31 January 2016

'கலர்' பார்க்க முடியலைன்னா கஷ்டம்தானே :)

---------------------------------------------------------------------------------------------------------

                           ஜோக்காளியின்  சரித்திரத்தில் இன்றைய நாள் ,ஒரு பொன்னான நாள் !ஆமாம் ,வாசக பார்வைகளின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைத் தாண்டி விட்டது !இந்த உச்சத்தைத் தொட உதவிய வலைத்தள உறவுகள் அனைவருக்கும் நன்றி !

-------------------------------------------------------------------------------------------------------

இதுக்கு சாஸ்திரத்தில் இடமுண்டா :)                       

               ''தலைவரோட அறுபதாம் கல்யாணத்தில் என்ன கலாட்டா ?''

                     ''இன்னைக்கு என் கழுத்துலே தாலி கட்டியே ஆகணும்னு,தலைவரோட  'சின்ன வீடு 'வந்து சண்டை போடுதாம் !''  

'கலர்' பார்க்க முடியலைன்னா கஷ்டம்தானே :)

                         ''காலையில் சிகப்பு  ,மதியம் மஞ்சள்  ,ராத்திரி வெள்ளை மாத்திரையும்  சாப்பிடச் சொன்னா ,முடியாதுன்னு ஏன் சொல்றீங்க ?''
                        ''என் பிரச்சினையே ,எல்லா கலரும் ஒரே கலரா  தெரிவதுதானே 
 ,டாக்டர் ?''
                              

இந்த காலத்து பசங்க ரொம்ப வெவரம் !
           ''ஸ்கூல் பக்கத்திலே இருக்கிற போர்டிலே 'மெதுவாகச் செல்லவும் 'னு இருக்கிறதை ,ஏன் 'கவனமாகச் செல்லவும் 'னு திருத்துறீங்க ?''
          ''எல்லாப் பசங்களும் இதைப் படிச்சிட்டு ஸ்கூலுக்கு லேட்டா வர்றதா HM சொல்றாரே !''
  1. உண்மை ஜோதிடம் ஜனகனமன நேரமும் சொல்லும் :)

    1.          ''கவலைக்கிடமா இருக்கிற நம்ம தலைவர் பிழைக்க மாட்டார்ன்னு  சொல்றீயே ,எப்படி ?''
                    ''ஜாதகத்தைப்  பார்த்த  ஜோதிடர் தலைவரோட 'ஜனகனமன நேரம் 'நெருங்கிடுச்சின்னு சொல்றாரே !'' 




    கேள்விக் குறியாகும் மரியாதை :)

    1.  

    1. புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்கள் 

  2. இருட்டில் செய்கின்ற லீலைகள் எல்லாம் 
    வெளிச்சத்தில் வரும்போது ...
    மரியாதை   கேள்விக் குறியாகி  விடுகிறது !
     

x

23 comments:

  1. படித்தேன், ரசித்தேன், சிரித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தேன்,தேன்தான் ,உங்கள் கருத்தும் :)

      Delete
  2. கலர் பிரச்னை கல கல.

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு,கலர் கலங்கலாத் தெரியுதாமே :)

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. பெரிய வீடே இதப்பத்தி ஒன்னும் கேட்டதில்ல...! எங்க பரம்பரையே இது வரைக்கும் யாரு கழுத்திலேயும் தாலி கட்டினதே இல்ல... தெரிஞ்சிக்க...!

    அப்ப... நாய் மாதிரின்னு சொல்லுங்க...!


    பசங்க படம் பார்க்கப் போகம... ஸ்கூல்க்கு வர்றாங்கன்னு சொல்லுங்க...!

    ஜோதிடர் தப்பா கணிச்சிட்டாராம்... வாழ்த்துப் பாடல் பாடுற நேரம்ன்னு சொல்றதுக்குப் பதிலா வாய் தவறிச் சொல்லிட்டாராம் ... ஜோதிடர் சொல்லியே பத்து வருஷத்துக்கு மேல ஆயிடுச்சே...!


