21 January 2015

'உண்டானதால் ' புருஷன் மேல் உண்டான பிரியம் :)

----------------------------------------------------------------------------------------- 

மதுரைத் தமிழனுக்கு இது சமர்ப்பணம் :)

              
             ''மேஜிக் நிபுணரைக் கட்டிகிட்டது வம்பாப்  போச்சா ,ஏண்டி ?''
              ''பூரிக் கட்டையை  அவர் மேல் எறிந்தால் ,அது பூமராங் மாதிரி திரும்ப வந்து என்னை அடிக்குதே !''
சென்ற வருடம் ,இதே நாள் ஜோக்காளியில்......

'உண்டானதால் ' புருஷன் மேல் உண்டான பிரியம்  !

                ''எலியும் பூனையுமா இருந்தே ,இப்போ உண்டானபிறகு உன் போலீஸ் புருஷனை விழுந்து விழுந்து கவனிச்சுக்கிறீயே,ஏண்டி ?''
            '' வயித்திலே  இவ்வளவு  வெயிட்டை  சுமக்கிறது ,எவ்வளவு கஷ்டம்னு இப்போதானே எனக்கு தெரியுது !''


அது சரி...
உண்டானால் பத்து மாசம்.... தொந்திக்கு வாழ்நாள் வாசம்...
ReplyDelete

Replies


  1. தொந்தி பிள்ளையார் சிலையை கரைச்சிட முடியுது ,தொந்தியைதான் கரைக்க முடியலே !


இப்போவாவது அருமை புரிஞ்சுதே... அதுவரை சந்தோஷம்தான்
ReplyDelete

Replies


  1. தொப்பையின் அருமை தனக்கு வந்தாதான் தெரியும்னு சொல்லலாமா ?
  2. எப்படியோ புருசன் மேல ஆசை வந்தா சரிதான்
    ReplyDelete

    Replies


    1. அதுசரி ,ஒரு சுமை பத்து மாதத்தில் இறங்கிவிடும் ,இன்னொரு சுமை ?ஆசையைக்கூட அவஸ்தை ஆகிவிடுமே !



    Replies


    1. இப்படி போட்டி போட்டுக்கிட்டு வயிற்றை வளர்த்தா ..டாக்டருக்கே ;யார் கன்சீவ் 'னு சந்தேகம் வருமா வராதா ?

    படுக்கையிலுமா பத்தடி இடைவெளி ?

    '' டாக்டர் ,ரோட்டிலே நான் பாலோ பண்ற பத்தடி இடைவெளி  ரூல்ஸை வீட்டிலேயும் கடைப் பிடிக்கணுமா,ஏன் ?''
    ''ஐந்தாவது பிரசவத்துக்கு பெண்டாட்டியை கூட்டி வந்திருக்கீயே !''

    1. கதவைத் தாளிடச் சொல்லிவிட்டு மொட்டை மாடியில் படுப்பதே சாலச் சிறந்தது!
      ReplyDelete

      Replies






      1. ஆனால், அந்த டிரைவர் பிள்ளைங்களை ,மொட்டை மாடிக்கு அனுப்பிட்டு கதவைத் தாழ் போட்டுக்கிறாரே  ?
        நன்றி
        Delete

    2. rஐயோ ! பாவம்! உலகம் தாங்காது! தேவை இடைவெளி!
      ReplyDelete
      Replies
      1. நீங்க இடைவெளி வேணுங்கிறீங்க ,டிரைவர் இடைவேளை கூட விடுற மாதிரி தெரியலே !
      1. 2013 ...இதே நாளில் ,ஜோக்காளியில் ....

    3. JOKKAALI BLOG ன் நிறத்திற்கு மனதை மாற்றும் சக்தி உண்டு !

                    நிறத்திற்கு  மனதை மாற்றும் சக்தி  உண்டு !

