2 July 2015

கவர்ச்சி ஆடை அவசியம் ...நடிகைக்கு :)

----------------------------------------------------------------------------

   இதில் கோபப்பட என்ன இருக்கு :)            
               ''போலீஸ்காரங்க  மட்டும் வசிக்கிற காலனியில் என்ன கலாட்டா ?''
             ''மாருதி காலனி  என்பதை யாரோ மாமூல் காலனின்னு அடிச்சு எழுதியிருக்காங்களாம்!''

               

மனைவி சொல்லே மந்திரம்னு நினைச்சது அந்தக் காலமா ?

                 ''இது என்னடி அநியாயமா இருக்கு ,உன் வீட்டுக்காரர் திடீர்னு நாத்திகரா மாறிட்டாரா ,ஏண்டி ?''
          ''நம்ம ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு நினைக்கும்னு சொன்னேன் ...அப்படின்னா,நாம எதுக்கு தெய்வத்தை நினைக்கணும்னு  கேட்கிறார்டி !''


குற்றமுள்ள நெஞ்சு குத்துதோ ?

                   ''ரேசன் கடையைப் பூட்டுனோமா ,மாசமா இருக்கிற 

பெண்டாட்டியைப் போய் பார்த்தோமான்னு இல்லாமே ...

தினசரி கோவிலுக்கு போய் என்ன வேண்டீக்கிறே ?''

             ''எடைக் குறைஞ்சாலும் பரவாயில்லை ,குறைப் 

பிரசவம் ஆகிவிடக்கூடாதுன்னுதான் !''


கவர்ச்சி ஆடை அவசியம் ...நடிகைக்கு !

முழுக்கைச்  சட்டையில்...

கணவன்  அழகாய் இருப்பதாக சொன்னாள் ...

ஜன்னல் ஜாக்கெட்டில் இருந்த இளம் மனைவி !
  1. இந்த ஆளு உங்களுக்குத் தெரிந்தவரா அல்லது ?...
    (ஒரு வேள அது ஜீயாக் கூட இருக்கலாம் எதுக்குடி உனக்கு இந்தக் கேள்வி ?.:))))) )
    ReplyDelete

    Replies

    1. கேட்டதிலே தப்பே இல்லே )))))))..தசாவதாரம் படத்தில் வரும் கமலஹாசனின் வசனத்தில் எனக்கு மிகவும் பிடித்தது .....கடவுள் இல்லேன்னு சொல்லலே ,இருந்திருந்தா நல்லா இருக்குமேன்னு தான் சொல்றேன் !


37 comments:

  1. 1) ஹா..ஹா...ஹா..

    2) ஹா...ஹா...ஹா...

    3) ஆக, அப்பாவும் திருந்த மாட்டாங்க!

    4) ஹா...ஹா..

    ReplyDelete
    Replies
    1. அப்பவும் என்று வாசிக்கவும்!

      Delete
    2. 3,ரேஷன் கடைக் காரருக்கு தொழில்பக்தி அதிகம் தான் போலிருக்கு :)

      Delete
  2. முதல் இரண்டுமே நியாயமான கேள்வி ஜி...

    ReplyDelete
    Replies
    1. கேள்வி நியாயம்தான் ,பதில் ?

      Delete
  3. அனைத்தும் அருமை. குறைப்பிரசவம் அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. குறையிலும் நிறைவு காணும் உங்களுக்கு நன்றி :)

      Delete
  4. Replies
    1. உள்ளூருக்கு வந்து இருக்கீங்க ,எப்படி நாள் போகுது கில்லர்ஜி:)

      Delete
  5. நடிகைக்கு கவர்ச்சி முக்கியமில்ல.....

    ReplyDelete
    Replies
    1. வேற யாருக்கு முக்கியம் :)

      Delete
  6. ஹஹஹா....அனைத்தையும் ரசித்தேன்...ஜி

    ReplyDelete
  7. Replies
    1. எட்டுக்கு இரட்டிப்பு நன்றி :)

      Delete
  8. அனைத்தும் ரசிக்க வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. நீங்க ரசிக்கிறீங்க சரி ,தலைப்பை ,தமிழ்மணம் ரசிக்கவில்லை போலிருக்கே ,பத்து வோட்டு விழுந்தாலும் ,வாசகர் பரிந்துரையில் பதிவு வர மாட்டேங்குதே :)

      Delete
  9. சிரிக்க வைத்த சிறப்புக்கள்! ரேசன்கடைக்காரர் வேண்டுதலில் நியாயம் இருக்கிறது அல்லவா? ஹாஹாஹா!

    ReplyDelete
    Replies
    1. நல்ல நியாயம்தான் :)

      Delete
  10. மாருதி காலனி என்பதை
    மாமூல் காலனின்னு ஆக்கியாச்சே
    பொலிஸ்காரங்களுக்காக...

    ReplyDelete
    Replies
    1. பிள்ளையாரைப் பிடிக்க குரங்கா போச்சுன்னு சொல்வாங்க ,மாருதி என்றால் குரங்குதானே :)

      Delete
  11. மாருதி...மாமூல்....ஹஹஹஹ

    ஆம்பிள்ளைக்கு மட்டும் முழுக்கைச் சட்டை....ஜன்னல் ஜாக்கெட் மனைவி....ஹஹஹஹ் அதுதாங்க ..நீங்க ரோட்டுல கூட பார்த்திருப்பீங்களே...உங்க ஊரு எப்படினு தெரில ஆனா மாநகரங்கள் எல்லாம் இப்படித்தான் இருக்குங்க...

    ReplyDelete
    Replies
    1. இங்கேயும் இப்படித்தான் ,மறைக்க வேண்டியதை ஆண்கள் உடை சரியாகத் தான் மறைக்கிறது :)

      Delete
  12. இரண்டு எழுத்துக்களுக்கா கலாட்டா. நாம ஒண்ணு நெனச்சா தெய்வம் நம்மை நினைக்கும் .எடையைக் குறைப்பது யார்.?ஜன்னல் ஜாக்கெட்டில் இருந்தது நடிகையா.?

    ReplyDelete
    Replies
    1. இரண்டு எழுத்துதான் ,பொழைப்பை நாறடித்து விட்டதே :)
      தெய்வம் இப்படி செய்யலாமா :)
      இவர் செய்தது தானே இவருக்கும் வரும் :)
      இருக்க வேண்டியவர் நடிகை:)

      Delete
  13. அனைத்தும் இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. நான் கூறியிருப்பது தெய்வக் குற்றம் ஆகுமா அய்யா :)

      Delete
  14. வணக்கம்,
    அப்ப இப்ப பயம் இல்ல
    அனைத்தும் அருமை,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அப்ப இப்ப என்றில்லை ,எப்பவுமே பயம் இல்லை :)

      Delete
  15. மாமூல் காலனியும், நாம் ஒன்ன நினச்சா தெய்வம் ஒன்ன நினைக்கும் இரண்டு ஜோக்கும் வயிறு வலிக்க சிரிக்க வைத்தது.
    த ம 11

    ReplyDelete
    Replies
    1. போலீஸ் ஒண்ணு நினைச்சா.நம்மாளு வேறொன்னை நினைக்கானே :)

      Delete
  16. ஜன்னல் சட்டை ஆண் போட்டால் நல்லா இருக்காதே!

    ReplyDelete
    Replies
    1. ஆண்கள் உடை எல்லாமே கண்ணியம் தானே :)

      Delete
  17. அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ரசனைக்கு நன்றி :)

      Delete
  18. வணக்கம்
    ஜி
    அனைத்தும் அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ரசனைக்கும் நன்றி :)

      Delete