11 July 2015

காதலுக்கும் ,கள்ளக் காதலுக்கும் உள்ள வித்தியாசம் :)

 -----------------------------------------------------------------------

இது சிரிப்பதற்கு அல்ல ,சிந்திக்க !                 

              '' ஹெல்மெட் கட்டாயமில்லைன்னு  சொல்லப் போறாங்களா ,ஏன் ?''

                                ''கட்டாய ஹெல்மெட் அமுலுக்கு வந்த பின்தான் ,முன்பைவிட அதிகமாய் குடிகாரர்கள்  விபத்தில் பலியாகி இருக்கிறார்களாம் !''

காதலுக்கும் ,கள்ளக் காதலுக்கும் உள்ள வித்தியாசம் !

என் கமெண்ட்டுக்கு உங்க கமெண்ட் என்ன ?
------------------------------------------------------------
என்னோட 'ஜோக்'கான சில கமெண்ட்களை ரசிக்க முடிகிறதா என்று சொல்லுங்களேன் !

1.நம்ம மதுரைத் தமிழன் அவர்களின் வலைப் பூவில் படித்தது....

அந்த காலத்தில் ஒரு பெண்ணை காதலிக்கிறதுக்குஅவ அப்பன் மோசமான ஆளா ? 
அண்ணன்காரங்க எத்தனை பேர் அவங்க எப்படி என்று பார்த்து 
பார்த்து காதல் பண்ணினாங்க 
ஆனால் இந்தகாலத்தில் காதலிக்கிறதுக்கு முன்னாடி  அவ புருஷன் மோசமான ஆளா ?
பிள்ளைங்க எத்தனை பேர் அவங்க எப்படி என்று பார்த்து 
என்று பார்த்து காதல் பண்ண வேண்டியிருக்கு 
ச்சே காலம் எப்படி எல்லாம் மாறுது பாருங்க ..
அன்புடன் 
மதுரைத் தமிழன் 
இதற்கு நான் போட்ட கமெண்ட்..
அப்பனையும் அண்ணனையும்பற்றி  விசாரித்து  செய்தால், அது காதல் !புருசனையும் ,பிள்ளையையும் பற்றி விசாரித்து செய்தால் ,அது  கள்ளக் காதல் !இந்த தத்துவத்தை நீங்க புரிஞ்சிக்கலே போலிருக்கே !
------------------------------------------------------------------------------------------------------------
2.நம்ம யாழ் பாவாணன் அவர்கள் 'ஊடகங்களும் எழுத்துப் பிழைகளும்'என்ற தலைப்பில் எழுதி இருந்தார் ,எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க வேண்டுமென ஊடகங்களுக்கு  வேண்டுகோள் விடுத்து இருந்தார் ....அதற்கு என் கமெண்ட் இதோ ....



சமீபத்தில் தொலைக் காட்சி ஒன்றில் ...குண்டி வெடித்து பத்து பேர் 

பலி என்று போட்டதைப் பார்த்ததும் அதிர்ச்சியாகி போனேன் 

அய்யா !நீங்கள் சொல்வது சரிதான் ,இப்படி பலியாகும் முன்னர் 

திருத்த வேண்டாமா?
------------------------------------------------------------------------------------------------------------

3..நம்ம பதிவர் பரிதி முத்துராஜன் ஜி அருமையான தகவலை G+ ல் அனுப்பி இருந்தார்,அது .... 

இதற்கு என் கமெண்ட் இது ...

Bagawanjee KA

 
12:21 PM
  
Edit
 
அதைப் பிடித்து என்னதான்  செய்யப் போறீங்க ?





36 comments:

  1. பதிவர்களுக்கு தாங்கள் இட்ட கருத்துக்கள் ரசிக்க வைத்தன.

