14 March 2016

புலன் அடக்கம் இல்லா புருஷன் :)

          ''என் வீட்டுக்காரர் மாலை போட்டுகிட்டார்,உன் வீட்டுக்காரர் போட்டுக்கலையாடீ ?''
          ''ஹும்...அவராவது போட்டுக்கிறதாவது ,இன்னொருத்தி கழுத்துலே வேணும்னா போட நினைப்பார் !''

அடச் சீ ,காதல் கடிதங்களை மகனை படிக்க விடுவதா :)
           ''காதலிக்கிறப்போ , நான் எழுதிய கடிதங்களை ,இப்போ நம்ம பையன் படிச்சிட்டான்னு எப்படி சொல்றே ?''
           ''மொக்கைன்னு தெரிஞ்சும் மோசம் போயிருக்கியே அம்மான்னு கிண்டல் பண்றானே !''

காதலின் எல்லை எது :)
         ''இப்போ அழுது என்ன பிரயோசனம் ? உன் காதலன் உன்னைக்  கை விட  நீதான் முதல் காரணம் !''
           ''என்னடி சொல்றே ?''
          ''உன் மேலே கையை விட அவனை அனுமதிச்சது நீ தானே ?''
நகரத்துப் பிள்ளைகள் வளரும் விதம் :)
                ''பால் எப்படி கிடைக்குதுன்னு ,என் பையனிடம் கேட்டா 'டிப்போவில் இருந்துன்னு 'சொல்றான் !''
               ''உங்க  பையன் பரவாயில்லை ,என் பையன் 'வாசலில் தொங்க விட்டிருக்கிற பையில் இருந்து 'ன்னு சொல்றானே !''
கொசு அடிக்கவும் கத்துக்கணும் :)
பறந்து வந்து ...உடம்பின் மேல்  உட்கார்ந்து ...
கடி இடத்தில் 'லுப்ரிகேசன் 'செய்யும்  வரையிலும்  நமக்குத் தெரியாது ...
மெய் மறந்து ரத்தம் உ றிஞ்சும் கொசுவை அடிக்க வேண்டாம்  ..
மெதுவாக நசுக்கினாலே செத்துவிடும் ...
கொசு சொல்லும் பாடம் ...
பறப்பதை பிடிக்க நினைக்காதே !
சாதிக்க பொறுமை வேண்டும் !
மெய்   மறந்து இருக்கையில் ஆபத்து அதிகம் !

18 comments:

  1. எல்லாத்துலயும் ஒரு பலனை எதிர்பார்ப்பார் போல!

    அடுத்தவங்க காதல் கடிதம் எப்பவுமே மொக்கைதானோ!

    அதானே...

    ஞானம்!

    ம்ம்ம்...

    ReplyDelete
    Replies
    1. பலன் இல்லா காரியம் செய்ய மாட்டார் ,இந்த புலன் அடக்கமில்லா புருஷன் :)

      சில வருடங்களுக்குப் பின் படித்தால் ,எழுதியவருக்கும் அப்ப்படித்தான் இருக்கும் :)

      கல்யாணம் 'கை'கூடலையே :)

      தெரிந்ததில் இருந்துதானே பிறக்கும் ஞானம் :)

      அனுபவம் இல்லையோ :)

      Delete
  2. இது மாலை நேரத்து மயக்கம்... மாலையிட்ட மணாளன் வாழ்க...!

    அப்பா அப்பயில இருந்தே ஏமாத்துறதேயே தொழிலா வச்சிருக்காரான்னு கேக்குறான்...!

    அவன்... ‘மேல்’தான்னு நிருபிச்சிட்டான்...! ஆமாம்... கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள்தான்னு ஏன் சொல்றாங்க...?!

    பால் எங்கே இருந்து கிடைக்கிதுன்னு இன்னுமா தெரியல...? பால் தமிழப்பால் எனும் நினைப்பால் இதழ் துடிப்பால் அதன் சிரிப்பால் சுவை அறிந்தேன்...!

    ‘மெய் வருத்தம் பாரார்... கண் துஞ்சார்...!’- கொசு.

    த.ம. 3





    ReplyDelete
    Replies
    1. நல்ல குணாளனும் வாழ்க :)

      பிள்ளையாவது ஏமாற்றாமல் இருக்கட்டும் :)

      மேலுக்கு ஆசைப் படுபவன் மேல் மக்களா :)

      நல்ல வேளை ,டம்ளரில் இருந்து கிடைக்கிறது என்று சொல்லாமல் போனான் :)

      கருமமே கண்ணானவரும்கூட :)

      Delete
  3. கொசு எப்ப மெய் மறக்கும்
    அதுக்கு நமக்கு பொறுமை இருக்குமா...
    ரசித்தே சிரித்தேன் நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. பொறுமை நம்மிடம் இல்லாததால் கொசு ஜெயித்து விடுகிறதே :)

      Delete
  4. ரசித்தேன் நண்பரே
    தம சர்வர் எரர் என்றே வருகிறது

    ReplyDelete
    Replies
    1. நானும் 'எரர்' வராத நேரம் பார்த்து வாக்கைப் போட வேண்டியிருக்கே :)

      Delete
  5. Replies
    1. காதலின் எல்லையயும்தானே :)

      Delete
  6. Replies
    1. யாரும் நசுக்கி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் :)

      Delete
  7. பையனின் காஅதல் கடிதம் பற்றிய பதில் ஹஹஹ

    கொசுவின் பாடம் அருமை..ஜி

    ReplyDelete
    Replies
    1. மோசம் போனது உண்மையானால் ,இவன் எங்கிருந்து வந்தான் :)

      கற்பதற்கு எல்லை ஏது :)

      Delete
  8. 01. புருஷனைப்பற்றி நன்றாகவே கணித்து இருத்தின்றாள்
    02. ச்சே மானக்கேடு
    03. ஸூப்பர் பஞ்ச்
    04. முன்னவன் அறிவாளிதான்
    05. உண்மை

    ReplyDelete
    Replies
    1. கணிப்பு சரிதான் ,இந்த கோளாறுக்கு காரணம் என்னவென்று அவர் யோசிக்க வேண்டாமா :)
      தாம்பத்தியத்தில் இதெல்லாம் சகஜமப்பா :)
      எல்லை மீறினால் தொல்லைதானே :)
      பால் வியாபாரத்தில் அண்ணாமலை அளவுக்கு ,நல்லா வருவான் :)
      மெய்யை மறக்கக்கூடாது ,மெய் சிலிர்த்து நின்றாலும் :)

      Delete
  9. அனைத்துமே அருமை ஐயா.உண்மையை அழகாக சொல்லியுள்ளீர் ஐயா.இரசித்தேன் இன்றை தலைமுறை இப்படி தான் வளர்கின்றனர் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. கணணியில் புகுந்து விளையாடும் இவர்களுக்கு, வாழ்க்கைக் கல்வி மிகவும் குறைவுதான் :)

      Delete