24 June 2015

வரதட்சணையை திரும்ப வசூலிக்கும் மனைவி :)

 ------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

ஆஸ்திரேலியா ஜனத் தொகையை விட இவர்கள் அதிகம் :)                

              ''லஞ்சம் வாங்கிறவனை எல்லாம் பிடித்துக் கொண்டு போய் ஒரு தீவிலே விடணும்!''

                    ''அவ்வளவு பெரிய தீவுக்கு எங்கே போறது ?''


குற்றவாளியின்  சிந்தனை இப்படித்தானே இருக்கும்  :)

           ''நீ பண்ணின குற்றத்திற்கு நான் 'ஆணி 'அடிச்ச  மாதிரி தீர்ப்பு 
சொல்லப் போறேன் !''
          ''அது உங்களாலே முடியாது ,எஜமான் !''
         ''ஏன் ?''
          '' உங்க கையிலே இருக்கிற மரச் சுத்தியலால் ஆணி அடிக்க
முடியாதே !''



வரதட்சணையை திரும்ப வசூலிக்கும் மனைவி :)

          ''ஐம்பதாயிரம் செலவுலே  வைர மோதிரம்  

வாங்கிக் கொடுத்துட்டேன் ...இன்னும்

நாலரை லட்சம்னு முணுமுணுக்கிறீயே ,ஏன் ?''

            ''உங்களை வாங்கிறதுக்கு எங்க அப்பா செய்த 

செலவுலே இன்னும் வரவேண்டியதை சொன்னேங்க !''


இதுவும் ஒரு பிரசவ வைராக்கியம் தான் !

தையல் கூலியை கொடுக்கும் போதெல்லாம் ...

மனதிலே ஒரு வைராக்கியம் ...

'இனிமேல் ரெடிமேட் மட்டுமே வாங்க வேண்டும் '

என்று !


  1. நானும் கடைசியாகச் சொன்ன
    உறுதி மொழியை எடுத்து வெகு நாட்களாகிவிட்டது
    ஆனால் அவர்கள் சொல்கிற விலையும்
    பயமுறுத்தத்தான் செய்கிறது!




    1. ஆடு கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம் என்கிற கதையாய் இருக்கிறது,தையற் கூலி  !

      1. KILLERGEE DevakottaiTue Jun 24, 06:11:00 p.m.
        பகவான்ஜீ எனக்கொரு சந்தேகம் இப்படியெல்லாம் எழுதுறது வீட்டுலயா ? இல்லை வெளியிலே ROOM போட்டு எழுதுவியளா ?




        1. எழுதுவதற்கு ரூம் போட்டு எனக்கு பழக்கமில்லை !வேறெதுக்கு ரூம் போடுவீங்க என்று வில்லங்கமாய் கேட்க மாட்டீர்கள் என நினைக்கிறேன் !
          நன்றி

          1. வலிப் போக்கன்Tue Jun 24, 08:47:00 p.m.
            ஹா....ஹா.....ஹா....... ரூம் போட்டு யோசித்திருந்தா .... ஆணி அடிச்ச மாதிரி ஜோக்கு சொல்ல முடியாதுங்கோ...........




            1. அப்படின்னா யோசிக்காமல் செய்ய வேண்டிய காரியங்களுக்குதான் ரூம் போட வேண்டி இருக்குமோ ?

33 comments:

  1. 1) கையில கொஞ்சம் லஞ்சம் கொடுத்தா - பெரிய தீவா கொடுத்துடப் போறாங்க!.. இதுக்கு ஏன் கவலை!..
    2) இவனுக்காகவாவது இரும்பு சுத்தியல் வாங்கிட வேண்டியது தான்!..
    3) தண்டல்காரரோட பொண்ணு போல இருக்காங்க!..
    4) இப்போ எல்லாம் பிரசவமே - தையல் கேஸ் ஆகிப் போச்சு.. இதில ரெடிமேட் ..ன்னு வைராக்கியம் வேறயா!..

    ReplyDelete
    Replies
    1. ஆகா ,நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் ரசனையான கருத்துக்கள் ..நன்றி :)
      1.தீவை மட்டுமா ,நாட்டையே விலைபேசி விடுவார்கள் போலிருக்கே :)
      2.டேபிளில் தட்ட வேண்டாம் ,இவனை மாதிரி ஆட்களின் மண்டையில் தட்ட :)
      3.இப்படி இருந்தாலும் தவறில்லையே:)
      4.தையல் கேஸ் ஆனாலும் வலி வலிதானே:)

      Delete
  2. 01. ஹாஹாஹா அம்பூட்டுப் பேரா?
    02. சரியான பதில்தான்.
    03. வசூல் ராணி எம். பி. பி. எஸ்
    04. எல்லா வருடமும் இப்படித்தானா ?

    ReplyDelete
    Replies
    1. 1.ஜனநாயக ஊழல் நாடு இது :)
      2.படிச்ச நீதிபதிக்கு இது புரியலியே :)
      3.நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பாரா புது மாப்பிள்ளை :)
      4.தையல் கூலி என்பதற்கு பதிலாய் தையல் கொள்ளை என்றே சொல்லலாம் :)

      Delete
  3. வணக்கம்
    ஜி
    ஒரு தீவு உள்ளது கன்னித்தீவு இதில்தான் விடனும்... ஜி......கீ...கீ...கீ...இதனால்தான் பெண்னை பெற்ற அப்பாமார்கள் பலர் நடுவீதியில்.... அவலம்..த.ம1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கன்னி தீவிலா ,கன்னிக்கும் களங்கம் உண்டாக்கி விடுவார்களே :)

      ஐந்தும் பெண்ணாய் ,இல்லை இல்லை ,ஒன்று பெற்றாலே நடுவீதியில்தானா:)

      Delete
  4. வேதனை புரிகிறது!

