கை அள்ளிவிடுவது :)

      Delete
  6. இரட்டை நூல்கள்லயும் இதேமாதிரி இருக்குங்ணே !!

    100 கிலோமீட்டர் வேகத்தில்
    வாகனத்தில் சென்றவனின் கதி ...
    108 வாகனத்தில் அவன் விதி .


    அருமை ஜீ !
    தம+

    ReplyDelete
    Replies
    1. வேறெந்த இரட்டை நூல் ?

      விதியை மதியை பயன்படுத்தி வென்றிருக்கலாமே :)

      Delete
  7. ''தலைவர் 'கொல் 'னு சிரிச்சாக் கூட அரிவாளை தூக்கிடுறாங்களே !'' உண்மைதான்

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை ,தலைவரையே சுட்டுக் கொல்லாம இருக்காங்களே :)

      Delete
  8. அடடா...எனக்கு தெரியாம..போச்சே....”மக்கு பயபுள்ளே கூட மார்க் வாங்கும் தந்திரம்” தெரியததாலே பரிட்சைக்கே போகாம இருந்திருக்க மாட்டேனே......!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் என்று பட்டுக் கோட்டையார் பாடினதும் சரிதானே :)

      Delete
  9. அனைத்தும் சிறப்பு! கொல்லுனு சிரிச்ச சிரிப்பு ரொம்ப ரொம்ப ரசிச்சேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கொல் ன்னு சிரிச்சாலும் குற்றமாய்யா:)

      Delete
  10. வெத்துத் தாளில் எதையாவது கிறுக்கிக் கொடுத்தாக்கூட, அழகான டிராயிங்னு மார்க் போடுவாங்க. அவங்களை யார் கேட்குறது?

    ReplyDelete
    Replies
    1. டாக்டர்கள் எழுதும் பிரிஸ்கிரிப்சன் கூட இப்படித்தான் ,கடைக் காரர்களுக்கு மட்டுமே புரியும் :)

      Delete
  11. வணக்கம்
    மார்க் போட இப்படியும் ஒரு வழியா.... ஆகா... ஆகா... சூப்பர் இரசித்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மார்க் போடணும்னு முடிவெடுத்தாச்சு ,எப்படி போட்டா என்ன :)

      Delete