25 January 2015

ஜாக்கெட்லே ஜன்னல் எல்லாம் தேவைதானா :)

-----------------------------------------------------------------------------------------------
  நல்ல முன் எச்சரிக்கைதான்   :)           
                   '' கூட்டிப்  பெருக்க மட்டும் தெரிந்த வேலைக்காரி தேவைன்னு உங்க மனைவி சொல்றாங்களே ,ஏன் ?''
                  ''வர்ற வேலைக்காரி ,என் மனைவி கிட்டேயிருந்து என்னைக் கழித்து , புது வாழ்க்கை வகுத்து விடக் கூடாதுன்னுதான் !''

இவனை வரதட்சணைக் கேஸில் தூக்கிலே போடணும் !
                ''என்னம்மா ,குண்டைத் தூக்கி போடுறே ... டைவர்ஸ்  நோட்டீஸ் கொடுக்கப் போறீயா ,ஏன் ?''
               ''உங்கப்பாதான்  பாங்கிலே பெரிய ஆபீசராச்சே , நம்ம வீட்டிலே ஒரு ATM மெஷினைக் கொண்டு வந்து வைக்கச் சொல்லுங்கிறாரே,உங்க மாப்பிள்ளை  !'' 

அதுக்கு அந்த பொண்ணோட அப்பா வரும் தேர்தலில் நின்னு எம்பியாகனும்
ReplyDelete
  1. நிச்சயமா MP ஆனால்தான் முடியும் .ஒவ்வொரு முறையும் atm மெசினில் ஐம்பது லட்சம் வைக்கணும்னா சும்மாவா ?


ஜாக்கெட்லே ஜன்னல் எல்லாம் தேவைதானா ?

           ''என் மனைவிகிட்டே ,ஜன்னல் வழியே கையை விட்டு நகை திருடுறது பெருகிட்டு வருதுன்னு சொன்னது ,நல்லதாப் போச்சு !'' 
           ''ஜன்னல் கதவுக்கும் பூட்டு போட்டுட்டாங்களா?''
          ''இல்லே ,ஜன்னல் ஜாக்கெட் போட்டுக்கிறதைக்கூட  விட்டுட்டா !''


உங்களுக்கு ஏன் அவார்ட் கொடுக்கக்கூடாது?
ReplyDelete
  1. பத்மபூஷன் அவார்டைதவிர வேறு எதையும் வாங்கிக் கொள்ள நான் தயாராய் இல்லை !



ஷேர் மார்க்கெட் எல்லோருக்கும் கை கொடுக்குமா ?

              '' உங்க வீட்டுக்காரர்  ஷேர் ஆட்டோவிலே கூட ஏற மாட்டாரா ,ஏன்?''
            ''ஷேர் மார்க்கெட்லே போட்ட பணம் போனதில் இருந்து இப்படி ஆயிட்டார் !''



வாயாடி, பெரியவள் ஆனதும் ,,,

FM ரேடியோவில் கலாய்க்கும் 
 ரேடியோ  ஜாக்கி  சின்ன வயதிலேயே 
'பெரிய வாயாடி'!




28 comments:

  1. 01. வாழ்க்கையே ஒரு கணக்கு தான்.
    02. என்ன ? கொடுமை சரவணன்
    03. நல்லவேளை ஜாக்கெட்டாவது போடுறாளே...
    04. சேர்லயாவது உட்காருகிறாரா ?
    05. வளரட்டும்...
    த.ம 1

    ReplyDelete
    Replies
    1. 1.பலருக்கும் புரியாத கணக்கும் கூட :)
      2.atm மெஷினை உடைக்க முடியாது காரணத்திற்காக கேட்பாரோ :)
      3.நகைப் பறிக்க இந்த ஜன்னலிலும் கை வைச்சிறக்கூடாதில்லே :)

      4.அதுவும் அலர்ஜிதான் :)
      5.இன்னுமா :)


      .

      Delete
  2. சுதாரிப்பு சுப்ரமனியன்தான்
    மிகவும் இரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. முன் எச்சரிக்கை முத்தண்ணாவுக்கு அண்ணனும் கூட :)

      Delete
  3. Replies
    1. தனியாய் கவனித்ததற்கு நன்றி :)

      Delete
  4. Replies
    1. ஆனாலும் கணக்கு உதைக்கத்தான் செய்யும் :)

      Delete
  5. ஹஹஹஹ்

    ஜன்னல் வழியா எட்டிப்பார்த்தா மனசு தெரிஞ்சுரும்னோ.....

    அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு பயந்து யாரும் எட்டிப் பார்க்கிறதில்லை :)

      Delete
  6. 1. வாழ்க்கை ஒரு கணக்கு - அதனால தான் ரொம்ப பேர் Pass ஆகிறதில்லை!..
    2. அந்த மாப்பிள்ளைக்குப் பொண்ணு கொடுத்ததே அதிகம்!..
    3. ஜன்னல் ஜாக்கெட்டுக்கு பழைய ஜோக் ஒன்று உள்ளது!.. ?.. !..
    4. அதுவும் அப்படியா!..
    5. நல்லவேளை!..

