3 July 2015

தனிக் குடித்தனம் போறதிலேயே குறி :)

                 ''ஜாதகப் பொருத்தம்  அருமையா  இருக்கு ,இப்போ எதுக்கு இன்னொரு ஜாதகத்தைத் தர்றீங்க?''
            ''இது என் அம்மா ஜாதகம் ,மாமியார் ,மருமகள் பொருத்தம் பார்த்து சொல்லுங்க !''



இதுக்குத்தான் படிக்கத் தெரியணும்னு சொல்றது :)

             ''இவ்வளவு நேரமா காலிங்  பெல்லை அடிச்சேனே ,உன் காதுக்கு கேட்கலையா ?''
           ''காலிங் பெல் வேலை செய்யாதுன்னு அது மேலே எழுதிப் போட்டிருக்கேனே ,உன் கண்ணுக்கு தெரியலையா ?''



சோறுன்னா மனுசன் சோழவந்தானுக்கே போறமாதிரி !

''காக்கைங்க கண்ணுலேயே படமாட்டேங்குதே 

,எங்கே போயிருக்கும் ?''

''வட இந்தியாவுக்குத்தான் !''


இளம் மனைவியின் கைமணம் !

அடை போட்டதில் தேர் நின்றதோ இல்லையோ ...

என்னவள் வைத்த அடையினில் நின்றது ...

என் தோசை தின்னும் ஆசை !

  1. வட இந்தியா போனாலும் தன்னுடைய பதிவை விட்டுப் போகாத ஜோக்காளிக்கு வாழ்த்துக்கள் !



    1. அப்ப நான்தான் அந்த காணாம போன காக்காவா ?அவ்வ்வ்!))))

      1. தோசை சாப்பிடும் ஆசை போனது.. ஹா ஹா ஹா, இப்போதைய பெண்கள் சமைப்பதே பெரிய விசயம் ! அதும் ருசியாக ன்னா ம்ஹூம்...

        ரசித்துச் சிரித்தேன் ஜி, வாழ்த்துகள்..



        1. மாப்பிள்ளைப் பார்க்கும் போதே சமைக்கத் தெரிந்த வரனைப் பாருங்கன்னு பெண்கள் சொல்வதாக கேள்வி !



24 comments:

  1. சரி சரி பொருத்தத்தை பார்க்கவேண்டியது தான்... ப்ரயோஜனம்...உண்டா...?

    ஏட்டிக்கு போட்டி...

    வட தென் இந்தியா மாற்றி மாற்றி டூரா...?

    ஆசை விட்டு போச்சே.....பரவாயில்லை...ஒன்னு ஒன்னா பழகிக்கலாம் ....ஆசையை விடத்தான்..

    தம 1.

    ReplyDelete
    Replies
    1. அதானே ,மாமியார் மருமகள் ஜாதகம் எதுவுமே பொருந்தாதே :)

      ரோசக்கார மனுசனைக் குற்றம் சொன்னா இப்படித்தான் :)

      காக்காகிட்டேதான் கேட்கணும் :)

      அதாவது ,புருஷன் சமையலைப் பழகிக்கலாம் ,அப்படித்தானே :)

      Delete
  2. முதலாவதை விட இரண்டாவது ஜோடிப்பொருத்தம் நல்லாயிருக்கு ஜி...!

    ReplyDelete
    Replies
    1. ஜாடிக்கேற்ற மூடியா :)

      Delete
  3. அந்தப் பொறுத்தமும் பார்த்துட வேண்டியதுதான் கண்ணு தெரியாமலேயே காலிங் பெல் அடிச்சு, காது கேட்காமலேயே கதவு திற்ந்து, எல்லாம் நல்ல படி முடிந்ததே, உங்களுக்குத் தெரியுமா காசியில் காக்கா வே இல்லை என்பார்கள். தேர் நிறுத்த அடையா..?

