1 June 2015

இந்த படத்திலும் கமல் 'லிப் லாக் ' சீன் இருக்குமா :)

---------------------------------------------------------------------------------

வியாபாரியிடம் மனித நேயத்தை எதிர்பார்க்கலாமா :)
                 ''   என்ன கேட்டார்னு  அந்த ஆட்டோ டிரைவரை  டாக்டர் அடிச்சு விரட்டச் சொல்றார் ?''
                  ''என் வண்டியில் எழுதிப் போட்டுள்ள மாதிரி உங்க கிளினிக் வாசலிலும் 'பிரசவத்துக்கு இலவசம் 'னு  எழுதிப்  போட்டா என்னவாம்னு கேட்டாராம் !''
                         

இந்த படத்திலும்  கமல் 'லிப் லாக் ' சீன் இருக்குமா :)

            '' கமல் சின்னப் பையனா இருக்கும் போது நடிச்ச  களத்தூர் கண்ணம்மா 
படத்தோட பார்ட் 2 வந்தால் என்ன பெயர் வைக்கலாம் ?''
              ''பெருங்களத்தூர் கண்ணம்மா !''


சோமலிங்கம் மகன் மாரின்னா ..சோமாறின்னு கூப்பிடலாமா ?

                ''ஏண்டா பாலு ,உன்னை ஸ்கூலில் சேர்க்கும் போதே 

,உங்கப்பா சேவியர் ,உன்பேரை சே .பாலுன்னு  தமிழ்லே  பதிஞ்சது 

நல்லதா போச்சா ,ஏன்  ?''

                 ''ஆமா ...X .பாலுன்னா ,உன்னைப்போல அகராதிகள் 


..அப்பன் பெயர் தெரியாதான்னு கேட்டு இருப்பீங்களே !''


சிலர் நெஞ்சு முழுவதும் நஞ்சு ...காரணம் ?
எல்லோருக்கும் பிறப்பின்போதே ...

வெளியே தெரியும் நஞ்சுக்கொடி வெட்டப்பட்டுவிடும் !

ஒரு சிலருக்கு மட்டும் ...

நஞ்சுக் கொடி நெஞ்சுக்குழி வரை 

வேர்விட்டு பரவிவிடுமோ ?

  1. Jeevalingam KasirajalingamSun Jun 01, 03:01:00 a.m.
    வயிற்றில தான்
    தொப்புள் கொடி
    நெஞ்சில வேர்விடுவது
    காதல் கொடியோ?




    1. ஆஹா ,இது அதை விட அருமையாய் இருக்கே !

  2. Chokkan SubramanianSun Jun 01, 03:26:00 a.m.
    அந்த பார்ட்-2வில், நீங்கள் ஜெமினி கணேசனாக நடிக்கப் போகிறீர்களாமே, அப்படியா!!!




    1. ஜோக்காளி கணேசன் என்று வேண்டுமானால் நடிக்கிறேன் ,அதுக்கு முன்னாலே, அந்த டேட்டில் பாலிவுட் கால்ஷீட் கொடுத்து இருக்கிறேனா என்று செக் பண்ணிக்கிறேன் !
    2. Chokkan SubramanianMon Jun 02, 04:37:00 p.m.
      "//பாலிவுட் கால்ஷீட்//" - இதெல்லாம் உங்களுக்கு ரொம்ப டூ,த்ரீ மச்.
    3. கூட நடிக்கிற ஹீரோயின் யார்ன்னு தெரிஞ்சா ,'டூ மச்'சுக்கு பதில் மச்சமுள்ள ஆள்தான்னு நினைப்பீங்க !

  3. King RajSun Jun 01, 06:42:00 a.m.
    வாச ரோஜா வாடிப்போலாமா? என்பதை இப்படிச்சொன்னார்களாம். "வா சரோஜா வாடிப் போலாமா?" .அந்த கதையா இல்ல இருக்கு சோமாறி x எல்லாம்.!






