17 March 2016

தாலி கட்டும் முன் இப்படியா சோதிப்பது :)

அது அரியாசனமா ,சொறியாசனமா :)
                   ''மந்திரிகளைப் பார்த்து 'ஒரு நாள் அரசனாய் 'இந்த அரியாசனத்தில்  அமர்ந்து பாருங்கள் ..என் கஷ்டம் புரியும்னு அரசர் சொல்றாரே ,ஏன் ?''
                     ''மூட்டைத் தொல்லை தாங்க முடியலையாம் !''

தாலி கட்டும் முன் இப்படியா சோதிப்பது  :)
                 ''என்னங்க ,பேப்பரைப் படிச்சீங்களா ? 15 +7 எவ்வளவு என்று கேட்டதுக்கு ,17ன்னு பதில் சொன்னவனைக் கட்டிக்கவே மாட்டேன் என்று மாலையைக் கழற்றி எறிஞ்சிட்டாளாமே புதுப் பொண்ணு ?''
                 ''சரியாத் தானே சொல்லியிருக்கான் புது மாப்பிள்ளை ?''
இதுக்கு அப்படியும் ஒரு அர்த்தம் இருக்குமோ :)
          ''எங்க கடை ஆப்பிளில்  export qualityன்னு ஸ்டிக்கர் ஓட்டியிருக்கோம் ...அதாவது மேல் நாட்டுத்தரம் ,உங்களுக்கென்ன சந்தேகம் ?''
         ''பிறகேன் ,நேற்று ஆப்பிளை சாப்பிட்டவுடனே என் நண்பர் மேலோகம் போய் சேர்ந்தார்?''
          ''ஸ்டிக்கரைக் கிழிக்காம சாப்பிட்டு இருப்பார்  !''

நடிகையை ரசிப்பதோடு நிறுத்திக்கணும் ,இல்லேன்னா :)
        '' கும்பாபிசேகம் செய்யணும்னு  போராட்டம் செய்தவர்கள்  கைதாமே ,ஏன் ?''
        ''அவங்க கும்பாபிசேகம் செய்யச் சொல்றது ,நடிகைக்கு கட்டப்பட்டிருக்கும் கோவிலுக்கு  !''
டாக்டர் தெய்வமா ,எமனா :)
டாக்டரை ....
தெய்வம் என்றார்கள் ...
 கோமாவில் இருந்தவன் ,எழுந்து நடந்ததும் !
எமன் என்றார்கள் ...
தலைவலி என்று வந்தவன் ,இறந்ததும் !

18 comments:

  1. அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. சொறியாசனமும் சுகமாய் இருந்ததா :)

      Delete
  2. கிங்கே... இங்கே கிங்மேக்கரா ஆயிட்டாரா...! கிங்கா... இருக்க மக்களே ஆசைப்பட்டதுனாலதான் நானும் ஆசைப்பட்டது மாதிரி உளறிட்டேன்... இப்ப யாரும் விடுற மாதிரி தெரியல...! முதல்(ல) அமைச்சர்னா அவ்வளவு கேவலமாவா போச்சு... ஆளாளுக்குக் கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்க...!

    மாப்பிள்ளை எதையும் கூட்டிச் சொல்லவே மாட்டாரு...! அவரு எதைச் சொன்னாலும் கரைட்டாத்தான் சொல்வாரு...!

    எக்ஸபோர்ட் குவாலிட்டின்னா... ஏற்றுமதி பண்ண வேண்டியதுதானே...! உள்ளூர்லயே விலைபோகலைன்னு... யாரும் வாங்க மாட்டேங்கிறாங்களா...!

    கண்டகண்ட தெய்வத்துக்கு கும்பாபிசேகம் செய்யறப்ப... நடமாடும் தெய்வம்... கண்கண்ட தெய்வத்துக்கு குடமுழுக்கு செய்யக்கூடாதா...?

    கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் டாக்டர்தான்...!