    குற்றவாளி ரொம்பப் புத்திசாலியா இருக்காரே!

    மனைவியா, கணக்குப்பிள்ளையா? கணக்குப் பெண்ணோ?

    ரெடிமேட் பொருந்தாத போதெல்லாம் ஒரு வைராக்கியம்! இனிமேல் தையல் காரரிடம்தான் கொடுக்கவேண்டும் என்று தோன்றும்.

    ReplyDelete
    Replies
    1. வேதனை தீரத்தான் வலி தெரியவில்லை :)

      நீதிபதி ரொம்ப புத்திசாலி ,ஆணி இல்லை ,ஆப்பு வைக்கப் போறது உறுதி :)

      சீக்கிரம் கணக்கை செட்டில் செய்வது கணவனுக்கு நல்லது :)

      உடனே ஆல்ட்டர் செய்து தரும் கடையில் ரெடிமேட் எடுப்பதே நல்லது :)

      Delete
  5. அனைத்தையும் ரசித்தேன்.

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. நான்கும் நான்கு விதம் அப்படித்தானே :)

      Delete
  6. அனைத்தும் அருமை. பிரசவ வைராக்கியம் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஆண்களுக்கும் உண்டுதானே பிரசவ வைராக்கியம் :)

      Delete
  7. உண்மைதான் அவ்வளவு பெரிய தீவு உலகத்தில இல்ல. செவ்வாய்க்கு அனுப்பிவிடலாம்

    ReplyDelete
    Replies
    1. செவ்வாய் அவர்களுக்கு வெறும் வாயாய் போகட்டும் என்றுதானே :)

      Delete
  8. தீவு பத்தாது... ஒரு கண்டம் வேண்டும் ஜி...!

    ReplyDelete
    Replies
    1. கண்டம் எதுக்கு ?லஞ்சப் பேர்வழிகளை ஒரேயடியாய் கண்டம் பண்ணிட வேண்டியதுதான் :)

      Delete
  9. ஆஸ்திரேலியாதான் பெரிய தீவு, கண்டம் . குற்றம் புரிந்தவர்களைக் கொண்ட இடம் பெரும்பாலும் வரதட்சிணை பெண்ணுக்கு நகையாகத்தானே கொடுக்கப் படுகிறது. ஆண்களுக்கு வராத தட்சிணை.

    ReplyDelete
    Replies
    1. இங்கே லஞ்சம் வாங்கியவர்களின் ஆஸ்திகளை கணக்கிட்டால் ஆஸ்திரேலியாவை விலை பேசி விடலாம் போலிருக்கே :)
      பெண்ணுக்குத் தானே போடுகிறார்கள் பிறகேன் அதிக பவுனை எதிர்பார்க்கிறார்கள்,வராதுன்னு
      சொல்லாதீங்கோ :)

      Delete
  10. ஜீ,,,,,,,,,,,,
    நான் ரேடிமேட் வாங்கனும் என்று நினைப்பது இல்லை,
    தைக்க கத்துக்கனும் என்று,
    அப்புறம் அடுத்த துணி தைக்கும் வரை,
    லீவ்,,,,,,,,,,,,
    அனைத்தும் அருமை.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வீட்டுக்கு வீடு தையல் மெஷின் தூசி படிந்து கிடப்பதே உண்மை :)

      Delete
  11. நல்ல மனைவி!

    ReplyDelete
    Replies
    1. கணக்கு பார்த்து வரவு வைக்கும் இல்லாள் :)

      Delete
  12. வரதட்சணை.....ஜோக் அல்ல.யதார்த்தம்

    ReplyDelete
    Replies
    1. யதார்த்த உண்மை ?

      Delete

  13. தையல் கூலி கொடுக்கும் வேளை - இனிமேல்
    ரெடிமேட் சேட் வேண்டலாமென
    "மனதில் ஒரு வைராக்கியம்!"

    மூளைக்கு வேலை கொடுக்கும்
    மாற்றுச் சிந்தனையை ஏற்படுத்தும்
    "வைராக்கியம்!"

    தொண்ணூறு விழுக்காடு வாழ்ந்தோமா?
    https://mhcd7.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் இந்த வைராக்கியம் உண்டா :)

      Delete
  14. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி :)

      Delete
  15. நீதிபதியின் கையில் மரச் சுத்தி எதுக்கு .விளக்கம் சொல்லுங்க ஜி :)

    ReplyDelete
  16. ஹஹஹஹஹ் எங்களுக்கு இந்த உலகமே பத்தாதுங்கோ....செவ்வா கிரகத்துல புக் பண்ணிடலாமா ஜி!!!

    ஆணி அடிச்சா அதுக்கு வேற ஒரு அர்த்தம் உண்டுல்ல..?!!!!

    வர தட்சிணை ஹஹஹஹ்

    வைராக்கியம் கூட சில சமயங்களில் கட்டுப்படியாவதில்லை...



    ReplyDelete
    Replies
    1. செவ்வாயிலும் இடம் போதாது என்றால் ஒருவர் ஒருவர் ஏறி உட்கார்ந்து கொள்ளட்டும் :)

      லாடம் கட்டுறது ,ஆணி அடிக்கிறது ..இப்படி எல்லாவற்றுக்கும் அர்த்தம் வேறுதான் :)

      ரீ எம்பர்ச்மென்ட் மாதிரி வரதட்சனையை கிளைம் பண்றாங்களோ :)

      ரெடிமேட் சர்ட்டில் பட்டன்கள் எல்லாம் கழன்று விழும் போது வைராக்கியமும் விழுந்து விடும் :)

      Delete