19 June 2015

பூக்களுக்கும் பிடிக்கும் என்னவளை :)

--------------------------------------------------------------------------------

நோயாளிக்குத் தான்  பேச்சு வராது ,டாக்டருக்குமா ?

           ''மூணு  மாசத்திலே எட்டு லட்ச ரூபாய் செலவு செய்ஞ்சும் உங்கப்பாவுக்கு பேச்சு வரலேன்னா ,டிஸ்சார்ஜ் செய்யச் சொல்ல வேண்டியது தானே ?''
          ''மூச்சு இருக்கிறவரைக்கும் டிஸ்சார்ஜ் என்கிற பேச்சுக்கே இடமில்லைன்னு டாக்டர் சொல்றாரே !''

ஆமை புகுந்தா வீட்டிற்கும்,ஒவ்வாமை புகுந்தா உடம்புக்கும் ஆகாது !

          ''அலர்ஜிங்கிற வார்த்தையை கேட்கும் போதெல்லாம் இரத்தம் கொதிக்குது,டாக்டர் !''
            ''அலர்ஜியே  அலர்ஜி ஆகுதா ,ஏன் !''
      ''ஒவ்வாமையை ஏன் அலர்ஜின்னு மரியாதையா சொல்லணும் ?''


பூக்களுக்கும் பிடிக்கும் என்னவளை !

நிஷகந்திப் பூவே ...
என்னவள் உன்னை சூடிக் கொள்ளவில்லை என்ற கோபமா ...
நடுஇரவில் மலர்ந்து விடிவதற்குள் வாடி விடுகிறாயே !

  1. அன்றைய பேச்சு, இன்றைய உண்மை

    ஆமை புகுந்த வீடும் அரசியல்வாதி புகுந்த ஊரும் வெளங்காது



    1. ஆமை நுழையாத வீடிருக்கு ,அரசியல்வாதி நுழையாத ஊருக்கு எங்கே போறது :)


30 comments:

  1. 01. அதானே பாடி ஆனால்தானே வெளியே விட முடியும்
    02. இது புதுசாவுல இருக்கு.
    03. அவள் பேரு நிஷாந்தியோ......

    ReplyDelete
    Replies
    1. 1.அப்போதும் பாக்கி மூணு லட்சத்தையும் கட்டினால்தானே பாடியை தூக்க முடியும் :)
      2.ஒவ்வாமைன்னு தமிழ்லே சொன்னா புதுசாவா இருக்கு :)
      3.பூவை விட இந்த பெயர் நல்லாயிருக்கே :)

      Delete
  2. மூன்றையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மூன்றடுக்கு நன்றி (இரட்டிப்பு நன்றி என்பதைப் போல :)

      Delete
  3. Replies
    1. கமல் டயலாக் மாதிரி இருக்கே :)

      Delete
  4. டாக்டர் ஒரு "முடிவோட" தான் இருக்கார்...!

    ReplyDelete
    Replies
    1. டாக்டர் இவரை நம்பித்தானே மூணாவது மாடி கட்ட ஆர்மபித்துள்ளார் :)

      Delete
  5. Replies
    1. நிசகந்தி பூவின் ரகசியத்தைதானே :)

      Delete
  6. இப்படி கூட ஓர் ஒவ்வாமையா?

    ReplyDelete
    Replies
    1. அவர் தமிழ் விரும்பி என்பதால் வந்திருக்குமோ :)

      Delete
  7. தலைப்பு ரசிக்கும் படியாக இருக்குங்க.

    ReplyDelete
    Replies
    1. அது மட்டும்தானா ,அவ்வ்வ்:)

      Delete
  8. ஒ,,,,,,,,,,, அந்த பேச்சா, அனைத்தும் அருமை,

    ReplyDelete
    Replies
    1. டாக்டர் அகராதியில் இல்லாத ஒரு வார்த்தை ...டிஸ்சார்ஜ் :)

      Delete
  9. பெண்ணே ஒரு பூதானே!
    ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. அப்படி சொல்லப் படாது ,பெண்ணுரிமைப் போராளிகளுக்கு கோபம் வரும் :)

      Delete
  10. அருமையான நகைச்சுவைகள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை,ஜோக்காளியின் மொக்கைகள் யாருக்கும் ஒவ்வாமை ஏற்படுத்தவில்லை :)

      Delete
  11. அதானே ஒவ்வாமைக்கு ஏன் மரியாதைஇன்னும் செலவு செய்தாலும் கடைசியில் பாடிதான் கிடைக்கும் போல.நிஷாகந்திப்பூவுக்கு இன்னொரு பெயர் ப்ரம்ம கமலம்

    ReplyDelete
    Replies
    1. பிரம்ம முகூர்த்த நேரத்தில் பூப்பதாலா :)

      Delete
  12. பூக்களுக்கும் பிடிக்கும் என்னவளை !---தோசையை மாற்றி போடுவது இதுதானோ..???

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் சொல்லாமோ:)

      Delete
  13. நிஷகந்திப் பூவே .
    நானும் இந்தப் பூ பெயர் கேள்விப்பட்டுள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. கூகுளில் படத்தைப் பார்த்து மகிழலாமே :)

      Delete
  14. இது போன்று எப்போதும் எங்களை சிரிக்க வைப்பதற்கு நன்றி ஜி!

    ReplyDelete
    Replies
    1. இது கூட உங்களுக்கு ஒவ்வாமை ஆகிவிடாமல் ,பார்த்துக்க வேண்டியது என் கடமை :)

      Delete
  15. படித்தேன் முற்றும் சிரித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் முற்றும் என்று சொன்னாலும் நான் விடுவதாய் இல்லை :)

      Delete