    ReplyDelete
    Replies
    1. 1.ஃபாடர்லே பாஸ் செய்பவர்களே அதிகமோ :)
      2.அதி புரிஞ்சிக்கலையே :)
      3.அதையும் தான் சொல்லுங்களேன் :)
      4.ரொம்பவும்தான் நொந்து போயிருக்கார் :)
      5.என்ன சுமக்க சொல்லவில்லை ,அப்படித்தானே :)

      Delete
  7. உங்களுக்கு கண்டிப்பாக அவார்ட் கொடுத்தே ஆகனும் என்று முதல் ஆளாக குரல் கொடுப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. பத்மபூஷன் இல்லைன்னாலும் ஹாஸ்ய பூஷன் அவார்ட்டுக்காவது குரல் கொடுங்க ,பண முடி எதுவும் கொடுத்தா உங்களுக்கு நிச்சயம் அதில் பாதி உண்டு :)

      Delete
  8. என்றும்போல் இன்றும் அனைத்தும் அருமை

    தம +

    ReplyDelete
    Replies
    1. இன்றும் , என்றும்போல் நீங்கள் தந்த கருத்துக்கு நன்றி :)

      Delete
  9. நம்ம வீட்டிலே ஒரு ATM மெஷினைக் கொண்டு வந்து வைக்கச் சொல்லுங்கிறாரே,உங்க மாப்பிள்ளை !'' ---உள்ளத்தில் நல்ல உள்ளம் கொண்டவரு.....திருடர்களுக்கும் பயன்படும்ல....

    ReplyDelete
    Replies
    1. மெஷினை வைச்சிடலாம்,பணத்தை யார் வைக்கிறது :) தானாக் கொட்டும்னு மாப்பிள்ளை நினைச்சுட்டாரோ :)

      Delete
  10. கூட்டிக் கழித்து வகுத்து பெருக்கி...
    அட ஆமால்ல ஜோதிஜி அண்ணா சொன்னது போல உங்களுக்கு ஏன் அவார்ட் கொடுக்கக்கூடாது... ஜி...
    குடியரசு தினத்துக்கு ஒபாமா வந்திருக்காக.... சொல்லி கொடுக்கச் சொல்லலாமோ?

    ReplyDelete
    Replies
    1. ஆரம்பமும் ,முடிவும் மட்டும் செய்ஞ்சா போதுமே :)
      ஏன் கொடுக்கக்கூடாதுன்னு கேட்கிறீங்க,கொடுக்க யாராவது முயற்சி எடுக்கிறீங்களா ,அதுக்கும் மேலே யாரும் இல்லையா:)

      Delete

  11. ஜன்னல் ஜாக்கெட் போட்டுக்கிறதைக்கூட விட்டுட்டா!'
    பெண்களின் நகைத் திருட்டை நிறுத்தலாமா?

    நானும் தங்கள் மதுரைக்கு 02/02 மற்றும் 07/02 ஆகிய நாள்களில் வருகிறேன்.
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html

    ReplyDelete
    Replies
    1. திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டையும் ஒழிக்க முடியாதே :)
      மதுரைக்கு தாங்கள் வருவதில் மகிழ்ச்சி விமானம் வரும் நாள் ,நேரத்தைச் சொல்லுங்கள் ,சந்தித்து உரையாடுவோம் !

      Delete
  12. வணக்கம்
    ஜி
    பெரிய கணக்கு..... போல...பகிர்வுக்கு நன்றி
    இனிய குடியரசு தினவாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பெரிய கணக்கு என்றாலும் போட வேண்டிய கணக்கு தானே :)

      Delete
  13. முன்னெச்சரிக்கை முத்தண்ணா..... :)

    ReplyDelete
    Replies
    1. முத்தண்ணாவுக்கும் மூத்த அண்ணன் :)

      Delete
  14. வேலைக்காரி பயம் பயங்கிரமாகத்தான் இருக்கு.
    atm மெஷினை கொந்தந்து வைக்கலாம். ஆனா அதில பணத்தை யார் நிறப்பி வைக்கிறது?
    ஜன்னல் ஜாக்கெட் - பெண்கள் எல்லாம் உங்களை பூரிக்கட்டையால அடிக்கலாமான்னு யோசிக்கிறாங்களாம். பின்ன நீங்க அவுங்களோட சுதந்திரத்தல இல்ல கையை வச்சுட்டீங்க.

    ReplyDelete
    Replies
    1. அவங்களும் வேலைக்காரியாய் வந்து வீட்டுக்காரி ஆயிருப்பாங்களோ?
      ஒரு தடவை நிரப்பவே ஐம்பது லட்சம் வேணும் ,அதுவே போதுமே :)
      பூரிக்கட்டை இல்லற ஆயுதம் எனவே வரவில்லை ,மனசாட்சி உள்ளவங்க அடிக்க வர மாட்டாங்க :)

      Delete