7 April 2014

மருமகளை இந்த நிலையிலும் நம்பலைன்னா ....?

''உன்  மாமியாருக்கு இரக்கமே இல்லைன்னு  ஏண்டி சொல்றே ?''
''நான் காக்கா வலிப்புலே துடிக்கிறப்போ கூட ,அவங்க இடுப்புலே இருந்த இரும்பு சாவியை என் கையிலே தரவே இல்லையே !''

32 comments:

  1. Replies
    1. உலகம் அழியும் வரை மாமியார் மருமகள் சண்டை முடியவே முடியாது ,என்னாலும் இவர்களைப் பற்றி எழுதாமே இருக்க முடியாது போலிருக்கே !
      நன்றி

      Delete
  2. Replies
    1. உஷாராய் இருக்க வேண்டியதுதான் ,மருமகள் மேல் மனிதாபிமானம் காட்டலாமே ?
      நன்றி

      Delete
  3. ஹாஹாஹாஆ....அதெப்படி கொடுப்பாங்க ஜி!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. சாவியை கைப்பற்ற மருமகள் நாடகம் போடறான்னு வேற மாமியார் சொல்லிக் கொண்டு திரிவதாக தகவல் !
      நன்றி

      Delete
  4. திரும்பி வராது என்று தெரிந்து கொண்டார்கள் போல...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கே தெரியும் போது,ஒரு காலத்தில் மருமகளாய் இருந்த அந்த மாமியாருக்கு தெரியாதா ?
      நன்றி

      Delete
  5. Replies
    1. இதை நீங்க மருமகள் கோணத்தில் சொல்றீங்களா ,மாமியார் கோணத்தில் சொல்றீங்களா ?
      நன்றி

      Delete
  6. அந்த மாமியாரும் முன்னாள் மருமகள் தானே!.. அவங்களுக்குத் தெரியாதா ?

    ReplyDelete
    Replies
    1. அதனாலேதானே இம்புட்டு உஷாரு ?
      நன்றி

      Delete
  7. அடேங்கப்பா....அவ்வளவு உஷாரான மாமியாருங்கோ.........

    ReplyDelete
    Replies
    1. மருமகள் விஷயத்தில் உஷாராத்தானே இருப்பாங்க ?
      நன்றி

      Delete
  8. தலைவரே, ஒரே ஒரு ஜோக் போட்டு அடுத்தநாள் வரை காக்கவைப்பது நியாயமா? குறைந்தது மூன்று ஜோக் போட்டால் என்னவாம்?

    ReplyDelete
    Replies
    1. என் அனுபவத்தில் ரெண்டு மூணு பதிவுகள் போட்டால் அது ,எனக்கு நானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொளவது மாதிரியாகி விடுகிறது ,கிட்டே வாங்க ..ஒரு ரகசியம் சொல்றேன் ,தமிழ்மண டிராபிக் ரேங்கில் ஐந்தாவது இடத்திற்கு வரக் காரணமே தினசரி ஒரு பதிவுகள் போடுவதால்தான் ....அவசர உலகம் இது ...சிறிய பதிவை நிறைய பேர் விரும்புகிறார்களே ?
      நன்றி

      Delete
  9. நான் மாமியாராக இருந்திருந்தால், அருவாமணையை கொடுத்திருப்பேன்!

    ReplyDelete
    Replies
    1. ஏன் மாமனாரை இருந்து அருவாமனையைக் கொடுத்தால் ,வலிப்பிலே இருக்கிற மருமகள் வேண்டாம்னா சொல்லப் போவுது ?
      நன்றி

      Delete
  10. Replies
    1. இவங்க பஞ்சாயத்தை நீங்களாவது தீர்த்து வைக்கக்கூடாதா லாயர்?
      நன்றி

      Delete
  11. எப்படிக் கொடுப்பாங்கன்னு கேட்டேன்...
    நல்லவேளை கத்தியைக் கொடுக்கலை...

    ReplyDelete
    Replies
    1. அதானே ,கத்தியைக் கொடுத்தா கதையே முடிஞ்சு போயிருமே ,அவ்வளவுக் கொடுமைக் கார மாமியார் இல்லே போலிருக்கு !
      நன்றி

      Delete
  12. காக்கா வலிப்புன்னாலே, இடுப்பு சாவியைத்தான் கொடுக்கணுமா என்னா:????????

    ReplyDelete
    Replies
    1. நட்புக்கு இலக்கணம் சொல்ல வந்த வள்ளுவர் கூட இடுப்பு உடையைத்தான் உதாரணமா சொல்லுகிறார் ,அது உறவுக்கு பொருந்தாதா ?இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலையக் கூடாதுங்கிற நல்ல எண்ணம்தான் !
      நன்றி

      Delete
  13. ”என்னமா நடிக்கறா பாரு... இவளுக்கு காக்கா வலிப்பு இல்லை. சாவி வாங்கறதுக்காகவே நடிக்கறா” அப்படின்னு மாமியார் நினைத்திருப்பார். அதான் சாவி கொடுக்கலை!

    ReplyDelete
    Replies
    1. இந்த வசனத்தைக் கேட்டால் அடிக்கடி மெகா சீரியல்லே வர்ற மாதிரி இருக்கே ஜி !
      நன்றி

      Delete
  14. சாவிமேல அவ்வளவு பாசம்! (பயம்)

    ReplyDelete
    Replies
    1. பயமா ,பாசமான்னு படமே எடுக்கலாம் போலிருக்கே !
      நன்றி

      Delete
  15. அவ்ளோ நம்பிக்கை மருமக மேல! ஹாஹா!

    ReplyDelete
    Replies
    1. மருமகளுக்கு காக்கா வலிப்பு வரும்னு தெரிந்துதான் எடுத்தார்களா ,அல்லது வந்தாலும் பிரோ சாவியை தர மாட்டோம்னு சொல்லி பொண்ணு எடுத்தார்களா என்று தெரியவில்லை !
      நன்றி

      Delete
  16. மாமியாருக்கு இரக்கமே இல்லைன்னு சொல்வதைவிட நம்பிக்கை இல்லை எனலாம். வலிப்பு மாறச் சாவியைக் கொண்டு போய் மருமகள் களவெடுத்தாலுமென்ற பயம்.

    ReplyDelete
    Replies
    1. இப்படி இருந்தா மகன் பாடு கஷ்டம்தானே ?
      நன்றி

      Delete