28 March 2016

வயசுக் கோளாறுக்கு சந்தோசப் பட முடியுமா :)

அன்பார்ந்த வலையுலக  உறவுகளே ...
தவறான தேதியில் 'செட் அப் ' செய்ததால் இன்றைய பதிவு தாமதமாகி விட்டது !
 நாளை முதல் ஜோக்காளியின் பதிவுகள்  அதிகாலை  நாலரை (ஏழரை அல்ல :) மணிக்கு வெளியாகும் !பிரம்ம முகூர்த்த நேரத்தில்  எழுந்து ,பதிவைப் படித்து  ,தினசரி நாளை இனிதாக தொடங்குங்கள் :)
------------------------------------------------------------------
கட்சிக்கு வேற சின்னமா கிடைக்கலே :)         
            ''கட்சியால் ,கட்சியின் சின்னம் புகழ் பெறும்,ஆனால் வருகிறத் தேர்தலில்  ,விடியலைத் தேடும் இந்தியர்கள் கட்சி, சின்னத்தால்  புகழ் பெறப் போகிறதா ,அந்த சின்னம்தான் என்ன ?''
           ''செருப்புதான் !''
வாஸ்து மீன் ' சாணக்கியா 'இன்னும் உயிரோட இருக்கா :)
                 ''தொட்டியில் நீந்துற மீன்களை எல்லாம் உற்று உற்றுப் பார்க்கிறீங்க ,கையிலே வேற ரிவால்வர் ,என்ன செய்யப் போறீங்க ?''
                 ''சென்றாண்டு கிரிக்கெட் மேட்ச்சிலே இந்தியா ஜெயிக்கும்னு சொன்ன சாணக்கியா மீனைக் காட்டுங்க,சுட்டுத் தள்ளணும்!''

வயசுக் கோளாறுக்கு சந்தோசப் பட முடியுமா  :)
              ''டாக்டர்  ,என் மகளுக்கு வந்திருக்கிறது வயிற்றுக் கோளாறு இல்லே ,வயசுக் கோளாறுன்னு ஏன் சொல்றீங்க?''
             ''கல்யாணத்திற்கு முன்னாலே கர்ப்பமானா வேற எப்படிச் சொல்றது?''

இது என்ன 36 ''24'' 38'' ஆ ,இன்ச் டேப்பில் அளப்பதற்கு :)
                ''டியூப் லைட் எரியுதான்னு பார்த்து வாங்கிற என் பையனைக் காட்டிலும் உங்க பையன் தெளிவா ,எப்படி ?''
                ''டியூப் லைட்டை இன்ச் டேப்பிலே அளந்துதான் வாங்குவான்னா நீங்களே பார்த்துக்குங்க !''  
 காங்கிரஸ் கட்சி நினைவுக்கு வந்தால் 'ஜோக்காளி'பொறுப்பல்ல   : )
         சொற்கள் -பெண்பால் 
         செயல்கள் -ஆண்பால் ...
        இது இன்றைய இந்திய அரசியலுக்கும் பொருத்தமே ...
         காரணம் ,இது ஒரு இத்தாலியப் பழமொழி !

18 comments:

  1. 01. ஐ.... நம்ம சின்னம்.
    02. சாணக்கியரை சுட்றாதீங்கோ...... ஜி
    03. சரியாக ஜொள்ளிட்டாரு...
    04. அறிவுக்கொழுந்தன்
    05. உண்மை அருமை.

    ReplyDelete
    Replies
    1. செருப்பைக் காட்டி வோட்டு கேட்டால் நல்லாவாயிருக்கும் :)
      அதுக்கு பதிலா ,வாஸ்து மீன் என்று சொன்னவனைச் சுடலாமா :)
      ஆனால் ,பெண்பிள்ளை வாழ்க்கை கெட்டுப் போச்சே :)
      கொழுந்தன் இப்படின்னா அண்ணன் எப்படி :)
      இத்தாலிய மொழியில் நல்ல பழமொழிகள் இருக்கும் போலிருக்கே :)

      Delete
  2. 1.செருப்பு பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்; இராமன் காட்டுக்கு போனபோது நாட்டை ஆண்டது இந்த செருப்புதான்.
    2.ஜாதி ஆணவக் கொலை போல் - கிரிக்கெட் ஆணவக் கொலை வெறி.
    3.நாட்டு நடப்பு.
    4.இவனல்லவா நல் முத்து.
    5.போகப் போகத் தெரியும்; இந்த பூவின் வாசம் புரியும்.

