17 January 2015

இப்படி ,கணவன் மனைவியிடம் சொன்னால் என்னாகும் ?

-------------------------------------------------------------------------- 

வண்டிய திருப்ப சிக்னல் கொடுத்தது தப்பா ?           

                 


              ''பஸ்  விபத்து ஆனதுக்கு டிரைவர் ,நான்தான் காரணம்னு  எப்படிச் சொல்றீங்க ,பாட்டி  ?''

               ''வெளியே கையை நீட்டாதீர்கள் என்று எழுதிப் போட்டுட்டு ,நீங்களே கையை அடிக்கடி வெளியே நீட்டினதை நானும் கவனிச்சுக்கிட்டு தானே வந்தேன் !''
சென்ற வருடம் ,இதே நாளில் ஜோக்காளியில்...

இப்படி,கணவன் மனைவியிடம் சொன்னா என்னாகும் ?

            ''ஏனுங்க முதலாளி ,உங்களுக்கே இது நியாயமா ?மாட்டுப் பொங்கல் அன்னைக்கி போய் புது டிரஸ் கொடுக்கிறீங்களே ?''
              ''நீதானே மாடா  உழைக்கிறேன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருந்தே ?''

தலைப்பையும் கருத்தையும் மாற்றி எழுதி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

Replies


  1. ''நீதானே மாடா உழைக்கிறேன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருந்தே ?'',,,இந்த கேள்வியை மனைவியிடம் கணவன் கேட்டால் என்னாகும்னு உங்களுக்கும் தெரியும்தானே?
    வேறெப்படி இருந்தால் பொருத்தம்னு 'தமிழ் 'இளங்கோ சொன்னா ,ஜோக்காளி கேட்டுக்கிறேன் !
    நன்றி 
    Delete
  2. பல வீடுகளில் ஆண் மாடாய் உழைப்பதை அப்படிச் சொன்னேன்.
    Delete
  3. வீட்டில் அதிகம் உழைப்பது மனைவிதான் என்பதில் எனக்கு சந்தேகமில்லை .
    மாடாய் உழைப்பது கணவனா ,மனைவியா ?அடுத்த பட்டிமன்ற தலைப்பு ரெடி !அய்யா சாலமன் பாப்பையா அல்லது லியோனி சாரோ பயன்படுத்திக் கொள்ளலாம் !
  4. வடிவேலுவின் 'அவனா நீ ' இவருக்கும் பொருந்தும் !
             ''இப்போதெல்லாம் தலைவர் 'நீயும் நானும் ஓரினம் 'னு  சொல்றதே இல்லையே ,ஏன் ?''
            ''ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்னு  தீர்ப்பு வந்திருச்சே  !''

சட்டம் வந்துவிட்டது.
ஆனால் யாராவது தண்டிக்கப்படுள்ளனரா?
அரசியல்வாதிகளுக்கு கோர்ட், கேஸ் என்பதெல்லாம் கரப்பான் பூச்சி மாதிரிதான்.

Replies


  1. இங்கே, உள்ளவனுக்கு ஒரு சட்டம்,இல்லாதவனுக்கு ஒரு சட்டம்தானே அமுலில் இருக்கிறது ?
    சட்டம் தெரிந்தவர்களே மீறுவார்கள் ,கேட்டால் உன் நியாயத்தை கோர்ட்டில் போய் கேள் என்பார்கள் ,காரணம் ,எந்த கேஸும் ஆயுள் காலத்தில் முடிவுக்கு வராது என்ற தைரியம்தான் !
    நாள் கடந்த நீதியும் அநீதிதானே ?
    1. 2013 ...இதே நாளில் ,ஜோக்காளியில் ....

  • சாதனையும் ,வேதனையும் அவரவர் கையில் !


  • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிவந்த 1 3 காளைகளை அடக்கிய காவலர் வினோத் ராஜ் மோட்டார் சைக்கிள் பரிசை வென்றார் ...
    மேன் ஆப்  தி ஜல்லிக்கட்டு ஆன அவர் ...
    மோட்டார் சைக்கிளில் இனி சீறிக்கொண்டு பறக்காமல் இருக்கவேண்டும் !
    இந்த காவலர் செய்தது சாதனை என்றால் ...
    இன்னொரு காவலர்  கார்த்திக்ராஜா  தேடிக்கொண்டது வேதனை ...
    அதிக அளவு தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் ...
    23வயதிலேயே குடிக்கு அடிமையான அவர் கடிதத்தில்  எழுதியிருப்பது ...
    எனது சாவுக்கு யாரும் காரணமில்லை .குடி உறவையும் ,உயிரையும் கெடுக்கும் .எனது முடிவு மற்றவர்களுக்கு பாடமாக இருக்கட்டும் !
    குடிமகன்கள் பாடம் படிப்பார்களா ?