    ‘லீலைக்கு மரியாதை...?’ ன்னு படம் எடுக்க வேண்டியதுதானே...!

    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. பரம்பரைப் புத்தியைக் காண்பிச்சிட்டீங்களே:)

      நாய்க்கு கலர் தெரியாதுன்னு எனக்கு தெரியாதே :)

      லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வர்றாங்க :)

      இறுதி வாழ்த்துப் பாடல் ஆக்கிட்டாங்களே :)

      முன்னாடி ,மன்மதன்னு சேர்த்துக்கணுமா :)

      Delete
  5. Replies
    1. ஜனகனமன நேரம் எப்படி :)

      Delete
  6. வாழ்த்துக்கள்! ஜி அய்ந்து லட்சத்தை.. தாண்டிதற்கு...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு முன்பாகவே ,ஐந்து லட்சத்தைத் தொட்ட வலிப்போக்கனுக்கு நன்றி :)

      Delete
  7. Replies
    1. கலாமகன் ஆன விஜயன் ஜி ,உங்க புரோபைல் படமா, இந்த காக்கையை வைத்துக் கொள்ள ஏதாவது காரணம் இருக்கா :)

      Delete
  8. வணக்கம்
    ஜி
    வாசகர் வருகை கண்டு மகிழ்ந்தேன்
    நகைச்சுவை ஒவ்வொன்றும் ஒரு தனிச் சுவைதான் இரசித்தேன் வாழ்த்துக்கள் த.ம 9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஊக்கம் தரும் உங்களின் தொடர் வருகைக்கும் நன்றி ரூபன் ஜி :)

      Delete
  9. ஐந்து லட்சங்கள் விரைவில் பத்து லட்சங்களை கடக்க வாழ்த்துகள் ஜி

    01. உண்மைதானே எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த வீட்டிலே... சின்ன வீட்டிலே...
    02. முதலில் கண்ணங்குடி கண் டாக்டர் கண்ணபிரானை பார்க்க சொல்லுங்க...
    03. இதுவும் பிரட்சினையா ?
    04. யாரு ? நம்ம, சோலந்தூர் சோசியர் சோனைமுத்தா ?
    05. ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. சுமார் 1211 நாட்களில் இது சாத்தியமாகியுள்ளது ,பத்து லட்சத்தைத் தொட இனிமேல் இவ்வளவு நாட்கள் தேவைப் படாது என்றே நினைக்கின்றேன் :)

      எத்தனைக் காலம்தான் லைசென்ஸ் இல்லாமல் இருப்பது :)
      கண்ணபிரானைப் பார்த்தபிறகுதான் ,கண்ணில் எல்லா கலரும் அப்பிய மாதிரி தெரியுதாமே :)
      ஸ்கூலில் வரக்கூடாத பிரச்சினை ஆச்சே :)
      சாகுற நேரத்தை, அவரைத் தவிர இவ்வளவு துல்லியமா வேறு யாரால் சொல்ல முடியும் :)
      கேள்விக் குறியானாலும் அவர்களும் கவலைப் படுவதில்லை ,ஏன்னா ,அவனை நம்புறவன் இருக்கானே :)

      Delete
  10. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் எல்லோரும் ரசித்து சிரித்துப் போகவே விரும்புகிறார்கள்அந்த வித்தை உங்களுக்கு கைவந்தகலை பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ? சமீபத்தில் ,நம்ம வலிப்போக்கணும் ஐந்து லட்சத்தைக் கடந்து விட்டாரே !அவர் போடுறது சீரியஸ் மேட்டராச்சே :)
      வாழ்த்துக்கு நன்றி அய்யா !

      Delete
  11. நேற்று மூன்று 'தேனுடன் 'தொடங்கிய கருத்துக்களை ,இன்று ,நீங்களுடன் 'தேனுடன் 'முடித்து வைத்தமைக்கு நன்றி :)

    ReplyDelete
  12. வாசகர் எண்ணிக்கை மேலும் உயர வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி அய்யா :)

      Delete