    ReplyDelete
    Replies
    1. ரசிக்க வைப்பதால்தான் சில நாட்கள் முன் பழனி .கந்தசாமிஅய்யா பதிவையும் போட்டிருந்தேன் ,படித்தீர்களா :)

      Delete
  2. Replies
    1. அதென்ன இரண்டு தேவ கொட்டை ,,அடச்சீ ...கோட்டை:)

      Delete
  3. நண்பரே, இருசக்கர வாகனத்தில் பின்னாடி உட்காருபவர்களும், ஹெல்மெட் போட வேண்டும் என்று சொன்னது, கள்ளக் காதலர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. இது பற்றியும் ஜோக்குகள் எழுதவும்.
    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. ஹெல்மெட் போட்டு இருந்ததால் புருசன்னு நினைச்சு ,பெண்மணி ஒருவர் வேறொருவர் வண்டியில் ஏறின சம்பவத்தை படித்து , நீங்களும் சிரித்து இருப்பீர்களே :)

      Delete
  4. Replies
    1. கருத்துரை இடுவதும் ஒரு கலைதான் ,இல்லையா:)

      Delete
  5. முதலாவது ஜிந்திக்க வேண்டியது ஜி... கடைசியில் உங்கள் கவனிப்பு ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. இப்போ போலீசின் பணி ,ஹெல்மெட் இருந்தாலும் வாயை ஊதிக் காட்டச் சொல்வது என்றாகி விட்டது :)

      என் கண்ணுக்கென்றே இவைஎல்லாம் படுதே:)

      Delete
  6. Replies
    1. மூன்று முறை சிரித்து ,ஆறாம் ஓட்டு போட்டதற்கு நன்றி :)

      Delete
  7. சிரித்தேன் சிரித்தேன் சிரித்துக் கொண்டே இருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. குண்.. வெடித்து பலியானதை நினைத்தா :)

      Delete
  8. அனைத்தும் சூப்பர் ஜீ,,,,,,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பெயரை விட உங்கள் கமெண்ட் சுருக்கமாய் இருந்தால் ,நான் எப்படித்தான் மறுமொழியில் கலாய்ப்பது:)

      Delete
  9. உலக அரங்கில் ஓடிக்கொண்டிருக்கும்
    ஒரு பட்டிமன்றம் எதுவென்றால் - அது
    காதலுக்கும், கள்ளக் காதலுக்கும்
    இடையே இருக்கின்ற வேறுபாடு என்ன
    என்பது தான் - அதற்கு
    "அப்பன், அண்ணன்மாரை
    விசாரித்துக் காதலித்தால் - அது
    காதல்!
    கணவர், பிள்ளைகளை
    விசாரித்துக் காதலித்தால் - அது
    கள்ளக் காதல்!" என்று
    ஜோக்காளி தளத்தில்
    தீர்ப்புக் கூறப்பட்டிருக்கிறதே!
    இந்தச் செய்தியோட ஒத்துப்போகும்
    எந்தன் பதிவையும் படியுங்க...
    ஒரு வெளியீட்டிற்காக...
    http://yppubs.blogspot.com/2015/07/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. நாட்டாமே ,தீர்ப்பை மாத்தி எழுதுன்னு யாரும் சண்டைக்கு வர மாட்டாங்க :)

      உங்க தளப் பட ஜோக்கை நானும் இங்கே பொருத்தமாய் போட்டிருக்கலாம் ,அவ்வளவு ஒற்றுமை :)

      Delete
  10. நீங்க சொன்னதெல்லாம் ஜோக்காத் தெரிஞ்சாலும் அதில உண்மை இருக்கு ஜீ..

    God Bless You

    ReplyDelete
    Replies
    1. உண்மை மறைத்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன :)

      Delete
  11. ஜோக் சிந்திக்க வைத்தது! எழுத்து பிழைகள் சிரிக்க வைத்தன!

