22 June 2015

பார்க்கக் கூடாததைப் பார்த்தா இப்படித்தான்:)

-----------------------------------------------------------------------------------------------------------

பழமொழி பொருத்தம்தானே :)

                         '' என்னைப் பார்த்தா ,யானை வாங்க காசிருக்கு ,அங்குசம் வாங்க காசில்லைங்கிற பழமொழி ஞாபகம் வருதா .ஏண்டா ?''
                   ''புது பைக் வாங்கிட்டு ஹெல்மெட் வாங்க காசில்லைன்னு சொல்றீயே !''
                

பார்க்கக் கூடாததைப் பார்த்தா இப்படித்தான் !

          ''உன் மனைவி உன் மூஞ்சியிலே குத்துவிடும் போது, டிவியிலே என்ன பார்த்துகிட்டு இருந்தே ? ''
              ''குத்துப் பாட்டுக்களைதான் !''




ருசி ....புரிந்ததும் புரியாததும் !

வாய்க்கு ருசியா ஆயிரம் அரிசி ரகங்களை உண்டாலும் ...
வாய்க்கரிசி பாசுமதியா ,ரேசன் அரிசியா என்று  புரியப் போவதில்லை !

KILLERGEE DevakottaiSun Jun 22, 07:51:00 p.m.
கவிதை அருமை பகவான்ஜீ குத்து விழுந்தது யாருக்கு ஜீ




  1. நீங்க யாருக்கு விழுந்திருக்கும் நினைக்கிறீங்களோ அவங்களுக்குதான் !!
  2. வெங்கட் நாகராஜ்Sat Jun 28, 07:09:00 a.m.
    குத்துப் பாட்டு பார்த்ததுக்கு குத்து வாங்குனாரா? :)))

    இரண்டாவது - தத்துவம்!




    1. வாங்கினது சரிதானே ?
    2. சமீபத்தில் சாரநாத் சென்றபோது அங்குள்ள போதிமரத்தைத் தொட்டேன் ,அதனால் ஏற்பட்ட தத்துவமாய் இருக்கும் போலிருக்கு !




33 comments:

  1. 01. சமயத்துக்கு தகுந்த சங்குதான் ஜி
    02. இதெல்லாம் சகஜம்தான் வாழ்க்கையிலே....
    03. அரிசி விலை ஏற்றத்தைப் பார்த்தால் இனிமேல் அந்தச்ச டங்கும் நின்று போகும் நிலை வரப்போகுது ஜி.

    ReplyDelete
    Replies
    1. 1.உண்மைதான் ,சங்கு சத்தம் சாமி கும்பிடும் போதும் கேட்குது ,சாவு வீட்டிலும் கேட்குதே :)
      2.குத்துப் பாட்டை பார்ப்பதா ,குத்து வாங்குவதா எது சகஜம் ?:)
      3.கத்தரிக்காய் மலிவாய் கிடைக்குது என்பதற்காக வாய்க்கத்தரிக்காயா போடமுடியும் :)

      Delete
  2. பொருத்தமோ பொருத்தம் தான்....

    நல்லா வேணும் தான்...ஹிஹிஹி...

    மறக்காம போட்டலே...பெரிசு....

    ReplyDelete
    Replies
    1. அங்குசம் யானைக்கு தேவைதான் ,ஹெல்மெட் அவசியம் வேண்டுமா :)

      விட்டா நீங்களும் நாலு தர்ம அடி கொடுப்பீங்க போலிருக்கே :)

      பெருசுங்களுக்கு போடலே பொருத்தமும் கூட :)

      Delete
  3. வணக்கம்
    ஜி
    அனைத்தும் அருமை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கட நாட்டிலும் தலைக்கவசம் அவசியம் போட்டுக்கணுமோ:)

      Delete
  4. 1) காசில்லாமல் இல்லை. மனசில்லை!!

    2) முத்தப் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

    3) அதானே!

    ReplyDelete
    Replies
    1. மனசில்லாததற்கு காரணம் ,ஹெல்மட்டினால் வரும் அசௌகரியங்கள் தானே :)

      மொத்தமாய் போய் சேரும் அளவுக்கு அடி பலமாய் இருந்திருக்கும் :)

      நாக்குக்கு அடிமை ஆகிவிடக் கூடாது :)

      Delete
  5. Replies
    1. குத்துப் பாட்டால் அவர் படும் அவஸ்தையை ரசீத்தீர்களா :)

      Delete
  6. அங்குசம் இனி கட்டாயம் தேவை...

