1 November 2016

ஒல்லிக் குச்சி உடம்புக்காரி :)

கல்யாணமாகி பல வருடமாச்சோ :)
             ''என்னங்க , இப்போதெல்லாம்  என்னை பேபின்னு  ஆசையா கூப்பிட மாட்டீங்கிறீங்களே ,ஏன் ?'' 
              '' பேய் பிசாசுங்கிறதின்   சுருக்கம்  பேபி  ஆன மாதிரி தோணுதே  !''

ஒல்லிக்  குச்சி  உடம்புக்காரி :)          
            ''நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிடுவதை ,ஏன் நிறுத்தச் சொல்றீங்க ?''
           ''அந்த பாத்திரத்தில் சமைக்கிற எதுவும்  உன் உடம்பிலேயும் ஒட்ட மாட்டேங்குதே !''

செல் இல்லையென்றாலும் பழக்க தோஷம் விடாது :)
                ''செல்லில் பேசிக்கொண்டே  பைக் ஓட்டினால்  என்னாகும் ?''
               '' பேசாத நேரத்திலும்  கழுத்தை ஒரு பக்கமா சாய்ச்சிக்கிட்டு   ஓட்ட வேண்டியதா  போகும்  !''

'பிடித்தம் போனா ' புருஷனை எப்படி பிடிக்கும் :)
             ''ஒண்ணாந்தேதி வரவும் உனக்கு பிடித்தமானவரே ,பிடிக்காதவர் ஆயிட்டாரா,ஏண்டி ?''
               ''அவரோட சம்பளம் எல்லாப் பிடித்தமும் போக ஒண்ணும் தேறலையே !''

தொப்பைக்கு goodbye ன்னு ஓடும் திருடன்:)
            ''அதோ,அந்த ஏட்டையாவைப் பார்த்தா , பழமொழிக்குப் பதில்   புது மொழி சொல்லத்தோணுது!''
           ''எப்படி?''
            ''ஏட்டு தொப்பை கடமைக்கு  உதவாதுன்னுதான்!''

பிணம் தூக்கியின் திகில் அனுபவம் !
 சில வருடங்களுக்கு  முன் ,உண்மையில் நடந்த சம்பவம் இது ...
குற்றால அருவியில் குளிப்பது எல்லோருக்கும் சுகமான அனுபவம்தான் ...
ஆனால் அதுவே ஒரு சிலருக்கு துக்கத்தை தந்து விடுகிறது ...
வாலிபக் கோளாறால் சில வாலிபர்கள்  ...
மலைமேலே  வெகுதூரம் ஏறிச் சென்று  
நீர்த் தடாகத்தில்  குளித்துக் கொண்டிருக்கையில் ...
காட்டாறு வெள்ளம் வந்து ஒருவனை அடித்துக் கொண்டு சென்று விட்டதாம் ...
நண்பர்கள் பல மணி நேரம்  தேடியும் அவனைக்
கண்டுபிடிக்க  முடியவில்லையாம் ...
இறந்துஇருந்தால்கூடசடலம்ஒதுங்கிஇருக்கவேண்டும் ...அப்படியும் கிடைக்கவில்லை ! 
இப்படிப்பட்ட சம்பவங்களில் பிரபலமான 
'பிணம் தூக்கி 'ஒருவரின் தேடிச் சென்று
இருக்கிறார்கள் ... 
அங்கேயும் அவர்கள் துரதிர்ஷ்டம் ,அவர் வெளியூர் சென்று இருந்ததால் ...
மூன்று நாட்களுக்குப் பின் சம்பவ இடத்திற்கு வந்து பிணம் தேடும் படலம் ஆரம்பமாகி உள்ளது ...
அவர் ஒருவிதமான எண்ணையை வாயில் அடக்கிக் கொண்டு ஓடும் தண்ணீரில் குதித்து தேட ஆரம்பித்தாராம் ...
அந்த எண்ணையை நீரினடியில் சென்றபின் துப்புவாறாம்...
அதனால் LED விளக்கைப் போட்டது போல்  பிரகாசமாய் வெளிச்சம் கிடைக்குமாம் ...
பத்து நிமிடத் தேடலுக்குப் பின் வெளியே வந்திருக்கிறார் ...
காத்திருந்த எல்லோருக்கும் ஆச்சரியப் படும்படியான  தகவலை சொன்னாராம் ...
'உங்கள் நண்பர் குகை ஒன்றில் இன்னும் உயிரோடு இருக்கிறார் !'
பிறகேன் காப்பாற்றிக் கொண்டுவரவில்லை ?
பிணம் தூக்கி தன் அனுபவத்தைச் சொன்னாராம் ...
'பிணமாய் இருந்தால் தலை முடியைப் பிடித்துக் கொண்டு வாழை மட்டையை இழுத்துக் கொண்டு வருவது போல் எளிதாக கொண்டு வந்து விடுவேன் ...
உயிரோடு இருப்பவனை மீட்பது சிரமம் ,ஏனென்றால் உயிராசையுடன் இருப்பவர் என்னையும் தண்ணீரில் இழுப்பார் ...'
என்று சொன்னவர் ,அதன் பின் பாதுகாப்புடன்  கயிற்றின் உதவியுடன் சென்று ...
அந்த வாலிபரை உயிருடன் மீட்டுள்ளார் ...
மறு ஜென்மம் எடுத்த அந்த வாலிபர் தற்போது அமெரிக்காவில் பணி புரிகிறாராம்...
அவர் தன் திருமணத்திற்கு பிணம் தூக்கியை அழைத்து மரியாதை செய்தாராம் !
மூன்று நாள் உண்பதற்கு ஏதுமில்லாமல் ,வெள்ளம் பாய்கின்ற ஒரு குகையில் உயிர் பயத்துடன் எப்படி இருந்திருப்பார் என்பதை நினைத்தால் நமக்கே 'ஜிலீர் 'என்கிறதே !