    காவலர் கார்த்திக்ராஜா அவர்கள் 'இருந்து' நாலு பேரை திருத்துவதை விட்டுவிட்டு... ம்...
    ReplyDelete


    1. சந்தோசமாக வாழ வேண்டிய இளவயதில் காவலரே இப்படி என்றால் ...?
    2. இதுவெல்லாம் பெரியார் பிறந்த மண்ணில்தான் !
    3. வத்தலக்குண்டு  அருகில் உள்ள இரண்டு கோவில்களில் நடைபெற்று இருக்கும் வினோத நேர்த்திக்கடன் விழாவைப் பற்றி அறியும்போது ...
      சிரிக்கத்தான் தோன்றுகிறது ...
      நேர்த்திக்கடனாக கொண்டுவந்த லட்சம் வாழைப்பழங்களை படைத்து பூஜை செய்தபின் ...
      கூட்டத்தை நோக்கி வானத்தில் சூறை
      இட்டார்களாம் ...
      அதை வாயால் கவ்வியும் ,கையால் பிடித்தும் பக்தர்கள் சாப்பிட்டார்களாம்...
      பழம் சாப்பிட்டவர்கள் புண்ணியம் செய்தவர்கள் ...
      அவர்களுக்கு சொர்க்கலோகத்தில்  நிச்சயம் இடம் கிடைக்குமென்று தோன்றுகிறது !
      இதைவிட கொடுமை ...
      இன்னொரு கோவிலில் ...
      இங்கே நேர்த்திக்கடனாய் வந்தது ...
      3 அடி முதல் 1 9 அடி நீளமுள்ள அரிவாள்களாம்...
      அதுவும் ஒன்றல்ல ,இரண்டல்ல ஐந்நூறாம்...
      நல்ல வேளை ,இதை அவர்கள் சூறை விடவில்லை ...
      இந்த அரிவாள்கள் எல்லாம் பூப்பறிக்க மட்டுமே பயன்படும் என்றே நம்பத் தோன்றுகிறது !
      ஹும் ...இந்தியா செவ்வாய்க்கு ராக்கெட் விடுகிறதாம் !

    4. ஒரு கோயிலில், மேலே சூறையிடப்பட்ட அரிவாள்கள் கீழே விழும்போது பூச்சரங்களாக மாறிவிட்டன!!! என் கண்களால் பார்த்தேன். நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ நம் மக்கள் நம்புவார்கள்!
      ReplyDelete


      Replies


      1. வேப்ப மரத்தில் பால் வழியுது என்பார்கள் ,பிள்ளையார்க்கு பால் கொடுப்பார்கள் !நம்புறவன் இருக்கானே !

    27 comments:

    1. 01. இந்த சட்டம் குழப்பம்தான்.
      02. மாட்டுக்கு எதற்க்கு ? ட்ரெஸ்.
      03. தலைவருக்கு இந்த வார்த்தை சிக்கல்தான்.
      04. வேதனைதான்.
      05. பாப்பற்க்க இறுவாள் எதற்க்கு?
      தமிழ் மணம் 1

      ReplyDelete
    2. Sorry

      05. பூப்பறிக்க அறிவாள் எதற்க்கு ?

      ReplyDelete
      Replies
      1. 1.அந்த டிரைவர் இடது புறம் திரும்பும்போது கையைக் காட்டி இருந்தா ,நியாயமா இருந்து இருக்கும் :)
        2.அதானே ,அது கேட்டுச்சா ,முதல்நாள் அலங்காரம் பண்ணிட்டு ,அடுத்த நாள் மாட்டுக் கறிக்கு வெட்டுவது என்ன நியாயம் :)
        3.தலைவரே இப்படின்னா ..:)
        4.தினசரி இந்த வேதனை சம்பவம் அரங்கேறிக் கொண்டுதானே இருக்கிறது ?
        5.அரிவாள் யார் கைக்கு சென்று என்னன்னா காரியம் செய்யப் போகிறதோ :)

        Delete
    3. இதுல என்ன சந்தேகம் வேண்டிக் கிடக்குது ஜீ ?.மாடா உழைப்பது
      எப்போதும் மனைவி தான் அதாலதான் எங்காத்து "மாட்டுப் பொண்ணு"
      அப்படி சொல்லுவாக:))) இந்த ஆதாரம் ஒன்று போதாதா ?...:)))பாப்பையா
      (ஐயா )தப்பான தீர்ப்புச் சொன்னா அவரு வீட்டுச் சங்கதி என்னாகும்
      என்று யோசிக்காமலா பேசுவாரு ?..அதனால பட்டி மன்றம் ஓவர் :))

