1 July 2015

பெண்களும் ரசிக்கும் வாசகம் :)

-------------------------------------------------------------------------

இப்படி'இக்கு 'வைக்கும் காரணம் என்ன ?

           ''தலைவர் , முன்னாள் ரயில்வே அதிகாரியான்னு ஏன் கேட்கிறே ?''
        ''வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு ,இதில் உள்ளவர்கள்  கடைசி நேர  மாறுதலுக்கு உட்பட்டவர்கள் என்று பின் குறிப்பிலே சொல்லி இருக்காரே !''


அந்த புன்னகையின் பின்னால் இருக்கும் கேள்வி !

வட இந்திய டூர் - பாகம் 3

இப்ப நாம பார்க்கப் போவது ..ஹிந்துக்களுக்கு காசி எப்படி புனிதமான இடமோ ,புத்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு புனிதமான இடமாக கருதப்படும்  சாரநாத் மடத்தைதான் !இந்த இடம் புத்த பெருமானின் காலடி பட்ட இடம் என்கிறார்கள் !
தர்மசக்கரம் அழகாக பொருத்தப் பட்டிருக்கும் வாசலைத் தாண்டி உள்ளே போனால் ,இடது புறம் கம்பீரமாக தெரிவது இந்த ஸ்தூபி ...

 28 அடி அகலமும்  33 அடி உயரமும் கொண்ட இந்த ஸ்தூபி   மன்னர் அசோகர் கட்டியதாம் ,பாதி உயரம் வரை உடைகல்லாலும்,அதற்குமேல் சுட்ட செங்கற்களால் கட்டப் பட்டு பல நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கிறது .இதன் உள்ளே ஹால் போன்று அமைப்பு எதுவும் இல்லை ,இவ்வளவு 'சாலிட்'டாகஇருக்கும் இதன் உள்ளே என்னதான் இருக்கும் என்று ,தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் மேலிருந்து நூறு அடி ஆழம் வரை ஆராய்ந்ததில் சில எலும்புகளும் ,பூஜைக்குரிய பொருட்களும் இருந்ததாம் !
இதைப் பார்த்துவிட்டு பின்னால் திரும்பினால் ,அழகாய் காட்சி தருகிறது புத்தர் ஆலயம் ....
 இதன் உள்ளே நுழைகிறோம் ..அன்பே உருவாய் காட்சி தருகிறார் புத்தபிரான் !
புத்தர் வதனத்தில் சிறிய புன்னகை எனக்கு தெரிந்தது ...விக்கிரக ஆராதனை கூடாது என்று சொன்ன என்னையும் விக்கிரக வடிவாக்கி விட்டீர்களே என்று அவர் சொல்வதைப் போலிருந்தது !
இதற்கு பின்னால் புத்த பிட்சுகளுக்கான மடாலயம் ,டிரைனிங் சென்டர் சிங்கள பிட்சுக்களால்  நடத்தப் படுவதாக வழிகாட்டி கூறினார் !
  பசுமையாக காட்சி தரும் இந்த வளாகத்தின் வலது புறம் ..நீண்டு உயர்ந்தொரு அரச மரம் .இந்த அரச மரத்தின் சிறப்பு ,புத்தர் ஞானம் அடைந்த கயாவில் இருக்கும் போதி மரத்தின் கிளை இது ,இதுவல்லவோ உண்மையான 'கிளை '?
அந்த போதி மரத்தின் இலையைப் பறித்து, என் இல்லாள் கண்ணில் ஒற்றிக்கொண்ட போது,அங்கிருக்கும் பணியாளர் வேகமாய் ஓடி வந்து ,இதை பறிக்ககூடாது என்று சத்தமிட்டார்.ஒரு இலையைகூட  பறிக்க விடக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கும் ...இந்த வளாகத்தை நிர்வகிக்கும் சிங்கள புத்த பிட்சுக்கள்தான் ....இலங்கையில் சிங்கள அரசால்  தமிழ் மக்கள்  கொத்து கொத்தாக வேட்டை ஆடப்பட்ட போது வாய் மூடி மௌனம் காத்தார்கள் என்பதை நினைத்தால் வேதனையாகத்தான் இருந்தது ,இன்னும் இருக்கிறது !
                                                                                                      பயணம் தொடரும் ....

*********************************************************************************

இந்தியா ...மூணு பக்கம் கடல் ,நாலு பக்கம் கடன் !.

           ''இந்திரன்கிற பேரைவிட இந்தியன்கிற 

பெயர்தான் எனக்கு பொருத்தம்னு 

ஏன்  சொல்றே ?''

         ''எல்லாப் பக்கமும் கடனை வாங்கி இருக்கீயே !''






பெண்களும் ரசிக்கும் வாசகம் !

பூவை [யரை ] ரசி ,பறிக்க எண்ணாதே !




  1. Thulasidharan V ThillaiakathuTue Jul 01, 09:49:00 a.m.
    விக்கிரக ஆராதனை கூடாது என்று சொன்ன என்னையும் விக்கிரக வடிவாக்கி விட்டீர்களே என்று அவர் சொல்வதைப் போலிருந்தது !// அருமை ஜி! இந்த வரிகள்! உண்மை!

