31 March 2016

சப்பாத்தி போடுமா சாப்ட்வேர் :)

இப்படியும் நல்ல குணம்  வருமா :)           
                  ''  மாசம் பிறக்கிறதுக்கு முன்னாடியே ,வாடகையை நாணயமா கொடுக்கிற உங்க பையனை எப்படி பாராட்டுவது என்றே தெரியலே !''
                  ''அவன் பிறந்ததே வாடகைத் தாய் வயிற்றிலாச்சே ,இதிலே  ஆச்சரியப்பட என்னாயிருக்கு  ?'' 
இந்த மொக்கைப் போட உதவிய ,இந்த http://www.dinamalar.com/news_detail.asp?id=915165 இந்த தொடுப்புக்கு நன்றி !
அர்த்த ராத்திரியில் இப்படியா கணவனை விரட்டுவது   :)               
            ''விடிஞ்சா ஐம்பதாயிரம் வேணும்... ஏடிஎம் கார்டில் ஒரே நேரத்தில் ஐம்பதாயிரம்  எடுக்க முடியாது ,என்னடி பண்ணச் சொல்றே ? ''  
           ''ராத்திரி 12 மணிக்கு முன்னாலே 25ஆயிரமும்,12 மணிக்கு பின்னாலே 25 ஆயிரமும் எடுக்கலாம் ,இப்பவே ஒடுங்க !''
இருமனம் இணைவது திருமணம் தானே :)
      ''கல்யாண தரகர் முன்பு வெல்டிங் பட்டறை வைச்சுக்கிட்டு இருந்தார்னு எப்படிச் சொல்றே ?''
       ''இரும்பை இணைப்பது வெல்டிங் ,இதயத்தை இணைப்பது வெட்டிங்னு விசிட்டிங் கார்டுலே போட்டுக்கிட்டு இருக்காரே!''
கலர் பார்க்க முடியாதவர் ,மாத்திரையில் மட்டும் :)
             ''காலையில் சிகப்பு  ,மதியம் மஞ்சள்  ,ராத்திரி வெள்ளை மாத்திரையும்  சாப்பிடச் சொன்னா ,சைஸ் மாத்தி தரச் சொல்றீங்களே ,ஏன் ?''
           ''டாக்டர் ,நான் வந்திருக்கிறதே கலரே தெரியலைன்னுதானே ?''
சப்பாத்தி போடுமா  சாப்ட்வேர் :)
    அதெப்படி அம்மா ,டிவைடரில் வரைந்ததுபோல்
    அழகான  வட்டமாய் சப்பாத்தி போடுகிறாய் ?
    கேட்டது MCA முடித்த கல்யாண வயது அருமை மகள் ! 


20 comments:

  1. அதானே...
    12 மணிக்கு முன்னாடி பின்னாடி நல்ல ஐடியாவா இருக்கே....
    வெல்டிங், வெட்டிங்...சரிதான் ஆனா இரண்டுக்கும் சேர்த்து ஒன்னு இருக்கே....? அதான் கட்டிங்:).
    டாக்டர்ஸ் நோட் பண்ணிக்கனும் தான்...
    M C A படிப்பு கேட்கவைக்குது...

    ReplyDelete
    Replies
    1. தொட்டில் பழக்கத்துக்கு முந்திய பழக்கம் ,அவனை விடுமா :)
      அர்த்த ராத்திரியில் பணம் எடுக்கும்போது,ஜாக்கிரதை தேவை ...அவரிடம் சொல்லிடுங்க :)
      தேவன் இணைத்ததை மனிதன் கட்டிங் செய்யாது இருக்கட்டுமே :)
      கலர் பார்க்க முடியாட்டி கஷ்டம்தானே ,டாகடர் ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கிறார்:)
      அனுபவக் கல்வியும் அவசியம்தானே :)

      Delete
  2. நல்ல வேளை நான் வங்கில கணக்கு வச்சுக்கல
    என்னை என் பொண்டாட்டி ஏ.டி.எம் க்கு
    துரத்தமாட்டா....

