16 January 2015

எப்பவும் நயன்தாரா நினைப்புதானா ?

-----------------------------------------------------------------------

இப்படித் தானே படங்கள் வந்துக்கிட்டிருக்கு !

''அந்த இயக்குனடரோட எல்லாப் படங்களிலும் ஒரே ஃ பார்முலா தானா ,எப்படி ?''
''ஹீரோவுக்கு 'துணி 'ச்சல் அதிகமாவும்  ,ஹீரோயினுக்கு  'துணி '
கம்மியாவும்  இருக்கும் !''

சென்ற வருடம் ,இதே நாளில் ஜோக்காளியில்...

இப்படி 'போட்டு வாங்கிறவன் 'கிட்டே ஜாக்கிரதையா இருங்க !

                     ''பெயர்தான் இருபது ரூபாய் ,மதிப்பே இல்லாமே போச்சு !''
                  ''நீங்க சொல்றது 1௦௦ /1௦௦ உண்மை !''
                 ''தெரியுதில்லே ,கைமாத்தா பத்து ரூபாய் கேட்டா ஏன் 
இல்லேங்கீறீங்க?''




Replies


  1. நாடு முன்னேற இப்படி விவரமான ஆளுங்க தான் வேணும் !
  2.  வள்ளுவர் தின சிறப்பு பதிவு ........

எப்பவும் நயன்தாரா நினைப்புதானா ?

 ''திருக்குறள் படிச்சுகிட்டு இருந்தே ,தீடீர்ன்னு மூடிட்டியே ,ஏன் ?'

''நயன்சாரான்னு  ஆரம்பிக்கிற குறளை பார்த்ததும்  மூட் அவுட் ஆயிடுச்சு !''



  1. திருக்குறள்:
    நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் 
    பண்பில்சொல் பல்லா ரகத்து.

    சாலமன் பாப்பையா உரை:
    பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.

  2. மூடாத நயன் ஞாபகத்துக்கு வந்துவிட்டதோ?
    ReplyDelete



    Replies


    1. படிக்கணும்ன்னு ஆர்வம் இருந்தாதானே ?


வடு மாங்காய் ஊறுதுங்கோ !



''ஆறாதே நாவினால் சுட்ட வடு ..இதுக்கு என்ன அர்த்தம் ?''
''வடுமாங்காய் சுவையை  நா மறக்காது என்பதுதான் அய்யா !''

திருக்குறள்










தீயினாற் சுட்டபுண் ணுள்ளாறு மாறாதே
நாவினாற் சுட்ட வடு
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
தீயினால் சுட்ட புண் உள் ஆறும்= ஒருவனை யொருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும் மனத்தின்கண் அப்பொழுதே ஆறும்;
நாவினால் சுட்ட வடு ஆறாது= அவவாறு அன்றி வெவ்வுரையை உடைய நாவினால் சுட்டவடு அதன்கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது.

ஓ அதனாலேதான் மாங்க மடையன்னு சொல்றதோ?
இவனோ வடுமாங்கா மடையானால்லே இருக்கான்!
ReplyDelete

Replies


  1. பொருத்தமா சொல்லிட்டீங்களே!


இன்சுலின் ஏதடா வள்ளுவர் காலத்தில் ?

           ''நான் இன்சுலின் போட்டுக்கிற விஷயம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?'' 

         ''இனிய சொலின்னு எழுதச் சொன்னா ,உங்க பையன் இன்சுலின்னே எழுதுறானே !'

திருக்குறள்:












அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
நாடி இனிய சொலின்.


சாலமன் பாப்பையா உரை:

பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.


காக்க காக்க நா காக்க !

              ''யாதவராயினும் நாகாக்க ........''

              ''போதும்போதும் நிறுத்துடா ,உன்னாலே  வகுப்பிலே ஜாதிப் பிரச்சினை உண்டாயிடும் போல !''














குறள் 127: 
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

சாலமன் பாப்பையா உரை:

எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.


