11 March 2016

மனைவி மாவு வாங்கி வரச் சொல்லும் காரணம் :)

பகல் வெளிச்சம் போல் வராதோ  :)                                                                    

                          ''கோடிக்கணக்கில் வழக்குகள் தேங்கி இருக்கே ,நீதி மன்றத்தில் ,ஏன் நைட் ஷிப்ட் போட்டு விசாரிக்க மாட்டேங்கிறாங்க ?''

                           ''சட்டம் ஒரு இருட்டறையாச்சே !''

மனைவி மாவு வாங்கி வரச் சொல்லும் காரணம் :)

            ''உங்க மனைவி  தோசை மாவு பாக்கெட் தானே வாங்கி வரச் சொல்றாங்க ,ஏன் முடியவே முடியாதுன்னு சொல்றீங்க ?''

             ''வாங்கி வந்தா ,நீங்களா வந்து தோசை சுட்டுத் தருவீங்க ?''

கள்ளத் தொடர்புக்கு இந்த தண்டனை சரிதானே :)

       ''நம்ம ராஜா ,ராணிக்கு சிரச்சேதத் தண்டனைக் கொடுத்துட்டாரா ,ஏன் ?''

       ''மந்திரி வேஷத்திலே ராஜா அந்தப்புரம் போனாராம் ...வந்திருக்கிறது ராஜான்னு தெரியாம 'வாங்க மந்திரியாரே ,வந்து ரொம்ப 

நாளாச்சே 'ன்னு ராணி  வரவேற்றாங்களாமே!''

கஞ்சப் பிசினாறிக்கு கண்ணாடி எதுக்கு :)

         ''தூரத்தில் வர்ற பஸ் நம்பர் தெரியலைன்னா .கண்ணாடி வாங்கி மாட்டிக்க வேண்டியதுதானே ?''

          ''பஸ் பக்கத்திலே வராமலா போயிடும் ?நம்பர் தெரியாமலா போயிடும் ?''

செல் இல்லையெனில் பைத்தியமாகக் கூடுமோ :)

     செல்போனும் காதுமாகவே இருப்பவரைப் பார்த்தால் ...

     கர்ணனின் நினைவுதான் வருகிறது ...

     பிறக்கும் போதே கர்ணனின் காதில் கவசக் குண்டலம் இருந்ததாம் !

24 comments:

  1. [[[உங்க மனைவி தோசை மாவு பாக்கெட் தானே வாங்கி வரச் சொல்றாங்க ,ஏன் முடியவே முடியாதுன்னு சொல்றீங்க ?''
    ''வாங்கி வந்தா ,நீங்களா வந்து தோசை சுட்டுத் தருவீங்க ?'']]]
    Good one!

    அது சரி! நாமெல்லாம் யாரு? நம்ம போகுவரத்து என்ன? நம்மளை மாவு வாங்கிட்டு வா என்றால் ஹோட்டலில் தோசை சாப்பிட்டு விட்டு...மாவு இல்லை என்று வீட்டில் சொல்லி கவுந்தடிச்சு படுப்பவர்கள் ஆச்சே!

    ReplyDelete
    Replies
    1. ஆகா .உங்க ஐடியா ..அந்த கூமுட்டைக்கு தெரியாமப் போச்சே :)

      Delete
  2. 1 - சட்டம் ஒரு இருட்டறை இல்லை அது ஒரு குருட்டறை
    2 - தோசை மாவு வாங்கினான் னா அவன அன்றைக்கு புரட்டி புரட்டி போடுவாளே....
    3 - ராணிக்கு ராஜா ரொம்ப போர் அடிச்சிருப்பாரோ....
    4 - ஆமா பஸ் பக்கத்துல வருமேயா அப்புறம் கண்ணாடி எதுக்கு...
    5 - செல்போனும் காதுமா இருக்கறது வேறொன்றுமில்லை
    காது கீழ விழாம தாங்கி புடிச்சிருக்கது....

