7 July 2015

ரெண்டு பெண்டாட்டிக்காரன் பாடு திண்டாட்டம்தானா :)

---------------------------------------------------------------------------------
வெயில் ரொம்பத்தான் படுத்துது போலிருக்கு :)
                 ''என்னங்க ,நம்ம வேலைக்காரி தொடர்ந்து வேலைக்கு வர ,
ஒரு கண்டிஷன் போடுறா !''
                 ''என்னான்னு ?''
                 ''வீடு  முழுவதும் ஏர் கண்டிஷன்  ஆக்கணுமாம் !''

இதுக்கு பேசாமலே இருந்து தொலைக்கலாம் !
             ''பிரிட்ஜ்  வாங்கப் போன இடத்திலே உன் புருஷன்  மானத்தை வாங்கிட்டாரா ,என்ன கேட்டார் ?''
           ''ஃபிரிஜ்ஜை  எப்ப திறந்தாலும் லைட் எரிஞ்சுகிட்டே இருக்கு ,மூடினா அணையிற மாடல் இல்லையான்னு கேட்கிறாரே !''

நிம்மதி ...இரு மனைவிகள் தந்தது !

                         ''என்னடா சொல்றே ,ரெண்டாவது 

கல்யாணம் பண்ணிகிட்ட அப்புறம் தான்  நிம்மதியா 

இருக்கீயா ,எப்படி ?''
''
           ''அவங்க ரெண்டு பேரும் போட்டுக்கிற சண்டையிலே 

என்னை மறந்துட்டாங்களே !''


இரத்தம் தேவைப் படுவோர்க்கு தருவதில்லை ...ஆனால் ?

இரத்ததானம் செய்வதில் ...
நாம்தான் முதல் இடம் என்று பெருமைப் படமுடியாது ...
நம் விருப்பமின்றி உறிஞ்சப்படும் இரத்தத்தால் 
கொசுக்கள் தானே உயிர் வாழ்கின்றன !


  1. திண்டுக்கல் தனபாலன்Wed Jul 09, 07:55:00 a.m.
    இரண்டு பேரிடமும் ஆப்பு உண்டு... ஹிஹி....




    1. ஆப்பில் இருந்து தப்பிக்க,மூணாவதா ஒண்ணை கட்டிகிட்டா ,போலீசின் வளைக்காப்பும் உண்டு !

      1. மதுர எனக்கொரு பொண்ணு பாரய்யா இது தெரியாமா வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிட்டேன்




        1. Thulasidharan V ThillaiakathuWed Jul 09, 01:28:00 p.m.
          மதுரைத் தமிழனுக்கு ஒரு பூரிக்கட்டை போதாதா(ம்)?!!!!! அப்ப ,ஜி பாத்துக் கொடுங்க.....

        2. நீங்க நம்மூர்காரராச்சே விசாரித்தேன் ,அமெரிக்க பையனானு வேண்டாங்கிறாங்க ,எதுக்கும் வூட்டுக்கார அம்மாகிட்டே இருந்து ஒரு NOC லெட்டர் வாங்கி அனுப்புங்க ...பூரிக் கட்டை அடி வாங்கி நீங்க பொழச்சி கிடந்தா பார்ப்போம் !
        3. ஒரு பூரிக்கட்டை அடியில் இருந்து தப்பிச்சு அவர் வரட்டும் ,பார்த்து முடிச்சிறலாம் துளசிதரன் ஜி !
        4. Mythily kasthuri renganWed Jul 09, 05:32:00 p.m.
          வாழ்க்கை வேஸ்ட் ஆனது தமிழனுக்கா? இல்லை அப்பாவி மிஸ்ஸஸ் தமிழனுக்கா/!!??
        5. சபாஷ்,சரியான கேள்வி !இதுக்கு பதில் சொல்லப் போறது அப்பாவியா ,இல்லை வேறெந்த பாவியா ?

      1. Mythily kasthuri renganWed Jul 09, 05:40:00 p.m.
        எனக்கு ஒரு சுஜாதா ஜோக் நினைவுக்கு வருது!
        அறை நண்பனிடம் அவன் சொன்னான் "டே நம்ம ரூம்ல எதோ பேய் இருக்குடா.
        ஏன் அப்படி சொல்லுற?
        இல்லைட நான் பாத்ரூம் கதவை திறந்ததும் தானா லைட் எரிந்தது. கதவை மூடியதும் தன்னால லைட் அனைஞ்சுருச்சு
        அட பாவி! நம்ம பிரிட்ஜ் ஐ நாரடித்துது நீதானா?:)))




        1. உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி ,சம்பந்தப் பட்ட விசயத்தை சரியா சொல்ல முடிகிறதே !
          சுஜாதா 'ஜோக் 'கிலும் கிங்குதான் !




24 comments:

  1. கரண்டு கண்டிஷன் சரியா இருந்தால்ல ஏர்கண்டிஷன் போடுறது.....
    தொடர்ந்து....... அவவீட்டுலயே வேலை பார்த்துக்க வேண்டியது தான்
    ஆனா சம்பளம் ...கிம்பளம்...?

    அவர் ஒரு டியூப் லைட் போல...

