23 July 2015

ஓடிப் போய் கல்யாணம்? நல்லா யோசிக்கணும் :)

----------------------------------------------------------------

 காரணம் பொது நலம் அல்ல :)       

           

              ''பரவாயில்லையே ,டாஸ்மாக் மதுக் கடைகளை மூடணும்னு நம்ம ஏட்டு ஏகாம்பரமும் சொல்றாரே  ?'',
          ''அட நீ வேற ,கள்ளச் சாராய மாமூல் நிறைய கிடைக்கும்னு  அப்படி சொல்றாரு !''


T V காமக் கதை தொடர்களில் இப்படியும் கார்டு போடலாமே !

      '' டி வி தொடர் டைட்டில் கார்டில் ,ஒரு எழுத்தைத் தப்பா எழுதியதால் ,வேலையில் இருந்து உன்னை தூக்கிட்டாங்களா ?என்ன எழுதினே ?''
       ''இந்த தொடர் யாரையும் 'பண் 'படுத்தும் நோக்கில் எடுக்கப் பட்டதல்லன்னுதான் !''

ஓடிப் போய் கல்யாணம்?நல்லா யோசிக்கணும் !

         ''ஓடிப் போய்  கல்யாணம் கட்டிக்கிறவங்க ரெஜிஸ்டர் ஆபீசுக்குத்தான் போவாங்க ,நீங்க எதுக்கு வங்கிக்கு ஜோடியா வந்து இருக்கீங்க ?''
          ''உங்கள் கனவை  நனவாக்க நாங்கள் தயார்னு  நீங்கதானே விளம்பரம் போட்டு இருந்தீங்க !''



செம்மொழி தமிழுக்கே இந்த சோதனையா ?

பசுவின் மணி ஒசைக்கும் மதிப்பளித்து நீதி சொன்னதெல்லாம் அந்தக் காலம் ...
நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட நாதியற்று தவிப்பது இந்தக் காலம் !


  1. ஸ்ரீராம்.Wed Jul 23, 12:46:00 p.m.
    ஹா...ஹா...ஹா ஆங்கிலத்தில் wife - life change செய்ய என்று ஒரு ஜோக் உண்டே அது நினைவுக்கு வருகிறது.

    போலீஸ் ஸ்டேஷன்தானே செல்வாங்க/சொல்வாங்க என்னடா என்று பார்த்தேன்! கனவை நனவாக்கும் சமாச்சாரமா! ஹா..ஹா..ஹா..

    பசுவுக்கும் தமிழுக்கும் என்னங்க சம்பந்தம்?




    1. இரு கோடுகள் படத்தில் life/file என்று வரும் டயலாக்கும் இதைப் போன்றதுதான் !

      வங்கிகள் தாலி கட்ட வச்சு லோனும் கொடுத்தா நல்லாத்தான் இருக்கும் !

      பசுமாடு மாதிரி ,நாமளும் தமிழுக்கு உரிய மரியாதைக் கொடுன்னு கத்தத்தான் செய்கிறோம் .ஆனால் மத்திய அரசு ,செத்த மொழிக்கு தர்ற மரியாதையைக்கூட தமிழுக்கு தர மாட்டேன் என்கிறதே !


29 comments:

  1. வணக்கம்
    ஜி

    மதுக்கடை மூடினாலும்.. நம்மவர்கள் மூளை வித்தியாசம்.. வேற்று மருந்து கண்டு பிடிப்பார்கள் ஜி.. மற்றவைகளை இரசித்தேன் த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வேற்று மருந்தினால் நம்ம ஏட்டு காட்டிலே மழைதானே :)

      Delete
  2. ஓ... இதைவிட அதில் இன்னும் அதிகம் கிடைக்குமோ!

    ஹா...ஹா...ஹா... உண்மையைச் சொல்லியிருக்கார்!

    ஆஹா.... வாழ்க்கையை வளமாக்கிக் தீர்மானிச்சுட்டாங்க போல!

    பசுவுக்கும் தமிழுக்கும்.... அடேடே.... முன்னரே இதே கமெண்ட்தான் அடிச்சிருக்கேனா!