ஒரெழுத்து மாற்றத்தில்
இத்தனை இம்சை இருக்கா ?
ReplyDelete


Replies


  1. இல்லையா பின்னே ?









36 comments:

  1. 01. ஹீரோயினுக்கு //துணி//ச்சல் இருந்ததாலதானே //துணி// குறைஞ்சுச்சு.
    02. இந்த மாதிரி ஆளுகள்ட்ட நான் ஈசியா ஏமாந்துறுவேன்.
    03. வள்ளுவர் காலத்துலயே 9தாராவா ?
    04. நாறாதோ ? சுட்ட வடு மாங்கா...
    05. காலக்கொடுமையாவுல இருக்கு
    06. வாத்தியாரை காக்கா புடிச்சா மார்க் கூட போடுவாருனு நினைச்சுட்டானோ ?
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. 1.அந்த துணிச்சல் வருவது பணத்தைக் கண்டுதானே :)
      2.யாருமே :)
      3.இல்லை ,நயன்சாரா :)
      4.உங்க அனுபவம் அப்படி :)
      5.கொடுமைதான் ,தினமும் இன்சுலின் ஊசிக் குத்திக்கிறது :)
      6.அதுக்காக நா காக்க என்று சொன்னால் மார்க் விழுமா :)

      Delete
  2. வணக்கம்
    ஜி
    துணியும் குறைவு. அத்தோடு... கவர்ச்சியும் அதிகம்.... இரசித்தேன். பகிர்வுக்கு நன்றி. இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்.
    த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஒன்று குறைந்தால் இன்னொன்று கூடும் தத்துவம் அறிந்தேன் ,மகிழ்ச்சி :)
      இனிய வாழ்த்துக்கு நன்றி!

      Delete
  3. இப்படிப்பட்ட நடிகைதானே நமக்கும் பிடிக்கும்

    இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. துணிச்சல் அதிகமுள்ள ஹீரோ வெறுப்பேத்துகிறார் மைலார்ட் :)
      இனிய வாழ்த்துக்கு நன்றி!

      Delete
  4. Replies
    1. இனிய வாக்குக்கும் நன்றி !

      Delete
  5. குறள் சிறப்பு பகிர்வா ஜி...?

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இப்படியாவது குறளை நினைத்தால் சரிதானே ஜி ?
      இனிய வாழ்த்துக்கு நன்றி!

      Delete
  6. பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே
    தம 5

    ReplyDelete
    Replies
    1. இனிய வாழ்த்துக்கும்,வாக்குக்கும் நன்றி!

      Delete
  7. நயன்தாராவுக்கு இன்னும் மார்க்கெட் இருக்கும் போலிருக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு சக நடிகைகள் அல்லவா வருத்தப்படணும்?உங்களுக்கு ஏன் அந்த வருத்தம்னு எனக்கு வருத்தமாயிருக்கு :)

      Delete
  8. இன்சுலின் அருமை!

    ReplyDelete
    Replies
    1. இதுவும் ஒரு இனிய சொலின் தானா ,அய்யா :)

      Delete
  9. எப்பவும் நயன்தாரா நினைப்புதானா ?------பின்னே அப்பத்தானே துாக்கமே வருகிறது ரசிகர்களுக்கு....

    ReplyDelete
    Replies
    1. தூக்கம் கெட்டது என்றல்லவா ரசிகர்கள் சொன்னார்கள் :)

      Delete
  10. ''ஹீரோவுக்கு 'துணி 'ச்சல் அதிகமாவும் ,ஹீரோயினுக்கு 'துணி '
    கம்மியாவும் இருக்கும் !'' ha!...hA!.....
    ''நயன்சாரான்னு ஆரம்பிக்கிற குறளை பார்த்ததும் மூட் அவுட் ஆயிடுச்சு !'' one word diffrent magic..
    Tamil's beauty.....

