3 January 2015

வரப் போற மனைவி எப்படி இருக்கணும் ?

----------------------------------------------------------------------------------------------------------------
 பெரியவங்களை இப்படியா மதிப்பது ?                 
             ''கடைக்காரர் எடை போடும்போது எடை மெஷினையே ஏன் பார்த்துகிட்டே இருக்கார் ?''
              ''ஆளைப் பார்த்து எடை  போடக் கூடாதுன்னு  பெரியவங்க சொல்லி இருக்காங்களே!''
  
சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

வரப் போற மனைவி எப்படி இருக்கணும் ?

             ''அம்மா ,எனக்கு பார்க்கப் போற பொண்ணுக்கு ஐஸ்வர்யா கண் ,அனுஷ்கா உயரம் ,நயன்தாரா கலர் ,நஷ்ரியா …''
             ''போதும் நிறுத்துடா ,இப்படிப்பட்ட பொண்ணை எங்கே தேடுறது ?''
            ''தேடவே வேண்டாம் ,பக்கத்து வீட்டிலேயே இருக்கே !''

இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்... 

அது சரி அப்படி ஒரு வழியிருக்கா?
ReplyDelete


  1. குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் .....உலகமடா என்ற பாடல் நீங்களும் கேட்டு இருப்பீர்களே !
    நன்றி

      கஞ்சாவைக் கூட அஞ்சாமல் விற்கும் நிலை வந்தால் ...?      



 தமிழர்கள் ஆகிய நாம் பெருமைப்படும் படியான ஒரு சரித்திரச் சாதனை புத்தாண்டில் நிகழ்ந்து உள்ளது ...
புது வருசத்தைக் கொண்டாட தமிழ்'குடிமகன் /ள் டாஸ்மாக்கில் செலவிட்ட தொகை 25௦ கோடியாம் ...
வெள்ளையன்கூட அவன் புத்தாண்டுப் பிறப்பை இவ்வளவு 

செலவு செய்து கொண்டாடி இருப்பானாவென்று தெரியவில்லை .
இந்த புதுமை இங்கே நடக்கும் சமயத்தில் ...
அமெரிக்க மாகாணம் கொலராடோவில் இன்னொரு புதுமை அரங்கேறி உள்ளது ...
கஞ்சா பயிரிடவும்,விற்பனை செய்யவும் அரசாங்கமே அனுமதித்து உள்ளது ...
மலேசியா ,சிங்கப்பூரில் கஞ்சா வைத்து இருந்தாலே மரண தண்டனை ...ஆனால் கொலராடோவில் மக்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆகாமல் இருக்க சட்ட திட்டம் வகுத்து இருக்கிறார்களாம் ...
1 8 வயதானவர்களுக்கு தினசரி 28 கிராம் மட்டுமே விற்க அனுமதியாம் ...
போதைக்கு அடிமையானவர்கள்  மனமும் உடலும் கெட்டு,நிறைய பொய்பேசுவதாகவும் ,திருட்டு ,கொள்ளை ,பாலியல் வன்முறை ,சமூக விரோத காரியங்கள் செய்வதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன ...
ஆனால் ,ஆள்பவர்களுக்கு கஜானா ரொம்பினால் போதும் போலிருக்கிறது ...
கொலராடோ வழிகாட்டி விட்டது ...
அடுத்த படியாக அமெரிக்காவில் உள்ள மற்ற மாகாணங்களும் இதை பின்பற்றும் ...
அமெரிக்கச் சீரழிவுக் கலாச்சாரம் இங்கேயும்  பரவும்  காலம் வெகு தூரத்தில் இல்லை ...
தெருவுக்கு தெரு அரசாங்கமே கஞ்சாக் கடைகளைத் திறந்து மக்களை  வாழ வைக்கப் போகிறது  !

  1. இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்... 
  2. //http://www.npr.org/blogs/health/2014/01/16/262481852/florida-bill-would-allow-marijuana-extract-for-child-seizures//
    ”வாரத்தில் பலநூறு முறை வலிப்பு ஏற்படும் குழந்தைகளுக்கு கஞ்சாவிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயை சில துளிகள் உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் இருக்கிறது” என்பது போன்ற பரவலான பட்டறிவின்படி (இன்னும் முருத்துவ ரீதியாக நிரூபணமாகவில்லை) மருத்துவ காரணங்களுக்காக கஞ்சா வளர்க்க சில மாநிலங்களில் அனுமதி வளங்கப்பட்டுள்ளது. போதைக்காக அதை புகைப்பதை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.

