29 June 2015

*ஐஸ்வர்யாவை அறிமுகம் செய்த சங்கரை தெரியும் ,லங்கரை தெரிஞ்சுக்கலாமே !

----------------------------------------------------------------------------

     இளவயதில் கழுத்து வலி  வரக் காரணம் :)                            
                 '' டாக்டர் என் கிட்டே ஏன் இந்த போட்டோவைக் கொடுக்கிறீங்க ?'

                                                                         
          ''இந்த பயபிள்ளைங்களுக்கு  கழுத்து வலிக்குமா வலிக்காதான்னு தெரிஞ்சுக்கத்தான் !''     

*ஐ ஸ் வ ர் யா வை அறிமுகம் செய்த சங்கரை தெரியும் ,லங்கரை தெரிஞ்சுக்கலாமே !

வட இந்திய டூர் - பாகம் 2
    முந்தைய பதிவில் வாகா பார்டர் சென்று பார்த்தோம் ,அடுத்ததா நாம செல்ல இருப்பது அதே பஞ்சாப்பில் இருக்கும் பொற்கோவிலுக்கு ! .
சீக்கியவரின் புனித தலமான அங்கே எல்லாரையும் அனுமதிப்பார்களா என்ற கேள்விக்கு கிடைத்த பதில் ...சாதி மதம் ,ஏழைப் பணக்காரன் என்று எந்த  பேதமின்றி அனைவருக்கும் அனுமதி உண்டு என்றதால் ...இதோ இந்த முன் வாசல் வழியாக உள்ளே நுழைக்கிறோம் ...


உள்ளே நுழைந்ததும் கண்ணைப் பறிக்கும் தகதக தங்க நிறத்தில் கண்ணில் படுகிறது பொற்கோவில் ...


தெப்பக் குளத்தின் நடுவே கோவிலில் ஒரு பக்கம் மட்டுமே வாசல் .இரண்டு வரிசையாக மக்கள் ...ஒரு வரிசை மட்டும் வேகமாய் உள்ளே போய்க் கொண்டு இருந்ததால் அந்த வரிசையில் நான் நுழைந்தேன் ...
அங்கிருந்த தாடி வளர்த்து இடுப்பில் குர்பான் கத்தியுடன்இருந்த சீக்கிய பக்தர் ,என்னை அடுத்த வரிசைக்கு போகச் சொன்னார் ..காரணம் ,நான் நின்றது சீக்கியர்களுக்கு மட்டுமே உண்டான வரிசையாம் ...ஜாதி மத பேதம் இல்லாத இடத்தில் இப்படியுமா என்று பட்டது ..நம் கோவில் கர்ப்பக்கிரகத்தில் நுழைய வேறு மதத்தவர்களுக்கு அனுமதியே இல்லையே ..அதுக்கு இது பரவாயில்லை என்று மனதைத் தேற்றிக்கொண்டு உள்ளே நுழைந்தேன்...மூன்று மாடி அமைப்புடைய அந்த கோவிலில்  சுத்தம் என்றால் அப்படி ஒரு சுத்தம் ...ஒரு சிலர் நடக்கக்கூட விடாமல் தரையை சுத்தம் செய்வதில் குறியாய் இருந்தார்கள் ..அது அவர்களுக்கு விதிக்கப் பட்ட தண்டனை என்றும் சொன்னார்கள்  ,இப்படியும் நேர்ந்து கொண்டு சுத்தம் செய்வார்கள் என்றும் சொன்னார்கள் ...
உள்ளே எங்கேயும் உருவச் சிலை வழிபாடு இல்லை ,மத குருமார்கள் புனித நூலை உள்ளதை ஓதிக் கொண்டு இருந்தார்கள் ,இருவர் பாடிக்கொண்டிருந்த  பஜன் கீர்த்தனைகள் பொற்கோவில் வளாகம் முழுவதும் ஒலித்துக் கொண்டே இருந்தது !
இதுக்கு அப்புறம்தான் நமக்கு மிகவும் பிடித்த விஷயம் வருகிறது ,வேறொன்றுமில்லை , போஜனம்தான் !அந்த போஜனத்திற்கு பெயர் லங்கர் என்றார்கள் .பொற்கோவில் பின்புறம் இருக்கும் பெரிய ஹாலில் லங்கர் நடந்து கொண்டிருந்தது .லஞ்கரில் பரிமாறப் படுவது  ரொட்டிதான் அதாவது சப்பாத்தி உடன் தாள்மக்கனி.(தாள்மக்கனி என்றதும் எனக்கு வந்த மாதிரி ஹிந்தி நடிகை  மந்தாகினி  உங்கள் நினைவுக்கு  வரமாட்டார்  என்று நம்புகிறேன் ) தினசரி லட்சம் பேருக்கு இங்கே இந்த தானம் கொடுக்கப் படுகிறதாம் லட்சத்தில் ஒருவராக நாங்களும் தின்று களித்தோம் இங்கே ஒரு கண்டிஷன்,ரொட்டியை இரு கைகளை யும் ஏந்தி நாம் வாங்கிக் கொள்ளவேண்டும் ...
           என்றும் அணையாத வள்ளலார் ஜோதியைப் போல் அங்கே பெரிய பெரிய அடுப்புகளில் சமையல் நடந்துக் கொண்டே இருந்தது ,பணியாளர்கள் சிலர்தானாம் ,எல்லா  பணிகளையும் அங்கே வரும் பக்தர்கள் தான் செய்துக் கொண்டிருந்தார்கள் .காய்கறி நறுக்குவது ,எச்சில் தட்டு கழுவுவது போன்ற பல வேலைகளை நேர்ந்து கொண்டுவந்தவர்கள்  செய்வதாக சொன்னார்கள் ..( நம் பக்தர்கள் நேர்த்திக்கடன் என்று மயிரைக் கொடுப்பார்கள் ,ஆட்டை அறுத்து  தின்று 
வயிறு புடைக்க தின்று  தீர்ப்பார்கள் .அவர்கள் செய்வது அல்லவோ உண்மையான நேர்த்திக் கடன் ?)
பயணம் தொடரும் ...