      தினமலர் பேப்பர் படித்துக் கொண்டிருந்த ஜோக்காளி ,ஜல்லிக்கட்டு காளையை அடக்கி விட்டவரைப் போல் துள்ளிக் குதித்தார் .
      ''சௌதாமினி  ,சௌதாமினி  ,சீக்கிரம் இங்கே வாயேன் ''என்று தன் சகதர்ம பத்தினியை அழைத்தார் .
      ''என்னாச்சு உங்களுக்கு ?காவிரியில் தண்ணி வந்த மாதிரி உற்சாகம் கரை புரண்டு ஓடுது !''
      ''நீ சந்தோசமா இருக்கியா ,சொல்லு ?''
      ''நீங்க  தாலியைக் கட்டுன நாள்லே இருந்து அது எங்கே இருக்கு ?''
      ''இப்படி புலம்பிக் கிட்டே  திருமண வெள்ளி   விழா வையும்  கொண்டாடியாச்சு !அது கிடக்கட்டும் ,  உன்னை அறியாமலே நீ சந்தோசமா இருக்க ஒரு வழி இருக்கு  !''
      ''அது நான் எங்க அம்மா வீ ட்டுக்கு போற வழியாதான் இருக்கும் !''   
      ''அதுமட்டுமில்லை !ஈசியான இன்னொரு வழி   ,ஜோக்காளி ப்ளாக்கை நீ படிக்க கூட வேணாம் ,பார்த்துக் கிட்டு இருந்தாலே போதும் ,ஆட்டோமேடிக்ககா  உன் மனசிலே இனம் புரியாத சந்தோசம் உண்டாகும் !''
      ''நீங்க  ப்ளாக்கை ஆரம்பித்தப் பிறகு ,  கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிறவங்க எண்ணிக்கை கூடிஇருக்குதுன்னு 'லயோலா ' புள்ளி விபரம் சொல்லுதே !''
      ''சென்னையில் மட்டுமா ப்ளாக் தெரியுது ?ஆப்ரிக்கா பக்கம் சர்வதேச எல்லையில் ,சாட்டிலைட் ரீசிவர் மூலமா  கப்பலில் இருந்தும் பார்த்து ரசிக்கிறாங்கன்னு தெரியாதா உனக்கு?''
      ''அவங்க  கீழ்ப்பாக்கம் பக்கம் வரலேன்னு சொல்ல  வர்றிங்களா ?''
      ''ஆமா !''என்றார் ஜோக்காளி 'செவ்வாயில் 'தண்ணீர் கண்டுப் பிடித்த மாதிரி !
      ''எதுக்கும் ப்ளாக் விவூவர் மேப்பை  செக் பண்ணுங்க ,அப்பாவி மனுஷன் எவனாவது கடல்லே விழுந்து தற்கொலை பண்ணிக்கிட்டிருக்கப் போறான் !''
      ''ப்ளாக் எழுதுற நானே ,பவர் ஸ்டார்  ரேஞ்சுக்கு பல்லைக் காட்டிக் கிட்டு சந்தோசமா இருக்கேன் ,என் விவூவர்சைப்  பற்றி நீ ஒண்ணும் கவலைப் படாதே ,நல்லா  இருப்பாங்க !அது சரி ,உன்னோட  தைராய்ட் பிரச்சினை ரெகுலேட்  ஆகணுமா ?என் ப்ளாக்கைப் பாரு !''
      ''ஆசையா வாங்கின வைர நெக்லசை போட்டுக்க முடியலே ,கழுத்தை சுற்றி  இருக்கிற  ஃமப்பிலரை கழட்ட உதவும்னா ப்ளாக்கைப்  பார்க்கிறேன்  ,அப்படி என்ன அதிசயம் ப்ளாக்கிலே ?''
      ''சொல்றேன் ,அதுக்கு முன்னாலே இன்னொரு கேள்வி ,அடிக்கடி வரும்  தசை பிடிப்பு  ,சரியாப் போயிடுச்சா?''
      ''அப்படியேதான் இருக்கு ,அதுக்கும் உங்க ப்ளாக்கைப் பார்த்தா சரியாயுடுமா ?''
      ''கரெக்ட் !இன்னொரு முக்கிய விஷயம் ,ஜோக்காளி ப்ளாக்கை  ஆண்களை விட பெண்கள் பார்த்தா பலன் அதிகம் !''
      ''உங்க ஜொள்ளுப் புத்தியை  காட்டிட்டீங்களே!''
      ''சௌதாமினி ,தப்பா எடைப்  போடாதே !பெண்களுக்கு பீரியட்ஸ் தொந்தரவு கூட வராதுன்னு சொல்ல வந்தேன் !''
      ''ஜோக்காளி ப்ளாக்கிலே  இப்படி  அதிசய சக்தி இருக்கா ?''
      ''ப்ளாக்குக்கு இல்லே ,ப்ளாக்கில் அதிகமா இருக்கிற ஆரஞ்சு நிறத்திற்கு சக்தி இருக்குதாம் !இதை நான் சொல்லலே ,சென்னை அண்ணா இயன் முறை மருத்துவமனை விரியுரையாளர் திருமதி தீபா மேடம் தான் சொல்லி இருக்காங்க !''
      ''உங்களைத் தவிர யார் சொன்னாலும் சரியாத் தான் இருக்கும் !

         நன்றி ..தினமலர்  16.01.13











35 comments:

  1. 01. விட்டாலாச்சார்யா பேத்தியைத்தான் இவணுக்கு கட்டி வைக்கணும்.
    02.தொந்தி போலீசா....
    03. இருந்தாலும் இவ்வளவு இடைவெளியா...
    04. ஸூப்பராகீது
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. 1.வீயோட கேமரா மேனுக்கு கட்டி வைக்கலாமே :)
      2.அதை வளர்க்க எவ்வளவு இரை போட்டுக் கிட்டிருக்கார்ன்னு உங்களுக்கு தெரியாது :)
      3.இன்னும் குறைந்தால் டுவின்ஸ் பிறக்கும் :)
      4.தீபா மேடத்தின் கருத்துதானே :)
      ?

