5 March 2016

'பார்க் 'கில் பிறர் பார்க்க'ச்' செய்யக் கூடாது :)

நிம்மதியான தூக்கம் எப்படி வரும் :)
             ''உங்களுக்கு ஒரு நொடியில் தூக்கம் வந்துவிடுதே ,எனக்கு வர மாட்டேங்குதே ,ஏன் ?''
             ''தூக்கம்தான் எனக்கு சொத்து ,ஆனால் உங்களுக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கே !''

பதவி சுகம் கண்டவர்களின் யாகம் :)
                 ''பதவியில் இருக்கிறவங்க யாரும்  எனக்காக யாகம் வளர்க்க வேண்டாம்னு  ஜெயிலில் இருந்து தலைவர் சொல்லியிருக்காரே ,ஏன் ?''
                ''இந்த நிலைமை மாறக்கூடாதுங்கிற  வேண்டுதலோடு யாகம் வளர்த்ததா  அவருக்கு தெரிய வந்திருக்காம் !''
'பார்க் 'கில் பிறர் பார்க்க'ச்'  செய்யக் கூடாது :)
             ''அப்பாவை 'பார்க்'கில் வாக்கிங் மட்டும் போயிட்டு,வீட்டிற்கு வந்து  தியானம் பண்ணச் சொல்லும்மா !''
            ''ஏன் ,என்னடா ஆச்சு ?''
            ''கண்ணை மூடி தியானம் பண்ணினாராம் ,கண்ணை திறந்து பார்த்தா ,நிறைய  சில்லறைக் காசு  விழுந்து கிடந்ததாம்  !''
மலையிலேயே உருண்டு 'போயிருக்க 'வேண்டியவரோ இவர் :) 
                       ''அந்த  மலைக் கோவிலுக்கு போனா  திருப்பம் வரும்னு சொல்லுவாங்க ,உங்களுக்கு  எப்படி ?''
               ''மலையிலே ஏறும் போதும் இறங்கும் போதும் திருப்பம் வந்ததே !''
கொடிது கொடிது அற்பாயுளில் சாவு :)
  தவணை முறையில் சிகரெட் சாம்பலை தட்டியவன் ...
  மொத்தமாய் சாம்பலானான்  அற்பாயுளில் !

21 comments:

  1. ஆஹா... உண்மைதான்.

    ஆஹா... தலைவர் எல்லாம் அறிந்தவர்!

    அடேடே... அதிகாலை வருமானம். நல்ல ஐடியாவா இருக்கே..

    எனக்கும் "இந்த"த் திருப்பம் 2002 இல் வந்தது!

    ம்ம்ம்... பாவம். சிகரெட் அவனைக் குடித்து விட்டது!

    ReplyDelete
    Replies
    1. தானதர்மம் செய்தாலாவது நிம்மதி கிடைக்கும் ,தூக்கம் வரும் ..அவர் செய்வாரா :)

      இல்லைன்னா தலைவரா இருக்க முடியுமா :)

      மேலுக்கு ஒண்ணும் போடாமல் உட்கார்ந்தால் வருமானம் இரட்டிப்பாகும் :)

      ஒரு மாமாங்கம் போயிடிச்சே ,மறுபடியும் திருப்பம் வரலையா :)

      தவணைமுறையில் தற்கொலை செய்துகிட்டான் என்றும் சொல்லலாம் :)

      Delete
  2. இப்ப நான் தெருக்கோடியில் நின்னு புலம்பினாலும்... எல்லோருக்குகும் ஒரு நாள் கோடி உண்டு... என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கலை.... மெத்த வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை... இந்த வேதனை யாருக்குத்தான் இல்லை...!

    நீங்க இருக்கும் இடம்தான் எனக்கு புண்ணியஸ்தலம்...! நீங்க இருக்கும் திசையை நோக்கி வணங்கி என் பணியைத் தொடங்குறேன்... நீங்க எங்கு இருந்தாலும் நல்லா இருக்கணும் என்பதைத் தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே! என்னால இதுக்கு மேல பேச முடியல... அழுகை அழுகையா வருது...!

    கண்ணத் தொறக்கனும் சாமி.. கையப்புடிக்கனும் சாமி... சரி விடுடா...சாமி இப்பத்தான் கண்ணத் திறந்திருக்கு போல இருக்கு... இப்படியாவது நாலு காசு சம்பாதிக்கட்டும்...!

    திருப்பதிக்கு போனாத்தான் திருப்பம் வரும்ன்னு நெனக்கிறேன்... தங்க(ம்)... தங்க(ம்)... கொஞ்சம் திருப்பி விட்டாப் பரவாயில்லை...!