=================================================================================


மஞ்சள் உதவுது திருமணத்திற்கும் திவாலுக்கும் !

            ''அவர் வியாபாரத்திலே திவால் ஆயிட்டார்னு சொன்னாங்க ,இப்ப பொண்ணோட கல்யாணத்தை ஆடம்பரமா செய்றாரே ,எப்படி ?''
             ''அந்த மஞ்சள் நோட்டீசில் சம்பாதித்ததை ,இந்த மஞ்சள் நோட்டீசில் செலவு பண்றார் !''

மக்களைக் காப்பதிலும் பூஜ்ஜியம்தானா ?

 ஒவ்வொரு இயற்கை கோரத்தாண்டவமும் சொல்கிறது ...

முன் எச்சரிக்கை நடவடிக்கையில்... 

இன்னும் இந்தியா 'பூஜ்ஜியம் 'கண்டுபிடித்த 

மிதப்பிலேயே உள்ளது என்பதை !

  1. பொற்கோவில் பற்றிய தகவல்கள் அருமை.

    இங்கு சிட்னியில் குருத்வாரா கோவில் இருக்கிறது. இங்கும் அன்னதானம் என்றால் அப்படி ஒரு அன்னதானம் நடைபெறுகிறது. கோவிலும் ரொம்ப சுத்தமாக இருக்கும். கோவிலுக்குள் நுழையும்போது நாமும் தலையில் அந்த டர்பன் கட்டிக்கொண்டு தான் உள்ளே செல்ல வேண்டும். பெண்கள் துப்பட்டாவை தலையில் போர்த்திக்கொண்டு தான் உள்ளே செல்ல வேண்டும். அந்த துணிகளை எல்லாம் அங்கேயே கொடுப்பார்கள்.




    1. ஆனால் இங்கே மஞ்சள் டர்பன் துணியை பத்து ரூபாய்க்கு வெளியில் விற்பதை வாங்கி அணிந்து சென்றோம் .பெண்களும் அதை அணிய வேண்டுமென்று கூறினார்களே ?
    2. இங்கு பெண்கள் அந்த துப்பட்டாவை தலையில் சுற்றிக்கொண்டால் போதும். இங்கு அந்த துணிகளுக்கு காசு எல்லாம் கிடையாது.
    3. அடடா ,இந்த விஷயம் முன்பே தெரியாமல் பத்து ரூபாயை தண்டச் செலவு செய்து விட்டேனே சொக்கன் ஜி !

  2. பொற்கோவில் பொன்னான விமர்சனம்!

    ஜி ...அந்த மஞ்சத்தாள விட...கல்யாண மஞ்சத் தாள் ஒரு அப்பனை போண்டியாக்கிடும்!!!!!!

     கவிதை சிந்தனை சிரிகவி!




    1. கல்யாண மஞ்சத்தாள்அடித்துவிட்டு அடுத்தகட்ட செலவை செய்ய முடியாமல்தான் ஆண்டியாகி விடுகிறார்களோ ?

26 comments:

  1. *ஐஸ்வர்யாவை அறிமுகம் செய்த சங்கரை தெரியும் ,லங்கரை தெரிஞ்சுக்கலாமே !

    லங்கரை அறிமுகம் செய்தது நம்ம Bagawanjee KA

    ReplyDelete
    Replies
    1. அதை விரும்பி சாப்பிட்டது நம்ம செந்தில்குமார்ஜி ,அப்படித்தானே :)

      Delete
  2. நம் பக்தர்கள் நேர்த்திக்கடன் என்று மயிரைக் கொடுப்பார்கள்
    :)
    பொற்கோவில் பயணம் சுவரசியம்.

    ReplyDelete
    Replies
    1. கொடுத்தது மயிறு ,அதை பெருமையாய் வேறு காட்டிக்குவாங்க :)

      Delete
  3. டாக்டருக்கே சந்தேகமா?

    //போஜனத்துக்குப் பெயர் லங்கர் என்பார்கள்//

    நாம் பட்டினி போடுவதை லங்கணம் என்போம்!

    மஞ்சள் நோட்டிசில் சம்பாதித்தாரா... அட!

