4 June 2014

காதல் உருவாக பொருத்தமான இடமா இது ?

''அளவுக்கு மீறி ஆசைப்படாத ஒரே ஜீவராசி எறும்பாத்தான் இருக்கும்னு எப்படி சொல்றீங்க ?''
''வீட்டிலே சீனி சிந்தினாலே எறும்பு வந்திடுது ,ஸ்வீட் கடையிலே எறும்பையே பார்க்க முடியலையே !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

காதல் உருவாக  பொருத்தமான இடமா இது ?

தின 'சிரி ' ஜோக்!

''கெமிஸ்ட்ரி லேப்புக்கு வந்தும், அவளையே ஏண்டா சைட் அடிச்சுக்கிட்டே இருக்கே ?''
''எனக்கும் அவளுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகணும்னுதான் !''




சிரி'கவிதை!தேவைப் பட்டால் கொலையும் செய்வான் ..

மலருக்கு துளி சேதமின்றி 
துளித்துளியாய் தேனை சேர்ப்பது  தேனீ ...
புகை போட்டு அதை விரட்டி தேனை 
புட்டியில் அடைத்து காசு பார்ப்பவன் மனிதன் !
.

26 comments:

  1. காதலுக்கும் கெமிஸ்ட்ரிக்கும் உறவா?
    காதலுக்கு ஓமோன் சுரப்பு போதாதா?

    ReplyDelete
    Replies
    1. அதானே ,புதுசா என்னாய்யா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகலேன்னு சொல்றீங்க ?
      நன்றி

      Delete
  2. அட ஆமாம்
    புதுவிதமான விளக்கத்தை ரசித்தேன்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இந்த காலத்து பய பிள்ளைங்க புதுசு புதுசா சொல்றாங்க, 'கணக்கு' பண்றேன்னு சிம்பிளா சொல்ல வேண்டியது தானே ?
      நன்றி

      Delete
  3. Replies
    1. கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகலேன்னு பொண்ணுங்க முகத்திலே ஆசிட்டை ஊற்றுவதும் இதுக்குதான் போலிருக்கு !
      நன்றி

      Delete
  4. எதுவும் அளவோடு இருந்தால் "இனிய" சுவை தான்...

    ReplyDelete
    Replies
    1. எதுவும் என்று நீங்க எதை சொல்றீங்க ?இதென்ன புது டாஸ்மாக் அளவுகோல் மாதிரி தெரியுதே !
      நன்றி

      Delete
  5. ஜி.. இன்றைய புதிய பகிர்வு :

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/06/Duty-is-Joy.html

    ReplyDelete
    Replies
    1. உங்களை மாதிரி சிலர் இருப்பதால் தான் திருக்குறள் கருத்துக்களை படிக்க முடிகிறது ,தொடரட்டும் உங்கள் இலக்கியப் பணி!
      நன்றி

      Delete
  6. Replies
    1. நச்சென்று ஒரே வார்த்தையில் சொன்னதுக்கு நன்றி !

      Delete
  7. அளவுக்கு மீறி ஆசைப்படாத ஜீவராசி நான் தான்னு இல்ல நினைச்சுக்கிட்டு இருந்தேன்!!!!!

    ReplyDelete
    Replies
    1. இதே வார்த்தையை என் இல்லாளிடம் சொன்னதற்கு 'உங்க மூஞ்சுக்கு நான் டூ மச்'என்று அடக்கமான பதில் வந்தது !
      நன்றி

      Delete
  8. கலக்கல் ஜோக்ஸ்! இரண்டுமே அருமை!

    ReplyDelete
  9. சிரிகவிதை அருமை பகவான்ஜி நம்ம கடைப்பக்கம் ஆளையே காணோம் தேன் எடுக்கிற பிஸியோ.....

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் ஒன்றுமில்லை தென்னாட்டில் இருந்து வடநாட்டுக்கு சில வாரங்கள் டூர் போற பிசியில் உள்ளேன் ! இதோ உங்க பேட்டைக்கு வந்துட்டேன் !
      நன்றி

      Delete
  10. அப்ப மத்த சப்ஜெக்ட் பீரியட்ஸ் எல்லாம் எப்படி?......

    ReplyDelete
    Replies
    1. மோடி அரசின் எதிர்காலம் பற்றியா சிந்திங்கப் போறாங்க ?எப்படி 'கடலை 'போடலாம் என்கிற யோசனைதானே இருக்கும் ?
      நன்றி

      Delete
  11. யோசிக்கவைத்தது எறும்பு ..ஹா.ஹா..

    ReplyDelete
  12. கெமிஸ்ற்றி லாப் மார்க் வருதோ இல்லையோ....கண்டிப்பா மத்த கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகிடும் போல!!!! ஜி!

    சிரி கவிதை மிகவும் அருமை...சிந்திக்க வைத்த ஒன்று!

    ReplyDelete
  13. கெமிஸ்ட்ரி நல்லாவே வொர்க் அவுட் ஆயிடும்! :)))

    ரசித்தேன்.

    ReplyDelete