19 March 2016

மாமனாரிடமே ஒப்பீடா :)

இது நடக்கிற காரியமா :)                   
                 ''அவர் ,வாங்கின கடனை  திருப்பித் தரமாட்டார் போலிருக்கா ,ஏன் ?''
                  '' மல்லையா  இந்தியா வர்ற அன்னைக்கு தர்றேன்னு சொல்றாரே !''
திருடனுக்கும் தெரிஞ்சு போச்சா :)            
             ''என்னங்க ,அந்த திருடன் ,உங்களை 'நீயெல்லாம் ஆம்பளை 'யான்னு கேட்டானே ...ஏன் ?''
            '' பீரோ சாவி  என்னிடமும்,லாக்கர் சாவி உன்னிடமும் இருக்குன்னு  சொன்னேன் !''
மாமனாரிடமே ஒப்பீடா :)
           ''மாப்பிள்ளே ,நான் வாங்கித் தந்த இன்வர்ட்டர் எப்படி இருக்கு ?''
           ''சத்தம் போடாம அருமையா வேலை செய்யுது ,உங்க மகளைத்தான் அந்த டைப்பிலே நீங்க வளர்க்கலே !''
வாழ்வாங்கு வாழும் பெற்றோர்கள் :)
வாழும்போதே பிள்ளைகளால் 
கைவிடப்பட்ட பெற்றோர்கள்கூட 
இறந்த பின்னும் வாழ்கிறார்கள் ..
வாக்காளர் பட்டியலில் !

24 comments:

  1. 01. இதை அபுதாபியில் நானும் சொல்லலாமா ?
    02. கேட்டுட்டு போறான் பொருள் மிச்சமாச்சுல...
    03 இது வாங்குனதுல... ?
    04 பெருமைப்படுவோம்

    ReplyDelete
    Replies
    1. வங்கியில் ஒன்பதாயிரம் கோடி கடன் இருந்தால் சொல்லலாம் :)
      எங்கே மிச்சமாச்சு தாலிச் சங்கிலியையும் அறுத்துட்டானே:)
      அவன் மனைவி வேலையே செய்யாமல் சத்தம் மட்டுமே போடுவாளோ :)
      வாக்குக்கு வங்கிக் கணக்கில் பணம் வந்தால் பங்கும் பெறுவோம் :)

      Delete
  2. அருமை இரசித்தேன் ஐயா.எப்படி இப்படியெல்லாம் யோசனை வருகிறது உங்களுக்கு..? நகைச்சுவையோடு உண்மையை சொல்லாம் சொல்லிவிடுகிறீர்கள் அருமை ஐயா.தொடருங்கள் தொடர்கிறேன் வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. இதைதான் பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்களே ,இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதை பிடிக்க முடியாது என்று :)

      Delete
  3. ஹா... ஹா... ஹா... மல்லையா நல்ல பேசு பொருளாகி விட்டார்!

    ஹா.. ஹா... ஹா... ரோஷத்தைத் தூண்டி விட்டுப் பார்க்கிறான் திருடன்!

    ஹா... ஹா... ஹா..

    ஆம்..

    ReplyDelete
    Replies
    1. சும்மாவா ,வங்கிக் கடன் ஒன்பதாயிரம் கோடி கட்டணுமாமே:)

      திருடன் சொல்லியா வரப் போவுது :)

      வாங்கிக் கொடுத்ததே தப்பா போச்சே :)

      போற போக்கைப் பார்த்தால் ,உயிரோடிருக்கும் வாக்காளர் எண்ணிக்கை குறைந்து விடும் போலிருக்கே :)

      Delete
  4. Replies
    1. மல்லையா ,தீபிகாவுடன் உடன் இருப்பதை ரசிக்க முடியுதா :)

      Delete
  5. Replies
    1. ஒப்பீட்டையும் தானே :)

      Delete
  6. மல்லையா செம டாப்பிக்காகிட்டார் போல இருக்கு..ஹஹஹ்

    இன்வெர்ட்டர் அருமை..

    டாப் இறுதியாகச் சொல்லப்பட்டது..வாக்காளர் பட்டியல்...உண்மை!

    ReplyDelete
    Replies
    1. இனி ஆறு மாசமாவது இந்த மல்லையா பிலிம் ஓடும் :)

      சைலென்ட் என்றாலே அருமைதானே :)

      இறுதி யாத்திரை சென்றவர்கள் ,வாக்காளர்கள் அல்ல ...வாய்க்கரிசியாளர்கள்:)

      Delete
  7. Replies
    1. திருடன் கேட்டதையுமா :)

      Delete
  8. வாழ்வாங்கு வாழும் பெற்றோர்கள்
    அருமை!

    ReplyDelete
    Replies
    1. இலக்கியத்தரமா இருக்கா தலைப்பு :)

      Delete
  9. Replies
    1. தங்கச்சிக்கு வாய் கொஞ்சம் நீளம்தான் ,அதுக்காக ,மாப்பிள்ளை இப்படி சொல்வதை எப்படி ரசிக்க முடியும் :)

      Delete
  10. மல்லையாவோட மல்லுக்கட்ட வேண்டியதுதான்...! கிங் பி(க்)ஷர்தானே...!

    அந்த திருடன் தெரியாம கேட்டிட்டான்...எல்லாம் சரியாத்தானே இருக்கு...!

    வளர்த்த கிடா மார்பில பாயுதா... பயப்படாதிங்க... மாப்பிள எல்லாம் சரியாயிடும்...!

    இருக்கும் போது ஒழுங்கா வாழ முடியல... இறந்த பிறகாவது... இருந்திட்டு போகட்டுமே...!

    த.ம. 7

    ReplyDelete
    Replies
    1. வங்கி அதிகாரிகளை மடக்குவதிலும் கிங்கு தானா :)

      இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்கா :)

      வளர்த்த கடா என்றால் பரவாயில்லை ,வாழ வந்த கடா :)

      வேட்பாளர் தரும் பணத்தை பெற, இந்த பிணங்களும் வாய் திறக்குமா :)

      Delete
  11. ஹ ஹ ஹா... நா ஆம்பளகோவ்...

    ReplyDelete
    Replies
    1. அதை , அவர் மனைவியில்லே சொல்லணும் :)

      Delete
  12. மாமனாரிடமே ஒப்பீடு---அருமை..பெருமை.....

    ReplyDelete
    Replies
    1. அவர் ரொம்பவும் தான் நொந்து இருப்பார் போல :)

      Delete