    உண்மைதான்.

    ReplyDelete
    Replies
    1. சாலையில் இப்படி பார்த்து வண்டியை ஓட்டினால் கழுத்து இருந்தால் அல்லவா வலி வரும் ?

      லங்கர் ,லங்கணம் இப்படியும் தொடர்பு இருக்கா ,வட மொழிச் சொற்களோ :)

      நாட்டிலே நிறைய பேர் இப்படித்தானே சம்பாதிக்கிறார்கள் :)

      Delete
  4. உண்மையான நேர்த்திக் கடன்தான்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. அவர்களுடைய நேர்த்திக் கடனிலும் இருக்கும் நேர்த்தி எனக்கு ரொம்ப பிடிச்சது :)

      Delete
  5. Replies
    1. போனால் .ஹெல்லை மீட் பண்ண வேண்டியதுதான் :)

      Delete
  6. இதுக்கு தான் ஹெல்மேட்,,,,,,,,
    பொற்கோயில் அருமை,
    மற்றவையும் சூப்பர்,
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஹெல்மெட் போட்டால் கழுத்து திரும்பாதா :)

      Delete
  7. கழுத்து வலி என்ன? கழுத்தே உடைஞ்சி போயிரும் போல இருக்கே அவங்க பார்வை! ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. பார்க்கிற நமக்கே வலிக்குதே :)

      Delete
  8. ஒன்று கவனித்தீர்களோ தெரியவில்லை. எந்த சீக்கியனும் பிச்சைக்காரனாக இருப்பதில்லை. தலையில் துணி கட்டிக் கொண்டு செல்ல வேண்டும் டர்பன் எதுவும் தேவை இல்லை. எல்லா சீக்கியக் கோவில்களிலும் லங்கார் இருக்கும் பய பிள்ளைகளின் கழுத்து வலிக்குக் காரணம் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. நம்ம தமிழ் நாட்டுக்கு தண்ணீர் ,மூன்று பக்க மாநில எல்லை தாண்டி வருவதில் சிக்கலோ சிக்கல் ,ஆனால் பஞ்சாப்புக்கு நாடு கடந்து தண்ணீர் வந்து விடுகிறது ,செழிப்போ செழிப்புதான் ,பிச்சை எடுக்க அவசியம் தான் என்ன :)
      லங்கார் போடும் அளவிற்கு வருமானம் கிடைத்து விடுகிறதே ,நம்மூரில் பல கோவில்களுக்கு விளக்கு எண்ணெய் வாங்கக் கூட வருமானம் இல்லையே :)
      அவங்களுக்கு எங்கே வலி வந்தது :)

      Delete
  9. பொற்கோயிலுக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வெறும் நன்றி போதாது ,எனக்கு செலவானதில் உங்களால் முடிந்ததை கொடுங்க :)

      Delete
  10. வணக்கம்
    ஜி
    இவை எல்லாம் வழமைதான்..இளம் வயது பசங்க.. இளம் வயசுக்கார பெண்களை லைட்ட பார்ப்பது வழக்கம் . ஜி... ஆகா...ஆகா...படத்தை எடுத்து அழகாக அடையாளம் காட்டியுள்ளீர்கள்..பகிர்வுக்கு நன்றி...கழுத்து வலி வரக் காரணத்தை அறிந்தேன். த.ம 8

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கன்னியரை வட்டமிடும் காளைகளை வட்டமிட்டு வேறு காட்டி இருக்க வேண்டியதில்லைதானே :)

      Delete
  11. பொற்கோவில் தகவல்! அறிந்தேன் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அவசியம் காண வேண்டிய இடம் அய்யா :)

      Delete
  12. தலையில் துணி கட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்பது கேரளத்தில் திருவனந்தபுரத்தில் பத்மநாபர் கோவிலிலும் கேரளத்தில் இன்னும் சில கோயில்களிலும் பேண்ட் அணிந்து செல்லக் கூடாது/ வேஷ்டிதான், மேல் சட்டை இல்லாமல் ஆண்களுக்கு, பெண்கள் சுடிதார் அணிந்திருந்தால், செல்ல அனுமதி இல்லை ஆனால் வேஷ்டியோ இல்லை துப்பட்டாவை வேஷ்டி போன்று இடுப்பில் நம் உடையின் மேலேயே கட்டிக் கொண்டுச் சென்றால் உள்ளே நுழைய அனுமதி உண்டு....இன்னும் சில கோயில்களில் சாரி அல்லது கேரளத்து முண்டு நேரியல் கட்டிக் கொண்டால் தான் அனுமதி உண்டு...

    ReplyDelete
    Replies
    1. இப்படித்தான் கோவிலில் நுழைய வேண்டுமென்று எந்த ஆண்டவன் சொன்னதோ தெரியவில்லை :)

      Delete
  13. ம்ம்ம்ம்...ஹஹஹ ஆண்களின் கழுத்து வலியின் காரணம் தெரிந்தது...பெண்களின் கழுத்துவலிக்கு????!!!!

    ReplyDelete
    Replies
    1. பொன்னுக்கு வீங்கியா இருக்கும் :)

      Delete