27 July 2015

மனைவிகூட முடியலேன்னு சொல்லமாட்டா :)

----------------------------------------------------------------------------

பிறந்ததும் பள்ளியில் சேர்க்கும் காலம் வருமோ :) 


         ''பையன் மூணு வருஷ படிப்பை முடிச்சிட்டான்னு சொல்றீங்க ,வேலைத் தேடுறானா ?''
                  ''அட நீங்க ஒண்ணு,ஃபிரி கே ஜி ,எல் கே ஜி ,யு  கே ஜி யை இப்போதானே முடிச்சிருக்கான்  !''



பொண்ணைப் பெத்தவர் இப்படி அப்பாவியா 

இருக்காரே :)

              ''நல்ல மாப்பிள்ளையா  அப்பா தேடித் தரமாட்டார் 

போலிருக்கா ,ஏம்மா?''

                       ''நீங்க போடுற நாலு பவுன் நகைக்கு , 'சின்ன வீடாய் 

வச்சிக்கிற வரன்தான் அமையும்னு  தரகர் சொல்றார் ,அதுக்கும் 

சரின்னு சொல்றாரே !''



 
இவரிடம் மனைவிகூட முடியலேன்னு சொல்லமாட்டா :)

        ' 'என்னங்க ,நீங்கதான் டாக்டராச்சே ,மரணத்தை உணர முடியுமா ?''
             ''முடியும்னு என்னிடம் ஆபரேசன் செய்துகிட்டவங்க யாரும் இதுவரை சொல்லலே !''



24 X 7 புரோட்டா மணக்கும் மதுரை :)



கற்புக்கரசி மதுரைக்கு முன்னையிட்ட தீயோ...
இன்றுவரையிலும் அணையாமல் இருபத்து நான்கு மணி நேரமும் ...
புரோட்டா வேகும் கல்லின் கீழே !

  1. Yarlpavanan KasirajalingamSun Jul 27, 10:47:00 a.m.
    முன்னையிட்ட தீ மதுரையிலே
    இன்னைக்கு இட்ட தீ
    புரோட்டா வேகும் கல்லின் கீழேயா...
    ஆபரேசன் செய்துகிட்டவங்க சொல்லலையா - அப்ப
    சொல்ல முன் ஆள் முடிஞ்சா...
    'சின்ன வீடு' வச்சிகிட்டா
    வாடகை எவ்வளவு வருதா என்கிறியளே
    இப்படி தலையைப் பிய்க்கிறியளே!




    1. மூணு(க்கும்) முடிச்சுப் போட்டா தலையைப் பிச்சுக்கத்தான் வேணும் !

26 comments:

  1. ரசித்தேன்
    நண்பரே
    நன்றி
    தம 1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியரான நீங்கள்தான் சொல்லணும் ,பாவம் ,பச்சை மண்ணை எல்லாம் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது சரியா :)

      Delete
  2. பிறக்கும் முன் Advance Booking எப்போதோ வந்து விட்டது... தெரியாதா ஜி...?

    ReplyDelete
    Replies
    1. இதுக்குமா Advance Booking ? பிறக்கப் போறது ஆணா,பெண்ணா ,ஒன்றா ,இரண்டா ?எதுவும் தெரியாமல் எப்படி செய்வது :)

      Delete
  3. DD சொல்வதை ஆமோதிக்கிறேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. கருவில் இருக்கும் குழந்தைக்கும் இடம் பிடிப்பது ,கரூரில் உள்ள பள்ளிகளில்தானா :)

      Delete
  4. மனைவி சொன்னா.. ஆபத்தாச்சே

    ReplyDelete
    Replies
    1. அப்பாவை அடப்பாவி என கேட்க வைத்து விட்டார் போல...
      அனைத்தும் சிறப்புங்க.

      Delete
    2. உடம்புக்கு முடியலேன்னு டாக்டர் கணவனிடம் மனைவி சிகிச்சை எடுத்துகிட்டாலும் ஆபத்தாச்சே :)

      Delete
    3. சசிகலாMon Jul 27, 05:02:00 p.m.
      அப்பாவை அடப்பாவி என கேட்க வைத்து விட்டார் போல...
      அனைத்தும் சிறப்புங்க.>>>
      சின்ன வீடுன்னா வாடகை கம்மின்னு நினைச்சுட்டார் :)

      Delete
  5. சிரி சிரி சிரி ஜி

    ReplyDelete
    Replies
    1. இன்னொரு சிரி குறையுதே ஜி :)

      Delete
  6. தூங்கநகரம் மதுரை பரோட்டாக்கு கொடுத்த உவமை அருமை
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. கண்ணகி ஏற்றிய அணையாத ஜோதியாச்சே !

      Delete
  7. ரொம்ப பறக்குதே கற்பனைக் குதிரை...
    கண்ணகி எரித்தது புரோட்டாக் கல்லையா?
    வருகிறேன் ஆகஸ்ட் இரண்டில்
    தம +

    ReplyDelete
    Replies
    1. அன்றைய தீயின் எச்சம் இன்னும் எரியுதே :)
      வாருங்கள் மதுரைக்கு ,வரவேற்க காத்திருக்கிறேன் :)

      Delete
  8. Replies
    1. வெங்கட் நாகராஜ் ஜி ,ரொம்ப பிஸியா:)

      Delete
  9. ஹாஹா! அனைத்துமே அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. எங்க ஊர் புரோட்டாவை டேஸ்ட் பார்த்து இருக்கிறீர்களா :)

      Delete
  10. //கற்புக்கரசி மதுரைக்கு முன்னையிட்ட தீயோ...
    இன்றுவரையிலும் அணையாமல் இருபத்து நான்கு மணி நேரமும் ...
    புரோட்டா வேகும் கல்லின் கீழே !//
    இன்னும் அனையவில்லை!

    ReplyDelete
    Replies
    1. எப்படி அணையும் ?மைதா கேடுன்னு சொன்னாலும் புரோட்டாவுக்கு மவுசு குறையலையே :)

      Delete
  11. பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே.. உன்
    பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே!
    அள்ளியிறைக்க வந்த கள்ள நகையே.. உன்
    அணைப்பினில் சாய்ந்ததய்யா இந்த மலரே!

    -ஏம்ப்பா நீயும் அம்மாவும் இந்தப் பாட்டை பாடுறீங்க.... எங்க பள்ளி அறையில் இந்தப் பாட்டை எங்க மிஸ் பாடவே இல்லையே!
    அதாப்ப அவுங்க மிஸ்...


    என்னய ஒங்க அப்பா வச்சுக்கல... எனக்கென்ன குறைச்சல்...?


    ஆபரேசன் செய்யாமலே என்னாலஉணரமுடியுதுங்களே... எப்படிங்க,,,?


    ஒரு வேளை தீயா வேலை செய்யணுமுன்னு கற்புக்கரசி கட்டளையா இருந்தாலும் இருக்கும்.


    ReplyDelete
    Replies
    1. அம்மாவே சின்ன வீடுதானா ?அப்படின்னா அய்யா சொல்றது சரிதான் :)

      நீங்கதான் பலமுறை ஆக்ஸிடென்ட்டில் சிக்கி பிழைத்தவர் ஆச்சே :)

      கற்புக்கரசியின் கட்டளையாச்சே ,அதான் அணையாமல் இன்றும் எரிகிறது :)

      Delete
  12. வணக்கம்
    ஜி
    அனைத்தும் நன்று இரசித்தேன் த.ம 12

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நேற்று முதல் என் தளத்தில் வரும் ,புதிய விட்ஜெட்டையும் ரசீத்தீர்களா:)

      Delete