5 June 2015

சோற்றுப் புருசன்னா, கட்டிகிட்டவதான் என்ன செய்வா ?

எதைச் சொன்னாலும் அதிலே ஒரு மெசேஜ் இருக்கணும் :)

                '' ஜூலியஸ் சீசர் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்க வேண்டிய விஷயம் இருக்கா .என்னது ?''
                 '' அவர் பிறப்பும் ஆயுதம் மூலம்தான் (சிசேரியன் ),அவர் இறப்பும் ஆயுதம் மூலம் (கத்தியால் குத்தப் பட்டு )தான் !''

சோற்றுப் புருசன்னா கட்டிகிட்டவதான் என்ன செய்வா ?

         ''என்னங்க ,சாப்பிட்டு முடிச்சிட்டீங்களே,மாத்திரை  சாப்பீட்டீங்களா ?''

  

                    ''மறந்து போகுது,இனி சாப்பாட்டுக்கு  முன்னாடி  சாப்பிடுற

மாத்திரைகளை மட்டும் கொடுத்தா போதும்னு  டாக்டர்கிட்டே சொல்லணும் !''




மாமூல் நூறு வகை !

            ''நம்ம ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் ,மற்றவங்களுக்கு வழிகாட்டியா இருக்காரா ,எப்படி ?''
    ''மாமூல் வரும் நூறு வழிகள்னு புத்தகம் எழுதி வெளியிட்டு இருக்காரே !''




இந்த கேள்விக்குப் பதில் உங்களிடம்தான் !

தீயின் வேகம் மேலே செல்வது ...
நீரின் வேகம் கீழே செல்வது ...
மனத் 'தீ ' எப்படி அடையுமோ தாக சாந்தி ?


திண்டுக்கல் தனபாலன்Thu Jun 05, 07:45:00 a.m.
மேலே / கீழே செல்வதற்கும் இடையில் சமநிலைப் படுத்த வேண்டியது தான்...!




  1. சமநிலை என்ன அவ்வளவு சுலபமா ?


20 comments:

  1. 01.கரிக்ட்டுதான் ஜி.
    02. எல்லாம் உள்ளே போறதுதானே எப்ப சாப்பிட்டால் என்ன ?
    03. அனுபவஸ்தன்தான்.
    04. கீழே உள்ளதை மேலே ஊற்றனும்.

    ReplyDelete
    Replies
    1. 1.ஜூலியட் சீசர் சிசேரியனில் பிறந்தார் ,சிசேரியனில் பொறந்தவங்க எல்லோரும் ஜூலியட் சீசர் ஆகமுடியுமா :)
      2.இதுக்கு டாக்டர்தான் விளக்கம் சொல்லணும் :)
      3.சொல்வதெல்லாம் உண்மைதானே :)
      4.கீழேயுள்ளது ஆழத்தில் ,மேலேயுள்ளது ஆகாயத்தில் ,எப்படி ஊற்றுவது:)

      Delete
  2. கத்தியோடு அவ்வளவு சம்பந்தம்...

    அடுத்து 1000 வழிகள் என்று போட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை...

    தண்ணீரை எடுத்து குடிச்சா தாகமும் சாந்தி அடையும், மனத்தீயும் சாந்தி அடைந்து விடும்.

    தம +1

    ReplyDelete
    Replies
    1. கத்தியை தூக்கியவனுக்கு மட்டுமா கத்தியால் சாவு :)

      அதில் Phd செய்து டாக்டர் பட்டம் கூட வாங்குவார் :)

      இவர் ஆன்ம சாந்திதான் அடைய முடியும் ,அப்படித்தானே :)

      Delete
  3. நல்ல மெசேஜ்..நண்பர்கள் செலெக்ஷன் பற்றி மெசேஜ் இல்லையா!

    அதுக்கு பதிலா மாத்திரையிலேயே அலார்ம் செட் பண்ணித் தயாரிக்கச் சொல்லோணும்!!

    மாமூலான ஜோக்தானுங்களே!!!

    நல்ல கேள்வி. ஆமாம், சாந்தி யாரு? அதைச் சொல்லவில்லையே!!!!

    ReplyDelete
    Replies
    1. இன்னொரு நாள் ,அதையும் போட்டா போச்சு :)

      நல்ல ஐடியா ,சாப்பிடமட்டும் அலார்ம் தேவைப் படுவதே இல்லை :)

      'இன்சு'க்கு மாமூலான வழிகள்தான் :)

      காந்தி செத்துட்டாறான்னு கேட்கிற மாதிரி இருக்கு ,உங்க கேள்வி :)

      Delete
  4. இந்த மெசேஜ் எப்படி ஜி கெடைச்சது..?

    ReplyDelete
    Replies
    1. சிசேரியனில் பிறந்த முதல் மனிதன் என்பதால்தானே ஆயுத கேஸுக்கு'சிசேரியன் 'என்கிறார்கள் ?பிள்ளைப் போல் வளர்த்த புருட்டஸ் கத்தியால் குத்திய போது 'யூ டூ புருட்டஸ் 'என்று ஜூலியட் சீசர் கேட்ட வார்த்தை ,நீங்களும் அறிந்ததுதானே :)

      Delete
  5. மாமூல் பெற! அருமை!

    ReplyDelete
    Replies
    1. இந்த நூலையும் மாமூல் மூலம் பெற நினைப்பார்களோ :)

      Delete
  6. மனத்தீ... அடாடா..அருமை.

    ReplyDelete
    Replies
    1. வனத் தீ தெரியும் ,வெளியே தெரியாதது மனத்தீ :)

      Delete

  7. எந்த மாத்திரை சாப்பிட மறந்து போனது. சாப்பாட்டுக்கு முந்தையதா பிந்தையதா.? தாக சாந்திக்கு நீர் ஊற்ற வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. ரெண்டுமே ,ஆனால் சாப்பாடு மறக்கலே :)

      எந்த நீரால் அடங்குமோ :)

      Delete
  8. அப்பவே சிசேரியன் இருந்ததா?
    சூப்பர் இன்ஸ்பெக்டர் இல்லா follow him.
    thank you.

    ReplyDelete
    Replies
    1. ஜூலியட் சீசர் முதலில் சிசேரியனில் பிறந்ததால்தான் , அந்த பெயரே வந்திருக்கிறது :)

      அவர் சேவை பாகம் இரண்டிலும் தொடரட்டும் :)

      Delete
  9. எதைச் சொன்னாலும் அதிலே ஒரு மெசேஜ் இருக்கணும் ..அதுவும் சூப்பரா... இருக்கனும்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இன்று போட்டிருக்கும் 'பட்டை நாமம் 'போலவா :)

      Delete
  10. வணக்கம்
    ஜி
    தத்துவத்தை படித்த போது ஆடிவிட்டேன்.. என்ன சிந்தனை.... வாழ்த்துக்கள் ஜி த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்தை அறிந்து நானும் ஆடிப் போயிட்டேன் ,இதுவா தத்துவம் :)

      Delete