4 July 2015

தொப்பை , பெண்களுக்கு மட்டும்தான் அழகா :)

             ''நான் மப்டி போலீஸ்னு தெரியணும்னு ,தலைக்கு போலீஸ் கட்டிங் போட்டிருக்கேன் ..யாரும் என்னைப் பார்த்து பயப்படுற மாதிரி தெரியலையே !''

          ''இப்படி டிரிம்மா வயிறை வைச்சுகிட்டு இருந்தா எவன் உங்களை போலீஸ்னு நம்புவான் ?''

முகூர்த்த நேரம் முடியுதுன்னு சொல்வதுதான் சரி !

          ''தாலி கட்டுற நேரத்திலே மாப்பிள்ளைப் பையனுக்கும் ,ஐயருக்கும் என்ன வாக்குவாதம் ?''
            ''நல்ல நேரம் முடியறது ,சீக்கிரம் தாலி கட்டுங்கோன்னு சொன்னது  அபசகுனமாபடுதாம் பையனுக்கு !''



இந்தியா பணக்கார நாடுதான் ,இந்தியர்கள் ஏழைகள் !



தவிச்ச வாய்க்கு தண்ணி தர வக்கில்லை ...
செவ்வாயில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்ததாம் இந்தியா !


  1. Avargal UnmaigalFri Jul 04, 02:31:00 a.m.
    கடைசி ஒன்று நச்சுன்னு இருக்கு...சூப்பர்...

    தவிச்ச வாய்க்கு டாஸ்மாக்குல தண்ணி கிடைக்கிறதே ஆனா அங்க போய் குடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்தால் என்ன செய்வது




    1. நீங்கதான் பூரிக்கட்டை அடி வாங்கிறீங்கன்னா,நானும் வாங்கணும்னு சதி பண்றீங்களே ,நியாயமா ?

      1. ஜோதிஜி திருப்பூர்Fri Jul 04, 07:46:00 p.m.
        உள்ளே வந்தவுடன் அதிக நேரம் எடுத்துக் கொள்ளத் தேவையில்லாம புன்னகை அல்லது சிரிப்பு வரச் செய்வது உங்கள் பாணி.




        1. நம்ம வலையுலக உறவுகள் போடும் சிரிக்கும்படியான கருத்துக்களையும் சேர்த்து படிங்க ,,அல்லது நிறைய படிக்கணும்னு நினைச்சா வீக்லி ஒன்ஸ் வாங்க பாஸ் !

20 comments:

  1. ரசித்தேன்
    சிரித்தேன்
    தம 1

    ReplyDelete
    Replies
    1. உங்களின் தேன் தேனுக்கு நன்றி :)

      Delete
  2. போலீசும் தொப்பையும் பிரிக்க முடியாதது! புதுசா வேலைக்குச் சேர்ந்தவரா இருப்பாரோ!

    'நல்ல' பிரச்னை போங்க!

    தவிச்ச வாயா, செவ் வாயா!

    ReplyDelete
    Replies
    1. உங்க சந்தேகம்தான் நம்ம சகோ .DD அவர்களுக்கும் ,அடுத்ததா உள்ளது அவர் கமெண்ட்:)

      ஏற்கனவே அரண்டு கிடக்கும் மாப்பிள்ளை பையனை இப்படியா நோகடிப்பது :)

      அதான் ,வெறும் வாய் ஆயிடுச்சே :)

      Delete
  3. சீக்கிரம் வளர்ந்து விடும்...

    ReplyDelete
    Replies
    1. வளர்ந்தால் தான் வேலை நிரந்தரம் என்று சொல்லி இருப்பார்களோ :)

      Delete
  4. ஹஹஹஹஹஹ்...அனைத்துமே அருமை....அந்த தண்ணீ செவ்வாய் அதுக்கு தமிழனின் பின்னூட்டம் ஹஹஹஹ் ர்கம்....

    நீங்கள் சொல்லுவது போல் உங்கள் ஜோக்களியுடன் ஜோக்காளியின் ரசிகர்களின் பின்னூட்டங்களையும் சேர்த்து வாசித்தால் செம சுவாரஸ்யம்.....

    ReplyDelete
    Replies
    1. பதிவு நாலு வரி ,மறுமொழி நாற்பது வரி ,இதுதானே ஜோக்காளியின் பாணி :)

      Delete
  5. ம்ம்ம்ம் போலீஸ் என்றாலே தொப்பை என்று அடையாளம் ஆகிவிட்டதோ...

    ReplyDelete
    Replies
    1. இனிமேல் ஆள் எடுக்கும் போதே தொப்பை அளவையும் சேர்த்து எடுத்து விட வேண்டியிருக்கும் :)

      Delete
  6. செவ்வாயில் தண்ணீர் இருப்பதை
    கண்டுபிடித்த இந்தியா - தனது
    நாட்டு மக்களின் வறுமையை விரட்ட
    ஏதாச்சும் வழியை கண்டுபிடிக்க
    அறிவாளிகள் தேவை போல

    ReplyDelete
    Replies
    1. பொருளாதார மேதை பிரதமர் ஆகியும் பிரயோசனம் இல்லாமல் போய்விட்டதே :)

      Delete
  7. ஆமாமா..தொப்பை இல்லேன்னா..நீதிபதியே நம்ப மாட்டாரு..அப்பறம் எப்படி மத்தவுக நம்புவாக.....!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்றது ,சமீப காலமா, நீதிபதிக்கு ஆளைப் பார்த்து எடை போடதெரியுது ,ஆனால் கணக்கு சரியாய் போடத் தெரியலியே :)

      Delete
  8. அனைத்தையும் ரசித்தேன். நல்ல நேரத்தை மிக அதிகமாக.

    ReplyDelete
    Replies
    1. நேரம் ரொம்ப முக்கியம் இல்லையா :)

      Delete
  9. - டிரிம்மா வயிறு
    - செவ்வாயில் தண்ணீர்.
    - பூரிக்கட்டை அடி / சதி
    அதிக நேரம் எடுத்துக் கொள்ளத் தேவையில்லாம புன்னகை அல்லது சிரிப்பு வரச் செய்வது உங்கள் பாணி. (unmai)
    வலையுலக உறவுகள் போடும் சிரிக்கும்படியான கருத்துக்களையும் சேர்த்து நானும் படித்துச் சிரிப்பேன் நன்று...நன்று சகோதரா
    -

    ReplyDelete
    Replies
    1. உண்மையை நீங்களும் உணர்ந்ததற்கு நன்றி :)

      Delete
  10. நல்ல நேரம்! :)))

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நமக்கெல்லாம் நல்ல நேரம் அப்போதான் ஆரம்பித்தது (புவ்வாவுக்கு இப்படியெல்லாம் பொய் சொல்ல வேண்டியிருக்கே ):)

      Delete