29 July 2015

ஊருக்கு ஒண்ணை வச்சிகிட்டு இப்படி பேசலாமா :)


             ''மறைந்த மேதைக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் ,தலைவர் என்ன தப்பா பேசிட்டார் ,இப்படி கல்லைக் கொண்டு எறியுறாங்க ?''
              ''நான் வாழும் காலத்தில் அவரும் வாழ்ந்தார் என்பது  நமக்கெல்லாம் பெருமைதானேன்னு உளறிட்டாராம்!'' 


போலி டாக்டரா இருப்பாரோ ?
          ''மாசமா இருக்கிற எனக்கு நிறைய இரும்புசத்து மாத்திரைக் கொடுக்கிறீங்களே ,ஏன் டாக்டர் ?''
          ''நீங்கதானே பிறக்கிற குழந்தை துரு துருன்னு இருக்கணும்னு சொன்னீங்க !''


பிள்ளைங்களுக்கும் இந்த நோய் தொடராமல் இருக்கணும் !

           ''ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு சொல்றீங்களே ,ஏன் ?''
           ''தூக்கத்திலே  எழுந்து  நடந்தாக்கூட அந்த தம்பதிகள் ஜோடியா நடக்கிறாங்களே !''

டிக்கெட் எடுக்காமலும் இந்த ஊருக்கு போகலாமே !

பஸ் படிக்கட்டிலே தொங்குபவர்கள் டிக்கெட் எடுக்கிறார்கள் ....
ஆனால் போய் சேரும் இடம்தான்  சிலநேரம் மாறிவிடுகிறது !

  1. வலிப் போக்கன்Tue Jul 29, 11:59:00 a.m.
    அட.இரும்ப கொடுத்தா ஆடாம,அசையாமல இருப்பாங்க.....இங்க இரும்ப கொடுத்தா துறு பிடிக்குமுனு சொல்லாமா சொல்றாரோ..........



    1. அங்கே காக்கா வலிப்பாச்சே ,இங்கே பிரசவ வலியாச்சே !'வலி 'ப் போக்கனுக்கு இன்னுமா விவரமா சொல்லணும் ?

26 comments:

  1. ஊருக்கு ஒண்ணு என்றால் அவருக்கு மாமியார் வீடு எத்தனை ?

    ReplyDelete
    Replies
    1. அந்த 'எத்தனைப் ' பற்றி பேசி நமக்கென்ன ஆகப் போவுது விடுங்க :)

      Delete
  2. எல்லாம் காலம் செய்த கோலம் பகவானே!
    இறந்த காலம், நிகழ்காலம், அறியாதவர் போல் இருக்கிறது!
    எது எப்படியோ எதிர்காலத்தில் கல்லடி வாங்காமல் இருந்தால் சரி!
    த ம
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. கண்டவனும் இப்படி அஞ்சலி செலுத்துவதைப் பார்த்தால் சீப்பு சீப்பா வருதே :)

      Delete
  3. அனைத்தும் சிறப்பு
    பஸ் டிக்கெட் மிகச் சிறப்பு
    பகிர்வுக்கும்தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. காசு செலவழித்து போகக் கூடாத ஊருக்குப் போகக் கூடாதுதானே :)

      Delete
  4. Replies
    1. உங்க கருத்து சிறப்பு !
      உங்க வாக்கு மிகச் சிறப்பு ,நன்றி :)

      Delete
  5. ஹா..ஹா... இந்தத் தற்பெருமை நிஜமாகவே நிறையே பேர்களுக்கு இருக்கிறது.

    ஹா...ஹா...ஹா... அப்போ பி காம்ப்ளெக்ஸ் மாத்திரை சாப்பிட்டால் குழந்தைகளுக்கு என்ன காம்ப்ளெக்ஸ் வரும்?!!

    ஹா...ஹா... தூக்க ஜோடி!

    ம்ம்ம்....

    ReplyDelete
    Replies
    1. சோகமான நேரத்திலும் தற்பெருமை தேவையா :)

      b+ எண்ணம் வரலாம் :)

      பேசிக் கொள்வதே இல்லை ,ஆனால் தூக்கத்திலும் ஜோடி :)

      Delete
  6. டிக்கெட் - அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியது ஜி...

