29 April 2014

மனைவி சொன்னால் அதில் நியாயம் இருக்கும் !

''நீங்க ஆரம்பித்த டென்னிஸ் கோச்சிங் சென்ட்டரை மூட ,உங்க மனைவிதான் காரணமா ,ஏன்  ?''
''கொசு பேட்டினால் ஒரு கொசுவை அடிக்கத் தெரியல ..நீங்கெல்லாம் ஒரு டென்னிஸ் கோச்சரான்னு  கிண்டல் பண்றாளே !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!இட்லி மாவுன்னா கல்லையும் சேர்த்து ஆட்டுவாங்களோ !

'பொங்கல்லே கல்லு இருக்குன்னு சொன்னா ,சர்வர் 

திமிராப் பதில் சொல்றானா ,எப்படி ?''

''பொங்''கல்'னா  வரத்தான் செய்யுமாம் !''

'சிரி'கவிதை!எண்ணிக்கையில் அடங்கியோரும் ,அடங்காதோரும் !

கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த மண்ணில்தான் ...

கடைந்தெடுத்த அயோக்கியர்களும் வாழ்கிறார்கள் !


44 comments:

  1. அட அந்த சர்வருக்கு திமிர் மட்டும் இல்ல கூடவே கொஞ்சம் மூளையும்
    இருக்கு என்று நிரூபித்து விடார் சகோதரா :))

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ..அவருக்கு இருக்கிற மூளைக்கு ,பொங்கல்லே கல் இல்லையென்றாலும் போட்டுக் கொண்டு வருவார் முந்திரி பருப்புக்குப் பதிலாய் !
      நன்றி

      Delete
  2. அவங்க சொல்றதும்
    சரியாகத்தான் படுது
    அருமை.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அவங்க சும்மாச் சொல்லலே ,அம்மா பேட்டிங் பண்ணினா நொடிக்கு நாலு கொசுவை அடிக்கிறார் ,அய்யா காத்துலே வெறும் வாளைஅல்லவா சுத்துறார் ?
      நன்றி

      Delete
  3. Replies
    1. கடையேழு வள்ளல்கள் யார் யார் என்று கூட தெரியாது ,பல தலைமுறைக்கு பிறகும் விரல் விட்டு எண்ணக்கூடிய அந்த வள்ளல்களைத்தான் இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறோம் .கடைந்தெடுத்த அயோக்கியர்களைப் பற்றி தினசரி கேள்விபடுகிறோம் என்பதைச் சொன்னால்கூட உங்களுக்கு பிடிக்கலைன்னா நான் என்ன பண்றது ?
      நன்றி

      Delete
    2. வள்ளல்கள் இவர்களே - பாரி, காரி, வல்வில் ஓரி, பேகன், ஆய், அதியமான், நள்ளி.

      பற்பல தலைமுறைகளுக்குப் பிறகும் இவர்களை நினைத்துப் பார்க்கிறோம் அல்லவா - அதுவே பெருமை!..

      Delete
    3. ஆஹா ,ஏழு வள்ளல்கள் சரியாகக் குறிப்பிட்டதற்கு வாழ்த்துக்கள் !
      ஆர்வமுள்ளவர்கள் மேலும் இந்த வள்ளல்கள் செய்தது என்ன என்பதை அறிய ..முனைவர் .குணசீலன் பதிவையும் பாருங்களேன் >>.www.gunathamizh.com/2009/07/blog-post_29.html
      நன்றி

      Delete
  4. Replies
    1. பொங்கலில் கல் வந்தாலும் அருமைதானா ?
      நன்றி

      Delete
  5. Replies
    1. மூங்கிலில் புகுந்து வரும் காற்றாய் ...குழலின் நாதமாய் ..இனிமை சேர்க்கும் உங்கள் கமெண்டுக்கு நன்றி

      Delete
  6. டென்னிஸ் கோச்... ஹா ஹா ஹா...

    ReplyDelete
    Replies
    1. இவரால் கூரையேறி கோழிகூட பிடிக்க முடியாது என்று மனைவி சொல்வதாக கேள்வி !
      நன்றி

      Delete
  7. என்னமா கேள்வி கேட்டு இருக்காங்க அவங்க! :))))

    த.ம. 7

    ReplyDelete
    Replies
    1. புருஷன் தொழிலுக்கு ஆதரவா இருக்க வேண்டிய மனைவி ,இப்படி அபசகுனமா சொல்றதை நீங்களுமா சப்போர்ட் பண்றீங்க ?
      நன்றி

      Delete
  8. 1) அந்த அளவுக்கு கொசுக்கடி!..
    2) அந்த சர்வருக்கும் முதலாளிக்கும் வீட்டு சாப்பாடாம்!..
    3) கடைந்து எடுக்க அவனுங்க என்ன வெண்ணையா!..

