7 March 2016

கணவன் போட்ட கலக்கல் டீ :)

எவ்வளவு நேரம்தான்  சீரியலைக் கட்டி அழுவது :)

                 ''நம்ம வீட்டு விஷயம் வெளியே போகக்  கூடாதுன்னு ,வாய் பேச முடியாத வேலைக்காரியை வச்சுக்கிட்டியே ,இப்ப ஏன் அவளை வேண்டாங்கிறே ?''

                ''நாலு வீட்டிலே என்ன நடக்குதுன்னு தெரியாம ,ரொம்ப போரடிக்குதே !''

                                                                  

ஆதர்ச தம்பதிகளா இவங்களை எடுத்துக்கக் கூடாது !
          ''நீ பாதி,நான் பாதின்னு வாழ்வது  நல்லதுதானே ,அதுக்காக அந்த 
தம்பதிகள் மாதிரி இருக்ககூடாதுன்னு ஏன் சொல்றீங்க ?''
        ''ஒரு பாட்டில் ஃபுல் வாங்கி ஆளுக்கு பாதியை  ராவா அடிக்கிறாங்களே !''

கணவன் போட்ட கலக்கல் டீ !
            ''என்னங்க ,டீ இவ்வளவு  மோசமா இருக்கே ,எப்படி போட்டீங்க ?''
            ''பால் கொதிக்கும் போது சீனியும் ,வடிச்சப்பிறகு டீத் தூளையும் ஏதோ ஞாபகத்தில் போட்டு கலக்கிட்டேன் !''


எமனிடமே சரண்டர் எனில் தப்பிக்க முடியுமா ?
ஒரிஜினல் மருத்துவரே சிலநேரம் எமன் ஆகிவிடுகிறார் ...
போலி மருத்துவரை என்னவென்பது ?
எமனின் பினாமி என்பதை தவிர !

28 comments:

  1. ஹஹஹஹ நீ பாதி நான் பாதினு தண்ணி அடிக்கறதுலயும்...விளங்கிடும்..

    ம்ம்ம் நாலு வீட்டு விஷய்ம் தெரியத்தானே சிலர் வேலைக்கு ஆள் வைப்பது போல..ஹஹ்

    எமனின் பினாமி ஹஹஹ் ஆனா அது நிறையவே இருக்காங்களே...

    ReplyDelete
    Replies
    1. சமத்துவம் இதிலும் வேண்டாமா :)

      என்னதான் தகவல் தொழில் நுட்பத்தில் வளர்ந்தாலும் இது போல வருமா :)

      எமன் என்பதற்கு பதிலாய் ,MS என்று வேறு போட்டுக்குவாங்க :)

      Delete
  2. தம வாக்கு போட முடியலையே. சுற்றிக் கொண்டே இருக்குதே...ஓட்டு விழுந்ததா என்று தெரியவில்லை ஜி

    ReplyDelete
    Replies
    1. த ம வாக்கு என்பது அதிர்ஷ்ட சக்கரம் போலாகி விட்டது ,அது எப்போது வேலை செய்யுமோ அப்போது போட வேண்டியுள்ளது .இந்த நிமிடத்தில் நன்றாக வேலை செய்கிறது :)

      Delete
  3. ஹா... ஹா... ஹா... வம்பரிப்பு!

    'தம்'மை பாதிப்பாதி அடிச்சா தம் பாதி! இது ராவுலதான அடிக்கறாங்க.. போகட்டும் விடுங்க.. ஒற்றுமையான தம்பதிதான் போங்க!

    ஞாபகமா மறந்துருக்காரோ!

    போலி மருத்துவரிடம் பிழைத்த கேஸ் எத்தனையோ!