    த.ம. 3








    ReplyDelete
    Replies
    1. கிங்கே ஆகலே .கிங் மேக்கரா ,காப்பி மேக்கரா :)

      கூட்டத் தெரியாதவனை ,கழித்துக் கட்டிய அந்த பெண்ணைப் பாராட்டணும்:)

      உள்ளுரிலேயே விலை போகலைன்னா வெளிநாட்டிலா போகும் :)

      கட்டாயம் செய்யணும் ,இல்லைன்னா தெய்வக் குற்றம் ஆயிடும் :)

      இது நம்ம தெருவள்ளுவர் சொன்ன மாதிரியிருக்கே:)

      Delete
  3. அரசனுக்கு அவன் கஷ்டம்

    பேப்பர் படிச்சவனுக்கும்
    பொண்டாட்டி கூட வாழ
    ஆசை இல்லை போல...

    ஸ்டிக்கர்ல பூச்சிக்கொல்லி
    மருந்து இருந்துருக்குமோ...

    இப்பெலாம் நடிகையை
    ரசிப்பதோடு யார் நிப்பாட்றா...!
    அவ கூட போயிடலாம்
    அப்டில நினைக்கிறாங்க
    நம்ம பயலுக....

    டாக்டர் பத்துபேருக்கு எமன்
    பத்துபேருக்கு தெய்வம்...

    ReplyDelete
    Replies
    1. கடிக்கிற மூட்டைக்குத் தெரியுமா இவர் அரசரென்று:)

      இந்த கூமுட்டையைக் கட்டி அழும் மனைவி பாவம்தான் :)

      எலி கடிக்கக்கூடாதுன்னு கலந்து இருப்பார்களோ :)

      நம்ம பயலுக டார்ச்சர் தாங்க முடியாமத்தான் ,நடிகைகள் தற்கொலை செய்துக் கொள்கிறார்களோ :)

      தெய்வம் பாதி எமனும் பாதியா :)

      Delete
  4. Replies
    1. அரசர் படும் பாட்டைப் பார்த்தால்,உங்களுக்கு சிரிப்பாய் இருக்கிறதா :)

      Delete
  5. 01. முதல்வன் சினிமா பார்த்து இருப்பாரோ ?
    02. முன் அனுபவம்தான்
    03. காசு கொடுத்து வாங்கிட்டு ஸ்டிக்கரை கிழிச்சுப்போட முடியுமா ?
    04. கோயில்னு ஆன பிறகு கும்பாபிஷேகம் செய்யிறதுதானே முறை
    05. டாக்டர் எமதெய்வம்

    ReplyDelete
    Replies
    1. அந்த படம் பார்த்த தியேட்டரின் சோபா சீட்டில் இருந்துதான் மூட்டைகள் இவரிடம் வந்திருக்கும் :)

      கணக்கு தெரியாத இவர் எப்படியோ தப்பித்து விட்டார் :)

      அதானே ,இதென்ன இலவச ஸ்டிக்கரா :)

      ஆகம விதியும்கூட :)

      எம் தெய்வம் இல்லையா :)

      Delete
  6. சொறியாசனத்தை தெரிந்து கொண்டேன்

    ReplyDelete
    Replies
    1. நல்லது ,இனி நீங்கள் சொறிந்து கொள்ள வேண்டியதில்லை :)

      Delete
  7. Replies
    1. உங்களின் 'உண்மை கசக்கும் 'என்பதை விடவா அருமை :)

      Delete
  8. அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. மனுஷனை மேலே அனுப்புவதா export quality:)

      Delete
  9. ‘கொலையும் செய்வாள் பத்தினி...!’ என்பது வெட்டிக் கொலை செய்தவனுக்குத் தெரியாதோ?

    ‘நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்...’ ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே...’ - நெஞ்சு வலிக்கிறாப்பல இருக்கு... கொஞ்சம் தண்ணி கொண்டு வா...!

    ‘க்ரௌ...’ கரைந்து உண்ணும்...! அதுனால காக்கா கரையிறமாதிரி சத்தம் வருதோ...? காக்கா கூட்டத்த பாருங்க... அதுக்குக் கத்துக் கொடுத்தது யாருங்கோ...?

    கண்ணா அஞ்சு லட்டு திண்ண ஆசையா...? கோவிந்தா... கோவிந்தா...!

    கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை...! அத்தைக்கு மீசை முளைக்குமா...?

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. மணவை ஜேம்ஸ் ஜி ,உங்கள் கருத்து ...என் அடுத்த பதிவுக்கானது ,திசைமாறி இங்கே வந்துள்ளது ...அங்கே மறுமொழி தந்து இருக்கிறேன் :)

      Delete