    ReplyDelete
    Replies
    1. 1.அதுதான் கொசுக்கடியை தீர்க்க உதவாதவரை மனைவி இப்படி போட்டு பார்க்கிறாரோ ?
      2.அது சரி ,ஓசியிலே கிடைச்சாலும் இந்த கல்லையும் ,மண்ணையும் சாப்பிடணும்ன்னு அவங்களுக்கு என்ன தலைஎழுத்தா ?
      3.இல்லையா பின்னே ?இந்த வெண்ணை(ங்க) எதுக்குமே உருகாது போலிருக்கே !
      நன்றி

      Delete
  9. Replies
    1. என்ன சரிதான் ?மடியிலேயே இப்படி பூனையே கட்டிக்கிட்டு அந்த மனுஷன் எப்படி தொழில்லே முன்னேற முடியும் ?
      நன்றி

      Delete
  10. பேட்டைக் கண்டாலே கொசு ஓடிப்போகுதே!

    ReplyDelete
    Replies
    1. ஓடி எந்த பேட்டைக்கு போகுதோ தெரியலையே !
      நன்றி

      Delete
  11. கேட்ட கேள்வியும் சரியான கேள்வியாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கட்டிக்கிட்டவளே இப்படி பங்சர் பண்ணினா ,எந்த தொழிலாவது ஊக்கமாசெய்யத் தோணுமா ?
      நன்றி

      Delete
  12. ஹாஹாஹாஅ....பின்ன மனைவி சொல் மந்திரமே!

    பொங்கல் நல்ல வார்த்தைவிளையாட்டு....

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. மந்திரமும் இவ்வளவு வேகமா வேலைச் செய்யும்னு தோணலே !
      நன்றி

      Delete
  13. முதல் ஜோக் அருமை.

    நான் சென்னையில் உறவினர் வீட்டிற்கு வரும்போது, கொசுவை அடிப்பதற்கு ஒரு பேட் கொடுப்பார்கள், நான் அதை வைத்து கொண்டு கொசுவை அடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இருக்கும் ஊரில் கொசு என்றால் கிலோ என்ன விலை என்பார்களாமே,உண்மைதானா ,சொக்கன் ஜி ?
      நன்றி

      Delete
    2. உண்மை தான் பகவான்ஜீ.
      இங்கு கொசுவையெல்லாம் பார்க்க முடியாது.

      Delete
  14. ரசிக்க வைத்த நகைச்சுவைகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. முக்கனிச் சுவையை ரசித்தமைக்கு நன்றி !

      Delete
  15. இதுக்குத்தான் பசங்களப் பக்கத்ல வச்சுக்கிட்டு கொசு அடிக்கணும்கறது. சம்சாரம் பாக்றப்போ பேட்டப் பசங்க கைல குடுத்றாங்க.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்ற மாதிரி ,அந்த துப்பு கெட்ட மனுசனுக்கு செய்யத் தெரியலையே !
      நன்றி

      Delete
  16. நான் அதுல எட்டாவது வள்ளல். கடைந்தெடுத்த அயொக்கியர்களுக்கு கடன் கொடுத்துட்டுத் தானம் குடுத்தேன்னு சொல்லிட்ருக்கேன்..

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. என்னடா ,கொஞ்ச நாளா நம்ம ஜோக்காளிப் பேட்டை நீங்க வரலியேன்னு நின்னிச்சுக் கிட்டிருந்தேன் ,ஆக இந்த தொழில்தான் பண்ணிக்கிட்டு இருந்தீங்களா ?
      நன்றி

      Delete
  17. அந்தக் கட மொதலாளி இன்னும் வெவரம். கல்லுக்குள் ஈரம் (படம்) பாத்ருப்பீங்க. நம்ம கடேலதான் ஈரத்துக்குள் கல் பாக்றீங்கன்னாரம்.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. அவர் அப்படித்தான் சொல்வார் ,ஏன்னா ...எல்லோரும் கல்லுலே இட்லி மாவை ஆட்டுவாங்க ,இவர் மாவுலே கல்லைப் போட்டு ஆட்டுவறாச்சே !
      நன்றி

      Delete
  18. எக்குதப்பா கொசுவைகூட அடிச்சிடலாம்..ஆனா அதையே அடிக்க முடியாதப்ப... பந்து ???? நல்லா யோசிச்சி முடிவு எடுத்திருப்பார் போல.

    ReplyDelete
    Replies
    1. இவர் கொசுவை மட்டும் மிஸ் பண்ண மாதிரி தெரியலே ....பந்தை அடிக்க வேணாம் ,கை நிறைய பிடிக்கவாவது தெரிய வேணாமா ?,இப்படி இருந்தா எப்படி பொழப்பை ஓட்டுறது ?
      நன்றி

      Delete
    2. எனக்கொரு சந்தேகம் கிங் ராஜ் ஜி ,அதெப்படி டெலிட் பண்ணாமல் இன்னைக்கு கமெண்ட் போட்டீங்க ?

      Delete
  19. தேவைப் படும்போது செய்து கொள்கிறேன் .தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  20. டென்னிஸ் பேட்டை விட
    கொசு பேட்
    கனமானதோ?

    ReplyDelete
    Replies
    1. கனம் இருக்கோ இல்லையோ ,அடிக்கணும்னு மனம் இருந்தால்தான் எதையாவது அடிக்க முடியும் !
      நன்றி

      Delete