    ReplyDelete
    Replies
    1. துரத்த மாட்டா என்பது சரிதான் ,தூங்க விடுவாங்களா :)

      Delete
    2. ஜி இந்த டீலிங் நமக்குள்ளே
      இருக்கட்டும் என்க்கு இன்னும்
      கல்யாணமே ஆகல....
      வெளியே சொல்லிடாதிங்க ...

      Delete
    3. பார்க்கிறேன் ,இன்னும் எத்தனை நாளைக்கு உங்களால் டிமிக்கி அடிக்க முடியுமென்று :)

      Delete
  3. இப்போ...இணையத்திலே சாப்ட்வேர்ர் தானே சப்...பாத்தி போட்டுகிட்டு ....இருக்கு g

    ReplyDelete
    Replies
    1. சிலருக்கு சப்பாத்தி ,சிலருக்கு பிரியாணி ,நம்மைப் போன்ற பதிவர்களுக்கு வத்தல் குழம்பு போடவில்லையே :)

      Delete
  4. 01. இதுல ஆச்சர்யப்பட ஒண்ணுமில்லையோ....
    02. ஸூப்பர் ஐயம்பேட்டை ஐடியா ஐஸ்வர்யா
    03. நாகரீகமான ப்ரோக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
    04. இது தேறாது
    05. இவளுக்கு வர்ற புருசன் கொடுத்து வச்சவன்.

    ReplyDelete
    Replies
    1. வாடகை கொடுப்பதில் விசுவாசம் இருக்கத்தானே செய்யும் அவருக்கு :)
      ஐயம் இல்லாமல் ஐடியாதான் :)
      இவர் இணைத்தது இதுவரை பிரிந்ததே இல்லையாமே :)
      தேறாதது இதுவா ,இவரா :)
      அவர் வாய்க்கு அவுல்தான் கிடைக்குமா :)

      Delete
  5. வாழ்க்கை முழுக்க வாடகைதானா... ?

    முடியலைன்னா ஏ.டி.எம். மெஷினை எடுத்துட்டு வாங்க...!

    இணத்து வாழும் கல்யாண தரகர் வாழ்க்கை பரவாயில்லை...!

    சைஸ் மாத்தி தரச் சொல்லி சைஸா கேட்டுட்டீங்க... எனக்கு பார்வை மட்டு... அதான்...!

    எனக்கு எங்க அம்மா நிலாவைக் காட்டி ஊட்டி விடுவாங்க... அதான்... ஊட்டி வரை உறவு...!

    த.ம.6

    ReplyDelete
    Replies
    1. வாடகை வசூல் செய்யவும் கூடும் :)

      பணம் இருக்கான்னு பார்த்துட்டு தூக்குங்க :)

      இணைப்பதையே தொழிலாக செய்கிறாரே :)

      நைசா தடவிப் பார்த்து சைஸை கண்டுபிடித்து விடுவாரோ :)

      உயிருள்ளவரை நிலாவும் கூட :)

      Delete
  6. வெல்டிங் பட்டறை போல
    வெட்டிங் ஏற்பாட்டறை இருந்தால்
    இலகுவாய் இருமனம் இணையுமே!

    ReplyDelete
    Replies
    1. அதான் ,மேட்ரிமோனியல் என்ற பெயரில் இருக்கே :)

      Delete
  7. ஹஹஹஹஹ

    வெட்டிங்க், வெல்டிங்க் நல்ல வார்த்தை விளையாடல்...ஏடிஎம் ஜோக்கும் அருமை..

    ReplyDelete
    Replies
    1. வெல்டிங் தரகர் பணி மகத்தானது தானே :)

      Delete
  8. ஆஹா சப்பாத்தி அருமை ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தொட்டுக்க குருமா தேவைப் பட்டிருக்காதே :)

      Delete
  9. அனைத்தும் அருமை. ரூ.50,000 எடுக்கும் யோசனை மிகவும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. மனைவியின் சமயோசித புத்தி யாருக்கு வரும் :)

      Delete