    தம +1

    ReplyDelete
    Replies
    1. வம்பரிப்பு ,வாழ்க்கையில் ஒரு அம்சமாகிப் போனதே :)

      ஆஹா ,அரிய கண்டுபிடிப்பு தம் பாதி :)

      இருக்கும் ,இனிமேல் டீ போடச் சொல்ல மாட்டாங்களே :)

      காரணம் ,அவர்கள் ரிஸ்க் எடுக்காத கேசாக இருக்கும் :)

      Delete
  4. ஜி சூப்பர் சூப்பர்.நீ பாதி நான் பாதி கலக்கிடீங்க ஜி.டீ சுவையாக இருந்தது ஐயா.போலி மருத்துவர் இன்னும் நம் நாட்டில் நிலவிக் கொண்டு தான் உள்ளன.சிந்திக்க வைத்தது.நன்றி.த ம 2

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் அந்த டீயை குடிச்சுப் பார்த்தீங்களா ?காலேஜுக்கு நாலு நாள் போயிருக்க முடியாதே :)

      Delete
  5. என்ன இங்க நடக்கிதுங்கிற... நம்ம வீட்டு விஷயமே வெளியவே... எனக்கே தெரியமாட்டேகிதே...! கண்ணக் கசக்கிட்டு நிக்கிறாள்...!

    சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே... மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம்... நீ பாதி நான் பாதி கண்ணே... அருகில் நீயின்றி தூங்காது கண்ணே...!

    நீதானே மாத்தி யோசிக்கச் சொன்னாய்...! நல்ல பிராண்ட்...‘டீ’ இல்ல...!

    ஒரிஜினல் எமன்நம்ம வேலையை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே... நமக்கு வேலையே இல்லையே... நாம என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டு இருக்கிறான்...!

    த.ம. 4






    ReplyDelete
    Replies
    1. வில்லன் வேறே எங்கேயும் இல்லை ,வீட்டிலேயே :)

      பிள்ளைங்க பங்கு கேட்காமல் போனால் சரி :)

      காபி நினைப்பில் டீ போட்டது தப்பா :)

      எமனுக்கு அலைச்சல் மிச்சம் :)

      Delete
  6. அனைத்தும் அருமை. டீ மிக மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. இதே மாதிரி டீ போட்டு,சாப்பிட்டுப் பார்த்தீங்களா :)

      Delete
  7. Replies
    1. ராத்திரி பகல்னு பார்க்காமே தம்'பா'திகள் ராவா அடிக்கிறதை ரசிக்க முடியுதா :)

      Delete
  8. Replies
    1. இதுக்காக வேலைக்காரியை வச்சுக்கலாமா ,ஜி :)

      Delete
  9. டீ குடித்தவர்களுக்குத்தானே தெரியும் அது கலக்கம் டீ என்று.....

    ReplyDelete
    Replies
    1. நீங்க போட வேண்டிய அவசியமில்லாமல் போனதால் தப்பித்தீர்கள் :)

      Delete
  10. Replies
    1. நீண்ட நாளுக்கு பின் உங்கள் கருத்து ..டீ நல்ல தெம்பை உங்களுக்கு கொடுத்திருக்கும் போலிருக்கே :)

      Delete
  11. 1.சமத்துவத்தின் உச்சம்!

    ReplyDelete
    Replies
    1. வீட்டுக்கு ,சமத்துவ இல்லம் என்றே பெயர் வைக்கலாமோ :)

      Delete
  12. 01. அதானே வெறும் வாயில அவலை மெல்ல முடியாதே..
    02. நல்லதொரு குடும்பம்.
    03. வீட்டு விசயத்தை வெளியில் சொல்லலாமா ? ஜி
    04. ஸூப்பர் எமன் ஜி

    ReplyDelete
    Replies
    1. அவல் இல்லாமல் வெறும் வாயை மெல்ல முடியாது என்பதுதானே சரி :)
      ஊருக்கே எடுத்துகாட்டாய் :)
      சொல்வதுக்குத்தான் வேலைக்காரி இருக்கிறாளே :)
      பூலோக எமன்னு சொல்லலாம் :)

      Delete
  13. Replies
    1. ரசித்தால் மட்டும் போதுமா ,ஜி :)

      Delete
  14. நகைச்சுவை மன்னரே அருமையான நகைச்சுவை
    ரசித்து சிரித்தேன்..

    ReplyDelete
    Replies
    1. ஆதர்ச தம்பதிகளை ரசீத்தீர்களா:)

      Delete