29 June 2014

*ஐஸ்வர்யாவை அறிமுகம் செய்த சங்கரை தெரியும் ,லங்கரை தெரிஞ்சுக்கலாமே !

வட இந்திய டூர் - பாகம் 2
    முந்தைய பதிவில் வாகா பாடர் சென்று பார்த்தோம் ,அடுத்ததா நாம செல்ல இருப்பது அதே பஞ்சாப்பில் இருக்கும் பொற்கோவிலுக்கு ! .
சீக்கியவரின் புனித தலமான அங்கே எல்லாரையும் அனுமதிப்பார்களா என்ற கேள்விக்கு கிடைத்த பதில் ...சாதி மதம் ,ஏழைப் பணக்காரன் என்று எந்த  பேதமின்றி அனைவருக்கும் அனுமதி உண்டு என்றதால் ...இதோ இந்த முன் வாசல் வழியாக உள்ளே நுழைக்கிறோம் ...


உள்ளே நுழைந்ததும் கண்ணைப் பறிக்கும் தகதக தங்க நிறத்தில் கண்ணில் படுகிறது பொற்கோவில் ...

தெப்பக் குளத்தின் நடுவே கோவிலில் ஒரு பக்கம் மட்டுமே வாசல் .இரண்டு வரிசையாக மக்கள் ...ஒரு வரிசை மட்டும் வேகமாய் உள்ளே போய்க் கொண்டு இருந்ததால் அந்த வரிசையில் நான் நுழைந்தேன் ...
அங்கிருந்த தாடி வளர்த்து இடுப்பில் குர்பான் கத்தியுடன்இருந்த சீக்கிய பக்தர் ,என்னை அடுத்த வரிசைக்கு போகச் சொன்னார் ..காரணம் ,நான் நின்றது சீக்கியர்களுக்கு மட்டுமே உண்டான வரிசையாம் ...ஜாதி மத பேதம் இல்லாத இடத்தில் இப்படியுமா என்று பட்டது ..நம் கோவில் கர்ப்பக்கிரகத்தில் நுழைய வேறு மதத்தவர்களுக்கு அனுமதியே இல்லையே ..அதுக்கு இது பரவாயில்லை என்று மனதைத் தேற்றிக்கொண்டு உள்ளே நுழைந்தேன்...மூன்று மாடி அமைப்புடைய அந்த கோவிலில்  சுத்தம் என்றால் அப்படி ஒரு சுத்தம் ...ஒரு சிலர் நடக்கக்கூட விடாமல் தரையை சுத்தம் செய்வதில் குறியாய் இருந்தார்கள் ..அது அவர்களுக்கு விதிக்கப் பட்ட தண்டனை என்றும் சொன்னார்கள்  ,இப்படியும் நேர்ந்து கொண்டு சுத்தம் செய்வார்கள் என்றும் சொன்னார்கள் ...
உள்ளே எங்கேயும் உருவச் சிலை வழிபாடு இல்லை ,மத குருமார்கள் புனித நூலை உள்ளதை ஓதிக் கொண்டு இருந்தார்கள் ,இருவர் பாடிக்கொண்டிருந்த  பஜன் கீர்த்தனைகள் பொற்கோவில் வளாகம் முழுவதும் ஒலித்துக் கொண்டே இருந்தது !
இதுக்கு அப்புறம்தான் நமக்கு மிகவும் பிடித்த விஷயம் வருகிறது ,வேறொன்றுமில்லை , போஜனம்தான் !அந்த போஜனத்திற்கு பெயர் லங்கர் என்றார்கள் .பொற்கோவில் பின்புறம் இருக்கும் பெரிய ஹாலில் லங்கர் நடந்து கொண்டிருந்தது .லஞ்கரில் பரிமாறப் படுவது  ரொட்டிதான் அதாவது சப்பாத்தி உடன் தாள்மக்கனி.(தாள்மக்கனி என்றதும் எனக்கு வந்த மாதிரி ஹிந்தி நடிகை  மந்தாகினி  உங்கள் நினைவுக்கு  வரமாட்டார்  என்று நம்புகிறேன் ) தினசரி லட்சம் பேருக்கு இங்கே இந்த தானம் கொடுக்கப் படுகிறதாம் லட்சத்தில் ஒருவராக நாங்களும் தின்று களித்தோம் இங்கே ஒரு கண்டிஷன்,ரொட்டியை இரு கைகளை யும் ஏந்தி நாம் வாங்கிக் கொள்ளவேண்டும் ...
           என்றும் அணையாத வள்ளலார் ஜோதியைப் போல் அங்கே பெரிய பெரிய அடுப்புகளில் சமையல் நடந்துக் கொண்டே இருந்தது ,பணியாளர்கள் சிலர்தானாம் ,எல்லா  பணிகளையும் அங்கே வரும் பக்தர்கள் தான் செய்துக் கொண்டிருந்தார்கள் .காய்கறி நறுக்குவது ,எச்சில் தட்டு கழுவுவது போன்ற பல வேலைகளை நேர்ந்து கொண்டுவந்தவர்கள்  செய்வதாக சொன்னார்கள் ..( நம் பக்தர்கள் நேர்த்திக்கடன் என்று மயிரைக் கொடுப்பார்கள் ,ஆட்டை அறுத்து  தின்று 
வயிறு புடைக்க தின்று  தீர்ப்பார்கள் .அவர்கள் செய்வது அல்லவோ உண்மையான நேர்த்திக் கடன் ?)
பயணம் தொடரும் ...

