4 June 2015

காதல் உருவாக பொருத்தமான இடமா இது :)

--------------------------------------------------------------------------

அடை சாப்பிட்டாலும் இவன் அறிவுப் பசி அடங்காது :)
                ''அடைக்கு ஆர்டர் பண்ணிட்டு என்னடா யோசிக்கிறே ?''
                 ''அடைன்னா ஒண்ணே ஒண்ணுதான் தர்றாங்க ,தொடர்ந்து பெய்ற மழையை ஏன் 'அடை'மழைன்னு சொல்றாங்க ?''

 எறும்பு வராத காரணம் என்ன :)                    

         ''அளவுக்கு மீறி ஆசைப்படாத ஒரே ஜீவராசி எறும்பாத்தான் இருக்கும்னு எப்படி சொல்றீங்க ?''

        ''வீ ட்டிலே சீனி சிந்தினாலே எறும்பு வந்திடுது ,ஸ்வீட் கடையிலே எறும்பையே பார்க்க முடியலையே !''

காதல் உருவாக பொருத்தமான இடமா இது ?

        ''கெமிஸ்ட்ரி லேப்புக்கு வந்தும், அவளையே ஏண்டா சைட் அடிச்சுக்கிட்டே இருக்கே ?''
     ''எனக்கும் அவளுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகணும்னுதான் !''



தேவைப் பட்டால் கொலையும் செய்வான் :)

மலருக்கு துளி சேதமின்றி 
துளித்துளியாய் தேனை சேர்ப்பது  தேனீ ...
புகை போட்டு அதை விரட்டி தேனை 
புட்டியில் அடைத்து காசு பார்ப்பவன் மனிதன் !
.Chokkan SubramanianWed Jun 04, 12:14:00 p.m.
அளவுக்கு மீறி ஆசைப்படாத ஜீவராசி நான் தான்னு இல்ல நினைச்சுக்கிட்டு இருந்தேன்!!!!!
இதே வார்த்தையை என் இல்லாளிடம் சொன்னதற்கு 'உங்க மூஞ்சுக்கு நான் டூ மச்'என்று அடக்கமான பதில் வந்தது !
எதுவும் அளவோடு இருந்தால் "இனிய " சுவை தான்..




  1.  நீங்க எதை சொல்றீங்க ? புது டாஸ்மாக் அளவுகோல் மாதிரி தெரியுதே ! 

25 comments:

  1. 01. ஆமா இது குழப்பமாத்தான் இருக்கு
    02. எறும்பு எல்லாமே புத்தீஸ்சாக இருக்குமோ...
    03. இடத்தை மாற்றிப்பார்க்க சொல்லுங்களேன்....
    04. அதுனாலேதான் இவணுக்கு 6 அறிவு

    தமிழ் மணத்தில் இரண்டைப்பிடித்தமைக்கு வாழ்த்துகள் ஜி

    ReplyDelete
    Replies
    1. 1.அடை மழையில் நனைந்தால் குழப்பம் தீருமோ :)
      2.போதுமென்ற மனமே ..பழமொழி அறிந்திருக்கிறதே :)
      3.நூலகத்தில் நூல் விட்டு பார்க்கச் சொல்லலாமா :)
      4.உழைப்பைத் திருடத் தெரிந்து இருப்பதாலா :)
      இது ரொம்பவும் தாமதமென்று நினைக்கிறேன் :)

      Delete
  2. 3)அப்ப பிசிக்ஸ் லேப்ல் இருக்கிற பெண் மட்டும் ஏன் ஒர்க் அவுட் ஆக மாட்டேங்குது?
    ஏன்னா? அந்த பெண் பிசிக்லா ஸ்ட்ராங் அப்படிதானே பகவான் ஜி

    2)எறும்புக்கும் சர்க்கரை வியாதி வந்திடும் என்கிற பயம் அதான் ஸ்வீட் ஸ்டாலுக்கு ஜீட் விடுகிறதோ?

    1)வடைக்கு ஆர்டர் செய்துவிட்டு வாடைக் காற்று ஏன் வீசுதுன்னு பாடலோமோ?

    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. பிசிக்கலா ஸ்ட்ராங்கா இருக்கிற பொண்ணுக்கு காதல் வராதா :)

      சர்க்கரை வியாதி வந்தா ,இன்சுலின் சிரிஞ்சை எங்கே குத்திக்கிறது என்ற பயமும் இருக்கும் :)

      தவளை வடைக்கு ஆர்டர் பண்ணி இருப்பார் ,அதான் வடை ,கால் முளைத்து வாடை ஆகி விட்டது :)

      Delete
  3. எனக்கும் இந்த அடை சந்தேகம் உண்டுங்க...


