'' அந்த நடிகை ,முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதுக்கு என்ற பழமொழியை புதுமொழியில் சொல்றாரா ,எப்படி ?''
''மனசிலே 'துணி'ச்சல் இருந்தா ,உடம்பிலே துணி எதுக்குன்னு கேட்கிறாரே !''
இதுக்குமா பயப்படுவது :)
''என்னடா சொல்றே ,கிருதாவை நீளமாய் வச்சுக்க பயமாயிருக்கா ?''
''வச்சுக்கிட்டா கிருபாகரன் என்கிற என் பெயரை மாத்தி வைச்சிடுவாங்க போலிருக்கே !''
ஹனீமூன் போகத் தயங்கும் கணவன் :)
''என் கள்ளக் காதலனோட சதித் திட்டம் ,என் புருஷனுக்குத் தெரிஞ்சுருக்கும் போல இருக்குடி !''
''ஏண்டி ?''
''மூணாருக்கு ஹனிமூன் போகலாம்னு சொன்னேன் ,போனா ஃசேப்ட்டியா திரும்பி வர்ற மாதிரி இடமாப் பார்த்துச் சொல்லுங்கிறாரே !''
'கட்டை ' போடுவது நம்மாளுங்களுக்கு அல்வா :)
''பாரதியார் இருந்தா ,அவருக்கு எதிரா போராட்டம் வெடிச்சிருக்குமா ,ஏன் ?''
''ஏற்கெனவே ராமர் பாலம் இருக்கும்போது 'சிங்களத் தீவினுற்கோர் பாலம் அமைப்போம் 'னு எப்படி எழுதலாம்னுதான் !''
மொய் ,திருமணத்திற்குப் பின்னா ,முன்னா :)
அரசின் திருமண உதவித் திட்ட பணம் வந்து சேர்ந்தது ...
அரசியல்வாதிக்கும் அதிகாரிக்கும்
'மொய் 'வைத்த பிறகு !
|
|
Tweet |
‘துணி’ந்தவளுக்குத் தூக்குமேடை பஞ்சு மெத்தை...! சில்க்துணிகூட தேவையில்லை...!
ReplyDeleteகிருதாவை நீளமாய் வச்சுக்கிட்டா கிருதாகரன்னு வச்சுக்க வேண்டியதுதான்...!
என்னோட ஜாதகத்தில மலையில கண்டமுன்னு எழுதியிருக்கு...! நா எங்கேயும் வரலை... நீ எங்க வேணுமுன்னாலும் போ...! என்ன உயிரோட விட்டிடு...! உன்ன கட்டிக்கிட்டதத் தவர... வேற தவறா நா என்ன பாவம் செஞ்சேன்...! உனக்கே இது பாவமா தெரியலை...?!
ராமர் பாலம் கட்டி இருந்தது அனுமனுக்குத் தெரியாமாப் போச்சே...! ஒரு வேளை கடலுக்குள் கட்டி இருந்ததாலா...? பாரதியாருக்கு மட்டும் எப்படித் தெரியும்...?
மொய் விருந்து வருத்தத்துடன் நடந்ததும்... திருமணம் மீண்டு(ம்) நடந்தது...!
த.ம. 1
Deleteவாழ வேண்டுமென்ற துணிச்சல் இல்லாமல் பல நடிகைகள் தற்கொலைச் செய்து கொள்வது வருத்தத்துக்குரியது !
இவர் வச்சுக்கவே வேண்டாம் :)
அதானே ,எங்கேயாவது போய் தொலைய வேண்டியதுதானே ,எதுக்கு கணவனைக் கொல்லணும் :)
கல் திட்டுக்குப் பெயர் பாலமாம் ,இந்த பாலத்தில் சைக்கிளாவது போகுமா :)
அதுக்கு அப்புறம் மெய் விருந்து நடந்ததா :)
ரசித்தேன்.
ReplyDeleteராமர் பாலத்தையும்தானே :)
Deleteதுணியே துணை இல்லாதபோது துணிச்சல்தானே துணையாக இருக்கும்ஜி
ReplyDeleteதுணிச்சலாய் வாழ்ந்தால் சரிதான் :)
Deleteஅருமை ஐயா.
ReplyDeleteமூணார் இயற்கை அழகும் அருமை :)
Delete01. ஆஹா நவீன கண் நக்கி இவள்தான்.
ReplyDelete02. கிருதாகரன் ஸூப்பர் ஜி
03. இவளும் புரிஞ்சுக்கிட்டாளே...
04. நல்லவேளை போயிட்டாரு...
05. மிச்சம் எவ்வளவு வந்’’தூ’’ச்சு
மாதவி என்பது அல்லவோ பொருந்தும் :)
Deleteஅப்படி பெயர் வைத்திதிருந்தால் கிருதாவே முளைத்து இருக்காது :)
சதி தோல்வியை தழுவியதே :)
இருந்திருந்தால்,அவரை மதவாதிகள் ஒரு வழி பண்ணியிருப்பார்கள் :)
மஞ்சக் கயிர் வாங்க போதுமான அளவுக்கு :)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
ஹனீமூன் போக கணவன் தயங்குவது ,நியாயம்தானே :)
Deleteகிருபாகரன்...ஹஹ்ஹ ரசித்தோம் ஜி அனைத்தையும்..
ReplyDeleteபொருத்தமான பெயர்தானே :)
Deleteகிருதாகரன் என்றிருந்திருக்க வேண்டும் கிருபா என்று வந்துவிட்டது ஜி
ReplyDeleteபார்த்தீர்களா ,குழப்பமாகி விட்டது !கிருதாவை வளர்க்க வேண்டியதுதான் :)
Deleteராமர் பாலத்தை பாரதியார் ஏன் மறந்தார்னு தெரியுமா ஜி :)
ReplyDeleteநகைச்சுவை ஐயா அருமை ஐயா
ReplyDeleteரசித்தேன் ஐயா சிரித்தேன் ஐயா....
எத்தனை ஐயா,அத்தனையும் ரசித்தேன் ஐயா:)
Delete