    ReplyDelete
    Replies
    1. கிடைக்காமலா எதிர்பார்ப்பார் :)

      தன்னையறியாமலே சொல்லிவிட்டார் :)

      வங்கி கடன்னா திருப்பி கட்ட வேண்டியதில்லைன்னு நினைச்சிட்டாங்களா :)

      நானும் அதே மறுமொழியை சொன்னதா எடுத்துக்குங்க :)

      Delete
  3. ஏட்டு ஏகாம்பரம் இப்பவே தயாராகி விட்டார் போல...!

    ReplyDelete
    Replies
    1. தொலை நோக்கு பார்வை உள்ளவர் ஆச்சே அவர் :)

      Delete
  4. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. சிந்திக்க வைத்தால் நிச்சயம் நான் காரணம் அல்ல :)

      Delete
  5. வங்கிக்கு ஒடிப்போனாலும் சாதிமானம் காக்கும் மானஸ்த வீரர்கள் சும்மா விட்டவிடுவிடுவார்களா...???

    ReplyDelete
  6. வங்கிக்கு ஒடிப்போனாலும் சாதிமானம் காக்கும் மானஸ்த வீரர்கள் சும்மா விட்டவிடுவிடுவார்களா...???

    ReplyDelete
  7. ஓடிப் போய் கல்யாணம் செய்யிறவுக வங்கிக்கு போனாலும் சாதிவெறி வீரர்கள் சும்மா விட்டுவிடுவார்களா...???

    ReplyDelete
    Replies
    1. காதலர்களை போட்டு தள்ளீட்டு ,வங்கியைக் கொள்ளை அடித்துச் சென்றாலும் வியப்பதற்கு இல்லை :)

      Delete
  8. ஏட்டு சரியாத்தான் சொல்லியிருக்கார்! ஹாஹாஹா! சூப்பர் ஜோக்ஸ்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஏட்டு சுரைக்காய் வேண்டுமானால் உதவாமல் போகலாம் ,ஏட்டுக் கணக்கு தப்பாது :)

      Delete
  9. ஒரு கதவு மூடினால் இன்னொன்று திறக்கும் கடன் வாங்கிக் கல்யாணமா?

    ReplyDelete
    Replies
    1. ஏட்டுக்கு இந்த பழமொழி சரியாக பொருந்தும் :)

      பிள்ளையோட வட்டியும் சேர்ந்து வளருமா :)

      Delete
  10. ஆஹா இது நல்லா இருக்கே,
    அனைத்தும் அருமை
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. 'பண் 'படுத்தும் நோக்கமில்லை என்பது நல்லாவாயிருக்கு :)

      Delete
  11. கடந்த ஒரு வார காலமாக கணினி பழுதுபட்டு உறங்கி விட்டது
    அதனால்தான் தங்களின் பதிவுகளைக் காண இயலவில்லை
    கணினி இப்பொழுதுதான் தூக்கம் கலைந்து எழுந்துள்ளது
    இனி தினம் வருவேன் நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தூக்கம் கலைந்து எழுந்ததும் ,முதலில் போட்ட பதிவில் ,கர்மவீரர் காமராஜருக்கு பெருமை சேர்த்து இருப்பதை படித்தேனே :)

      Delete
  12. கள்ளச்சாராயம் போட்டி போடத் தொடங்கிடுமோ....எது சிறந்தது?!!!! அரசு கடவுள்??!!!

    கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா இல்ல
    கணக்கு ஒன்ணு தொடங்கிட்டு கட்டிக்கலாமா....





    ReplyDelete
    Replies
    1. கணக்கை வங்கியில் வேண்டாம் ,வயிற்றில் தொடங்கட்டும் :)

      Delete
  13. பொது நலத்திலும் சுய நலம்;அவ்வளவுதான்!
    நன்று

    ReplyDelete
    Replies
    1. கள்ளச் சாராயம் பொது நலமா ,அவ்வ்வ்வ் :)

      Delete
  14. ஆமா ஆமா, மெகா சீரியலுக்கு எல்லாம் இதான் வேலையா என்ன:))

    ReplyDelete
    Replies
    1. கேட்டால் ,மக்கள் எங்கள் பக்கம் என்கிறார்களே:)

      Delete
  15. வங்கியும் பண்னும் கலக்கல் ஜி...

    ReplyDelete
    Replies
    1. டீயும் பன்னும் என்றால் இன்னும் கலக்கலா இருக்கும் :)

      Delete