    மத்தளம் தனக்கு கிடைத்த இடைவெளியில் இப்படி சொல்லுதே....?

    கருத்துக்கு கருத்து என மாறிமாறி வந்த கருத்து....நல்லாதான் கீது....ஹிஹிஹி....

    தம 1

    ReplyDelete
    Replies
    1. ஓசியில் ஏசி வேணும்னா கிம்பளம்தான் கிடைக்கும் :)

      அந்த டியூப் லைட்டுக்கு ஒரு எலெக்ரானிக்ஸ் சோக் வாங்கிப் போட்டாலும் உடனே பத்திக்காது போலிருக்கே :)

      இரு பக்க அடி விழுந்தாதானே தெரியும் :)

      நானும் ரசித்ததாச்சே அது :)

      Delete
  2. இரு மனைவிகள் நகைச்சுவை பழைய தமிழ்த் திரைப்படங்களை நினைவூட்டியது.

    ReplyDelete
    Replies
    1. அது ஒரு காலம் ,இப்போ இரு காதலிகள் காலம் :)

      Delete
  3. ஃப்ரிட்ஜை மூடினா லைட் எரியுதான்ன்னு எப்படிப் பார்க்கிறார்..?ஹிஹிஹி. மூன்று மனைவிகள் இருந்தால் ஒருயுய்த்தமே பார்க்கலாமே... பொழுதும் போகும் .அது ரத்ததானம் அல்லவே. இரத்தப் பறிப்பு

    ReplyDelete
    Replies
    1. ஃப்ரிட்ஜ் மேல் ஒரு ஓட்டைப் போட்டு வைத்திருக்காரே :)

      மகாபாதக யுத்தமா :)

      கொசு செய்வது பிக் பாக்கெட் ,அப்படித்தானே :)

      Delete
  4. Replies
    1. முட்டையிடும் கோழிக்குதானே வலி :)

      Delete
  5. நல்ல ஆப்ரா இருக்கே.....

    ReplyDelete
    Replies
    1. ஆப்பரா ,தனக்கே வச்சுக்கிற ஆப்பா :)

      Delete
  6. ஒன்றுக்கு இரண்டைக் கட்டி - அவங்க
    போடுற சண்டையில் சுகமிழந்தார்
    ஓரமாய் ஒதுங்கி யவர்!

    ReplyDelete
    Replies
    1. அந்த நிலைமை வர கொஞ்சம் நாளாகும் :)

      Delete
  7. மூணு செட் "ஹா....ஹா....ஹா...." பார்சல் டு ஜோக்காளி!

    நான்காவதையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ ,வெடிகுண்டை பார்சலா ,எனக்கு வேண்டவே வேண்டாம் :)

      'விசுவாசமில்லா 'கொசுக்கள் கடிக்கின்றன ,நம் இரத்தம் உள்ளே போனதாலா :)

      Delete
  8. உரலுக்கு ஒரு பக்கம் இடி!மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும்!

    ReplyDelete
    Replies
    1. இப்படி சொல்லப்படாது ,இடின்னா இரண்டாம் கல்யாணத்தை நாட்டிலே இத்தனை பேர் பண்ணிக்குவாங்களா :)

      Delete
  9. நல்ல கண்டிஷன் ஹஹாஹ்ஹ ...பின்னூட்டங்களும் ரசிக்க வைக்கின்றன....அட நம்ம தலையும் இதுல....!!!!

    இதுவும் ஒரு வகை ரத்ததானம் தானே ஜி...ஆனா ரத்தம் தானம் செய்துட்டு இன்னுரு கையால அதை அடித்துக் கொன்னுடறோமே!!! அஹ்ஹ்

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கையான வேலைக்காரி போடுற கண்டிஷனைகேட்டுதானே ஆகணும் :)

      நாமும் கொடுக்க மாட்டோம் ,கேட்காம உறிஞ்சினா விடுவோமா ,அதான் ஒரே அடி :)

      Delete
  10. வெயிலுக்கு ஃப்ரிட்ஜ் ஜோக் நல்லா சில்லுனு இருந்துச்சு. ஆனா சுஜாதா ஜோக்கை நினைவு படுத்துனதும் கொஞ்சம் மூக்கைப் பொத்திட்டேன்.

    God Bless You

    ReplyDelete
    Replies
    1. நீங்க எதுக்கு அந்த ஃபிரிஜ்ஜை திறந்தீங்க :)

      Delete
  11. ரெண்டும் அடிச்சிக்கும் போது சிக்குனா சின்னா பின்னமாயிடுவானே...
    பிரிட்ஜை மூடிட்டு பின்னால போயி ஓட்டை போட்டு பாப்பாரோ... லைட் எரியுதா இல்லையான்னு...
    எல்லாமே ரசிக்க வைத்தன..

    ReplyDelete
    Replies
    1. அப்படி ஒரு நிலை வந்தால் ரெண்டையும் விட்டுட்டு ,மூணாவதா ........:)

      நாலு பக்கமும் ஓட்டைப் பார்த்தாலும் பார்ப்பார் :)

      Delete
  12. வணக்கம்
    ஜி
    இரசித்தேன் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பிரிஜ்ஜைத் திறந்து பார்த்தீர்களா :)

      Delete