    ReplyDelete
    Replies
    1. ஆண்ட பாதுகை ,மீண்டும் ஆள நினைப்பதில் என்ன குறைன்னு சொல்லலாமா :)
      இன்னும் என்னென்ன ஆணவக் கொலைகள் வருமோ :)
      ஒரு சிலரின் அரிப்புகூட நாட்டு நடப்பு ஆகிவிடுகிறது :)
      இந்த நல்முத்துக்கு ,அப்பன் எப்படி பொண்ணு பார்க்கப் போறாரோ :)
      இப்போதே பூவின் வாசம் புரிகிறதே :)

      Delete
  3. இன்று பதிவிட நேரமாகி விட்டதோ... அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. பதிவு வெளியாக வேண்டிய தேதியைத் தவறாக 'செட்வூல்ட்'செய்ததை ,காலையில் நேரமின்மையால் மாலையில்தான் கவனித்தேன் !இன்றைய தேதியில் பதிவு வரவில்லை என்றால் ,வானம் கோடை மழையை கொட்டித் தீர்த்து விடும் என்பதால் ,உடன் வெளியிட்டு விட்டேன் :)

      Delete
  4. செருப்பு சின்னம் அருமை ஐயா.வாஸ்து மீன்,இன்ச்,வயசுக் கோளாறு அனைத்தும் சிந்திக்க வைத்தது ஐயா.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கல்விக் கொள்ளை சம்பந்தமாக ,தங்களின் அழைப்பை நேரமின்மை காரணமாக நிறைவேற்ற முடியவில்லை ..மன்னியுங்கள் வைசாலி செல்வம் அவர்களே !

      Delete
  5. அந்த செருப்புச் சின்னம் வாக்காளர் மனதில் பதிய விளக்குமாறு தலைவர் ஆணையிட்டுள்ளார்...!

    நீங்க ரொம்ப லேட்... நானே சுட்டு உள்ள தள்ளிட்டேன்...!

    வயசுக்கு வந்ததாலே வயசுக் கோளாறும் வந்திடுமோ...?!

    ஆத்தில டியூப் லைட்ட போட்டாலும் அளந்துதானே போடனும்...!

    சொன்னதைச் செய்வோம்... செய்வதைச் சொல்வோம்... வேறொன்றும் தெரியாது...!

    த.ம. 5

    ReplyDelete
    Replies
    1. வோட்டு போடாட்டி இந்த அடிதான் கிடைக்கும்னு சொல்லலாமா :)

      வாஸ்து மீன் செய்த புண்ணியம் :)

      அதனாலேதானே அந்த பெயரே :)

      ஆத்திலே குழியை வெட்டியா அடக்கம் பண்ணப் போறார் :)

      சொல்லாமல் செய்வதை நீங்க கண்டுக்கக் கூடாது :)

      Delete
  6. Replies
    1. யாரும் 36 ''24'' 38''யை யோசித்ததாய் தெரியவில்லை :)

      Delete
  7. வணக்கம்
    ஜி
    ஒவ்வொன்றையும் அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பார்க்கவும் கொடுத்து இருக்கேனே ,அதைப் பற்றி சொல்லுங்களேன் ரூபன் ஜி :)

      Delete
  8. பாரத்தை ஏற்றியவர் ஏற்றுக் கொண்டால் சந்தோசப்படலாம்.... இல்லையென்றால் வருத்தப்பட வேண்டியதுதான்

    ReplyDelete
    Replies
    1. என் பாரம் குறைந்தது என்று ஓடிவிட்டாரே ,அதான் ,கிளினிக் வந்தாச்சு :)

      Delete
  9.              ''டாக்டர்  ,என் மகளுக்கு வந்திருக்கிறது வயிற்றுக் கோளாறு இல்லே ,வயசுக் கோளாறுன்னு ஏன் சொல்றீங்க?''
                 ''கல்யாணத்திற்கு முன்னாலே கர்ப்பமானா வேற எப்படிச் சொல்றது?''


    இப்போது நிறைய வயசுக் கோளாறுதான்....

    ReplyDelete
    Replies
    1. அபார்ஷன்?ஜஸ்ட் ஹால்ப் அன் ஹவர் என்ற விளம்பரத்தைப் பார்த்தால் பகீர் என்கிறது :)

      Delete