    ReplyDelete
    Replies
    1. அங்கே ,திருட்டுப் பூனைபோல் நீதியைத் தேடணுமோ:)
      வாங்கவில்லை என்றாலும் :)
      ராஜாவோடத் திறமை அவ்வளவுதான் போலிருக்கு :)
      நிற்காம போச்சுன்னா என்ன செய்வார் :)
      தொன்னைக்கு நெய் ஆதாரமா ......:)

      Delete
  3. ‘என்ன சத்தம் இந்த நேரம்... ஆர்டர்... ஆர்டர்... கோடிக்கணக்கில் வழக்குகள் தாங்கி இருக்கே... சட்டம் என் கையில்...’ -நீதிபதி!

    நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன்...கண்ணா...!

    ராஜா எந்த வேஷம் போட்டாலும் ராணி சிரச்சேதத்திலிருந்து தப்பிப்பது சிரமம்தான்...!

    ஆ...ஊன்னா... கூட்டம் கூட்டமா கௌம்பிடுறாங்க... ஆமா... பஸ்ஸு வேகமா வர்ற சத்தம்தான் கேக்குது... பஸ்ஸவே காணோம்... ஆமா... அவ்வளவு வேகமாவா வருது...!

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா... செல்போன் காதோடு வருவதை எதிர்கொள்ளடா... காதோடுதான் நான் பேசுவேன்... காரில் அடிபட்டுச் சாகுவேன்...!

    த.ம. 1





    ReplyDelete
    Replies
    1. இப்படியுமா பெருமைப் பட்டுக் கொள்வது :)

      அது சரி ,தோசைக் கல்லு சூடாயிருக்கும் போலிருக்கே :)

      இத்தனை நாள் நகர் வலம் மட்டும் போனது தப்பாப் போச்சே :)

      ஒரு கிலோமீட்டர் தூரத்தில் வரும்போதே , சத்தம் வந்துடுதே :)

      செல்ல வேண்டிய இடத்துக்கு சீக்கிரமே செல்ல உதவுதே செல் போன்:)

      Delete
  4. முதல் ஜோக்கே சிரித்துச் சிந்திக்க வைத்தது.

    அதானே...!!

    என்ன கொடுமை!

    தாண்டிப் போயிடுமே.. ஏற்கெனவே ஸ்டாப்பிங்கில் நிறுத்த மாட்டார்கள்!

    அந்த எந்திரனைப் பிரிக்க எந்த இந்திரன் இப்போது வரவேண்டுமோ!

    ReplyDelete
    Replies
    1. வரிசையில் வராமல் குறுக்கே வந்து வோட்டு போட்டீங்க ,கருத்து போட்டீங்களா ,கில்லர்ஜி :)

      Delete
    2. கோர்ட் ,நைட் ஷிப்ட் இயங்கினால் நல்லதுதானே :)

      அவர் கவலை அவருக்கு :)

      மாறுவேஷம் போட்டு அந்தப்புரம் போனது , நல்லதா போச்சே :)

      அது அவருக்கு புரியலையே :)

      வந்தாலும் பிரிக்க முடியுமா :)

      Delete
  5. Replies
    1. நவீனக் கர்ணன்களைத் தானே :)

      Delete
  6. Replies
    1. தூரப் பார்வைதானே :)

      Delete
  7. தோசை மாவு அப்புறம் அந்த அந்தப்புரம்....

    ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. அந்தப்புரத்தில், திருட்டுத் தோசை சுட்டால் தப்புதானே :)

      Delete
  8. வணக்கம்
    ஜி

    அருமை இரசித்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ராணிக்கு சிரச்சேதம் என்றால் ,மந்திரிக்கு ...யோசிச்சுப் பார்த்தீங்களா :)

      Delete
  9. Replies
    1. கஞ்சப்பிசினாறியின் செயல் சரிதானா ஜி :)

      Delete
  10. மனைவி மாவு வாங்கி வரச் சொல்லும் காரணம் புரிஞ்சுபோச்சு........

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கா ,அவருக்கா :)

      Delete
  11. மனைவி மாவு வாங்கி வரச் சொன்னால்
    அப்பம், தோசை சுட்டுத் தா என்பாளா?

    ReplyDelete
    Replies
    1. கீழே தள்ளி குழியையும் வெட்டியதாம் என்ற பழமொழி நினைவுக்கு வருதா :)

      Delete