20 April 2014

தாலி கட்டுவதற்குள் அவசரமா ?

''சீக்கிரம்  மாப்பிள்ளையை  தாலி கட்டச் சொல்றீங்களே ,ஏன்?
''அட்சதை  தூவக் கொடுத்த அரிசியை இப்பவே பாதிப்பேர் மென்று தின்னுட்டாங்களே !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில் ....


''பத்து வருசமா என் உப்பைச் சாப்பிட்டுகிட்டு இருக்கே,இப்ப திடீர்ன்னு என் பனியன் சைஸை கேட்கிறீயே ,ஏன் ? ''
''உப்பிட்டவரை உள் 'அளவும் 'நினைன்னு சொல்லி இருக்காங்களே ,முதலாளி !''


33 comments:

  1. Replies
    1. ஆசீர்வாதம் பண்ண அரிசியும் இல்லே ,ஆளுமில்லே..விருந்தும் இல்லைன்னா கொந்தளிச்சிற மாட்டாங்களா ?
      நன்றி

      Delete
  2. ரைட்டு மட்டும்தானா ?
    நன்றி

    ReplyDelete
  3. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  4. ஏன் அவ்வளவு வறட்சியா ஏற்பட்டுவிட்டது?

    ReplyDelete
    Replies
    1. பசி நேரத்தில் காலாகாலத்தில் தாலி கட்டி விட்டால் அவனவன் தின்னுட்டு போய்கிட்டே இருப்பானே !
      நன்றி

      Delete
    2. //காலாகாலத்தில் தாலி கட்டி விட்டால் - அவனவன் தின்னுட்டு போய்க்கிட்டே இருப்பானே!...// என்ன ஒரு நல்ல எண்ணம்!..

      சரி.. மொய் எழுதாம போய் விட்டால்?...

      Delete
    3. அப்படி போறவங்களை கழுத்துலே துண்டைப் போட்டு இழுத்துற வேண்டியதுதான் !நன்றி

      Delete
  5. ரிஜிஸ்டர் மேரேஜோ அல்லது கோவில்லயோ இல்லையே! மண்டபத்துலதானே? பின்னே ஏன் அவசரம்! அரிசியை சாப்பிடற அளவுக்கு?!

    ReplyDelete
    Replies
    1. எங்கே கல்யாணத்தை வைத்தாலும் முகூர்த்த நேரம் ஒண்ணரை முதல் இரண்டரையிலா வைப்பது ?
      நன்றி

      Delete
  6. நல்லவேளை.. உப்பைத் தின்னவன் - பனியன் அளவை கேட்டான்!..

    ReplyDelete
    Replies
    1. கேட்டதோடு விட்டானே !
      நன்றி

      Delete
  7. உப்பைத் தின்னவன் பனியனைக் கேட்காமல் - அளவை மட்டும் கேட்டானே!.. பாராட்டலாம்!..

    ReplyDelete
    Replies
    1. அது அடுத்த கட்டமா இருக்குமோ ?
      நன்றி

      Delete
  8. உள் அளவு அருமை. அதை ஒரு ஆண் கிட்ட கேட்டதால தப்பிச்சான்..! ;-)

    ReplyDelete
    Replies
    1. எனக்கு தெரியும் ,இளரத்தம் ... நீங்க இப்படித்தான் யோசிப்பீங்க என்று !(அடக்கரிடக்கல் காரணமா நான் பனியன்னு நாசூக்கா சொன்னேன் !)
      நன்றி

      Delete
    2. எடக்கு மடக்கா நான் சொல்றதுக்கா இந்த சிரிப்பு ?
      நன்றி

      Delete
  9. அது அடக்கரிடக்கள் இல்ல பாஸ் இடக்கரடக்கல் # தொழில் புத்தி :)
    அப்புறம் அந்த ஆள் வாசல்ல கட்டிருந்த வாழைமரத்தில் இருந்து வாழைப்பூவை பரிச்சுட்டதா தகவல். செக் பண்ணிகோங்க!

    ReplyDelete
    Replies
    1. இதுக்குத்தான் டீச்சர் வேணும்ன்னு சொல்றது ,சரியா திருத்தி விட்டீர்களே ..ஹிஹி !
      அந்த வாழை மரத்தையே காணாமே ,வாழைப்பூவை எங்கே தேடுறது ?
      நன்றி

      Delete
  10. பந்தி செலவு மிச்சம்!

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னு நீங்கதான் நினைச்சுக்கணும்,உள்ளே தள்ளுற அளவு இம்மியும் குறையலையே !
      நன்றி

      Delete
  11. அப்புறம் அட்சதைக்கு அரிசியில்லாம கல்லகில்ல தூக்கி போட்டுடப்போறாங்க.

    ReplyDelete
    Replies
    1. காலம் கெட்டுகிடக்கு ,பொண்ணு வாசல்லே... பைக்குலே வந்து நிக்கிற காதலன் கூட ஓடிப் போய் மாப்பிள்ளைப் பையன் தலையிலே கல்லை போட்டுட்டு ஓடிப் போகாம இருந்tha சரிதான் !
      நன்றி

      Delete
  12. நல்ல ஜோக்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. பசி வந்திட அட்சதை அரிசியுமா வயிற்றுக்குள் போகும் ?
      நன்றி

      Delete
  13. அட்சதைக்கே ஒரு மூடை அரிசி செலவாகிப் போச்சுன்னு வருத்தத்திலே இருக்கும் போது உங்களுக்கு சிரிப்பாவா இருக்கு ?
    நன்றி

    ReplyDelete
  14. Replies
    1. கடைசி பந்தி முடிவதற்குள் வந்ததற்கு ரொம்ப சந்தோசம் ,ஜெயக்குமார் ஜி !
      நன்றி

      Delete
  15. Replies
    1. மறக்காம மொய் செஞ்சதுக்கும் நன்றி !

      Delete
  16. Replies
    1. நிக்காஹ்விலே இந்த பிரச்சினையே இல்லை ,இல்லையா ஹமீது ?
      நன்றி

      Delete