''அந்த வீட்டு வாசல்லே ,எச்சரிக்கைப் போர்டு மாட்டி இருக்காங்களா ,எப்படி ?''
''பணம் ,நகைகள் எல்லாம் பேங்க் லாக்கரில் பத்திரமாய் உள்ளது ,வீணாய் முயற்சித்து ஏமாற வேண்டாம்னுதான் !''
புருசன் மேல் இருக்கிற நம்பிக்கை :)
''எப்போ பார்த்தாலும் உன் வீட்டுக்காரர் கத்திகிட்டே இருக்காரே ,எப்படி அவர்கூட வாழ்ந்து கிட்டிருக்கே ?''
''குரைக்கிற நாய் கடிக்காதுங்கிற நம்பிக்கையிலேதான் !
நடிகைன்னா எந்த கூச்சமும் இருக்காதா :)
''எனக்கு கூச்சம் அதிகம்னு...அந்த கவர்ச்சி நடிகை பேட்டியில் சொல்லியிருப்பது , உண்மைதானா ?''
''பல் கூச்சத்தைப் பற்றி சொல்லி இருப்பாங்க !''
திருமணம் தந்த மாற்றம் :)
''உனக்கு கல்யாணம் ஆயிடுச்சே,ஏதாவது மாற்றம் இருக்கா ? ''
''என் பாக்கெட்டில் இருந்த பணம் ஜாக்கெட்டில் போனதுதான் ,பெரிய மாற்றம் !''
|
|
Tweet |
வீணாய் முயற்சித்து எங்க உயிரை எடுக்காதே...!
ReplyDeleteஇதுக்குத்தான் நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டுல வக்காதேன்னு சொன்னேன்...!
‘எனக்கு கூச்சம் அதிகம்னு...!’ நடிக்க வந்தப்ப பேசுன முதல் வசனம்... நல்லாப் பேட்டியப் படிச்சுப் பாருங்க...!
கையிலே வாங்கினேன் பையிலே போட்டேன்... காசுபோன இடம் தெரியுது...!
த.ம. 2
லாக்கரில் இருப்பதைக் கொண்டு வரும் வரை பிணைக் கைதியாவும் ஆக்கி விடாதே :)
Deleteநாயைக் குளிப்பாட்டுவானேன் ,அதுக்கு குளிச்சுக்க தெரியாதா :)
கூச்சம் போகும் முன்னாடியே நடிகை ஆகிட்டாங்களா :)
தெரியுது ,மீட்க முடியலியே :)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
எச்சரிக்கைப் போர்டையும்தானே :)
Deleteநல்ல டெக்னிக்தான். கடுப்பில் அரண்டு போடு போட்டுட்டு போயிடப் போறாங்க... ஆகா, புருஷன் நாய்தான்! ... ஹா.... ஹா.... ஹா... அப்படியும் ஒரு கூச்சம் இருக்கோ... ஹா.... ஹா.... ஹா.... நல்ல மாற்றம்!
ReplyDeleteஎரிச்சல் தரும் வாசகம் ,அப்படியும் செய்யச் சொல்லுமோ :)
Deleteநாய்னா விசுவாசமிருக்கணுமே:)
தவிர்க்க முடியாத கூச்சம்தானே :)
மாற்றம் வேணும்னு சொல்றது இதைத் தானா :)
குரைக்கிற நாயும் நம்பிக்கையும்
ReplyDeleteஒரு பக்கத்தில
பாக்கெட்டில் இருந்த பணம் ஜாக்கெட்டில் போனது
மறு பக்கத்தில
இது தாங்க குடும்பம்
குடும்பமே இதிலே அடங்குதா :)
Deleteஆஹா ஜோக்காளி ஐயா
ReplyDeleteநன்றாக ரசித்தே
சிரித்தேன் ஐயா....
உங்களின் ரசனையான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)
Deleteதிருடர்களுக்கு எச்சரிக்கை விட்டது கோபமாகிவிடாமல்...எந்த பேங்க் லாக்கர் என்று தெரிவித்து இருந்தால் கோபத்துக்கு பரிகாரமாய் இருந்திருக்கும்.
ReplyDeleteவிட்டால் லாக்கர் சாவியையும் கொடுக்கச் சொல்லுவீர்கள் போலிருக்கே :)
Deleteஇவ்வளோ உஷாராய் இருந்தால் திருடர்கள் எப்படி பிழைப்ப நடத்தறது. பேசாம அரசியல்ல சேர்றதை தவிர அவங்களுக்கு வேற வழியில்ல
ReplyDeleteதேர்தல் பாதை திருடர் பாதை என்பதை நீங்களும் ஒப்புக் கொள்கிறீர்களா :)
Delete01. உண்மையிலேயே இதற்கு நன்றி சொல்ல வேண்டும்.
ReplyDelete02. மரியாதைக்கோர் மனைவி
03. டென்டிஸ்ட்டிடம் அப்படித்தானே சொல்லணும்.
04. மாற்றம் ஒன்றே ஏற்றம் தரும்.
நன்றின்னா எப்படி ,அடுத்த வீட்டில் கொள்ளை அடித்த நகையில் பாதியை போஸ்ட் பாக்ஸ்சில் போடச் சொல்வதா :)
Deleteஅவர் கூட வாழ்ந்து பார்த்தாதானே உங்களுக்குப் புரியும் :)
அவருக்கு மட்டுமா அந்த கூச்சம் :)
ஏமாற்றம் இல்லே தருது :)
நகைப் பணி தொடரட்டும்
ReplyDeleteமகிழ்வு பரவட்டும்
தம +
நான் தொடர்கிறேன் ,மகிழ்வு பரவ தமிழ்மணம் ஒத்துழைக்குமா :)
Deleteஇன்றைக்குத் மதிப்பெண் வழங்க வாய்ப்பு மறுமொழி வழங்க முடிந்தது
ReplyDeleteதமிழ் மணம் திரட்டி சரியாகி வருவதில் எனக்கும் மகிழ்ச்சி அய்யா :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
இரசித்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசித்து கருத்து தந்தமைக்கு நன்றி :)
Delete