=================================================================================


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!

மஞ்சள் உதவுது திருமணத்திற்கும் திவாலுக்கும் !

''அவர் வியாபாரத்திலே திவால் ஆயிட்டார்னு சொன்னாங்க ,இப்ப பொண்ணோட கல்யாணத்தை ஆடம்பரமா செய்றாரே ,எப்படி ?''
''அந்த மஞ்சள் நோட்டீசில் சம்பாதித்ததை ,இந்த மஞ்சள் நோட்டீசில் செலவு பண்றார் !''

'சிரி'[?]கவிதை!

மக்களைக் காப்பதிலும் பூஜ்ஜியம்தானா ?

 ஒவ்வொரு இயற்கை கோரத்தாண்டவமும் சொல்கிறது ...
முன் எச்சரிக்கை நடவடிக்கையில்... 

இன்னும் இந்தியா 'பூஜ்ஜியம் 'கண்டுபிடித்த 

மிதப்பிலேயே உள்ளது என்பதை !
















29 comments:

  1. பொற்கோவிலை பற்றிய அருமையான விசயம் தந்ததற்க்கு நன்றி பகவான்ஜீ.

    ReplyDelete
    Replies
    1. பொற்கோவிலில் உள்ள குளத்தில் நீந்தும் மீன்கள் கூட தங்க நிற மீனகளாய்இருக்கிறது ,பொற்கோவிளைப் பற்றி சொன்னாலும் பொன்னாய் மின்னுகிறதே !
      நன்றி

      Delete
  2. பொற்கோவில் பற்றிய தகவல்கள் அருமை.

    இங்கு சிட்னியில் குருத்வாரா கோவில் இருக்கிறது. இங்கும் அன்னதானம் என்றால் அப்படி ஒரு அன்னதானம் நடைபெறுகிறது. கோவிலும் ரொம்ப சுத்தமாக இருக்கும். கோவிலுக்குள் நுழையும்போது நாமும் தலையில் அந்த டர்பன் கட்டிக்கொண்டு தான் உள்ளே செல்ல வேண்டும். பெண்கள் துப்பட்டாவை தலையில் போர்த்திக்கொண்டு தான் உள்ளே செல்ல வேண்டும். அந்த துணிகளை எல்லாம் அங்கேயே கொடுப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் இங்கே மஞ்சள் டர்பன் துணியை பத்து ரூபாய்க்கு வெளியில் விற்பதை வாங்கி அணிந்து சென்றோம் .பெண்களும் அதை அணிய வேண்டுமென்று கூறினார்களே ?
      நன்றி

      Delete
    2. இங்கு பெண்கள் அந்த துப்பட்டாவை தலையில் சுற்றிக்கொண்டால் போதும். இங்கு அந்த துணிகளுக்கு காசு எல்லாம் கிடையாது.

      Delete
    3. அடடா ,இந்த விஷயம் முன்பே தெரியாமல் பத்து ரூபாயை தண்டச் செலவு செய்து விட்டேனே சொக்கன் ஜி !
      நன்றி

      Delete
  3. பொற்கோவில் பொன்னான விமர்சனம்!

    ஜி ...அந்த மஞ்சத்தாள விட...கல்யாண மஞ்சத் தாள் ஒரு அப்பனை போண்டியாக்கிடும்!!!!!!

    சிரி கவிதை சிந்தனை சிரிகவி!

