20 June 2015

காதல் வந்தால் கவிதை எப்படி:)

 அதெல்லாம் அந்த காலம் :)            

           

         ''ஒலி கேட்டேன்  வழி கொடுத்தேன்   


கொலுசு சத்தம்னு  நான் எழுதிய கவிதை  


,ரொம்ப காலத்துக்கு முந்தி எழுதினதான்னு  


ஏன் கேட்கிறே ?''  

             

          ''இப்போதான் ஏர் ஹாரன் அடித்தாலும் 


உன் காதுலே விழ மாடேங்குதே !'' 


வீட்டுச் சண்டையை நாட்டுச் சண்டை ஆக்கலாமா ?

            ''அரசே,பக்கத்தில்  இருப்பது எல்லாம் நட்பு  நாடுகளாச்சே ,வம்புச் சண்டைக்கு ஏன்  போகணும் ?''
                ''அந்தப்புரத்தில் நடக்கிற சக்களத்தி சண்டையை காணச்  சகிக்கலையே !''



காதல் வந்தால் கவிதை எப்படி?

மண்ணில் விழும் விதைகள் யாவும் முளைப்பதில்லை ...
காதலில் விழும் மனதில் எல்லாம் கவிதை முளைக்கிறதே ,எப்படி ?




  1. அம்பாளடியாள் வலைத்தளம்Fri Jun 20, 02:42:00 a.m.
    ஹலோ மைக் செற்றிங் ஹலோ ...ஹலோ ..ஹலோ ..நான் பேசுறது கேக்குதா ?..
    பகவான் ஜீ எங்க இருக்கீங்க ?..உங்க ஆத்துக்கார அம்மா உருட்டுக் கட்டைகளோடு
    ஓடி வரும் செய்தி தெரியுமா தெரியாதா ?..ஐயோ பாவம் :))))))))))))))) நகைச் சுவை இல .2:)




    1. Thulasidharan V ThillaiakathuSun Jun 22, 08:55:00 a.m.
      ஹாஹா சூப்பர் பின்னூட்டம்! சகொதரி! ரசித்தோம்!
    2. ஹல்லோ ஹல்லோ ,இரண்டுக்கு நாளுக்கு பின் இப்பத்தான் உங்க பேச்சு கேட்டது...
      என்னுடன் சுற்று பயணத்தில் இருந்ததால் என் இல்லாளுக்கு பூரிக்கட்டை கண்ணில் படாமல் போய்விட்டது தப்பித்தேன் !

      1. வெங்கட் நாகராஜ்Sun Jun 22, 05:01:00 p.m.
        ரசித்தேன்..

        காதலில் விழுந்தாலே கவிதை மழை கொட்டுகிறதே! :)))




        1. காதல் விதையின் வீரியம் ஜாஸ்தி போலிருக்கு !


31 comments:

  1. சும்மா கிடந்த உள்ளத்தில (மனத்தில)
    அன்பு (காதல்) வந்து குந்தினால்
    என்னென்னமோ எண்ணத் தோன்றும்...
    எண்ணிய எல்லாவற்றையும்
    காதலன்/காதலி இடம் சொல்ல முடியாமல்
    உள்ளத்தில (மனத்தில) வைச்சிருக்க முடியாமல்
    துன்புறும் வேளை
    கவிதை எழுதி மகிழ்வதில் தப்பில்லையே!

    ReplyDelete
  2. ச்சே... பாவங்க....!

    இதுக்கு அதுவே தேவலாம்னு நினைக்கறார் போல!

    இது ஈஸிங்க... அதான்!

    ReplyDelete
  3. உண்மைதான் ஜீ... காதல் மனதில்தான் கவிதை முளைக்கும்.

    ஆமா.. இப்போதெல்லாம் கவிதையில பின்றீங்களே... மனசுல காதல் ஏரோட்டம் ஏதாவது...?

    ReplyDelete
  4. Yarlpavanan KasirajalingamSat Jun 20, 05:26:00 a.m.
    சும்மா கிடந்த உள்ளத்தில (மனத்தில)
    அன்பு (காதல்) வந்து குந்தினால்
    என்னென்னமோ எண்ணத் தோன்றும்...
    எண்ணிய எல்லாவற்றையும்
    காதலன்/காதலி இடம் சொல்ல முடியாமல்
    உள்ளத்தில (மனத்தில) வைச்சிருக்க முடியாமல்
    துன்புறும் வேளை
    கவிதை எழுதி மகிழ்வதில் தப்பில்லையே!>>>>

    சொல்லத்தான் நினைக்கிறார்கள் ,வாயில் இருந்து வார்த்தை வராமல் கவிதையாய் கொட்டுகிறார்களோ:)

    ReplyDelete
  5. விரைவில் உங்கள் கவிகளையும் எதிர்ப்பார்க்கிறேன் ஜி...