    ReplyDelete
    Replies
    1. தக்கலில் இடம் இல்லை என்றாலும் எல்லோருக்கும் உண்டு கடைசி பயணம் :)

      Delete
  7. படிக்கட்டிலே தொங்கிக்கொண்டு
    பஸ் டிக்கெட் எடுத்துக்கொண்டு
    பயணம் செய்தாலும் - அவர்கள்
    போய் சேரும் இடம் தான்
    சில நேரம் மாறிவிடுமாமே!
    அதுவும்
    அவரவர் கையில் தானாம் இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. கையில் மட்டுமில்லை ,கால் எங்கே பதிந்துள்ளது என்பதிலும் இருக்கு :)

      Delete
  8. துருதுருன்னு இருக்கணும்! ஜோக் மிகவும் ரசித்தேன்! அனைத்தும் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. துறுதுறுன்னு இருந்தால் பிடிக்கும் தானே :)

      Delete
  9. வணக்கம்,
    சூப்பர் ஜோடி,,,,,,,,,
    அனைத்தும் அருமை, வாழ்த்துக்கள், நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஜோடிக்கு விருது வேண்டுமானால் வழங்கலாம் :)

      Delete
  10. துரு துருன்னு இருக்கணும்னு .
    பஸ் /டிக்கெட்
    ஆனால் போய் சேரும் இடம்தான் .
    பிள்ளைங்களுக்கும் இந்த நோய் தொடராமல் இருக்கணும் !
    இப்படி மிகச் சிரிப்பு வருகிறது......
    நன்றி.....சகோதரா....


    ReplyDelete
    Replies
    1. அங்கே தொட்டு இங்கே தொட்டு சிரித்தமைக்கு நன்றி :)

      Delete
  11. ஹஹஹ்ஹ் இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை இந்தப் பெருமைக்குத்தான்...

    இரும்பு துரு துரு ஹஹஹஹஹ்

    அட பரலோகத்த்க்குக் கூட டிக்கெட்டா....நாங்க ஃப்ரீனுல நினைச்சோம்....

    தூக்கத்துல மட்டும்தான் ஜோடி ....மத்த நேரத்துல அடி தடிதானா இருக்கும்......

    ReplyDelete
    Replies
    1. ஏன் இப்படி பெருமைப் பட்டு 'கொல்'கிறார்களோ:)

      இதை நம்புகிறார்களோ இல்லையோ,இரும்பு மாத்திரை சாப்பிட்டால் குழந்தை கருப்பாய் பிறக்கும் என நம்புகிறார்கள்:)

      ஃப்ரீ என்றால் மரியாதை இல்லையே:)

      தூக்கத்திலேயே வாழட்டும் சண்டை வராது :)

      Delete
  12. அவருக்கு மட்டும் கூட்டம் கூட்டமா அஞ்சலி செலுத்துறாங்களேன்னு பொறாமையா இருக்குமா?


    துரு துருன்னு இருக்கணும்னு சொன்னேன்தா... ஒத்துக்கிறேன்...நிறைய இரும்புசத்து மாத்திரைக் கொடுக்கிறீங்களே ... ரொம்ப துருப்பிடிச்சு குழந்தை வெளியவரமா இருந்தாச்சரி...!

    ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு சொல்றீங்களே...ஆணும் ஆணுமா....? இல்ல பொண்ணும் பொண்மா...? தூக்கத்தில ஒண்ணுமே புரியலை...!

    போகும் இடம் வெகுதூரம் என்றாலும்... கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கி எவ(ம)ன்கிட்டையும் கைகட்டி நிற்காத சுயமரியாதைக்காரன்...!

    த.ம. 9

    ReplyDelete
    Replies
    1. பொறாமை இருக்கத்தானே செய்யும் ,ஏன்னா,இந்த கூட்டம் குவாட்டர் ,பிரியாணிக்காக வந்த மாதிரி தெரியலே :)

      ஆண்டி கரோசியன் கோட்டிங் கொடுத்தா சரியா போச்சு :)

      அப்படியும் ஒரு சிக்கல் இருக்கோ :)

      இருந்தாலும் இவ்வளவு சுயமரியாதை இருக்கப் படாது :)

      Delete
  13. Replies
    1. அந்த இரும்பு மாத்திரைக்கு இந்த பெயரையே வைத்து விடலாமா :)

      Delete