    ReplyDelete
    Replies
    1. சாதாரண பிழையா இது ?பலியான செய்தி கூட சிரிக்கும் படியாகி போச்சே :)

      Delete
  12. உங்கள் பின்னூட்டங்களைப் படிக்கும் போது நானெல்லாம் படித்தேன் ரசித்தேன் என்று நிறுத்திக் கொள்வதே சரி என்று தோன்றுகிறது

    ReplyDelete
    Replies
    1. மூளின்னா , மூக்கைத் தொட்டு பார்த்துக்குவாளாம்,நீங்க ஏன் அப்படி நினைக்கணும் ?
      இந்த கலாய்த்தல் எல்லாம் சும்மா ஒரு ஜாலிக்குத் தான்:)

      Delete
  13. வெடித்தது எது..ன்னு தெரியாமலேயே - ஓடும் எழுத்துகளில் பரப்பி விட்டு நகைச்சுவை விருந்து கொடுத்தானுங்க!..

    இவனுங்களோட தமிழ் எழுத்தைப் பார்த்தால் - நம்முடைய தலை எழுத்து எப்படி என்று புரிகின்றது..

    ஒரு '' ஓ.. '' போடத் தெரியாதவனெல்லாம் அங்கே... போயி...!?...

    என்னத்தைச் சொல்றது.. ஜி!...

    ReplyDelete
    Replies
    1. கோடி கோடியாய் தமிழ் சேனல் மூலம் சம்பாதிப்பவர்கள் ,நல்லா தமிழ் தெரிந்தவர்களை நல்ல சம்பளம் கொடுத்து வைத்துக் கொண்டால் குறைந்தா போய் விடுவார்கள் :)

      இவருக்குப் பதிலாய் இவர் மனைவி கட்சிக்கு தலைமை தாங்கினால் கூட பரவாயில்லை ,கட்சி வளரும் :)

      Delete
  14. 1) ஹெல்மெட் என்பது ஒருவேளை Hell-mate ஆக இருக்குமோ?

    2) ''சமீபத்தில் தொலைக் காட்சி ஒன்றில் ...குண்டி வெடித்து பத்து பேர்

    பலி என்று போட்டதைப் பார்த்ததும் அதிர்ச்சியாகி போனேன் '''


    ஒருவேளை அவர்கள் வெடித்த குண்டின் மீது உட்கார்ந்தவர்களாக இருப்பார்களோ? :)




    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. 1.குடிகாரர்கள் சந்திக்கும் இடம் நரகம்தான் ,hell mate என்பது பொருத்தமே :)

      2.உட்கார வேற இடமா கிடைக்கலே :)

      Delete
    2. குடித்துவிட்டுப் போதையில் தெரியாமல் உட்கார்ந்திருப்பார்களோ ? :)

      Delete
    3. இருப்பது போதையில் என்றால் ,தெரிந்தே கூட உட்காருவார்கள் :)

      Delete
    4. அப்ப வெடிப்பது நியாயந்தான்.

      Delete
    5. ஓரெழுத்து மாறியதால் ,நாம இப்படி சிரிப்பது நியாயந்தானா :)

      Delete
    6. கொண்டு வா என்பதற்கு பதிலாய்க் கொன்று வா என்று ஈரெழுத்து மாறியதால் எரியுண்ட மதுரையில இருந்து நீங்களே இப்படிச் சொல்லலாமா?

      நல்லவேளை ... ஓரெழுத்து மாறியதால் வெடித்ததோடு போனது.

      ஈரெழுத்து மாறியிருந்தால்....

      பகவானே....


      நினைத்துப் பார்க்கவே முடியவில்லை :)

      நீங்கள் எங்களுக்கு எப்போதும் வேண்டும்.

      Delete
    7. #நீங்கள் எங்களுக்கு எப்போதும் வேண்டும்.#
      நெருப்புன்னா வாய் வெந்திடாது ,சும்மா சொல்லுங்க ..அதென்ன ,,,ஈரெழுத்து மாறியிருந்தால்...:?

      Delete
  15. ஹஹஹஹஹஹ்....செம ஜி! ரொமப்வே ரசித்தோம் ஜி!!! பல தொலைக்காட்சித் தளங்களில் தமிழ் நாராசமாய்தான் ஒலிக்கின்றது...

    ReplyDelete
    Replies
    1. எப்படி ஒலித்தாலும் ,ஒளித்து வைக்கும் அளவிற்கு அவர்களுக்கு வருமானம் கிடைத்து விடுகிறதே :)

      Delete