    ReplyDelete
    Replies
    1. இந்த கட்டாயம் நியாயமா எனக்கு தோணலே :)

      Delete
  7. மூன்றும் அருமை. குத்து மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. குத்துமாஆஆஆஆஅ :)

      Delete
  8. பார்க்கக் கூடாததை ரெியாம பாரக்கனுமாம்.... வீராப்பா...பாத்தா..இப்படித்தான் மூஞ்சியிலே குத்துவிழுமாம் ஒரு அனுபவஸ்தர் சொன்னது....

    ReplyDelete
    Replies
    1. அந்த ஒரு அனுபவஸ்தர் யாரோ :)

      Delete
  9. 1,எங்கோ குத்துவது போல் உள்ளது,
    2,சரியான குத்துதான்,
    3, வாய்க்கு அரிசி போட்டால் சரி தானே,
    சூப்பர் ஜீ,,,,,,,,,,,,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. 1.உங்களுக்குமா :)
      2.இதுவும் குத்துதானா :)
      3.அதையும் வாயில் போட்டுக்காமல் இருந்தால் சரிதான் :)

      Delete
  10. சீசனுக்கு ஏற்ற ஹெல்மெட் ஜோக் சூப்பர்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. விற்காத ஹெல்மெட் எல்லாம் காலியாகும் சீசன் :)

      Delete
  11. பழமொழி புது மொழியாக.குத்துப் பாட்டு பார்த்ததற்கா மூஞ்சியிலே குத்து. அரிசிதத்துவம் அட்டகாசம்

    ReplyDelete
    Replies
    1. பைக்கை வாங்கினேன் ,ஹெல்மெட்டை வாங்கலேன்னும் பாடலாமோ :)
      உண்மையான குத்துப் பாட்டு இதுதானோ :)
      ரூபாய்க்கு மூணு படின்னு பொய் சொல்லலே :)

      Delete
  12. என்ன !ரூம் போட்டு யோசிப்பீர்களா! அனைத்தும் நன்று

    ReplyDelete
    Replies
    1. இதுக்குமா ரூம் போடுவார்கள் :)

      Delete
  13. நேற்றுவரை
    காசில்லைங்கிற பழமொழி
    இன்றிலிருந்து
    ஹெல்மெட் இல்லையென்றால்
    2500 குற்றப்பணம்

    வாய்க்கரிசி
    பாசுமதியா, ரேசன் அரிசியா என்றால்
    நம்மவூர் பச்சையரிசி

    ReplyDelete
    Replies
    1. குற்றப்பணம் மட்டுமில்லே லைசென்சும் பிடுங்கப் படுமாம் ,இது இந்த ஊர் நியாயம் :)

      பொன்னி பச்சரிசி என்றால் மிகவும் பொருத்தம் :)

      Delete
  14. Replies
    1. ஒரு பிடி பிடீச்சீங்களா :)

      Delete
  15. அருமை அய்யா
    தொடர்க உங்களது நகைப்பணி
    தம +

    ReplyDelete
    Replies
    1. நகையாசை தீரும் வரை தொடர்வேன் :)

      Delete
  16. அங்குசம் இருக்கோ இல்லையோ தலைக்கவசம் தேவையாயிற்றே!!!

    குத்துப்பாட்டு சரி.....அந்த மாதிரி பாட்டைப் பார்த்திருந்தா..!!!??

    போதிமரத் தத்துவம் ஹஹ அருமை...

    ReplyDelete
    Replies
    1. தலைக்கவசம் இல்லைன்னு பிடிபடும் 'அங்கு சம்'திங் கொடுத்து தப்பித்து விடலாமே,கோர்ட் வந்து தடுக்கவா போகிறது :)

      வசனமே இல்லாத படத்தைப் பார்த்திருந்தால் ,என்ன நடக்குமோ அதுதான் நடந்திருக்கும் :)

      மரத்தை தொட்டதுக்கே இந்த தத்துவம் என்றால் ,அதன் கீழ் அமர்ந்தால் என்னாகும் :)

      Delete