    ReplyDelete
    Replies
    1. கல்யாண மஞ்சத்தாள்அடித்துவிட்டு அடுத்தகட்ட செலவை செய்ய முடியாமல்தான் ஆண்டியாகி விடுகிறார்களோ ?
      நன்றி

      Delete
  4. சிறந்த கவிதை
    சிந்திக்க வைக்கும் நகைச்சுவை

    ReplyDelete
    Replies
    1. பூஜ்யம் கண்டுபிடித்தது நல்ல விசயம் தான் ,பல விசயங்களிலும் பூஜ்யமாய்இருப்பதில் நியாயம் இல்லையே !
      நன்றி

      Delete
  5. பொற்கோவில் குறித்து தங்கள் பாணி
    அறிமுகம் அருமை
    இவ்வாரம் முதல் இடத்தைப் பெற்றமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இரண்டாம் இடத்தில் தானே இருக்கிறேன் ,நேற்று நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களும் முதல் இடம் என்று கூறியிருந்தார் ,ஒன்றுமே புரியவில்லையே ரமணி ஜி !
      நன்றி

      Delete
  6. பொற்கோவிலை நானும் சுற்றியதாக நேரில் பார்த்த அனுபவத்தி ஏற்படுத்திவிட்டீர்கள்.
    பூஜ்ஜியம் 'நச்' கவிதை,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியானால் நான் செய்த செலவில் எவ்வளவு தருவீர்கள் கிங் ராஜ் ஜி ?
      ஒருவேளை அந்த தொகையும் பூஜ்யம் தானா ?(கோவிச்சுக்காதீங்க ,உங்க கருத்தே எனக்கு தகுந்த வெகுமானம் தான் !)
      நன்றி

      Delete
  7. பொற்கோயில் பயணம் பற்றி உங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் சொன்னீர்கள்.
    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்லாமல் விட்டதையும் சொல்லி விடுகிறேன் ,பொற்கோவிலில் நுழைந்து வெளியே வரும் வரை யாரும் பேசவே கூடாது !
      நன்றி

      Delete
  8. பொற்கோவில் தகவல்கள் அருமை! அவர்களின் நேர்த்திக்கடன் புதுமை! ஜோக் அருமை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் அருமைக்கும் ,புதுமைக்கும் நன்றி !

      Delete
  9. பொற்கோவில் பற்றிய தகவல்களுக்கு நன்றி ஜி...

    ReplyDelete
    Replies
    1. அங்கே சென்றதால் ,அறியாதன சிலவற்றை நானும் அறிந்து கொண்டேன் !
      நன்றி

      Delete
  10. பகவான்ஜீ ... பொற்கோவில் பற்றி தகவல்கள் நன்று....

    ReplyDelete
    Replies
    1. பொற்கொவிலும் பார்ப்பதற்கு நன்றுதான் !
      நன்றி

      Delete
  11. ஒரு வழியா பொற்கோவில் ஒரு ரவுண்டு வந்தாச்சு! பஸ் சை கிளப்புங்க அடுத்த ஸ்போட் போலாம்! ரே!ரெட்!

    ReplyDelete
    Replies
    1. பஸ்ஸை கிளப்பியாச்சு ,அடுத்து பஸ்ஸை சாரநாத்தில் நிறுத்தலாம் என்று ஐடியா !
      ரைட்டுக்கு நன்றி !

      Delete
  12. பொற்கோவில் மட்டுமல்ல, சீக்கியர்களின் வழிபாட்டுத்தலமான எல்லா குருத்வாராக்களிலும் இந்த லங்கர் உண்டு. அவர்கள் சப்பாத்தி என்று சொல்வது இல்லை - இரண்டு கைகளையும் நீட்டி உட்கார்ந்தால், “பிரசாதா” என்று சொன்னபடியே வரும் நபர் பிரசாதம் [சப்பாத்தி] தருவார். ஒரு கை மட்டும் நீட்டினால் போய்க் கொண்டே இருப்பார்!

    இங்கே தயாரிக்கப்படும் உணவிற்காக தானம் செய்வது சீக்கியர்களுக்கு/பஞ்சாபிகளுக்கு மிகவும் விருப்பமான விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. தினசரி லட்சம் பேருக்கு லங்கர் கொடுப்பதென்றால் சும்மாவா ?வருடத்திற்கு பல கோடி செலவாகுமே !நம்ம ஆட்கள் திருப்பதியில் கொண்டு போய் கொட்டுவதைப் போல ,இங்கே கொட்டித் தர உலகெங்கும் சீக்கியார்கள் இருக்கத்தான் செய்கிறார்களாம் !
      நன்றி

      Delete