    ReplyDelete
    Replies
    1. ஜாதகம் பொருந்தினாலும் அதையும் பொய்யாக்கிடுமே :)
      எங்கே நல்லபடி ,எல்லாமே அடிதடி :)
      காசியில் தெருவெங்கும் மாட்டுச் சாணம் தான் :)
      அடைக்கட்டை தெரியும்தானே :)

      Delete
  4. Replies
    1. ஐடியா நல்லாத்தான் இருக்கு ,ஆனால் ஒர்க் அவுட் ஆகாதே :)

      Delete
  5. ஹஹஹஹஹ் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய பொருத்தம்..கணவன் மனைவி கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகுதோ இல்லையோ...பயாலஜி வொர்க் அவுட் ஆகிடும் தானே ஜி??!!! .மாமியார் மருமகள் கெமிஸ்ட்ரி/ கணக்கு / ஃபிசிக்ஸ் (ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட்னு ஒண்ணு இருக்குல ??!!!! பார்த்தே ஆகணும்...(இப்பல்லாம் எதுக்கெடுத்தாலும் கெமிஸ்ட்ரி அப்படினுதானே சொல்லுறாங்க..அதான்.)

    ஹஹஹஹஹ...

    அட ஜி உங்களுக்கு வடை வேணும்னா எதுக்கு வட இந்தியா போறீங்க இங்கயே கிடைக்குமே மதுரைல கிடைக்காத வடையா சொல்லுங்க....??!! ஹஹஹ





    ReplyDelete
    Replies
    1. விரும்பி போனால் விலகிப் போகும் ,விலகிப் போனால் விரும்பி வரும் ,இது மாமியார் மருமகளுக்கு பொருந்துமா ல்:)
      மதுரையில் தொழில் துறை வளர்ச்சியே இல்லை ,வடைக் கடையே பெருகி வருகிறது :)

      Delete
  6. வட இந்தியா... ஹஹ
    இதுக்குத்தான் படிக்கத்தெரியனும்... எல்லாமே சிறப்பு. சிரிப்பு!!!!
    நாளொரு பகிர்வு இன்றும் நன்று...நாளையும் வரும் வென்று.

    ReplyDelete
    Replies
    1. இதோ ,நாளையும் வந்து விட்டேன் (எதை வென்று என்பதுதான் புரியலே :)

      Delete
  7. Replies
    1. பழனி கந்தசாமி அய்யாவுடனான சந்திப்பு இனிமையாய் இருந்ததா கில்லர் ஜி :)

      Delete
  8. காலிங்க்பெல், வட இந்தியா என எல்லாமே ரொம்ப அருமை... ரசிக்க வைத்தது ஜி.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ,ஜோக்காளி வீட்டின் காலிங் பெல்லடித்து நீண்ட நாளாச்சே ,குமார் ஜி :)

      Delete
  9. வழக்கம் போல நன்றுதான்!

    ReplyDelete
    Replies
    1. காலிங் பெல் சத்தமும் இனிமைதானா :)

      Delete
  10. "அட"! 'வட' யில இவ்வளவு சமாச்சாரம் இருக்கா?

    ReplyDelete
    Replies
    1. வடையில் மட்டுமில்லே,அடையிலும் நிறைய இருக்கு :)

      Delete
  11. வணக்கம்
    மாமியார் மருமகள் என்றால்.. கீரியும் பாம்பு போலதான்...
    மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி. த.ஃம10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மாமியார் மருமகள் அடையும் வடையும் போல ..வேறு வேறு டேஸ்ட்:)

      Delete
  12. மாமியார் இமருமகள் பொருத்தம்
    அது மேலே எழுதிப் போட்டிருக்கேனே
    எங்கே போயிருக்கும் ?''
    ''வட இந்தியாவுக்குத்தான் !''
    வட இந்தியா போனாலும் என்று எல்லாமே சிறப்பு. சிரிப்பு!
    அனைத்தையும் ரசித்தேன்.!!!!!!!
    நன்றி சகோதரா

    ReplyDelete
    Replies
    1. பதிவை பிரித்து பிரித்து மேய்ந்ததற்கு நன்றி :)

      Delete