      Delete
    2. கில்லர் ஜி ,இன்று தெரிந்தது ,நேற்று தமிழ் மணம் வாக்கு போட நீங்கள் மறந்தது :)

      Delete
  2. ஓஹோ
    பூமராங்க் பூரிக்கட்டை
    மிகவும் இரசித்தேன்
    (அப்படி ஒன்று இருந்தால்
    எவ்வளவு நன்றாய் இருக்கும் ? )

    ReplyDelete
    Replies
    1. அது இல்லாத வீடே இருக்காதுன்னு தோணுது :)

      Delete
  3. Replies
    1. அன்று மன்னன் சாலமன் சபைக்கு ஒரு விசித்திரமான வழக்கு வந்தது போல் ,இன்று ஜோக்காளி தளத்திற்கும் ....ஒரு வாக்கு ,இருவருமே அது தங்களுடையது என்கிறார்கள் :)

      Delete
  4. Replies
    1. ஆரஞ்சு நிறத்தைதானே :)

      Delete
  5. ஆரஞ்சு கலருக்கு இம்புட்டு பவரா ?

    ReplyDelete
    Replies
    1. மலர் மருத்துவம் போல் இது கலர் மருத்துவம் போலிருக்கு :)

      Delete
  6. //'பூரிக் கட்டையை அவர் மேல் எறிந்தால்//

    இவரும் மேஜிக் கத்துக்கலாமே!?

    ReplyDelete
    Replies
    1. ஒரே உறையில் இரண்டு கத்தி இருக்கக் கூடாதாமே :)

      Delete
  7. எல்லாமே சிரிப்பை வரவழைத்தன! அட்டகாசம்!

    ReplyDelete
    Replies
    1. கணவனின் கஷ்டத்தை உணர்ந்த போலீசின் மனைவி சொன்னதும் அட்டகாசம்தானே :)

      Delete
  8. அனைத்தையும் ரசித்தேன்....

    ReplyDelete
    Replies
    1. உங்களாலே ரசிக்க முடிந்த அளவிற்கு ,மது ஜியால் ஏன் ரசிக்க முடியலைன்னு தெரியலையே :)

      Delete
  9. ஓவர்...இதலாம்

    ReplyDelete
    Replies
    1. எல்லாமுமா ஓவர் :)

      Delete
  10. மாறுபட்ட எண்ணங்களை வெளிப்படுத்தும்
    இன்றைய நகைச்சுவைகள்
    எல்லாமே சிறப்பு!

    ReplyDelete
    Replies
    1. .மேலே பாருங்கள் ...இதுவா ஓவர் ..நீங்கதான் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் :)

      Delete
  11. புருஷனோட கஷ்டம்.....
    ரசித்தேன் பகவான் ஜி.

    ReplyDelete
    Replies
    1. நிரந்தர கர்ப்பமா இது :)

      Delete
  12. பூரிக்கட்டை! நன்று!

    ReplyDelete
    Replies
    1. அடி தருவதா ,பெறுவதா :)

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நானும் இதற்கான மறுமொழியை இதற்கு நீக்கிவிட்டேன் :)

      Delete
    2. ஹஹஹ்ஹ் அதான் இங்க இருக்குதே....

      Delete
  14. ஹை மதுரைத் தமிழன் ரொம்ப சந்தோஷப் படப் போறாரு...ஹை அப்ப நாம மேஜிஷியனா மாறிடலாமேனு...மேஜிக் கத்துக்க கிளம்பிகிட்டுருப்பாரு......ஆனா இங்க ஒரு ரகசியம் சொல்றோம் கேட்டுக்கங்க....சகோதரியும், (தமிழனின் அன்பானவங்க) உங்க ஜோக்க வாசிச்சுட்டு அப்படியா சேதினு ரகசியமா அவங்களும் மேஜிக் கத்துக்கறாங்களாம்...ஜி

    ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. ஒரே ஆள்கிட்டேதான் ,அவர்கள் இருவரும் வேற வேற நேரத்தில் மேஜிக் கற்றுக் கொள்வதாக கேள்வி பட்டேனே :)

      Delete
    2. ஹஹ்ஹஹஹ் இப்படி வேற போகுதா சங்கதி...

      ஜி அது டெலிட் பண்ணது வேற ஒண்ணும் இல்ல...ஒரு வெர்ட் விட்டுப் போச்சு அதச் சேக்கத்தான் ஜி..

      Delete
  15. ஆகா....பூரிக்கட்டை என்றதுமே....மதுரைத்தமிழன் நிணைவுதான் வருகிறது. பாவம்..அவருக்கு இது பயன்பட்டு இருந்தால்....

    ReplyDelete
    Replies
    1. பயன்பட்டதா இல்லையா என்று அவர்தான் தன்னிலை விளக்கம் அளிக்கணும் :)

      Delete
  16. வணக்கம்
    ஆகா...ஆகா...இரசித்தேன் ஜி.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கட நாட்டிலே இந்த பூமராங் கிடைச்சா ஒண்ணு எனக்கும் சொல்லி வைங்க ,ரூபன் ஜி :)

      Delete