      ReplyDelete
      Replies
      1. ஏகமனதாக உங்களின் தீர்ப்பை இந்த மன்றம் ஏற்றுக் கொள்கிறது :)

        Delete
    4. அட ஆமா அவ்வளவு பெரிய பஸ்ஸை
      ஒத்தக் கையில ஓட்டினா ஆக்ஸிடெண்ட்
      ஆகத்தானே செய்யும்
      நானும் பாட்டிக் கட்சிதான்

      இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

      ReplyDelete
      Replies
      1. நமக்கு தெரியுது .போலீசுக்கு தெரியலையே :)
        இணய வாழ்த்துக்கு நன்றி !

        Delete
    5. வீட்டு நிர்வாகம் என்பது பெரிய விசயம் ஜி...

      ReplyDelete
      Replies
      1. அதுவும் புருஷன்,பதிவரா இருந்தால் ரொம்ப ரொம்ப கஷ்டம் :)

        Delete
    6. Replies
      1. இப்பதிவுக்கு பெருமை சேர்க்கும் உங்கள் அருமையான வாக்குக்கு நன்றி :)

        Delete
    7. கை வெளியே ...கலகல....
      மாடாய் உழைப்பது....அதுவும் செக்கு மாடாய்...பெண்கள் தான்.
      காவலர் நாலு பேருக்கு செல்லி காப்பாத்தாம ...கழண்டுக்கிட்டார்...

      ரசனை. தம +1

      ReplyDelete
      Replies
      1. போலீசிடம் பாட்டியே மாட்டி விட்டுரும் போலிருக்கே :)
        கஷ்டமான காரியம்தான் :)
        அவர் ,குடும்பம் என்ன பாடுபடும் என்பதைக் கூட நினைத்துப் பார்க்காதது ,வேதனைதான் !

        Delete
    8. Replies
      1. பொங்கலுக்கு மதுரைக்கு வந்து போனீர்களா ஸ்ரீ ராம் ஜி ?

        Delete
    9. இப்படி,கணவன் மனைவியிடம் சொன்னா என்னாகும்---கைபேசாது...கையிலிருப்பது பேசும்( நண்பர் ஒருவர் தன் அனுபவத்தை சொன்னார்)

      ReplyDelete
      Replies
      1. அந்த நண்பர் நான்தான் என்பதைக் கூறாமல் மறைத்ததற்கு நன்றி :)

        Delete
    10. பாட்டி சரியாத்தானே சொல்லுது! ஹாஹா! சிறப்பான நகைச்சுவைகள்! நன்றி!

      ReplyDelete
      Replies
      1. பாட்டி ஏன் பொய் சொல்லப் போவுது :)

        Delete
    11. வணக்கம்
      ஜி
      ஆகா.... ஆகா.. அருமையாக உள்ளது இரசித்தேன். த.ம 8
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      ReplyDelete
      Replies
      1. 'மெய் ' மறந்து ரசித்து பாராட்டியதற்கு நன்றி ,ஜி !

        Delete
    12. 1. ஹஹஹஹஹஹ்...

      ஜி என்னங்க ஜி நீங்களே இப்படிச் சொல்லிப்புட்டிக....ஆணுங்க நாமதானுங்க மாடா உழைக்கிறோம் வீட்டுல.....சரி சரி பாப்பையா அவர்கள் பட்டி மன்றம் வைத்தால் அவரு நடுவா நீதி வழங்க முடியாது ஜி....வீட்டுல ஆப்புதான்.....ஹஹஹ்

      ReplyDelete
      Replies
      1. வீட்டில் மாடாய் உழைத்தால் பதிவு போடநம்மால் முடியாதே :)

        Delete
    13. ஓ! இப்ப புரியுது நேர மரிச்சு சொன்னா வீட்டுல புவ்வா கான்சல் அதுதானே!!உண்மையச் சொல்லுங்க ஜி!ஹஹஹஹ்

      ReplyDelete
      Replies
      1. பார்த்தீங்களா ,புவ்வாவுக்கே நாம பெண்டாட்டியை எதிர்பார்க்க வேண்டி இருக்கு :)

        Delete
    14. பாட்டியே போதும் வேறு சாட்சிகள் தேவையில்லை..............

      ReplyDelete
      Replies
      1. பல்டி அடிக்க முடியாத வலுவான சாட்சிதான் :)

        Delete