    இன்னும் ஒரு பஞ்ச் வைத்திருக்கின்றீர்கள் பாருங்கள் இறுதியில்....ஒரு இலையைக் கூடப் பறிக்க.........இலங்கையில் சிங்கள அரசால் தமிழ் மக்கள் கொத்து கொத்து வேட்டை ஆடப்பட்ட போது வாய் மூடி மௌனம் காத்தார்கள் என்பதை நினைத்தால் வேதனையாகத்தான் இருந்தது ,இன்னும் இருக்கிறது !.....// சரியான பஞ்ச்!!!!!

    ஜோக்...இந்தியன் ந்னாலே கடனாளிகள் ன்னு ஒரு முத்திரை விழுந்து போச்சு பாருங்க ஜி!..., சிரி கவிதை மிகவும் அருமை ஜி! 




    1. முற்போக்கான சிந்தனைகள் கொண்ட புத்த மதம் இந்தியாவில் வளர்ச்சி அடைந்து இருந்தால் ,பல வழிகளிலும் இந்தியா முன்னேற்றம் அடைந்து இருக்கும் என்ற சிந்தனை எனக்குள் இருக்கிறது !
      புத்தரின் போதனைகள் மக்கள் நல்வாழ்வுக்கு மிகவும் ஏற்றவை ,அதை ஏற்றதாக கூறிக்கொள்ளும் சிலரின் நடத்தைகள் அருவருப்பை தருகின்றன !
      நம் ஒவ்வொருத்தர் தலைக்கு மேலும் இந்தியா வாங்கியுள்ள கடன் அழுத்திக் கொண்டுதானே இருக்கிறது ?

28 comments:

  1. ஏற்கனவே படித்ததையும் சேர்த்து அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசிக்கத்தானே இந்த அழகு ...தப்பு தப்பு ...பதிவு :)

      Delete
  2. உங்கள் எல்லா பக்கமும் ஹிஹி ஜி...!

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை ,என்னை சுற்றி நாலு பக்கமும் என்று சொல்லாமல் விட்டீர்களே :)

      Delete
  3. Replies
    1. Hi...Hi...Hi....எப்போ Ha...ha....ha..ஆச்சு :)

      Delete
  4. பூவை [யரை ] ரசி ,பறிக்க எண்ணாதே !....ஆ......ரசித்தாலே ...அது ஆபத்தாச்சே....!!!!

    ReplyDelete
    Replies
    1. ஆபத்து யாருக்கு ரசிப்பவனுக்கா ,ரசிக்கப் படுபவளுக்கா :)

      Delete
  5. ஹஹஹஹஹஹ்

    அட நம்ம தலை இங்க.....நாலு பக்கமும் கடன் அப்படின்றதுனால நாலா பக்கமும் திரும்பிப் பார்த்து ஜோக்காளியை ரசிச்சுப்புட்டோம்...ஜி...

    ReplyDelete
    Replies
    1. அந்த பதிவுக்கு வந்த உங்க கருத்தை மறக்க முடியலையே :)

      Delete
  6. Replies
    1. உங்க தலை இல்லாத பதிவே இல்லையே,நான் இல்லையா அதுக்கு நன்றி சொல்லணும் :)

      Delete
  7. சாரநாத் சென்றதில்லை. களபலி கொடுத்து எழுப்பப்பட்ட ஸ்தூபொஇயோ. பூவையரை ரசித்தேன் பூவையின் எண்ணங்கள் என் இன்னொரு தளம்

    ReplyDelete
    Replies
    1. சென்று பாருங்கள் அழகான இடங்கள் :)
      அதில் வரும் சமையல் குறிப்புக்களை படித்து இருக்கிறேனே :)

      Delete
  8. ரசிக்க வைத்த நகைச்சுவைகள்! நன்றிஜி!

    ReplyDelete
    Replies
    1. ஒரே நேரத்தில் கொத்தாக நீங்கள் போடும் ஜோக்குகளும் ஜோர் :)

      Delete
  9. ஒரு கணம் தளிர் சுரேஷ் அவர்களின் கதம்பப் பதிவிற்கு வந்துவிட்டேனோ என என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன் பகவானே:)

    அருமை.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. தளிர் பாணியே தனிதான் :)

      Delete
  10. ஜோக்குகளுடன் ஒரு புனிதப்பயண்க் கட்டுரையும்.அருமை !

    ReplyDelete
    Replies
    1. பயணம் மட்டும்தான் புனிதம் எல்லாம் இல்லை :)

      Delete
  11. "பூவை [யரை] ரசி, பறிக்க எண்ணாதே!" என்ற
    ஒரு வரி உண்மைக் கவிதையை
    வரவேற்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இன்று அறிமுகப் படுத்தி இருக்கும் 'மகிழ்வு பா 'வையும் ரசித்தேன் :)

      Delete
  12. வணக்கம்
    ஜி

    எல்லாம் சிறப்பு....பகிர்வுக்கு நன்றி த.ம 12
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பூவை ரசித்தீர்களா,ரூபன் ஜி :)

      Delete
  13. பூவை [யரை ] ரசி ,பறிக்க எண்ணாதே !

    இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. ரசிப்பது தவறா ,நீங்கள்தான் சொல்லணும் அய்யா :)

      Delete
  14. Replies
    1. தங்களின் ரசனைக்கு நன்றி :)

      Delete