    1. அடடா ,இந்த கதை அருமையா இருக்கே !
      ஜீவலிங்கம் காசி ராஜலிங்கம் கவிதை பாடுகிறார் ,நீங்கள் கதை சொல்லுறீங்க ..நான் கொடுத்துதான் வைத்திருக்கணும்,இப்படிப் பட்ட சிந்தனை சிற்பிகளின் கருத்துரை பெற !

      1. கோவை ஆவிSun Jun 01, 07:46:00 a.m.
        //சோமலிங்கம் மகன் மாரின்னா ..சோமாறின்னு கூப்பிடலாமா //

        அப்போ குப்புசாமியின் மகன் ரங்கன் குரங்கனா? ;-)




        1. திண்டுக்கல் தனபாலன்Sun Jun 01, 09:23:00 a.m.
          அட...!
        2. ஒண்ணு மட்டும் நல்லாத் தெரியுது ,யார் எந்த பெயரை மகனுக்கு வைக்க கூடாது என்று !

          அட போடும் அளவிற்கு ,குரங்கன் நல்லாத்தான் இருக்கு ஆவி ஜி !

          1. Mythily kasthuri renganSun Jun 01, 08:44:00 a.m.
            என் கிளாஸ் ல அம்மு தேவி என்றொரு மாணவி , அவளை பசங்க எல்லாம் அ மூதேவி என்றே கூப்பிட்டு வம்பிளுப்பார்கள்:))) நலமா பாஸ்?




            1. Bagawanjee KASun Jun 01, 10:09:00 a.m.
              மூதேவி என்றாலும் அருமை ...நீயா நானாவில் சொல்வது போல் ..அடுத்து அடுத்து என்று சொல்லத் தோன்றுகிறது !

              நலத்திற்கு என்ன குறைச்சல் ?தினசரி மொக்கைப் போட்டு ஐநூறு பேரின் கழுத்தை அறுப்பதில் இருந்தே தெரியவில்லையா ?









24 comments:

  1. 1. அதுசரி, கட்டுப்படியாகுமா!

    2. பெருங்களத்தூர்ப் பொன்னம்மா!

    3. கு.ரங்கன் போலவா!

    4. ம்ம்ம்ம்...

    ReplyDelete
  2. வியாபாரம் - 100% உண்மை ஜி...

    ReplyDelete
  3. 1.அப்படின்னா ,வாரத்துக்கு ஒண்ணுஇலவசம்னு சொல்லலாமே :)
    2.பொருத்தமான பெயர்தான் :)
    3.உண்மையில் யாராவதுஅந்த பெயரில் இருக்கிறார்களா :)
    4.நெஞ்சே,நஞ்சாவதேனோ :)

    ReplyDelete
  4. திண்டுக்கல் தனபாலன்ஜி >>
    கல்வியே வியாபாரம் ஆனபின் அது மட்டுமென்ன :)

    ReplyDelete
  5. வியாபாரியான டாக்டரிடம் மனித நேயத்தை எப்படி எதிர்பார்க்க முடியாதுதான்.

    ReplyDelete
  6. பெயர்களும் புனைப் பெயர்களும் என்றே பதிவிட்டிருக்கலாம். ரசித்தேன்

    ReplyDelete
  7. 01. அப்புறம் எப்படி ? அவரு அடுத்த பில்டிங் கட்டுறது ?
    02. பார்ட் 3 வந்தால் ? பெருங்குளம் கங்கம்மா’’னு வைக்கலாமோ ?
    03. சும்மா இருந்தவனை அகராதினு சொல்லுதே அகராதிப்பயபுள்ள...
    04. கவி அருமை ஜி

    ReplyDelete
  8. G.M Balasubramaniam ஜி >>>
    புனைப் பெயர்கள் கூட இவ்வளவு ரசிக்கும் படியா இருக்கே :)

    ReplyDelete
  9. நகைசுவையோடு அதென்னே சந்தேகம் நஞ்சுக்கொடி?

