26 April 2014

எதை ஓசி கேட்பதென்று விவஸ்தை வேண்டாமா ?

''முந்தி இன்சுலின் சிரிஞ்ச் பேனா பையிலே எப்பவும் வச்சுருப்பீங்களே,இப்ப காணலையே ,ஏன் ?''

''அதையேன் கேக்குறீங்க ,பேனாவை ஓசி கேட்ட மாதிரி அதையும் கேக்கிறாங்களே !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்.....


தின 'சிரி ' ஜோக்!தமிழனை உலகமே வியந்து பார்க்கும் !

'பூனைக்கு இருட்டிலேயும் பார்வை தெரியுமாமே ?''

''ஒண்ணும்  கவலைப் படாதீங்க ,'கரெண்ட் கட் 

'புண்ணியத்தாலே கொஞ்ச நாள்லே நமக்கும் அந்த 

சக்தி வந்திடும் !''

'சிரி'கவிதை!சந்தர்ப்பம் புத்தன் ஆகவா ,பித்தன் ஆகவா ?

சந்தர்ப்பம் ஒருமுறைதான் வரும் என்பதற்காக ... 

தப்பைச் செய்தவர்களும் 

'சந்தர்ப்பச் சூழ்நிலையால்  செய்தோம் ' 

என்பதில்  என்ன நியாயம் ?

27 comments:

  1. வணக்கம்

    ஆகா...ஆகா... நன்றாக உள்ளது.
    என்பக்கம் கவிதையாக
    எப்போதுஒளிரும் வசந்தகாலம்......
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இங்கே கரெண்ட்எப்போ போகும் ,வரும்ன்னு தெரியலே ,உங்கள் கவிதையின் தலைப்பைதான் சொல்ல வேண்டி இருக்கிறது !
      நன்றி

      Delete
  2. ஆகா
    நமக்கும் விரைவில் இருட்டிலும் பார்வை கிட்டிடும்- அருமை

    ReplyDelete
    Replies
    1. அந்த அற்புத சக்தி கிடைச்சா தமிழனுக்கு பெருமைதானே ?
      நன்றி

      Delete
  3. ஊசி சே... ஓசி என்று முடிவெடித்து விட்டால்... [!]

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்றது ,ஊசியை ஓசி கேக்கிற காலமாப் போச்சே !
      நன்றி

      Delete
  4. 1) ஊரை அடிச்சி உலையில போட்டாலும் - சிலர் ஓசி கேட்பதை விடவே மாட்டாங்க..
    இவரு அந்த ரகம் போல..

    2) புலி வால் மாதிரி ஆட்டுக்கு இருந்தா என்ன ஆகும்?..

    3) ஸ்ஸ்ஸ்...

    ReplyDelete
    Replies
    1. 1.ஓசி பேப்பர் கேட்டா பரவாயில்லை ஓசியில் ஊசியவா கேக்கிறது ?அந்த ஊசியைக் கொண்டே குத்திவிடலாம் போலிருக்கிறது !
      2.ஆட்டு வால் எப்படி இருந்த என்ன ?கரி ருசிய இருந்தா சரிதானே ?
      3.என்ன புல்லரிக்குதா?
      நன்றி

      Delete
  5. போறப் போக்கைப் பார்த்தால் எல்லோர் பையிலும் இன்சுலின் பேனா வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் போலிருக்கு !
    நன்றி

    ReplyDelete
  6. ஓசியில வாங்கி பழக்கப்படுத்தி விட்டுட்டாங்களா.... அந்த பழக்க தோஷத்துல விவஸ்தை இல்லாமா போச்சுது.

    ReplyDelete
    Replies
    1. ஓசின்னா எனக்கு ஒண்ணு,என் பெண்டாட்டிக்கு ஒண்ணுங்கிறது சரியாத்தான் இருக்கு !
      நன்றி

      Delete
  7. அதுவும் யூஸ் அன் த்ரோ வாகிவிடும் விரைவில்... நல்ல நகைச்சுவை. நன்றி

    ReplyDelete
  8. பேனா ன்ன இந்த பேனாவையுமா ஊசிகேட்கிறது ச்சே ஓசிக் கேட்கிறது!

    ReplyDelete
    Replies
    1. அந்த காலத்தில் பேனா நண்பர்கள் மாதிரி இப்போ இன்சுலின் பேனா நண்பர்கள் பெருகிக் கொண்டு இருக்கிறார்களே !
      நன்றி

      Delete
  9. பலரும் பலரையும் யூஸ் அன் த்ரோ ஆகத்தான் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்,மனிதனுக்கே இந்த நிலை என்றால் ,மருந்துக்கு ..?
    நன்றி

    ReplyDelete
  10. நீங்கள் சொல்வது சரியே, இப்போதெல்லாம் முப்பது வயதுக்குள்ளாகவே பெரும்பாலானோர் இன்சுலின் எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.... ஜோக் சிரிக்க வைத்தாலும் உள்ளுக்குள் கொஞ்சம் பயத்தையும் கிளப்பி விடுகிறது...

    ReplyDelete
    Replies
    1. நாட்டிலே ,தாராள மயக் கொள்கையால் எது நடந்ததோ இல்லையோ ,ஏராளமாய் சர்க்கரை குறையுடையோர் பெருகி விட்டார்கள் ,மருந்துக்கு தாராளமாய் செலவு செய்யவேண்டிய சூழ்நிலையும் உருவாகி விட்டது !பன்னாட்டு மருந்து கம்பெனிகள் காட்டில் மழைதான்!
      நன்றி

      Delete
  11. Replies
    1. சிரிக்க மட்டும்தான் முடிகிறதா ,கிங் ராஜ் ஜி ?
      நன்றி

      Delete
  12. அதானே,இதெல்லாம் கூடவா ஓசி கேட்பாங்க!!!!

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஓசி ஓசின்னு அலைஞ்சா நோய் தீவிரம்தான் ஆகும்ன்னு ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கிறார் ?
      நன்றி

      Delete
  13. Replies
    1. இந்த உதவிகூடவா செய்யக்கூடாதுன்னு சொல்றீங்களா ?
      நன்றி

      Delete
  14. வலிக்காமல் பேனா மூலம் இன்சுலின் போடப் படும்னு சொல்லி வசூலில் இறங்கிவிடலாம் போலிருக்கா ஜி ?
    நன்றி

    ReplyDelete
  15. பேனாவை ஓசி கேட்ட மாதிரி
    இன்சுலின் சிரிஞ்ச் ஐயும் கேட்டால்
    எயிட்ஸ் வரலாமே

    ReplyDelete