17 comments:

  1. ஏட்டுத் தொப்பை மொழி சூப்பர். கடைசி தகவல் மறுபடி படித்தாலும் சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. ஏட்டுச் சுரைக்காய் மட்டுமா ,ஏட்டுத் தொப்பையும் உதவாதுதானே :)

      Delete
  2. நமக்குத்தான் பேபி வந்துட்டாளே... இனியும் ஒன்னப் போயி பேபின்னா... பேபி அடிக்க வந்திட மாட்டாளா...?!

    நான்... ஸ்டிக்டுன்னு சொல்லிக் காட்டுறீங்களா...? சரி... சரி... இந்த மாதச் சம்பளத்தில பத்து ரூபா குறையுது...? இப்படி வீண் செலவு செய்றத நெனச்சா வயிறு பத்திக்கிட்டு வருது...!

    செல்லில் பேசிக்கொண்டே பைக் ஓட்டினால்... சீக்கிரம் போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு போயே சேர்ந்து விடலாம்...!

    நா அப்பவே சொன்னேன்... ஒன்னும் தேறாதுன்னு... கேக்கலை...!

    ஏட்டு... எட்டடி பாய்றதுக்குள்ள... திருடன் பதினாறடி பாய்றானே...!

    நா செத்துப் பிழைத்தவன்டா... குகையில் அவனப் பாத்துச் சிரிச்சவன்டா...!

    த.ம. 1












    ReplyDelete
    Replies
    1. பேபி போய் பேய்போபியா வந்திடுச்சோ :)

      உங்ககூட நானும் ஓட்ட மாட்டேன்:)

      சேரக் கூடாத இடத்துக்கும்தான் :)

      அவராவது தேறுவாரா :)

      உயிர்மேல் ஆசையுள்ளவன் பாயத்தானே செய்வான் :)

      எமனைப் பார்த்து சிரிச்சவரோ:)

      Delete
  3. 'பிடித்தம் போன ' புருஷனையும் தானே :)

    ReplyDelete
  4. ஹாஹாஹா! ரசித்தேன் நண்பரே! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. பாக்யாவில் இடம் பெறும் பாக்கியம் பெற்ற உங்கள் ஜோக்குகளையும் ரசித்தேன் ,வாழ்த்துகள் ஜி :)

      Delete
  5. 01.காலம் மாறும்போது இதுவும் மாறும்.
    02. ஹாஹாஹா
    03. உண்மைதான் ஜி
    04. பொதுவாக ஒண்ணாம் தேதி ஆனால் பிடிக்கணுமே..
    05.ஆஹா ஸூப்பர்
    06 பிரமிப்பான தகவல் ஜி

    ReplyDelete
    Replies
    1. ஆண்டொன்று போனால் வயது ஒன்று மட்டுமா போகிறது ,பிரியமும் குறைந்து கொண்டே போகிறதே :)
      ஓட்டுறதுக்கு எண்ணையும் தேவையோ :)
      கோணக் கழுத்தன் :)
      அன்று ஆட்டுக்கால் சூப்பும் கிடைக்குமோ வீட்டில் :)
      கடமை 'முக்கி'யம் இல்லையா :)
      மறு ஜென்மதை நம்பலாமோ :)

      Delete
  6. "மூன்று நாள் உண்பதற்கு ஏதுமில்லாமல் ,வெள்ளம் பாய்கின்ற ஒரு குகையில் உயிர் பயத்துடன் எப்படி இருந்திருப்பார் என்பதை நினைத்தால் நமக்கே 'ஜிலீர்' என்கிறதே!" என்றதும் மறுபிறப்புக் கிடைத்திருக்கிறது என எண்ணத் தோன்றுகிறதே!

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் தோன்றுகிறது !நம்மால் ஒரு இடத்தில் அசையாமல் உட்காரக்கூட முடியலையே :)

      Delete
  7. பேபிக்கு இப்படியும் ஒரு அர்த்தமா
    இவரும் அதில் சமைத்ததைத்தானே உண்கிறார்
    சிலர்கழுத்தை சாய்த்து பைக் ஓட்டுவது இதனால்தானா
    ஒண்ணாம்தேதியாவது பிடித்த காலமும் போச்சே
    ஏட்டுத்தொப்பையை ரசித்தேன்
    இந்தச் செய்தியை நான் முன்பே வேறெங்கோ வாசித்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. காலம் மாறினால் அர்த்தமும் மாறுமோ :)
      இல்லை ,இவருக்கு வேற சட்டி :)
      பெங்களூர் கூட இதற்கு விதி விலக்கல்ல :)
      அதான் பென்சன் வருதே :)
      அவ்வளவு அழகாவா இருக்கு :)
      அதிசயம் என்று வந்த செய்திதான் :)

      Delete
  8. படத்தைப் பார்த்தால் ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி மாதிரி..தெரியலையே...பாஸ்...

    ReplyDelete
    Replies
    1. நல்லா பாருங்க ,பார்த்து பார்த்து நீங்க ஒல்லிக்குச்சியானா ஜோக்காளி பொறுப்பல்ல :)

      Delete
  9. ஏட்டுத் தொப்பை.... :)))

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. பழமொழி.என் பாணியில் மாறியது சரிதானே :)

      Delete