    ReplyDelete
  10. KILLERGEE ...உங்க பெயருக்கு பின்னால் எப்படி அடுத்த ஜி யை சேர்க்கிறது:)>>>
    1.ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்கிறது ?..இதையும் சேர்த்துக்குங்க :)
    2.அது ,புல்லுக்கட்டு பொன்னம்மா மாதிரி கில்மா படம் ஆகாமல் போனால் சரிதான் :)
    3.பயபுள்ள நல்லா போட்டு வாங்குறானா :)
    4.நெஞ்சு கொதித்துப் போய் எழுதியதாச்சே :)

    ReplyDelete
  11. சரியாச் சொன்னீங்க பகவானே..
    நெஞ்சுக்குள்ளே சிலருக்கு நஞ்சுக்கோடிதான்.

    X பாலு, நல்ல கற்பனை..

    God Bless You

    ReplyDelete
  12. அப்புறம் டாக்டரும் ஆட்டோ ஓட்டவேண்டியது தான் :))) இல்ல பாஸ்!

    ReplyDelete
  13. சிலர் நெஞ்சு முழுவதும் நஞ்சு...
    காரணம் கூறும் பாவரிகளோ
    நன்று நன்று

    ReplyDelete
  14. வெட்டிப் பேச்சு >>>
    முல்லைக் கொடியை ரசிக்கலாம் ,நஞ்சுக் கொடியை எப்படி ......:)

    முந்தைய பெயர் பாலு ,இன்னைக்கு வேறு பெயர் என்றும் அர்த்தம் வருதே :)

    ReplyDelete
  15. Mythily kasthuri renganji>>
    டாகடர் எதுக்கு ஆட்டோ ஓட்டப் போறார் ?ஆட்டோ பயோப்சி சென்டர் வேண்டுமானால் ஆரம்பிப்பார் :)

    ReplyDelete
  16. பாவம் டாக்டர்! ஆட்டோக்கரன் குறும்பு!

    ReplyDelete
  17. புலவர் இராமாநுசம் அய்யா >>
    இதுக்கு டென்சன் ஆகிற டாக்டர் ,எதுக்கும் டென்சன் ஆகக்கூடாது நமக்கு என்று அறிவுறுத்துகிறார் :)

    ReplyDelete
  18. ஹஹஹ் அட ! லிப் லாக் தொடருது!!!

    பின்னூட்டங்கள் செம.....ஜி...எல்லாமே ரசித்தோம் ஜி.....

    பழைய பதிவுகளுக்கும் வருகின்றோம்....கொஞ்சம் வேலைப் பளு...அதான் வர முடியல...

    ReplyDelete
  19. துளசிதரன் ஜி >>
    லிப் லாக் என்றால் சும்மாவா :)

    எனக்கே 24 மணி நேரம் போதலே,பன்முகத் திறமைக் கொண்ட உங்களுக்கு வேலைப் பளு இருப்பது தெரிந்ததுதான் :)

    ReplyDelete
  20. வலிப்போக்கன் >>>
    உங்களின் கேள்வியும் பதிலுமான கருத்தை ரசித்தேன் :)

    ReplyDelete
  21. மது ஜி >>
    நஞ்சுக் 'கொடி'யை பிடிக்கக் கூடாதா:)

    ReplyDelete
  22. வணக்கம்
    இந்த காலத்தில் கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் இடையில் மனித நேயம் இல்லாமல் எத்தனை குடும்பங்கள் நடுத் தெருவில்...
    என்னவென்று வியாபாரியிடம் மனித நேயம் இருக்குமா....
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  23. ரூபன் ஜி >>
    கணவன் மனைவிக்குள் மனித நேயம் இல்லையென்றால் வேறெங்கே தேடுவது :)

    ReplyDelete