    பொத்தாம் பொதுவில் ”போலியோ மருந்தால் எயிட்ஸ் வந்தது”, “தடுப்பு ஊசியால் ஆட்டிஸம்” ஏற்படுகிறது என்று பரபரப்புக்காக எழுதுவதை தவிர்த்தால் நல்லது.
    ReplyDelete

    Replies


    1. நல்ல காரியங்களுக்காக கஞ்சா வளர்ப்பதை தவறு என்று நான் சொல்லவில்லை .
      பரபரப்புக்காக எழுதுவது எந்நாளும் ஏற்றுக் கொள்ள முடியாதுதான் !
      நன்றி
      Delete


    2. மாமியார் வீட்டில் இருந்த அனுபவம் !



               ''வீ ட்டோடு இருக்க விரும்பும்  வரன் தேவைன்னு சொன்னது தப்பாப் போச்சு!''
                ''ஏன்?''
              ''வருசத்திலே பாதி நாள் 'மாமியார் 'வீட்டுலே தான்  இருக்கேன்னு 
    3.  கொள்ளைக்காரன் வந்து நிற்கிறானே!''

    4. இதென்ன அபத்தம் ?

      தனக்கு இரையாகும் மீனை 
      வலைப் போட்டு பிடிக்கும் மனித இனம் ..
      கொசுவுக்குப் பயந்து 
      வலையிலே சிறையிட்டுக் கொள்கிறதே ,என்ன நியாயம்?




  3.              




























                                                                                                                                                                               

32 comments:

  1. 01. மிஷின் தப்பா இருந்தால் வந்தவனும் தப்போ....

    02. காதலை சுலபமாக வெளிப்டுத்திபுட்டானே....

    03. எதற்க்கும் நண்பர் மிக்னேஷ் திருமுருகனிடம் கேளுங்களேன்....

    04. சரிதானே...

    05. கொசுவலை கம்பெனிக்காரனுக்கு தெரிஞ்சா பிரட்சினையாகிடப்போகுது.

    தமிழ்மணம் இனைப்பு and குத்து இஷா

    ReplyDelete
    Replies
    1. 1.வந்தவளையும் பார்க்கலைன்னா சந்தோசப் பட வேண்டிய விசயம்தானே :)
      2.பெற்றவங்க வயிற்றிலே பாலை வார்த்திட்டான் :)
      3.கஞ்சா சம்பந்தமாய் அவர் எழுதிய பதிவை மறக்கலே போலிருக்கே :)
      4.வீட்டோடு மாப்பிள்ளை ஒரு விதத்தில் கொள்ளைக்காரன் தானே :)
      5.கொசுவை வைத்து பிசினஸ் பண்றது வலைக் கம்பெனி மட்டும்தானா ?
      அது யாரு ,குத்து இஷா ?அரபு நாட்டு சில்க்கோ ?

      Delete
  2. பையன் செமை உஷார் பார்ட்டியாக இருக்கானே.

    டாஸ்மார்க்காலத்தானே அரசாங்கமே இயங்குது.

    இன்னுமா கொசுவலை இந்தியாவில இருக்குது

    ReplyDelete
    Replies
    1. அதனாலேதானே சரக்கே இல்லாமல் கடையை இன்னும் ஓட்ட முடியுது :)

      இன்னைக்கு தலைப்பு செய்தி ...தமிழக அரசுக்கு 2௦௦௦௦ கோடி அளவில் நிதி நெருக்கடி :)

      கொசு இருக்கிற வரைக்கும் கொசு வலையும் இருக்கத்தானே செய்யும் :)

      Delete
  3. Replies
    1. அபத்தத்தையும் ரசித்தீர்களா :)

      Delete
  4. Replies
    1. நல்லா இருப்பது ,ஆளைப் பார்த்து எடை போடுவதுதானே :)