    ''இனிய சொலின்னு எழுதச் சொன்னா ,உங்க பையன் இன்சுலின்னே எழுதுறானே !'
    திருக்குறள்:
    Arumai.....rasiththen..
    Nanry
    Vetha.Langathilakam


    ReplyDelete
    Replies
    1. Tamilan's beauty.....நயன்தாரா என்பதும் உண்மைதானே :)

      Delete
  11. போட்டுவாங்குறவுங்க கிட்ட ஜாக்கிரதையா இருக்கனும்....நல்ல ஆளுதான்
    காக்க காக்க நா காக்க ...நயம்
    இன்சுலின்...ஹஹஹ...
    அதைத்தையும் ரசித்தேன். தம +1

    ReplyDelete
    Replies
    1. இப்படிப்பட்ட ஆளுங்களை 'போட்டுத் தாக்கிற ' வேண்டியதுதான் ,வேற வழியில்லே :)

      Delete
  12. துணிவே துணைன்னு இருக்க வேண்டியிருக்கு! :)

    ReplyDelete
    Replies
    1. ஜோக்காளியின் மொக்கைகளைப் படித்து விட்டுத்தானே:)

      Delete
  13. நடிகைக்கு துணி கம்மியாக கம்மியாகத்தானே கலெக்ஷன் நல்லாயிருக்கும்
    அடப்பாவி இப்படி கூட கடன் கேக்க முடியுமா!
    திருவள்ளுவர் இன்றைக்கு இருந்தால், என்னுடைய குறளுக்கு இப்படியெல்லாமா பொருள் சொல்லுவீங்கன்னு நொந்து நூடுல்ஸ் ஆயிருப்பாரு.

    ReplyDelete
    Replies
    1. கலக்சன் கூடுவது நடிகைக்கா ,படத்திற்கா :)
      எப்படி கடன் கேட்கணும்னு ரூம் போட்டு யோசிப்பான் போல :)
      இப்படி உரை எழுதவும் ஆளிருக்கேன்னு சந்தோசப் பட்டிருப்பார் :)

      Delete
  14. ''ஆறாதே நாவினால் சுட்ட வடு ..இதுக்கு என்ன அர்த்தம் ?''
    ''வடுமாங்காய் சுவையை நா மறக்காது என்பதுதான் அய்யா !''

    அவ்வையாரில் ஆரம்பித்துத் திருவள்ளுவர் வரைக்கும் வந்தாச்சு
    ஒருவரையும் விட்டு வைக்க வில்லை பாவம் இவர்கள் எல்லாம்
    தெய்வப் புலவர்கள் ஐயா உங்க கிட்ட மாட்டிக் கிட்டு முளிக்குறாக
    எப்படியெல்லாம் யோசிக்குறீங்க !கொல வெறி ஜீ :))))))))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. பயமா கீது ...'தெய்வப்' புலவர்கள் கண்ணைக் குத்திடுவாங்களோன்னு :)

      Delete
  15. திருவள்ளுவர் கருத்து சொன்னா நீங்க சிரிக்கச்சொல்றீங்க அனைத்தும் அருமை.தம+1

    ReplyDelete
    Replies
    1. சிரிப்பு மூலமா அவர் கருத்தைப் பரப்புறதும் தப்பா :)

      Delete
  16. அது அது அந்தப் பயம் இருந்தாப் போதும் ஜீ :))))))

    ReplyDelete
    Replies
    1. காமெடி ஃபீஸா இருந்த என்னை இப்படி பயங்தாங்கொலி ஆக்கிட்டீங்களே :)

      Delete
  17. திருக்குறள் ஜோக்கா போட்டு அசத்திட்டீங்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மொக்கை போட உதவிய வள்ளுவருக்கு நானும் நன்றி சொல்லிக்கிறேன் :)

      Delete
  18. ஹஹஹஹஹ எல்லாமே ரசித்தோம்....குறள் சிறப்பு சிரிப்புகள் அமர்க்களம்....

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு மேலே குறளைக் கொலை பண்ண முடியாது ,அப்படித்தானே :)

      Delete