    அவங்கதான் ஸ்வீட்ல எறும்பு மருந்து தூவி வச்சுடுவான்களே... எப்படி வரும்? ஹிஹிஹி...


    பிராக்டிகலுக்குப் போயிடப் போறாங்க... பாத்துக்கச் சொல்லுங்க!


    மனிதனால் தேனைத்தான் திருட முடியும். தேனியின் உழைப்பை அல்ல!

    ReplyDelete
    Replies
    1. இந்த சந்தேகத்தை எந்த சமையல் கலை நிபுணரிடம் கேட்டு தீர்த்துக்கிறது என்ற சந்தேகமும் வருகிறது :)

      இப்போதைய நூடுல்ஸ் விவகாரம் மாதிரியா :)

      இப்போ ,கெமிஸ்டிரி பிராக்டிகல் ரொம்ப டேஞ்சரான சமாச்சாரமாச்சே ,சம்சாரம் ஆனபின் பார்த்துக்கச் சொல்லுங்க :)

      சரியாகச் சொன்னீங்க ,உழைக்கத் தெரிந்தவன் எதற்கு திருடப் போறான் :)

      Delete
  4. ஒன்னே ஒன்னு மனதை "அடை"த்து விடும்...!

    ReplyDelete
    Replies
    1. அந்த அடைக்கு பெயர்தான் தேனடையா :)

      Delete
  5. ரசித்தேன் நண்பரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. எறும்பையும் தானே:)

      Delete
  6. எறும்பை வைத்து ஊர் உதாரணம். அருமை.
    த ம 7

    ReplyDelete
    Replies
    1. ஓர் உதாரணம் ,ஊருக்கே சொல்லியாச்சு :)

      Delete
  7. அடை சாப்பிட்டால் அறிவு வருமா? அப்ப நான் நிறைய பேருக்கு ரெக்கமன்ட் செய்யனும். Thankyou Gee.

    ReplyDelete
    Replies
    1. அப்பவும் ரெக்கமென்ட்தானா , சாப்பிடணும்னு உங்களுக்கு ஏன் தோண மாட்டேங்குது :)

      Delete
  8. எரும்பு, தேனீ...

    அருமை.

    இப்போதெல்லாம் வெறும் ஜோக்காக மட்டுமல்லாது மெசெஜும் இருக்கிறதே..

    God Bless YOu

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கும் ஒரு மெசெஜ் ,எப்படின்னு படிச்சு சொல்லுங்க :)

      Delete
  9. ஒரு திரைப் படத்தில் செந்தில் கௌண்டமணி ஜோடி. நகைச்சுவையில் செந்திலுக்கு வரும் சந்தேகங்களை நினைவு படுத்துகிறது இபதிவு

    ReplyDelete
    Replies
    1. ஈ மொய்க்காமல் இருக்க இனிப்புக்கு பூச்சி மருந்து அடித்ததை நானும் பார்த்த ஞாபகம் வருகிறது :)

      Delete
  10. அவகளுக்கு அது பொருத்தமான இடம்தான்..மற்றவர்களுக்கு....????

    ReplyDelete
    Replies
    1. சினிமா படத்தில் பார்ப்பதை நேரில் பார்க்கும் இடமாகிவிடும் :)

      Delete
  11. அடை மழை ஆமாம்...இல்ல...

    எறும்புக்கு அங்கே வரவேற்பு.......தடா...போட்டு இருக்க, பேராசை வந்தாலும் வராது அங்கே...

    அங்கே கெமிஸ்ட்ரி ஒகவுட் ஆகுதா...இல்ல பாடத்துல கெமிஸ்ட்ரி புட்டுக்குதா....? பார்க்கனும்

    இப்படித்தான் கையை வைக்கிறாங்க எல்லாத்திலயும்...

    தம +1

    ReplyDelete
    Replies
    1. 'அடை' மழை நேரத்தில்பசிக்காமல் இருக்கா ,அதுவும் இல்லை :)

      கிடைக்கும் என்றாலும் அதிகம் சேர்த்து வைக்க எறும்பு விரும்பவில்லையோ :)

      புட்டுக்காம போகுமா :)

      புகையைக் காட்டிட்டு கையை வைக்கும் வீராதி வீரர்கள் :)


      Delete
  12. அது என் பாக்கியம் :)

    ReplyDelete
  13. வணக்கம்
    ஜி
    அனைத்தும் அருமை இரசித்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அடை என்ற பெயர் வந்த விடை அறிய அடைமழையில் நனைந்து யோசித்தேன் ,,ஊஹும் :)

      Delete