      Delete
  5. இனிமே ஆளை எடை போடணும்னா கூடவே எடை மிஷினை எடுத்துப் போகணும்

    ReplyDelete
    Replies
    1. இல்லேன்னா ,லாரி எடை போடும் இடத்திற்கு வரச் சொல்லி விடலாம் :)

      Delete
  6. ஆளைப்பார்த்து எடைபோடக் கூடாது
    எனப்தற்கு இதுதான் சரியானப்
    பொருள் தருவதாக இருக்கிறது
    இரசித்தேன்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. எடை யில் யாரை ஏமாற்ற முடியும் என்று அந்த கடைக்காரர் கஸ்டமரை எடை போட்டுதான் வைத்திருக்கிறார்:)

      Delete
  7. இரசித்தேன்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. குலவுசனப் பிரியன் சொன்னதையும் ரசித்தீர்களா அய்யா :)

      Delete
  8. எல்லாமே சி(ற)ரிப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சி(ற)ரிப்பான கருத்துக்கு நன்றி :)

      Delete
  9. வீட்டோடு மாப்பிள்ளை ஜோக்கை ரசித்தேன். தாங்கள் சொன்ன
    ” பரபரப்புக்காக எழுதுவது எந்நாளும் ஏற்றுக் கொள்ள முடியாதுதான் ! “ – என்ற கருத்தினில் நானும் உங்களோடு உடன்படுகின்றேன்

    ReplyDelete
    Replies
    1. பரபரப்பு செய்தி நீண்ட நாள் நிற்காது ,பஞ்சராகிவிடும் :)

      Delete
    2. சொல்ல மறந்து விட்டேனே ,நன்றி :)

      Delete
  10. ஆளை பார்த்து எடை போடக்கூடாதுதான். குண்டாக இருந்து எடை போட்டால்....அப்புறம் எடை மிசின் என்னாவது.............

    ReplyDelete
    Replies
    1. அதுக்குத்தான் நான் லாரி எடை போடும் இடத்திற்கு வரச் சொன்னேன் :)

      Delete
  11. 1 ஹா.....ஹா....ஹா..

    2. ஹா...ஹா.... உஷாரான பையன்!

    3. போதையின் பாதையில்..... ஹூ......ம்!

    4. அய்யய்யோ... எந்த வீடுன்னு நீங்க த்ளிவாச் சொல்லலே போலேருக்கு!

    ReplyDelete
    Replies
    1. ' மாமியார்' வீட்டில் இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று தெளிவாச் சொல்லிட்டா போச்சு :)

      Delete
  12. த ம +
    நல்ல சுவை நகைச்சுவை ...

    ReplyDelete
    Replies
    1. உங்க கருத்தில் எனக்கும் பூரண உடன்பாடு :)

      Delete
  13. வணக்கம்
    நல்ல கற்பனை.. இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றி ரூபன் ஜி :)

      Delete
  14. நாமும் பகவான்ஜியின் தளத்தில் ஒரு பொதுஅறிவுக் கருத்தைப் பதிவு செய்து விடலாம் போல் உள்ளதே..
    கஞ்சாவிற்கு தமிழில் சிவமூலி (?) என்று பெயர்.
    த ம 14

    ReplyDelete
    Replies
    1. இதனால்தான் அகோரிகள் கஞ்சாவை இழுத்துக் கொண்டு சிவனேனு இருக்காங்க போலிருக்கே :)

      Delete

  15. "ஆளைப் பார்த்து எடை போடக் கூடாதுன்னு" பெரியவங்க சொல்லி இருக்காங்களே!
    ஆளின் நடை, உடை, பாவனை ஆகிய மூன்றையும் வைத்து எடை போடலாமென நான் சொல்கிறேன்.

    பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு
    இத்தனை
    ஒப்பீடா...?

    ReplyDelete
    Replies
    1. நடை உடை பாவனையை விட பழகிப் பார்த்து எடை போடுவதே நல்லது .முகநூலில்கூட நம்பி ஏமாறும் பெண்கள் அதிகமாகி விட்டார்களே :)

      ஏற்கனவே பார்த்து வைத்த பெண்ணை மணந்து கொள்ளவே இத்தனை பீடிகை :)

      Delete