19 April 2014

மனைவி தூக்கத்தைக் கெடுத்ததற்கு பிரதி உபகாரம் !

''அந்த முதியோர்கள் இல்லத்திற்கு தேவையான தூக்க மாத்திரையை தானமா தர்ற ,உன் வீட்டுக்காரர் தாராள மனசைப்  பாராட்டலாமே !''
''தாராள மனசுமில்லே,ஏராள மனசுமில்லே ...தினசரி குறட்டை விட்டு என் தூக்கத்தைக் கெடுக்கிற குற்ற உணர்வுதான் அதுக்கு காரணம் !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில் ....


தின 'சிரி ' ஜோக்!நன்றி மறவாத வெஜிடேரியன் !

''நம்ம வீட்டு விசேசத்திற்கு வந்துபோன நண்பர் 

 SMS ல் என்ன எழுதி இருக்கார் ?''

''சிக்கனற்ற, சிக்கனமற்ற ,மட்டனற்ற விருந்து படைத்தமைக்கு 

மட்டற்ற மகிழ்ச்சியாம் !''



40 comments:

  1. குறட்டைக்காக பரிகாரமா?

    ReplyDelete
    Replies
    1. ஊருக்கு உபகாரி ,வீட்டுக்கு அபகாரின்னு வேற அந்த அம்மா புருஷனை பரிகாசம் செய்வதாக கேள்விபட்டேன் !
      நன்றி

      Delete
    2. ஹா.... ஹா... இது வேறயா? சரிதான்...

      Delete
    3. எல்லோர் வீட்டிலும் கணவனுக்கு கிடைக்கும் பட்டம்தானே ?
      நன்றி

      Delete
  2. தூக்க மாத்திரை கெடுதி ஆயிற்றே...

    ReplyDelete
    Replies
    1. தூக்கமே வரலேன்னா இன்னும் அதிக கெடுதியாச்சே !
      நன்றி

      Delete
  3. உண்மையச் சொல்லுங்க யாரந்தாள் ?....தானமா கொடுக்கிற
    தூக்க மாத்திரைய வச்சே கொண்னுபுடுவேன் கொண்ணு :)))))

    ReplyDelete
    Replies
    1. பத்து வீட்டை எடுத்துகிட்டா நாலு வீட்டிலாவது 'அந்தாள் 'இருக்கத்தானே செய்றான் ,எத்தனைப் பேரைக் கொல்லப் போறீங்க ?
      நன்றி

      Delete
  4. பொது நலத்திலும் ஒரு சுய நலம்தானே!

    ReplyDelete
    Replies
    1. பொது நலத்திற்காக வாங்கும் மாத்திரையை பெண்டாட்டிக்கும் கொடுக்க வேண்டியது தானே ,நிம்மதியா அவங்களும் தூங்குவாங்களே!
      நன்றி

      Delete
  5. Replies
    1. நீங்க தினசரி ஆகான்னு சொல்றீங்க ,அந்த அம்மா ஒருநாளும் ஆகா ,இன்னைக்கு நல்ல தூக்கம்னு சொல்லிக்க முடியலையே !
      நன்றி

      Delete
  6. Replies
    1. சிரிக்க ,சிரிக்க சிரிப்பு வருதா ?
      நன்றி

      Delete
  7. முதியோர் இல்லத்துக்கு தூக்க மாத்திரை தானம்!... நல்லது தான்..
    பிற்பாடு நமக்கும் தேவைப்படும் அல்லவா!..

    ReplyDelete
    Replies
    1. மேலே ...அஜீஸ் ஸார் 'பொது நலத்திலும் ஒரு சுயநலம்'ன்னு சொன்னது சரிதான் போலிருக்கே !
      நன்றி

      Delete
  8. அவர் ரொம்ப நல்லாஆஆஆஆஆஆஆவர் போல:))

    ReplyDelete
    Replies
    1. இல்லையா பின்னே ,பெண்டாட்டி தூக்கத்தைக் கெடுத்து ,இவர் நிம்மதியா தூங்குறாரே !அந்த அம்மா ஆ ஆ ஆ ஆ ஆ ன்னு கொட்டாவி விட்டுகிட்டே இருக்கார் தூக்கம் வராம!
      நன்றி

      Delete
  9. எஸ் எம் எஸ் அனுப்பியவர்
    கவிஞராயிருப்பாரோ ?
    சொல்லிச் சென்றவிதம் அருமை

    ReplyDelete
    Replies
    1. மரக்கறி உணவுன்னா அந்த மரபு கவிஞருக்கு ரொம்பப் பிடிக்கும் போல !
      நன்றி

      Delete
  10. இரண்டும் இரண்டு ரகம் .ஒவ்வொன்றும் தனி சுகம்...

    ReplyDelete
    Replies
    1. மூன்று ரகம் போடலாம் என்றால் ஜோக்காளியின் வயது இன்னும் இரண்டுகூட ஆகலையே ?
      நன்றி

      Delete
  11. அருமையான ஜோக்குகள் ஜி, இரண்டாவது ஒரு வெரைட்டி, முதலாவது ஒரு வெரைட்டி. சில வீடுகளில் மனைவிகளே கொறட்டை விட்டால்?????

    ReplyDelete
    Replies
    1. நாலு தூக்க மாத்திரையை மொத்தமா சாப்பிடச் சொல்லி விடலாமா ?
      நன்றி

      Delete
  12. அட.. கலக்கல் தான். என் தளத்தில்: கந்தசாமியும் சுந்தரமும் - 02 http://newsigaram.blogspot.com/2014/04/kandasaamiyum-sundaramum-02.html

    ReplyDelete
    Replies
    1. உங்க கலக்கலையும் படிச்சிட்டுச் சொல்றேனே !
      நன்றி

      Delete
  13. இரண்டாவதுதான் 'சிக்கனற்ற சிக்கனமற்ற' சூப்பர்ப்!

    ReplyDelete
    Replies
    1. நீங்க தீவிர வெஜிடேரியனா ?
      நன்றி

      Delete
  14. அட இப்படியெல்லாம் உபகாரம் செய்யறாங்களா? ஹாஹா!

    ReplyDelete
    Replies
    1. மனுஷன் முழித்து இருந்தால்தான் பெண்டாட்டிக்கு தொந்தரவுன்னா ,தூங்கினாலுமா ?அந்த பாவத்தைக் கழுவத்தான் இந்த தானமா ?
      நன்றி

      Delete
  15. பரவாயில்லையே அந்த மாதிரையை கொஞ்ச்ம் இங்க தள்ளி விடுங்க.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கென்ன வயசா ஆயிடுச்சு ?இனியா கூட இனிமையா உங்களுக்கு பொழுது போகுமே !
      நன்றி

      Delete
  16. மிகவும் ரசித்தேன்..

    ReplyDelete
    Replies
    1. கமெண்ட்டையும் சேர்த்துதானே ?
      நன்றி

      Delete
  17. என்ன ஒரு நல்லெண்ணம்! :)

    ReplyDelete
    Replies
    1. நல்ல எண்ணம் வர்ற மாதிரி பெண்டாட்டிகிட்டே நடந்துக்கத் தெரியலையே ?
      நன்றி

      Delete
  18. அனைத்தையும் தொகுத்து புத்தகம் போடலாமே!

    ReplyDelete
    Replies
    1. ராயல்டி கொடுத்து புத்தகம் போடயாராவது ஒரு பப்ளிஷர் நிச்சயம் வருவார் அப்போது போடலாம் என்று இருக்கிறேன் அய்யா !
      நன்றி

      Delete
    2. உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி !

      Delete