16 March 2016

ஜாக்கெட்டிலே இருந்த ஜன்னல் ,இனி :)

            ''டைரக்டர் சார் ,ஹீரோயினுக்காக  வாங்கி  வந்த சேலையில் ஓட்டை இருக்கே ,என்ன பண்றது ?''
         '' அந்த ஓட்டையில் தொப்புள் தெரியுற மாதிரி கட்டி விடுங்க ,ஜன்னல் சாரின்னு விளம்பரம் பண்ணிக்கலாம் !''
 நோய் இருந்தா இங்கே வேலை நிச்சயம் :)
       ''அந்த ஸ்வீ ட் ஸ்டால்லே வேலைக்கு ஆள் எடுக்கிறாங்களாமே ,
என்ன தகுதி வேணுமாம் ?''
            ''அவசியம் சர்க்கரை நோய் இருக்கணுமாம் !''
விரலில் மையைத் தவிர 'இது 'வும் உண்டு வாக்காளனுக்கு :)
       ''வாக்குச் 'சாவடி'ன்னு பெயர் வைத்தவன் தீர்க்கதரிசியா ,ஏன்?''
       ''நம்ம வாக்கை வாங்கிட்டு ,இந்த அரசியல்வாதிங்க நம்மையே 'சாவடி'க்கிறாங்களே !''
புருசனை நல்லாப் புரிஞ்சுகிட்டுமா இப்படி :)
          ''உன் வீட்டுக்காரரை  ரொம்ப 'டார்ச்சர் 'பண்ணாதேடி! ஆண்டியாப் போயிடப் போறார் !''
          ''அவரைப் பற்றி எனக்குத் தெரியாதா ?ஆண்டியாப் போறதுக்குப் பதிலா ,வேற 'ஆன்டி 'யை வேணா தேடித் போவார் !''
'வாடா 'என்று உரிமையில் அழைப்பவள் உண்மையில் வாடா மலரா ?
      உன்னை மலர் என்று சொல்ல மனம் வரவில்லை ...
      வாடா மலர்கூட வாடி உதிர்வதால் !

24 comments:

  1. அத்தனையும் ரசனையாக உள்ளது சகோதரா.
    ரசித்தேன்.
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. இன்றைய உங்க கவிதையைப் போலவே,உங்க கருத்தும் எனக்கு 'தன்னம்பிக்கை 'தருதே :)

      Delete
  2. ரசனையான பிசினஸ்மேன்!

    புத்திசாலியான பிஸினஸ்மேன்!

    ஹா... ஹா... ஹா... உண்மை, உண்மை!

    புத்திசாலி புருஷன்!

    ம்ம்ம்...

    ReplyDelete
    Replies
    1. உண்மை , ஓட்டையிலும் காசு பார்க்கிறாரே :)

      அதனால்தானே செயின் ஸ்டால் திறக்க முடியுது :)

      இருந்தாலும் ,ஒவ்வொரு தேர்தலிலும் நாமே விரும்பி சுருக்குக் கயிறை மாட்டிக் கொள்கிறோம் :)

      அவருக்கேற்ற புத்திசாலி மனைவி :)

      தாமதமானாலும் உதிர்வது உண்மைதானே :)

      Delete
  3. டைரக்டர் சார்... சாரி... சாரியில இருக்கிற ஓட்டை தொப்புள் தெரியுற மாதிரி கட்டி விட முடியல...! ஓட்டையை மாத்திப் போடுங்க... ‘தேர்தல ஓட்டுப் போடுங்க’ன்னு விளம்பரத்துல நடிக்கத்தானே வந்திருக்காங்க...!

    காரம்தான் காணாமல் போயிட்டே இருக்கே...!

    காசு வாங்கினேன்... பையில போட்டேன்... அரசியல்வாதி போன இடம் தெரியல...!

    என்ன அண்டித்தான் இருக்கணும்...!

    டே... இங்க வாடா... வெட்டியா பேசிக்கிட்டு இருக்காம... போய் சமையல் வேலையப் பாருடா...!

    த.ம.2



    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா ,இந்த முறை நூறு சதவீதம் வாக்களிக்கப் பட்டுவிடும் என்று நம்பலாமா:)

      பரவாயில்லை காரம் விலை மலிவுதான் :)

      காசைக் கொடுத்து விட்டு தலைமுழுகிட்டு போயிட்டாரா :)

      அண்டிப் பிழைப்பது எல்லாம் ஒரு பிழைப்பா :)

      உருப்படியான வேலை :)

      Delete
  4. Replies
    1. வாடாமலர் அருமைதானே :)

      Delete
  5. சிந்திக்க வைக்கிறியள்
    நம்மாளுங்க சிந்திக்க

    ReplyDelete
    Replies
    1. மறுக்கிறாங்களா:)

      Delete
  6. அணைத்தும்அருமை.......

    ReplyDelete
  7. அணைத்தும்அருமை.......

    ReplyDelete
  8. அணைத்தும்அருமை.......

    ReplyDelete
  9. அணைத்தும்அருமை.......

    ReplyDelete
    Replies
    1. ஏகமனதாக தீர்மானம் நிறைவேறி விட்டது ,நன்றி :)

      Delete
  10. ஜன்னல் சாரி அஹ்ஹாஹ்

    அஹஹஹ் ஆனா ஜி சர்க்கரை வியாதி இருக்கறவங்கதான் ஸ்வீட்டுக்குக் கூடுதலா ஆசைப்படுவாங்களாமே

    உண்மை அதுவே

    ஹஹஹ்ஆண்டி வார்த்தைவிளையாடல்..

    ReplyDelete
    Replies
    1. கலிகாலம் ,இப்படியும் சேலை வரலாம் :)

      வாய்க்கட்டு இல்லையென்றால் ,அவஸ்தைப் படுபவர்களும் அவர்கள்தானே :)

      தீர்க்கதரிசன வார்த்தைதானே :)

      ஹும் ,நம்மால் வார்த்தையோடு மட்டும்தான் விளையாட முடிகிறது :)

      Delete
  11. 01. ஒரு கல்லில் இரண்டு தேங்காய்
    02. இதுவும் இரண்டு தேங்காய்தானோ...
    03. நிச்சயமாக அந்த ஆளு சோசியராகத்தான் இருக்கணும்
    04. இவளுக்குத்தானே தெரியும் புருச்ச்ச்ச்ச்ச்சனைப்ற்றி....
    05. ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. மாங்காய் என்று சொல்வதுகூடவா புளித்து விட்டது :)
      தேங்காய் இல்லை இல்லை தேன்காய் என்று வேண்டுமானால் சொல்லலாம் :)
      உண்மை சொல்லும் ஜோசியரும் இருக்காரா :)
      இத்தனை ச்ச்ச்சா ,சந்தேகத்தைத் தூண்டுதே :)
      அல்லிமலரே ,கொல்லி மலரேன்னு சொல்வதைக் கேட்டு அலுத்து விட்டது :)

      Delete
  12. ஜன்னல் சேலை ரசனையாக இருந்தது சகோ...

    ReplyDelete
    Replies
    1. கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் உடுத்துவதை பேஷன் என்பவர்கள் ,கிழிந்த சேலையைக்கூட பேஷன் என்று சொல்லக்கூடும் :)

      Delete