    ReplyDelete
  6. கொலுசு சத்தமெலாம் கேக்குதா ? அப்ப சரிதான். விரைவில் கவிதையை எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  7. 01. காலம் மாறும்போது கவிதைகளும் மாறனுமோ....?
    02. இதுக்காக அடுத்த நாட்டுடன் போரா ?அக்கபோராவுல இருக்கு.
    03. மண்ணில் விழுந்தவை வித்துக்கள் இல்லாத செத்தவைகளாக இருக்குமோ ?

    ReplyDelete
  8. அப்ப அடுத்து காதல் கவிதை மழை தான் பொலும், வாழ்த்துக்கள், எவ்வளவு முயற்சித்தும் தங்கள் தளம் இரவு கிடைக்கவேயில்லை எனக்கு, இப்ப தான் வந்தது.

    ReplyDelete
  9. காதலில் விழும் மனதில் எல்லாம் கவிதை முளைக்கிறதே ,எப்படி ?...எப்படி???? அது எப்படி???

    ReplyDelete
  10. காதல் வந்தால் கவிதை - தத்துவம் ஜி!
    த ம 9

    ReplyDelete
  11. ஆகா அலும்பு தாங்கலையே ...
    நகைப்பணி தொடரட்டும்
    தம +

    ReplyDelete
  12. கவிதைப் பதிவுகளுக்கு முன்னோடியா. கொலுசு சப்தம் தேவலை மெட்டி சப்தமானால்.....

    ReplyDelete
  13. ஸ்ரீராம்.Sat Jun 20, 05:59:00 a.m.
    ச்சே... பாவங்க....!

    இதுக்கு அதுவே தேவலாம்னு நினைக்கறார் போல!

    இது ஈஸிங்க... அதான்!>>>.

    இதுவும் காலம் செய்த கோலமா :)

    அந்தளவு மகாராணிகள் நோகடிச்சிட்டாங்க போலிருக்கே :)

    கவிதை எழுதுவது அவ்வளவு ஈஸியா:)

    ReplyDelete
  14. அதென்னவோ காதல் வந்தால்
    எல்லாருமே கவிதை எழுதுகினம் தான்
    முகநூலில் பாருங்களேன்..

    ReplyDelete
  15. வெட்டிப்பேச்சுSat Jun 20, 07:01:00 a.m.
    உண்மைதான் ஜீ... காதல் மனதில்தான் கவிதை முளைக்கும்.

    ஆமா.. இப்போதெல்லாம் கவிதையில பின்றீங்களே... மனசுல காதல் ஏரோட்டம் ஏதாவது...?
    Reply>>>
    கவிதை முளைக்கும் சரி ,நீண்ட காலம் பிழைக்குமா :)
    எல்லாம் அந்த கால காதல்தான் ..ஹும்,ஏரோட்டமாவது ,தேரோட்டமாவது :)

    ReplyDelete
  16. திண்டுக்கல் தனபாலன்Sat Jun 20, 09:16:00 a.m.
    விரைவில் உங்கள் கவிகளையும் எதிர்ப்பார்க்கிறேன் ஜி...
    Reply>>>
    அந்த விஷப்பரீச்சை எல்லாம் தேவையா :)

    ReplyDelete
  17. ஹாஹாஹா! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. சசி கலாSat Jun 20, 09:48:00 a.m.
    கொலுசு சத்தமெலாம் கேக்குதா ? அப்ப சரிதான். விரைவில் கவிதையை எதிர்பார்க்கிறோம்.
    Reply>>>.
    இந்த வயசுலே கொலுசு சத்தம் கேட்குதுன்னு வீட்டுக்கு தெரிஞ்சா ,எந்த சத்தமும் கேட்காதபடி செய்து விடுவார்களே :)

    ReplyDelete
  19. KILLERGEE DevakottaiSat Jun 20, 09:55:00 a.m.
    01. காலம் மாறும்போது கவிதைகளும் மாறனுமோ....?
    02. இதுக்காக அடுத்த நாட்டுடன் போரா ?அக்கபோராவுல இருக்கு.
    03. மண்ணில் விழுந்தவை வித்துக்கள் இல்லாத செத்தவைகளாக இருக்குமோ ?
    Reply>>>
    1.காதல் மாறாமல் இருந்தால் சரிதானே :)
    2.ராணியாரிடம் ராஜா டக் அப் வார் நடத்தியும் ஜெயிக்க முடியலே போலிருக்கே :)
    3.காக்கா வயிற்றிலே ஜீரணமாகி விழுந்த வித்துக்களாய் இருக்கும் :)