    சிகரெட் சாம்பலால் மொத்தமாய்ச் சாம்பலான... வாழ்க்கையின் சீக்ரெட்ட போட்டு உடைத்து விட்டீர்கள்...!

    த.ம.1






    ReplyDelete
  3. "பார்க்" பார்க்க சென்றீர்களா ஜி...?

    ReplyDelete
    Replies
    1. பாய்ட்ண்டைச் சரியா பிடிச்சது நீங்க ஒருவர்தான்,ஹிஹி :)

      Delete
  4. சிகரெட் - மொத்தமாய் சாம்பலாக்கியது! :(

    மற்றவற்றை ரசித்தேன்.

    ReplyDelete
  5. மனைவி: எங்கயங்கோ போறியள்?

    நான்: பார்க்கில ஒருவர் கண்ணை மூடித் தியானம் பண்ணினாராம், கண்ணை திறந்து பார்த்தா, நிறைய சில்லறைக் காசு விழுந்து கிடந்ததாம்!

    மனைவி: அப்ப
    தியானம் பண்ணப் போறதாய்,
    பிச்சை எடுக்கவா போறாய்

    நானும்
    இப்படி எண்ணிப் பார்த்தேன்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கோணமும் அருமை :)

      Delete
  6. பார்க்கில் தியானம் செய்யும் எல்லோருக்கும் சில்லரை விழுவதில்லையே ஜி

    ReplyDelete
    Replies
    1. அதுக்குத்தான் சொல்வாங்களே ........போனாலும் முக ராசி வேணும்னு :)

      Delete
  7. சொத்து ஒரு சுமையாக இருக்கலாம் அதனால்தான் தூக்கம் வரமாட்டேன் என்கிறது
    இதெல்லாம் தெரிந்ததனால்தானே அவர் தலைவர்
    அப்பாவீட்டின் முன் அமர்ந்து தியானம் செய்தால் இவர்களாவது கொஞ்சம் சில்லரையைப் பார்க்கலாமே
    அதானே
    சிகரெட் சாம்பலைத் தட்டாதவனும் சாம்பலாகிறான்

    ReplyDelete
    Replies
    1. 01. ரெண்டு பேரையும் டிரான்ஸ்பர் செய்து கொள்ள சொல்லுங்கள் ஜி
      02. அதையும் போட்டுக் கொடுத்துட்டாங்களா...
      03. வந்ததை வரவில் வைப்போம்.
      04. இதுக்குத்தான் சொல்றாங்களா.....
      05. என்றைக்காவது கடன் தீர்க்க வேண்டுமே....

      Delete

    2. G.M BalasubramaniamSat Mar 05, 03:31:00 pm...
      இந்த சுமையை இறக்கவும் முடியலையே :)
      முற்றும் துறந்தவர் ,இல்லை இல்லை அறிந்தவர் தலைவர் :)
      பாக்கெட் மணியாகுமா:)
      இது அல்லவா உண்மையான திருப்பம் :)
      சரி ,தொட்டவனும் அதைப்போல உதிர்ந்து விடுகிறான் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள் :)

      Delete
    3. KILLERGEE DevakottaiSat Mar 05, 05:15:00 pm>>>
      ஒருத்தர் நிம்மதியா தூங்குறது உங்களுக்கு பிடிக்கலை போலிருக்கே :)
      அதுக்கு ஆள் பஞ்சமா :)
      எதிர்பார்க்காமல் வருவதையும் :)
      உங்களுக்கு அனுபவம் இல்லையா :)
      வட்டியும் முதலுமா தீர்ந்து போச்சு :)

      Delete
  8. சிரிக்கவும் சிந்திக்கவும்
    அருமை அன்பரே
    அனைத்தும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. இரட்டைக் குதிரை சவாரி செய்கிறேனா நான்,நம்ப முடியலியே :)

      Delete
  9. சிரிக்கவும் சிந்திக்கவும்
    அருமை அன்பரே
    அனைத்தும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. இரட்டைக் கிளவி போல் ,உங்க கருத்தும் வந்து விட்டது போலிருக்கே ,நன்றி:)

      Delete
  10. பார்க்கில் பலர் பார்க்க !! பார்த்து லிங்க்க க்ளிக் பண்ணி வந்தா !! ஏமாத்திட்டீங்களே ;)

    ReplyDelete
    Replies
    1. அட'ச்'சே ,பல்பு வாங்கிட்டீங்களா :)

      Delete