18 March 2016

அஞ்சு லட்டுக்கு ஆசைப்படும் மாமனார் :)

என்று தீரும் இந்த கொடுமை (:                
           (மன்னிக்கவும் இது  ஜோக் அல்ல ,சீரியஸ் )
                      ''இதை கௌரவக் கொலைன்னு சொல்லக் கூடாதா ,ஏன் ?''
                   ''பட்டப் பகல்லே வெட்டிக் கொல்றான் 'வெட்டி கௌரவக் கொலை 'என்று வேண்டுமானால் சொல்லலாம் !''

பாரதிநேசன் இப்படி மோசம் செய்யலாமா :)    
                     ''என்னங்க ,நம்ம வீ ட்டிலே குடியிருக்கிறவர்...  பாரதியார் கவிதைகளை ரொம்பவும் விரும்புவராச்சே ,அவரைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க ?'' 
                   ''வாடகையைக் கேட்டால் 'நாம் இருக்கும் வீடு நமதென்று அறிந்தோம் 'என்று சொல்லுறாரே !''
microsoft ல் பணிபுரிபவர்கள் விரும்பும் பிரியாணி :)
              ''பிரியாணிக் கறி ரொம்ப 'சாப்டா 'இருக்குன்னு சாப்பிட்டுட்டு ,
இப்போ வயித்திலே காக்கா கரையிறமாதிரி இருக்கா ..அந்த கடை பெயர் என்ன ?''
               ''My crow soft பிரியாணி கடைதான் !''
அஞ்சு லட்டுக்கு ஆசைப்படும் மாமனார் :)
            ''வரப் போற மருமகளுக்கு கூந்தல் நீளம்,திருப்பதிக்குப் போனா அஞ்சு லட்டு தேறும் அளவிற்கு இருக்கணுமா,ஏன் ?''
            ''நீளமான முடிக் காணிக்கை செலுத்தினா அஞ்சு லட்டு இலவசமா தர்றாங்களாமே !''
கூல் ஆகணும்னா கூழ் குடிங்க :)
கூழ் என்ன கோந்தா ?
மீசையில் ஒட்டிக்கொண்டால் வராது என்பதற்கு ...
ஒட்டிக்கும்  என்று பயந்து கூழைக் குடிக்காமல் இருக்கமுடியுமா ?
கூழுக்கும் ஆசைப்படலாம் ...பசித்தால் !
மீசைக்கும் ஆசைப்படலாம் ...ஆண் என்றால் !

20 comments:

  1. முதல் செய்தி தீராத, மாறாத, மாற்றப்பட வேண்டிய வேதனை.

    அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இது 'வெட்டிகௌரவம்' தானே ?

      Delete
  2. Microsoft ஓனர் இந்த ஜோக்க பார்த்தால்
    கயித்துல கழுத்த மாட்டிக்குவானே....

    அருமையாக நகைச்சுவை நண்பரே...
    ரசித்தோம் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. அதற்கு முன் ,இந்த பிரியாணியை ருசி பார்க்கட்டும் :)

      Delete
  3. முதல் செய்தி வேதனை நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. போலிக் கௌரவக் கொலை ,வறட்டுக் கௌரவக் கொலை ,வெட்டிக் கௌரவக் கொலை என்று சொல்லப் பட வேண்டியதை ,கௌரவக் கொலை என்பது கூட வேதனை தருகிறதே !

      Delete
  4. ‘கொலையும் செய்வாள் பத்தினி...!’ என்பது வெட்டிக் கொலை செய்தவனுக்குத் தெரியாதோ?

    ‘நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்...’ ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே...’ - நெஞ்சு வலிக்கிறாப்பல இருக்கு... கொஞ்சம் தண்ணி கொண்டு வா...!

    ‘க்ரௌ...’ கரைந்து உண்ணும்...! அதுனால காக்கா கரையிறமாதிரி சத்தம் வருதோ...? காக்கா கூட்டத்த பாருங்க... அதுக்குக் கத்துக் கொடுத்தது யாருங்கோ...?

    கண்ணா அஞ்சு லட்டு திண்ண ஆசையா...? கோவிந்தா... கோவிந்தா...!

    கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை...! அத்தைக்கு மீசை முளைக்குமா...?

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. அவனுக்கு ஒரு பத்தினி இருந்தால் அல்லவா தெரியும் :)

      நெஞ்சை அடைக்காது,அச்சமில்லாமல் தண்ணீ குடிங்க :)

      லெக் பீஸை தூக்கிட்டுப் போற காக்கையைச் சொல்றீங்களா :)

      இருந்தாலும் ,இம்பூட்டு ஆசை கூடாது :)

      மஞ்சள் பூசாமல் இருக்கச் சொல்லுங்க ,அத்தைக்கும் மீசை முளைக்கும் :)

      Delete
  5. Replies
    1. திண்டுக்கல் பிரியாணியை விட இந்த பிரியாணி சூப்பர்ன்னு சொல்றாங்களே ,உண்மையா ஜி :)

      Delete
  6. 01. உண்மை
    02. அப்படீன்னாக்கா... விரட்டி விட்டுறணும்
    03. நல்ல பொருத்தம்
    04. அடடே.... நாளைக்கு எனது பதிவுக்கு வாருங்கள் ஜி
    05. ஸூப்பர் ஜி ஸூப்பர்

    ReplyDelete
    Replies
    1. கௌரவக் கொலை என்றால் ,அது சரிதான் என்பது போலிருக்கே!

      விரட்டி விடுவது அவ்வளவு சுலபமா இல்லையே :)

      நல்ல ருசியுமா :)

      திருப்பதி மொட்டை வாங்குறாரு லட்டைன்னு பதிவு போடப் போறீங்களா :)

      நன்றி மீசைஜி ,தப்பு தப்பு ,கில்லர்ஜி:)

      Delete
  7. Replies
    1. திருமணத்துக்கு முன்பே மருமகளுக்கு மொட்டைப் போடும் மாமனாரை ரசிக்க முடிந்ததா :)

      Delete
  8. முதலில் கொடுக்கப்பட்டது மனதை மிகவும் பாதித்த ஒரு நிகழ்வு. அது மக்கள் திருந்தாத வரையில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. சாதிகளின் அடிமைகள்..எனவே சுதந்திர நாடு அல்ல நம் நாடு..

    மற்றவற்றையும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. எல்லா மக்களும் அப்படி அல்ல என்றாலும் ,திருந்தாத ஜென்மங்களை நினைத்து வருந்த வேண்டியிருக்கே!

      Delete
  9. ஆணவக் கொலை..நண்பரே......

    ReplyDelete
    Replies
    1. நிராயுதபாணியில் இருக்கும் இரண்டு பேரை ,ஆயுதத்தால் ஐந்து பேர் கொல்வதை 'ஆண்அவக்'கொலை என்றுதான் சொல்லணும் !

      Delete
  10. ஜாதி வெறியர்களுக்கெதிரான நல்ல கண்டண பதிவு இது.

    ReplyDelete
    Replies
    1. நாடு வல்லரசு ஆவது போல் தெரியவில்லை ,வெறியர்கள் நாட்டை சுடுகாடு ஆக்கிவிடுவார்கள் போலிருக்கே !

      Delete