    ReplyDelete
  20. mageswari balachandranSat Jun 20, 10:58:00 a.m.
    அப்ப அடுத்து காதல் கவிதை மழை தான் பொலும், வாழ்த்துக்கள், எவ்வளவு முயற்சித்தும் தங்கள் தளம் இரவு கிடைக்கவேயில்லை எனக்கு, இப்ப தான் வந்தது.
    Reply>>>
    மும்பையில் தொடர்ந்து பெய்த மழை போல், கவிதை மழை கொட்டித் தீர்க்காமல் இருந்தால் சரிதானே :)
    அதை ஏன் கேக்குறீங்க .மறுமொழி பட்டன் வேலை செய்யாததால் ,என் பதிவில் மாற்றம் செய்து மீண்டும் வெளியிட்டேன் ,அதனால் தமிழ்மணத்தில் தலைப்பு இல்லாமல் பதிவு தெரிந்தது ,அப்புறம் எப்படியோ சரியாகி விட்டது ,இருந்தாலும் மறுமொழி பட்டன் மக்கர் ஆனது ஆனதுதான் :)

    ReplyDelete
  21. வலிப்போக்கன் -Sat Jun 20, 02:48:00 p.m.
    காதலில் விழும் மனதில் எல்லாம் கவிதை முளைக்கிறதே ,எப்படி ?...எப்படி???? அது எப்படி???
    Reply>>.
    சமைஞ்சது எப்படிங்கிற பாட்டு மாதிரி என் கிட்டையே திருப்பி கேட்டால் எப்படி ,எப்படி :)

    ReplyDelete
  22. S.P. Senthil KumarSat Jun 20, 06:45:00 p.m.
    காதல் வந்தால் கவிதை - தத்துவம் ஜி!
    த ம 9
    Reply>>>.
    இதுவே தத்துவம் தானா :)

    ReplyDelete
  23. Mathu SSat Jun 20, 08:12:00 p.m.
    ஆகா அலும்பு தாங்கலையே ...
    நகைப்பணி தொடரட்டும்
    Reply>>>.
    அலும்பு ஓவர் ,குசும்பு தொடரும் :)

    ReplyDelete
  24. G.M BalasubramaniamSat Jun 20, 08:39:00 p.m.
    கவிதைப் பதிவுகளுக்கு முன்னோடியா. கொலுசு சப்தம் தேவலை மெட்டி சப்தமானால்.....
    Reply>>>
    மெட்டிச் சத்தம் வீட்டுக்காரியின் காலில் இருந்து வருவதை மட்டும் ரசித்தால் பிரச்சினை இல்லை :)

    ReplyDelete
  25. kovaikkaviSat Jun 20, 11:29:00 p.m.
    அதென்னவோ காதல் வந்தால்
    எல்லாருமே கவிதை எழுதுகினம் தான்
    முகநூலில் பாருங்களேன்..
    Reply>>>
    பார்த்தேன் ,அவர்களை விட கவிதை அழகாய் தெரிகிறது :)

    ReplyDelete
  26. ‘தளிர்’ சுரேஷ்Sun Jun 21, 01:18:00 p.m.
    ஹாஹாஹா! வாழ்த்துக்கள்!
    Reply>>
    கவிதைக்கு சொல்லி இருக்க மாட்டீர்கள் என்று உறுதியாய் நம்புகிறேன் :)

    ReplyDelete
  27. காது கேட்“காது“ ஆகிவிட்டதுபோல...!

    ReplyDelete
  28. ““““மண்ணில் விழும் விதைகள் யாவும் முளைப்பதில்லை ...
    காதலில் விழும் மனதில் எல்லாம் கவிதை முளைக்கிறதே ,எப்படி ?“““““

    அது க“““““விதை““““ ஆயிற்றே பகவானே!!! :)

    ReplyDelete
  29. ஊமைக்கனவுகள்.Sun Jun 21, 06:38:00 p.m.
    காது கேட்“காது“ ஆகிவிட்டதுபோல...!
    Reply>>>
    'கேட்'டுக்கு எதுக்கு காது :)

    ReplyDelete
  30. ஊமைக்கனவுகள்.Sun Jun 21, 06:40:00 p.m.
    ““““மண்ணில் விழும் விதைகள் யாவும் முளைப்பதில்லை ...
    காதலில் விழும் மனதில் எல்லாம் கவிதை முளைக்கிறதே ,எப்படி ?“““““

    அது க“““““விதை““““ ஆயிற்றே பகவானே!!! :)
    Reply>>>
    சரியான விடையை சொல்லி முதல் பரிசினைத் தட்டிச் செல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  31. வணக்கம்
    ஜி
    பக்குவப்படவில்லையோ..... ... அதனால் கேட்காமல் இருக்கலாம் மற்றவைகளை இரசித்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete