30 March 2016

மனைவியிடம் வாய்தா கேட்கலாமா :)

தம்பி ஏதோ பிளான் பண்ற மாதிரி இருக்கே :)
           ''தம்பி ,நான் இராணுவத்தில் சேர்த்தே ஆகணும்னு ஏண்டா கட்டாயப் படுத்துறே ?''
           ''தம்பியுடையான் படைக்கு அஞ்சான்னு சொல்லி இருக்காங்களே ! ''
 மிஞ்சின்னு பேர் வைத்தவன் தீர்ககதரிசி :)
                   ''கால் விரல் அணிகலனுக்கு  மிஞ்சின்னு பேர் வைத்தவன் தீர்க்கதரிசியாத்தான் இருக்கணும்னு ஏன் சொல்றீங்க ,மாமா ?''
                    ''என் மகளுக்கு  போட்ட  நகைங்களில் வேற எதுவும் மிஞ்சியிருக்கிற மாதிரி தெரியலையே ,மாப்பிள்ளை !''
மனைவியிடம் வாய்தா கேட்கலாமா :)
        ''உன் வீட்டுக்காரர் வக்கீலாச்சே ,அவரை ஏன்  டைவர்ஸ் பண்ணிட்டே?''
        ''எதைக் கேட்டாலும்  அடுத்த மாசம் பார்ப்போம்னு 'வாய்தா 'கேட்கிறாரே !''
தலைவலி தனக்கு வந்தா தான் தெரியும் :)
            ''என் பொண்ணு வீணை  கத்துக்கிறதுலே,என்னைவிடநீங்கதான் சந்தோசமா இருக்கீங்க ,ஏன் சார் ?''
            ''காலி பண்ணாமே இருந்த  பக்கத்து போர்சன்காரங்க  சொல்லாம கொள்ளாம ஓடிட்டாங்களே !''
             ''இவ்வளவு நல்லது பண்ண எங்களுக்கு நீங்க என்ன செய்யப் போறீங்க ?''
            ''இனிமேலும் வீணையை விடலேன்னா நீங்களும் வீட்டைக் காலி பண்ண வேண்டியிருக்கும் !''
பெண் மனது மட்டும் ஆழமில்லே :)
கடலில் மூழ்கியவர்களைக் கூட காப்பாற்றி விடலாம் ...
டாஸ்மாக் கிளாஸில்  மூழ்கியவர்களை
ஒன்றும் செய்ய முடியாது !

15 comments:

  1. தம்பி...! சொத்து முழுக்க எனக்கே வேணுமுன்னு நேரடியா கேட்க வேண்டியதுதானே...! இந்த அண்ணன் அவ்வளவு கல் நெஞ்சக்காரனா...?

    நல்ல வேளை ஞாபகப்படுத்துனீங்க... நாளைக்கு வந்து பாருங்க மாமா...! வஞ்சிக்கு மிஞ்சி மிஞ்சியிருக்கான்னு...ஒங்க மகளுக்குப் புன்னகை இருக்க பொன்நகை எதுக்கு மாமா...? இல்ல இல்ல... எ மகளுக்கு நகைதான் முக்கியம்ன்னா... புதுப்புது நகையா வாங்கிப் போட்டு அழகு பாருங்க மாமா...நான் என்ன வேண்டான்னா சொல்லப் போறேன்...?

    எதற்கெடுத்தாலும்... 'வாய்தா... ' 'வாய்தா... '-ன்னே கேக்கிறார்...!

    ‘வீணை மீட்டும் விரல்களைக் கண்டேன்னு...’ என் மகளோட ஒங்க மகன் பாட்டுப்பாடிக்கிட்டு இருக்கிறது அப்போ வீண் வேலையா... இல்லை வீணையின் வேலையா...? நாங்க இப்ப வீட்டுக்காரர்...!

    கடலை விட ஆழமா...? அப்ப மூழ்கி முத்தெடுக்க வேண்டியதுதான்...!

    த.ம. 1



    ReplyDelete
    Replies
    1. ராணுவத்தில் சேர்ந்தாலே கதை கந்தல்தானா :)

      புன்னகை இருக்க பொன்னகை எதுக்குன்னு கேட்கிறீங்க ,உங்க ஆத்தா ஒரு கிராம் குறைந்தாலும் கழுத்துலே தாலி ஏறாதுன்னு சொன்னப்போ, எங்கே போனீங்க :)

      இரண்டுமே தவறுதானே :)

      வீணை மீட்டும் விரல்களுக்கு ,மகன்காரன் மோதிரம் போட்டது தெரியாம பேசுறாரோ:)

      மூழ்கினால் முத்தெடுக்க முடியுமா ,மூச்சே நின்னு போகுமே :)


      Delete
  2. மனைவிகிட்ட வாய்தா கேக்க கூடாதுதான்

    என்ன ஜி பண்றது அவன் கோர்ட்
    ஞாபகத்துலதான் கல்யாணமே பண்ணியிருக்கான்....

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா, அவஸ்தைப் படட்டும் :)

      Delete
  3. அனைத்தும் சுவையே!

    ReplyDelete
    Replies
    1. மிஞ்சிதானே அதிக சுவை :)

      Delete
  4. 01. கணக்குல ஒண்ணு குறையட்டும்னு நினைக்கிறானோ... ?
    02. எல்லாம் சேட்டு கடையில் இருக்கோ.... ?
    03. இது சுத்தப்படாதே....
    04. தன் வினை தன்னைச்சுடும்.
    05. சீமான் சரி பண்ணிடுவாரோ.... ?

    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும் இவ்வளவு சூதுவாது இருக்கலாமா :)
      சேட்டு கடையெல்லாம் அந்த காலம் .இப்போ ,சேர நாட்டான் கடைதான் :)
      அதான் அம்மா .சுத்தமாத் துடைச்சி எறிஞ்சிட்டாங்களே:)
      டொய்ங்ங் ங் ங் ,வீணை நரம்பு அறுந்து போச்சே :)
      ஏன் அவரால் முடியாதா :)

      Delete
  5. வக்கீல் மட்டுமா வாய்தா கேட்கிறார் கோர்ட்டும் வாய்தா போடுகிறதே......

    ReplyDelete
    Replies
    1. த ம ஐந்திலேயே இருப்பதைப் பார்த்தால் ,நீங்களும் வாய்தா வாங்கியது போலிருக்கே :)

      Delete
    2. எனக்கு வாய்தா வாங்குற பழக்கமே இல்லையேG..இடுகைத்தலைப்பு:
      மனைவியிடம் வாய்தா கேட்கலாமா :)

      மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.

      சன்னலை மூடு

      Delete
    3. நல்ல பழக்கம் அதையே தொடருங்க ...
      வாய்தா வாங்கியது யார் என்று விசாரிக்க ஒரு நபர் விசாரணைக் கமிஷன் போடப் பட்டுள்ளது ,ஒரு மாத காலத்தில் அவர் அறிக்கையை சமர்ப்பிப்பார் :)

      Delete
  6. நல்ல வேளை.. ஆயிண்ட்மெண்ட் கம்பெனியில் சேரச் சொல்லாமல் போனானே!

    ஹா... ஹா.. அதைச் சரியாகக் கழற்ற வரவில்லை போல!

    எல்லாக் கணவர்களுமே இந்த விஷயத்தில் வக்கீல்கள்தான்!

    தனக்கு என்றால் தனி நீதி!

    முடியாது!

    ReplyDelete
    Replies
    1. சொறி படைக்கு தீர்வு அதுதானா :)

      வெள்ளியில் செய்ததால் விலை போகவில்லை :)

      ஒரு சிலர் மனைவிகள் ,வாய்தாவை வெறுக்கிறார்களே:)

      தனக்கு போகத்தானே .....:)

      இறுதியாவும்,உறுதியாவும் சொன்ன உங்களுக்கு நன்றி :)

      Delete
  7. ஹஹஹஹஹ்....

    மிஞ்சி கூட மிஞ்சவில்லை ஹஹஹ்

    கணவர்கள் அனைவருக்கும் பொருந்துமோ....

    டாஸ்மாக் ஹும் அதுமட்டும் முடியவே முடியாது...

    ReplyDelete